Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
பதிப்பாசிரியர்
பிரியானா ராஜேந்திரா
பா.மகாதேவன்
உதவி
றமணன்.ந
 
ஆலோசகர்கள்
இசாக்
ரவி சுவிஸ்
நந்தா கந்தசாமி
றஞ்ஜினி
 
தொழில்நுட்ப,   வடிவமைப்பு உதவி
excelgra
 
தொடர்புகட்கு
editor email
www.vaarppu.com
 
 
எம்மைப்பற்றி இவர்கள் 
ஆனந்தவிகடன் 
அணி 
வாசகர்களின் வார்த்தைகள் 
நீங்களும் எழுத 

பிரசுரிக்க விரும்புவோருக்கு
 
about us about us button
வாசகர்களின் வார்த்தைகள்
பெயர்
  Vetriselvan Nagarajan   நாடு   India
தளம்
    திகதி   2016-09-02
பிறப்புக்கு பொருள்தேடும்
பிழைப்புக்கு பொருள்தேடான்..!
ஊரிலே ஒரு மூடன்
உள்ளதைத்தான் மூடான்..!
- வெற்றி
 
 
பெயர்
  ராஜகவி ராகில்   நாடு   சீசெல்சு
தளம்
    திகதி   2015-12-08
தமிழ்க்கலை இலக்கியப் பங்களிப்பு ஆற்றி வருகின்ற சிறந்த மின்னிதழ் வார்ப்பு ...இதில் பணிபுரிகின்ற ஆசிரியரையும் , உதவி ஆசிரியர்களையும் வாழ்த்துகிறேன் ...

ராஜகவி ராகில்
 
 
பெயர்
  முனைவர் இரா.சதீஷ்மோகன்   நாடு   இந்தியா
தளம்
  http://www.malarumtamil.blogspor.com   திகதி   2015-03-20
வணக்கம்

நான் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செயவதற்காக கவிதை தொடர்பான நூல்களை பல்கலைக்கழக இணைய ஆய்வகத்தில் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் தற்செயலாகப் முதன் முறையாக 2008 ல் தான் பார்த்ததேன். வார்ப்பு இணைய இதழை நான் அப்பொழுதே அதன் நோக்கம் அதன் வீச்சு இதழின் வடிவமைப்பு அதன் சிறப்புகளை உணர்ந்தேன். அதன் பின்னர் என நெறியாளரிடம் சென்று வார்ப்பு இணைய இதழ் கவிதைகளை ஆய்வு செய்ய ஒப்புதல் பெற்று வார்ப்பு இணையத்தில் வெளிவந்திருக்கும் முதல் ஐந்தாண்டு கவிதைகளை மட்டும் ஆய்வின் முதன்மைச் சான்றhதாரமாக்க கொண்டு ஆய்வு செய்து 2015 ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முணைவர் பட்டம் பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தொரிவித்துக் கொள்கிறேன். எனது ஆய்வேட்டின் தலைப்பு "இணைய இதழ் தமிழ்ப் புதுக்கவிதைகளில் நடப்பியல் கூறுகளும், உத்திகளும்" எனது முனைவர் பட்ட ஆய்வுக்கு உதவிய வார்ப்பு இணைய ஆசிர்களுக்கும் அதில் கவிதை படைத்த கவிஞர்களுக்கும்
நன்றிகள்.

மகிழ்வுடன்
முனைவர் இரா.சதீஷ் மோகன்,
தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர்,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி.,
சரவணம்பட்டி , கோயம்புத்தூர் - 35. இந்தியா.
 
 
பெயர்
  சேர்ந்தைபாபு   நாடு  
தளம்
    திகதி   2014-10-16
வணக்கம்!

தோழமையே,நான் ஒரு தமிழ்பற்றாளன். நான் கவிதை எழுதுவதில் ஆர்வம்உடையவன். எம் ஆர்வத்தை ஊக்குவிக்க தாங்கள் தங்களின் இணையதளத்தில் வாய்ப்பளித்தால் என் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு வழி அமையும்...எதிர்பார்ப்புடன் அடியேன்!
 
 
பெயர்
  தி .லலிதகோபன்   நாடு   இலங்கை
தளம்
    திகதி   2014-10-10
தமிழ் கவிதைகளின் மகுடம் வார்ப்பு
 
 
பெயர்
  ஏகாந்தன்   நாடு   இந்தியா
தளம்
  http://aekaanthan.wordpress.com   திகதி   2014-09-06
வார்ப்பு இணையதளத்தை வாசிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். உலகெங்குமிருந்தும் பல தரப்பட்ட தமிழ்க்கவிஞர்கள் வார்ப்பில் சிதறிக்கிடக்கிறார்கள், வாசகர்கள் படித்து மகிழ. மிகவும் நல்ல முயற்சி. மேன்மேலும் வார்ப்பு வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.
 
 
பெயர்
  முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்   நாடு   India
தளம்
  http://....   திகதி   2012-07-01
ஆசிரியருக்கு அன்பு வணக்கம்.

வார்ப்பு இதழில் நான் கடந்த ஓராண்டாக என் படைப்புகளை அவ்வப் பொழுது பதிவுசெய்து வருகின்றேன்.எம்மைப் பற்றி எனும் பகுதியில் நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்வது குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். ஐயா நான் தற்பொழுது பணியாற்றுவது கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில். இங்குள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் பழங்குடியினச் சிறுபெண்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களிடையே இன்றும் பின்பற்றப்பட்டு வரும் சடங்கு முறைகளை அறிந்து கொள்ளும் ஆவலில் தகவல்களைத் திரட்டி வருகின்றேன்.அவற்றில் பாடல்களும் அடங்கும். நெடும்பாடல்களான அவற்றை வார்ப்பு இதழில் பகுதி பகுதியாக வெளியிட விரும்புகிறேன். நன்றி.

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
வால்பாறை.
 
 
பெயர்
  nirandaran   நாடு   india
தளம்
  http://www.siraguviri.com   திகதி   2012-04-04
ஒரு மொழியின் உச்சம் கவிதை- அதை ஆராதிக்கும் வார்ப்பு இதழ் நீள்க
 
 
பெயர்
  எப்.நிஹாஸா   நாடு   கட்டார்
தளம்
  http://kahatowitanihaza.blogspot.com   திகதி   2011-07-05
இலக்கிய நெஞ்சங்களுக்கு.....
இலை மறை காய்களின் ஆக்கங்களுக்கு
ஊக்கம் அளிக்கும்
வார்ப்பு
வாழ்க
 
 
பெயர்
  ramesh   நாடு   srilanka
தளம்
  http://mullaitivu   திகதி   2011-05-25
அதிகமான இலக்கியவாதிகளை உருவாக்கும் புகழுக்கு வார்ப்பு பொருத்தமானது.
வாழ்த்துக்கள் ....தொடர்ந்தும் வளர.....
 
 
பெயர்
  gobalakrishnan   நாடு   india
தளம்
    திகதி   2011-05-14
வணக்கம். இந்த வார்ப்பு வார இதழ் மிகவும் இலக்கிய சுவை கலந்த சமுதாய சிந்தனைகளை வழங்க கூடியதாக இருக்கிறது. உண்மையில் இது தமிழனுக்காக செந்தமிழ் அச்சில் வார்க்கப்பட்ட வார்ப்பு என்பதில் ஐயமில்லை. வார்ப்புக்கு நன்றி.
 
 
பெயர்
  ramanujam   நாடு   india
தளம்
    திகதி   2011-04-11
நேசம் மிக்க வார்புக்கே-நெஞ்சம்
நிறைந்த வாழத்தினை சேர்ப்பித்தே
வாசல் கதவு திறவாதா-கவிஞர்
வரிசையில என்பெயர் வாராத
பாசம் மிக்க புலவன்நான-தமிழ்
படித்தேன் முறையாய் அதனாலதான்
மாசம் பலவும் பறந்தனவே-என்
மனதில் கேள்வி பிறந்தனவே

படமும் வரிகளும தலைப்பினிலே-நான்
படைத்த கவிகள் கணக்கிலவோ
தடமே அறியேன் வாசல்வர-கதவை
தட்டவும் இயலா கவலைதர
முடமே ஆனது என்மனமே-அதை
முறையாய் உரைத்திட தினந்தினமே
அடமே பிடத்திட உள்மனமே-நானும
அறியத் துடிக்கிறேன் பதிலவருமா

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
 
 
பெயர்
  ramanujam   நாடு   india
தளம்
    திகதி   2011-02-28
அன்புடையீர் வணக்கம்
முதற்கண் தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கம்
நன்றி கலந்த என்வாழ்துக்களை தெரிவித்துக் கொளகிறேன் படமும் வரிகளும என்ற பகுதிக்கு நான்
அனுப்பிய கவிதை பலவற்றை வெளியிட்டு என்னை
பெருமைபட செய்துள்ளீர் வார்ப்புக்கும் தந்த நல்
வாய்பக்கும் நன்றி நன்றி
இப்பகுதிக்கு தங்களைப் பாராட்டி முதலில்
ஒரு கவிதை அனுப்பினேன் வெளியிட தாமதமாக
அனுப்பியது சேரவில்லையோ என்ற ஐயத்தில்
சுருக்கியும் சிலவரிகளை மாற்றியும் மற்றொன்றை
அனுப்பி வைத்தேன் ஆர்வத்தில் ஏற்பட்ட‍ அவசரம்
மன்னிக்க முன்னது விரிவாவும் விளக்கமாகவும்
இருப்பதால் பின்னதை எடுத்து முன்னதை போட மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்
என்றும் தங்களன்புக்கும ஆதரவுக்கும
உரிய
புலவர் சா இராமாநுசம் அரங்கராசபுரம்சாலை
சென்னை 24
 
 
பெயர்
  ramanujam   நாடு   tamil nadu
தளம்
    திகதி   2011-02-17
எம்மைப் பற்றி ஏதேனும்-நீர்
எழுத விரும்பின் எழுதுமென
செம்மை தமிழாம் நம்மொழியை-மேலும்
சிறக்க செய்தே எம்விழியை
எம்மை மறந்தும் மூடாமல்-வார்ப்பு
இதழைத் திறந்தும் ஆடாமல்
உம்மை வாழ்த்திப் படிக்கின்றோம்-இதழ்
உயர கவிதைத் தொடுக்கின்றோம்

வலைப்பூ தன்னில் வார்ப்பென்றே-கவிதை
வழங்க வாய்ப்பும் நன்றறென்றே
தலைப்பூ தந்தது சிறப்பாகும்-நல்
தமிழை வளர்பதெம் பொறுப்பாகும்
மலைப்பு ஏதும் இல்லமல் -கவிஞர்
மனதில் நல்லவை அல்லாம
கலைப்பூ ஆமாம் கவிதைப்பூ-வார்ப்பில்
கண்டோம விண்டோம் கைகூப்பு

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சென்னை-24
 
 
பெயர்
  மகா.தமிழ்ப் பிரபாகரன்,   நாடு   India
தளம்
  http://www.magatamizh.blogspot.com   திகதி   2011-02-17
உங்கள் தளத்தில் நானும் எழுத விரும்புகிறேன்
 
 
பெயர்
  முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்   நாடு   இந்தியா
தளம்
  http://????????   திகதி   2011-01-02
ஆசிரியருக்கு அன்பு வணக்கம்.
தங்கள் இதழில் என் கவிதைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இக்கவிதைகள் பெரும்பாலும் எங்கள் கல்லூரியின் வனத்தில் வாசிக்கப்பட்டவை. வனத்தில் பெண் கவிதை என்ற ஒற்றைச் சொல்லுடனும் கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எப்படி இருக்கவேண்டும் என்ற வார்த்தைகளுடனும் விமரிசனம் முடியும் . அன்றைக்கு அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. வெளியில் என்னுடன் படித்தவர்கள் எனக்கு மூத்தவர்கள் இன்னும் சிலர் என்னைப் பார்த்து என்ன வனத்தில் கவிதையெல்லாம் வாசிக்கிறாயாமே என்ற போது அவர்களின் கேள்வியிலிருந்த தொனியில் வருத்தப்பட்டிருக்கிறேன். எங்கள் வனத்தின் நாயகன் என் குரு பாரதிபுத்திரன் அவர்கள் வனத்தில் வகுப்பில் தந்த ஊக்கம் கவிதை தொடர்ந்து எழுதத் தூண்டியது. என் போன்றோரின் நிலை அறிந்தே வனத்தில் விமரிசனங்கள் அதிகம் வரவில்லையோ என்று இப்பொழுது எண்ணுகிறேன். கல்லூரியில் வனம் தொடர்ந்து நடத்துவதற்கு நிர்வாகம் கொடுத்த நேரம் எற்படுத்திய சிக்கல் காரணமாக அவ்வமைப்புடனான தொடர்பு இடையிலேயே அறுந்தது என் போன்றோருக்குப் பேரிழப்பு. அதனால் வாசித்த கவிதைகளையும் பின்னர் எழுதிய கவிதைகளையும் வெளியிடாமல் வைத்திருந்தென். வார்ப்பு அவற்றிற்கு வடிவம் தந்திருப்பதை என் ஆசிரியரும் நண்பர்களும் அறிந்தால் என்னைவிட பெறு மகிழ்ச்சி அடைவார்கள். வார்ப்புக்கு நன்றி எனும் ஒரு சொல் என் மகிழ்சியின் அளவாகாது. வணக்கம்.
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
 
 
பெயர்
  நிந்தவூர் ஷிப்லி   நாடு   இலங்கை
தளம்
    திகதி   2011-01-02
வார்ப்பு இணையத்தளத்தை நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படித்தும் அவ்வப்போது எனது படைப்புக்களை பதிவிட்டும் வருகிறேன்.உண்மையில் புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பதோடு எழுத்தாளர்களின் வித்தியாசமான படைப்புக்களுக்கு அங்கீகாரம் தந்து கவிதை இலக்கியத்தின் வௌ;வேறு பரிமாணங்களை சுவைக்க வைப்பதில் வார்ப்புக்கு நிகர் வார்ப்பே..படிப்பவர்களின் வாசிப்பாற்றலை அதிகரிப்பதோடு எழுதுபவர்களை இன்னுமின்னும் எழுதத்தூண்டும் அற்புதமான இணையத்தளமே வார்ப்பு.வார்ப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்..வாழ்க வார்ப்பு..அதனூடே வளர்க தமிழ்
 
 
பெயர்
  இராமசாமி ரமேஷ்   நாடு   இலங்கை
தளம்
  http://www.vettri.lk   திகதி   2010-12-17
முயற்சி வரவேற்கத்தக்கது.
 
 
பெயர்
  ஹரி   நாடு   canada
தளம்
    திகதி   2010-12-08
எனக்குள் களைப்புற்ற கவிதையூற்றை
தோண்டி தூர்வாற்ற வார்ப்பே
வாழ்த்துக்களுடன் வணக்கங்களும்.
 
 
பெயர்
  kalaimahel hidaya risvi   நாடு   srilanka
தளம்
    திகதி   2010-11-24
வார்ப்பின் வளர்ப்பு! நிலத்திற்கு அடியில்
ஈரம் இருக்கும் இடமெல்லாம் தன் அடி வேரை
நகர்த்தி நகர்த்தி செல்வது போன்று இலக்கிய உள்ளங்களின் இதயத்திலும் வளர்ந்து செல்ல என் இதயம் நிறைந்த பிராத்தனைகள் நிழல்களாக தொடரும்!
 
 
பெயர்
  மணிவண்ணன்   நாடு   இந்தியா
தளம்
  http://www.manivannam.blogspot.com   திகதி   2010-10-17
நானிலத்து தமிழர்களுக்கான நல்ல தளம் . புத்திலக்கிய பிரியர்களுக்கான இலக்கிய சுரங்கம்.தமிழ் பரிமாணத்தின் பரிணாமம்.

வாழ்த்தும் பாராட்டும்.தொடர்க.தமிழகம்
 
 
பெயர்
  தங்க. ரமேஷ் பாலி   நாடு   இந்தியா
தளம்
  http://www.vaarpu.com   திகதி   2010-08-21
வாய்ப்பு தேடி காத்திருக்கும் படைப்பாளிகளுக்கு
வாசல் கதவை திறந்து வைத்திருக்கும்
வார்ப்புக்கு வாழ்த்துக்கள் பல பல !
-தங்க. ரமேஷ்
 
 
பெயர்
  வித்யாசாகர்   நாடு   குவைத்
தளம்
  http://vidhyasaagar.com/   திகதி   2010-02-14
அன்பிற்கினியோருக்கு வணக்கம்,

காலம் உழைப்பின் மறுபக்கத்தையே வெற்றியென அறிவிக்கிறதெனில்; வார்ப்பின் ரசிக்கத் தக்க ஒவ்வொரு கவிதையும், தன் கவிதை வெளிவந்து விட்டதென காலரை தூக்கிவிட்டுக் கொண்ட ஒவ்வொரு கவிஞனின் வெற்றியும் வார்ப்பிற்கான தரத்தின் 'நற் சான்றன்றி வேறில்லை.

எழுதிய கவிதை பிரசுரிக்கக் காண்பது பிரசவித்துக் காண்பதற்கு சமம்; எனில் எத்தனையோ கவிதை பிரசவத்தின், தாய்மை பூண்டுக் கொள்கிறது வார்ப்பு இதழ்.

தமிழ் நிலைக்கும் வரை வார்ப்பின் படைப்புக்களும் நிலைக்கட்டும்; வார்ப்பு நிலைக்கும் வரை தமிழிலக்கியமும் தழைத்தோங்கட்டும்.

ஒரு படைப்பாளியாய் பெருத்த நன்றிகளின் கைகூப்புடன்..

வித்யாசாகர்
குவைத்
 
 
பெயர்
  Raheema Faizal   நாடு   srilanka
தளம்
  http://www.vaarppu.com   திகதி   2010-02-03
தமிழில் வெளிவரும் காத்திரமான.....
இலக்கியப்பயணம்
பாராட்டப்படவேண்டிய
முயற்சி....
பணி தொடர வாழ்த்துக்கள்...

ரஹீமா
raheema2007@gmail.com
 
 
பெயர்
  Muthu karuppasamy   நாடு   India
தளம்
    திகதி   2010-01-15
வளரும் கவிஞர்களுக்கு இத்தகைய தளம் மிகவும் துணையாக இருக்கிறது மேலும் தன்னுடைய பிழையை திருத்துவதற்கு கிடைத்த ஒரு மாபெரும் கருவியாகவும் அமைகிறது !!
 
 
பெயர்
  நாச்சியாதீவு பர்வீன்   நாடு   இலங்கை.
தளம்
  http://www.farveena.blogspot.com   திகதி   2009-12-17
வார்ப்பு கவிதை இதழ் நன்றாக இருக்கிறது, வார்ப்பு கவிதை இதழ் நன்றாக இருக்கிறது, நல்ல கவிதைத் தேர்வுகள், உலகின் எல்லாப் பாகத்தில் உள்ளவர்களினதும் எண்ணங்களையும், அனுபவங்களையும், பார்க்கவும், பகிரவும் நல்ல தளமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

நாச்சியாதீவு பர்வீன்.இலங்கை.
 
 
பெயர்
  மன்னார் அமுதன்   நாடு   இலங்கை
தளம்
  http://amuthan.wordpress.com/   திகதி   2009-12-08
அன்புடையீர்,

இனிய வணக்கங்கள். வார்ப்பு மிக அருமையான தரம் வாய்ந்த கவிதைத் தளமாக இயங்குவதையிட்டு மனமகிழ்ச்சியடைகிறேன். உலகத் தமிழ் கவிஞர்களை இணைக்கும் தளமாகவும் இயங்கும் வார்ப்பில் வளரும் கவிதைகள் அனைத்தும் அழகாக வார்க்கப்படுகின்றன்.

வார்ப்பு மென்மேலும் வளர பிராத்திக்கிறேன்.

பணிவன்புடன்
மன்னார் அமுதன்
 
 
பெயர்
  அன்பின் நாயகன்   நாடு   India
தளம்
  http://www.anbinnayagan.blogspot.com   திகதி   2009-11-13
தமிழ் இனிது.
இசை இனிது.
தென்றல் இனிது.
அது போல்
வார்ப்பின் கவிதை இனிது.
 
 
பெயர்
  கலைமகன் பைரூஸ்   நாடு   இலங்கை
தளம்
  http:/www.kalaimahanblogspot.com   திகதி   2009-10-28
கவிதைக்கான நல்ல இதழ். உலகளாவிய கவிஞர்களை ஒன்றிணைக்கவுதவும் நல்லபணி. கவிதா விமர்சனங்கள் விசமத்தன்மை கலக்காமல், புதுமெருகொடு வலம்வருகின்றன. வார்ப்பெனும் பெயர் நன்கு பொருந்துகின்றது. வார்ப்பன - வார்ப்பவன் = வார்ப்பு ஆக மிளிர்கிறது. பணிசெயும் ஆசிரியர் குலாத்தையும், நல்ல ஆக்கங்கள் படைத்துவரும் யாவர்க்கும் எனது வாழ்த்துப்பூத்தூவல்கள்.

இலங்கையின் தென்மாகாணம் வெலிகம - மதுராப்புரயைப் பிறப்பிடமாகக் கொண்டவன். 1986களிலிருந்து எழுதுகிறேன். இலக்கண - இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகை வெளியிட்டிருக்கின்றேன். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் எல்லாவற்றிலும் எனதாக்கங்கள் பிரசுரமாகிவருகின்றன. வெகுவிரைவில் சிந்தனைவட்ட வெளியீடாக 'கலைமகன் கவிதைகள்' வெளிவரவுள்ளது.

நன்றி
கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - வெலிகம
இலங்கை.
 
 
பெயர்
  முத்துசாமி   நாடு   சென்னை
தளம்
  http://muthusamyp.blogspot.com/   திகதி   2009-08-27
மக்கள் மனதில் 'நிக்குமோ நிக்காதோ'
எனத் தொடங்கி
இன்றுவரையிலும் இனியும்
கருப்பட்டிப் பாகைப் போல
இனிமையான கவிதைகளை வார்க்கும்
வார்ப்பு வளரட்டும் - நல்ல தமிழ்க்
கவிதைகளின் வாழ்த்து வார்ப்புக்கு
எப்போதும் கிட்டும்
 
 
பெயர்
  கி.சார்லஸ்   நாடு   இந்தியா
தளம்
    திகதி   2009-08-09
ஆசிரியருக்கு,
வணக்கம்.
வார்ப்பு கவிதை இதழினை வாசித்தேன்..கவிதைக்கென்றே அமைந்த தளமாய் உள்ளது சிறப்பு மற்றும் மகிழ்ச்சியளிக்கிறது.சரம் எனும் பகுதியில் கவிதை சம்பந்தமான வலைப்பூவினை தருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
* கி.சார்லஸ்*
காரப்பிடாகை.
நாகப்பட்டினம்
(மாவட்டம்)
தமிழ்நாடு.
மின்னஞ்சல்
ckicharles@yahoo.com
தமிழ்நாடு.
 
 
பெயர்
  மனோ.மோகன்   நாடு   இந்தியா
தளம்
    திகதி   2009-07-24
மதிப்பிற்குரிய இதழாசிரியருக்கு!
கவிதைகளைப் பிரசுரித்ததற்கு நன்றி. என்னுடய தீர்க்க தரிசனம் , அரசிலையின் யுத்த தருமங்கள் என்னும் இரண்டு கவிதைகள் ஒரே கவிதை என அர்த்தமாகும்படி பிரசுரமாகியுள்ளன(கவிதைகளை நான் இலக்கமிட்டு அனுப்பியிருந்தால் இந்தத் தவறு நேர்ந்திருக்காதென்று உணர்கிறேன்). இரண்டாவது கவிதைக்கு அடிக் கோடிட்டு இந்தப் பிழையைத் திருத்திக் கொள்ள முடியுமென்றால் பெரிதும் மகிழ்வேன்.

நட்பை வளர்ப்போம்
நன்றி

மனோ.மோகன்
manomohan1982@yahoo.com
 
 
பெயர்
  Bhararthimohan   நாடு   India
தளம்
  http://kalaisolai.blogspot.com   திகதி   2009-07-04
வார்ப்பு எனக்கு கிடைத்த வரம்.
 
 
பெயர்
  nilaamathy   நாடு   canada
தளம்
  http://www.yarl.com   திகதி   2009-06-19
அழகு தமிழ் சுவைக்க தேடிய தளங்களின் வார்ப்பை கண்டு கொண்டேன். பட்டை தீட்டிய கவி புலமையில் என்னும் நான் மறந்தேன்....தமிழ் தேன் ,,,,,,சுவைத்தேன் ....மகிழ்ந்தேன். நட்புடன் நிலாமதி
 
 
பெயர்
  Palani Kumar N R   நாடு   India
தளம்
  http://www.vaarppu.com   திகதி   2009-03-08
வார்ப்பு என் வாய்ப்புக்கு வாயில்
வர்ர்ப்பு என் சிந்தனைக்கு தூண்டில்
வர்ர்ப்பு என் எண்ணங்களுக்கு ஏணி
வர்ர்ப்பு என் கவிதைகளுக்கு தோரணம்
வர்ர்ப்பு என் வாழ்க்கையின் படிகள்
உள்ளத்தின் ஊற்றுக்களை உலகிற்கு
உரைத்திட உதவிடும் ஊடகம்!!!!!!!
என்கன்னி கணினி கவிதையிது
வர்ர்ப்ப்பை வாழ்த்திடும் நேரமிது!!!!

-பழனி குமார், சென்னை
 
 
பெயர்
  கிரிஜா மணாளன்   நாடு   India
தளம்
  http://www.tiruchikavignarkal.tamilblogs.com   திகதி   2009-01-22
வாசகர்கள் எழுதும் கவிதைக்கான (படமும், வரிகளும்) தலைப்பை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றி புதிய தலைப்பு கொடுத்தால் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்பது என் வேண்டுகோள்.

- கிரிஜா மணாளன்
 
 
பெயர்
  ஆர்.இளங்கோவன்   நாடு   இந்தியா
தளம்
  http//elangovan68.blogspot.com   திகதி   2009-01-16
அன்புடையீர்
அயலகத்தில் பணிபுரியும் இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்...
வலைகளில் தமிழ் நாடி... வார்த்தைகளில் உயிர்தேடி அலைந்திடும் ஓர் இளைஞன்..
கவிதைகள் அனைத்தும் அன்புடன் குழுமத்தில் பதித்துவிட்டு... பசி தேடி வலைகளில் சுவாசிக்கின்றேன்... அன்புடன் இளங்கோவன், அமீரகம்.
 
 
பெயர்
  பந்தர் அலி ஆபிதீன்   நாடு   தனிழ்நாடு
தளம்
    திகதி   2009-01-02
நல் வரவு
நல்ல கவிதைகளை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி
 
 
பெயர்
  ரகசியா சுகி   நாடு   சுவிஸ்லாந்து
தளம்
  http://www.tafm24.com   திகதி   2008-12-25
உங்களின் இணையத்தளத்தை பார்த்தேன் மிகவும் அருமை மென் மேலும் வளர என் இதய பூர்வமான் வாழ்த்துக்கள்.
 
 
பெயர்
  மா.சித்திவினாயகம்   நாடு   கனடா
தளம்
  http://akathiyin.blogspot.com   திகதி   2008-11-29
வார்ப்பு தள இயக்குனர்களுக்கு வணக்கம்.
வனப்பு மிகு கவிதைகளோடும் ,வளம்மிக்க கவிஞர்களோடும் உலகை வலம் வரும் வார்ப்பு வலைக்கு வாழ்த்துக்கள். நேற்றுத் தோன்றி இன்று மறையும் இணையம் என்றில்லாது, முனைப்போடு தமிழுலகில் நின்று நிலைத்து கவிஞர்களை,கவிதைகளை வாழவைக்கத் துடிக்கிற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சித்திவினாயகம்
 
 
பெயர்
  ஆர்.நாகப்பன்.   நாடு   இந்தியா
தளம்
  http://rnagappan.blogspot.com   திகதி   2008-11-19
அன்பான ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது வணக்கம்,
சில நாட்களாக "வார்ப்பு" இதழினை வாசிக்கறேன். மிக சிறப்பாக இருக்கிறது.
பல கவிஞர்களின் படைப்புகளை ஒருசேர வாசிக்கிற அனுபவம் சுகமாக இருக்கிறது.
நானும் எனது படிப்பினை அனுப்பி இருந்தேன் இது நாள் வரை பிரசுரம் ஆகவில்லை....
எனது படைப்புகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளது. அந்த குறிப்பினையும் தங்கள் பகுதிக்கு அரிய தந்தேன். இருந்தும் பதில் இல்லை.
எப்படி இருந்தாலும் ஒரு படிப்பாளியை எனது பங்களிப்பும் வார்ப்பில் இடம் பெரும் என்ற நம்பிக்கையில் தான் இதை எழுதுகிறேன்.
ஒவ்வொரு படிப்பும் தரம் வாய்ந்தாகவே இருக்கின்றன.
"வார்ப்பு"க்கு எனது வாழ்த்துகள்!


ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.
 
 
பெயர்
  S.UMA   நாடு   INDIA
தளம்
    திகதி   2008-10-31
மிகச்சிறந்த கவிதை இதழ்.கண்டிப்பாகத் தொடரவும்.சில நாட்களாக update செய்யாமலிருப்பது வருந்ததக்கது.
 
 
பெயர்
  கிரிஜா மணாளன்   நாடு   Tamilnau, India
தளம்
  http://www.kavithaigal.tamilblogs.com   திகதி   2008-10-16
"வார்ப்பு" கவிதைத்தளத்தில் எனது கவிதைகளுடன், எனது கவிதை வலைத்தளமான www.smskavignarkal-world.blogspotல் எழுதிவரும் இளங்கவிஞர்களையும் எழுதுமாறு ஊக்குவிக்கிறேன். அவர்கள் கவிதைகளும் இதில் இடம்பெற்று அவர்களை மகிழ்விக்கின்றன. "வார்ப்பு"க்கு என் நன்றி!

- கிரிஜா மணாளன்
திருச்சி 620021
 
 
பெயர்
  மா.பாஸ்கரன்   நாடு   யேர்மனி
தளம்
    திகதி   2008-10-04
04.10.2008
ஆசிரியர்
வார்ப்பு இணைவலை


வார்ப்பு வனப்புமிகு கவிதை இணைவலையிதழ். நேற்றே பார்த்தேன். நெஞ்சை வருடியும், உரசியும் செல்லும் கவிதைகள் காலத்தைப் பதிவு செய்தவாறு பயணிக்கிறது. எடுத்துக்காட்டாகப் படங்களும் வரிகளும் என்ற பகுதியிலே என்னை மிகவும் பாதித்து இன்றைய நிகழ்வுகளோடு மிக நெருங்கி நிற்பதுமான கண்ணீரும் குருதியுமாய் ஈழம் என்ற கவிதை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிமமாய் விரிகிறது. அந்த உணர்வுகளை வெளிக்கொணரும் களமாக இருப்பது மகிழ்வாக இருக்கிறது. மனிதர்கள் வௌ;வேறு திசைகளில் தேவைகளுக்கான பயணத்தில். ஆனால் சிந்தனை எப்போதும் தாய் மண்ணோடு பேசியபடி. அற்புதம். மூடி வைத்துவிட முடியாத நூலாக விரிகின்ற உந்தனுக்கு என் வாழ்த்துகள் வார்ப்பு வளர்க. கவி வளம் தருக.

இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
யேர்மனி
 
 
பெயர்
  வை. அண்ணாஸாமி   நாடு   Tamil Nadu
தளம்
  http://vas.vaarppu.com   திகதி   2008-09-30
'வார்ப்பின்' வாசலிலே வகையாய் முகமூடிகள்;

ஆர்வமாய், அதனடியிலே, அன்றுமலர்ந்த கவிகள்- பார்ப்போரின்

பல்வித கருத்துக்களை பக்குவமாய் பரிமாறும்

நல்லிணைய, இதயதள மிதுவே
 
 
பெயர்
  DURAI.N.U   நாடு   tamil naadu
தளம்
  http://duraikavithaikal.blogspot.com   திகதி   2008-09-23
கவிகளால் உருவான
கவிதைகளை உருக்கி
வார்க்கப்பட்ட இழையால்
ஈர்க்கப்பட்ட புதிய சுகானுபவம்
 
 
பெயர்
  தாஜ்   நாடு   தமிழ்நாடு/இந்தியா
தளம்
  http://www.tamilpukkal.blogspot.com   திகதி   2008-09-16
மிக அழகான வடிவமைப்பு....
நல்ல கவிதைகளுக்கான தேடுதல் உள்ளம்....
உன்னதமான கவிதைகள்...
இடம்பெற வேண்டியதொன்றுதான் பாக்கி!
பாராட்ட வேண்டிய முயறச்சி.
வாழ்த்துகளுடன்
- தாஜ்
 
 
பெயர்
  dr.durai manikandan   நாடு   india
தளம்
    திகதி   2008-09-11
அன்புள்ள வார்ப்பு இணைய இதழ் ஆசிரியர் திரு ப.மகாதேவன் அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் இதழ் உலகின் முதழ் கவிதை இணைய இதழ் என்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்ல பல கவிதைகளை வெளியிட்டு வரும் நம் இதழை மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து வருகின்றேன்

நமது இதழ் தொடர்பாக பேரியார் பழ்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞ்ர் பட்டத்திர்காக
"வார்ப்பு இணைய இதழ் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் எமது மேற்பார்வையில் ஆய்வு செய்துள்ளார்.
இதற்க்கும் நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர் துரை. மணிகண்டன்
விரிவுரையளர்
தமிழ்த்துறை
தேசியக்கல்லுரி
திருச்சிராப்பள்ளி.
தமிழ்னாடு.
இந்தியா.
 
 
பெயர்
  dr.durai manikandan   நாடு   india
தளம்
    திகதி   2008-09-11
றஞ்சனியின் கவிதைகள் தாய்னாட்டின் பாசத்தைக் வெளிப்படுத்தியுள்ளது.
சில கவிதைகளைப் வாசிக்கும்பொழுது கண்ணில் ரத்தம் கசிகிறது.
காலம் பதில் சொல்லாமல் இறாது.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
 
 
பெயர்
  rajakamal   நாடு   dubai
தளம்
  http://www.rajakamal.blogspot.com   திகதி   2008-09-09
வார்ப்பில் வார்தெடுக்கப்பட்ட கவிதைகளும் கவிஞர்களும் அற்புதம் மொத்ததில் வார்ப்பு கவிதை மலர்களின் சேர்ப்பு வாரம் ஒரு முறை பூக்கும் கவிதைப் பூ இந்த வார்ப்பு வார்ப்பை வர்ணிக்க இனி வார்த்தைகள் வார்க்கப்பட வேண்டும்

அன்புடன் ராஜா கமால்
 
 
பெயர்
  கிளியனூர் இஸ்மத்   நாடு   கிளியனூர் இஸ்மத்
தளம்
    திகதி   2008-09-04
எனது கவிவனம் இணைதளத்தை வார்ப்பு சரத்தில் இணைத்ததிற்கு மிக்க நன்றி................
வார்ப்பு இணையத்தளம் உலகளாவிய தமிழ் கவிஞர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது என்பதை அதன் உள்ளே
நுழைந்த போது உணர்ந்;தேன் ஒவ்வொரு வினாடியும் உணர்கின்றேன்;.................
மென்மேலும் வார்ப்பு வளர்வதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.............

கிளியனூர் இஸ்மத் துபாய்
 
 
பெயர்
  ismath   நாடு   dubai
தளம்
    திகதி   2008-08-28
என்போன்ற கவிஞனுக்கு
வார்ப்பு
இணையதளம்
தாய்வீடு

ismath-dubai 28/08/2008
 
 
பெயர்
  கே.பாலமுருகன்   நாடு   மலேசியா
தளம்
    திகதி   2008-08-20
வார்ப்பு கவிதைக்கான வெளியில் அகன்று பரவி இருக்கின்றன. தெளிவான நீரீடையில் விழும் குமிழ்களின் செறிவைப் போல வார்ப்பின் தளத்தில் கவிதைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன தொடரட்டும்
 
 
பெயர்
  rahini   நாடு   germany
தளம்
  http://rahini.blogspot.com/   திகதி   2008-08-04
தமிழ் மக்கள் இதயத்தை வார்த்தெடுத்து அன்போடு அரவணைத்து
ஊக்குவிக்கும் தளமாக அமைந்துள்ளன இந்த வார்ப்பு

முக்கனிகள் அல்ல
இங்கே பல் சுவைகள் .
பசுமை நினைவுகள்
நெஞ்சை உருகவைக்கும்
கவிச் சோலைகள்
இதயத்தை திருடிக்கொள்ளும்
கட்டுரைகள்.
எழுத்துக்களை அரவணைத்துக்கொள்ளும்
விமர்சணங்கள்.
சொல்லிவிட முடியுமா?
சொல்லத்தான் வார்த்தை உண்டா..?

பதிப்பாசிரியர்
பா. மாகாதேவன் அவர்களுக்கும்.
உதவிக்கரம் கொடுக்கும்.
பிரியானா ராஜேந்திரா
றமணன் அவர்களுக்கும்.

ஆலோசகர்கள்
இசாக்
ரவி சுவிஸ்
நந்தா கந்தசாமி
அருள்அரசி
றஞ்ஜினி அவர்களுக்கும்


தொழில்நுட்ப, வடிவமைப்பு உதவி
excelgra


நன்றி கூறி மேலும் மேலும் சந்ததி சந்ததியாக மலரவேண்டும் என்று வாழ்த்துக்களோடு
பிராத்தனையும் செய்கின்றேன்.
அன்புடன்
பா.ராகினி
ஜேர்மனி
 
 
பெயர்
  Nachchiyadeevu farveen   நாடு   sri lanka
தளம்
  http://www.tgl.lk   திகதி   2008-07-24
வார்ப்பு-
உலகத்தமிழ்க் கவிஞர்களின் தளம்
 
 
பெயர்
  அப்துல் வாஹித்   நாடு   இந்தியா
தளம்
  http://www.vasanthakaalam.page.tl   திகதி   2008-07-21
தமிழ் உலகின் வேண்டாவரம்
வார்ப்பு
 
 
பெயர்
  satheeshmohan.R   நாடு   india
தளம்
  http://www.vaarpu.com   திகதி   2008-07-10
வார்ப்பு கவிதை இதழ்
உலகத்தில் முதல் முறையாக வார்த்து
வழங்கப்படும் கவியமுதம்

புதிய புதிய படைப்பாளர்களை
அரவனைக்கும் அன்னை

கவிதை வாசகர்களின்் சொர்க்கம்

உலக தமிழர்களின் தாகங்களைத்
தனிக்கும் ஜிவநதி

புதிய முயற்சிக்கு அடியனும் ஆட்பட்டுவிட்டேன்.

இப்படிக்கு
மெத்தமகிழ்வுடன்
இரா.சதீஷ்மோகன் எம்.ஏ,எம்.பில்
தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்
பாரதியார் பல்கலைக்கழம்
கோயம்புத்தூர்-46

 
 
பெயர்
  rahini   நாடு   germany
தளம்
  http://rahini.blogspot.com/   திகதி   2008-06-26
வணக்கம்.
இன்றுதான் இந்தப்பக்கம் பார்வையிட காலம் கிடைத்தன அருமையான ஆக்கங்கள்
ஊக்கவிக்கும் கருணை உள்ளம் கண்டு வியந்து சொக்கி நிக்கின்றேன்

வாழ்க வளர்க.
அன்புடன் கவிதைக்குயில்

பா.ராகினி
 
 
பெயர்
  செண்பக ஜெகதீசன்...   நாடு   விஜயநகரி, இந்தியா.
தளம்
  http://www.geocities.com/vsnjag/   திகதி   2008-05-29
வார்ப்பு-
உலகத்தமிழ்க் கவிஞர்களின்
உற்சாக அணிவகுப்பு..
காணக் கிடைக்காத
கவிதைத் தோரணங்கள்..
தடைபடாத
தமிழ்க்கவிதை நீரூற்று..
தட்டிக்கொடுத்து தமிழ்வளர்க்கும்
வார்ப்புக்கு என்
வாழ்த்துக்கள்...!
அன்புடன்,
வார்ப்பு-191
-செண்பக ஜெகதீசன்...
 
 
பெயர்
  கிரிஜா மணாளன்   நாடு   India
தளம்
  http://www.kavithaigal.tamilblogs.com   திகதி   2008-05-28
உங்க கவிதைத் தளத்துல 'தலைப்பு' கொடுத்த உடனே தன்னோட கவிதையை அதுல போட்டுடனும்னு என் சகாக்களுக்கு ஒரு துடிப்பு ஐயா! (கல்யாணத்துல, முதல் பந்தியில முதல் இடத்தப் பிடிக்க அலையற மாதிரின்னு வச்சுக்குங்களேன்!) நம்ம சக்திதாசன் ஐயாவோ, ருத்ராவோ எங்கே முந்திக்க‌போறாங்களளோன்னு எங்க சாகாக்கள் துடிக்கிற துடிப்பு அப்படி! இப்படி ஒரு ஆரோக்கியமான போட்டியால, இந்த தளத்துக்கு நெறைய கவிஞர்கள் அறிமுகமாறதுக்கு வழி பண்ணியிருக்கற உங்களைத்தான் பாராட்டணும்!

‍ > கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.
 
 
பெயர்
  வேதா. இலங்காதிலகம்.   நாடு   டென்மார்க்.
தளம்
    திகதி   2008-05-28
விமர்சனம். 28-05-2008.

தலைப்பு தந்து கவி எழுத
மலைத்து நின்றவள் நான்.
சுவைத்து எழுதுகிறேன் இன்று.
ரசித்துச் சுவைக்கிறேன் கவிதைகளை.
இளமைத் தமிழினுள்ளே தினம்
இனிய தேடல் இது.
களம் இனிய களம். தளமும் கவிஞர்களும் வாழ்க! வாழ்க!

வாழ்த்துவது வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
 
 
பெயர்
  கிரிஜா மணாளன்   நாடு   India, Tamilnadu.
தளம்
  http://www.yahoo.com   திகதி   2008-05-17
தாங்கள் தரும் தலைப்புகளும், அவற்றுக்கு கவிஞர்கள் படைக்கும் கவிதைகளும் சிறப்பாக அமைந்துவருவதாக, எங்கள் நகரிலுள்ள வாசகர் வட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள், அண்மையில் நாங்கள் எங்கள் திருச்சி மாநகரில் துவக்கியுள்ள 'உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையிலுள்ள கவிஞர்கள் அனைவரும் உங்கள் இணையதளத்தின் ரசிகர்களாகி வருவதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- கிரிஜா மணாளன்
செயலாளர், திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
 
 
பெயர்
  சக்தி சக்திதாசன்   நாடு   இங்கிலாந்து
தளம்
  http://www.thamilpoonga.com   திகதி   2008-05-13
வார்ப்பு என்றொரு கவிதைத் தளம்
வார்த்தைகள் தான் அதன் பலம்
தமிழினைத் தந்தது தாய் நிலம்
தரமாய் வளர்த்தது வார்ப்பெனும் தளம்

சுவையுறும் கவிதைகள் படைத்திடும்
சுந்தரத் தமிழ்க் கவிஞர்கள் அனைவரும்
சுகந்தரும் வேளைகள் தேடியே வரும்
சிறந்த தளம் வார்ப்பு வாழிய வாழியவே
 
 
பெயர்
  தீபச்செல்வன்   நாடு   ஈழம்
தளம்
  http://deebam.blogspot.com/   திகதி   2008-04-17
அன்புடன் வார்ப்பு

முக்கியமாக எனது மடுமாதா கவிதையினை வார்ப்பு பிரசுரித்ததிற்காக எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அன்புடன்
தீபச்செல்வன்,

ஆனந்தபுரம்,
கிளிநொச்சி.
 
 
பெயர்
  கிரிஜா ம‌ணாள‌ன்   நாடு   India, Tamilnadu.
தளம்
  http://www.yahoo.com   திகதி   2008-04-07
அனைத்துப் ப‌டைப்பாள‌ர்க‌ளையும் ஊக்குவித்து க‌விதை புனைய‌வைக்கும் "ப‌ட‌மும் வ‌ரிக‌ளும்" ப‌குதியை எங்க‌ள் திருச்சி மாந‌க‌ரப் ப‌டைப் பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் பாராட்டி வ‌ர‌வேற்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் சார்பில் என‌து ந‌ன்றி!

> கிரிஜா ம‌ணாள‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
 
 
பெயர்
  கு.குகேந்திரன்   நாடு   srilanka
தளம்
    திகதி   2008-03-29
வார்ப்பு இணையத்தளம் கவிஞர்களின் கவிதை ஆக்க முயற்சிக்கு சிறந்த களம். கவிதைகள், இலக்கியத்திறனாய்வுகள், கட்டுரைகள் தரமானவை.கவிஞர்களின் கவிதை பற்றிய எனது மனப்பதிவுகளைப் பிரசுரித்தமைக்கு நன்றிகள். பணி தொடரப் பாராட்டுக்கள்.

அன்புடன்,
கு.குகேந்திரன்,
ஆலங்கேணி
பூநகரி,
கிளிநொச்சி.
 
 
பெயர்
  shibly   நாடு   Sri Lanka
தளம்
  http://www.shiblypoems.blogspot.com   திகதி   2008-03-18
உண்மையில் வார்ப்பின் பணி அபரிதமானது.எனக்குப்பிடித்த இணையத்தளங்களில் வார்ப்பே முதன்மையானது.எனது கவிதைகளையும் பிரசுரித்தீர்கள்.காலம் உள்ள வரை கோடி நன்றிகள்.இன்னும் சேவைப்பணி தொடர என்றும் என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்....
 
 
பெயர்
  முனைவர் மு.இளங்கோவன்   நாடு   இந்தியா
தளம்
  http://www.muelangovan.blogspot.com   திகதி   2008-03-14
அன்புடையீர் வணக்கம்.
தங்களின் கவிதைப்பணி அறிந்து மகிழ்கிறேன்.
கவிதைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற நான் தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இல்லாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.
கவிதைகள்,திறனாய்வுகள்,கட்டுரைகள் யாவும் சிறப்பு.தேர்ந்த முறையில் இதழ் வடிவமைக்கப் படுகின்றமைக்குப் பாராட்டுகள்.நாட்டுப்புறப்பாடல் துறையில் பல பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளேன்.அவற்றையும் கவிதைகளையும் அனுப்பி வைப்பேன்.மாணவர்களுக்கு இதழை அறிமுகம் செய்வேன்.

அன்பிற்குரிய
மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரி,
புதுச்சேரி,இந்தியா
 
 
பெயர்
  ந.அன்புமொழி   நாடு   இந்தியா
தளம்
    திகதி   2008-03-07
உங்கள் இணைய இதழில் கவிதைகள் பகுதியில் நான் அனுப்பியிருந்த ‘இறைமகிழ்ச்சி’ ‘கடன்’ ஆகிய படைப்புகளை 03.03.2008 அன்று பிரசுரித்திருந்தீர்கள் மிக்கநன்றி. புதிதாக எழுதுபவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் உங்களின் சேவைக்கு மிகவும் நன்றி.

அன்புடன்
ந.அன்புமொழி
சென்னை.
 
 
பெயர்
  ருத்ரா   நாடு  
தளம்
    திகதி   2008-03-07
உங்கள் வார்ப்பு
தமிழ் இலக்கியத்தின் எதிர்பார்ப்பு.
கவிதைகளின் ஈர்ப்பு
வெறும் வலைச்சன்னல் அல்ல அது.
தமிழ் இதயங்களின் கலைச்சன்னல் அது.
கணினிப்பொறியில்
கல்கண்டு தமிழின் பொங்கல் படைத்த‌
கவின்மிகு எழுத்தாளன்
சுஜாதாவின் சூடான சுவாசம்
இன்னும்
நம் எழுத்துக்களில்
நரம்பு மீட்டி
நாடித்துடிப்புகளாய்
ஒரு "வேவ் மெகானிக்ஸ்"ஐ
ந‌ம‌க்கு த‌ந்து கொண்டேயிருக்கிற‌து.
அது இர‌ங்க‌ல் அல்ல‌.
அஞ்ச‌லியும் அல்ல‌.
இன்னும் ஒரு 22 ஆம் நூற்றாண்ட நோக்கி
ந‌ம் த‌மிழுக்கு
அவ‌ர் த‌ந்து கொண்டிருக்கிற‌
மின்னணு யுக‌ப்பாய்ச்ச‌ல் அது.
க‌ண்ணீரை துடைத்துக்கொள்வோம்
அவ‌ர் க‌ன‌வுக‌ளை அல்ல‌.


அன்புட‌ன்
ருத்ரா
 
 
பெயர்
  வ.ஐ.ச.ஜெயபாலன்   நாடு   நோர்வே
தளம்
    திகதி   2008-02-28
வார்பின் வனப்பும் வளர்ச்சியும் மகிழ்ச்சி தருகிறது.
 
 
பெயர்
  ந.அன்புமொழி   நாடு   சென்னை, இந்தியா
தளம்
    திகதி   2008-02-27
வார்ப்பின் வாசகன் என்ற வகையில், கையில் எதையும் கொண்டுசெல்லாமலே உலகின் எந்த இடத்திலும் தொட்டுச் சொல்லலாம் இதோ எனது கவிதையென்று. (புதிதாய் எழுதுபவர்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி) கவிதைக்காக தனித்தளம் அமைத்து, கவிஞர்கள் தங்கள் கருத்துக் கணைகளை சோதனைசெய்யவும் கவிதைகளால் போரிடவும் தனிக்களம் அமைத்து, அறிவுப்பூர்வ அழகிய கவிதைகளையும் ஆரோக்கியமான விமர்சனங்கள் கவிஞர்களின் நேர்கோணல்கள் கட்டுரைகளை ஒருசேர அழகிய வடிவில் தந்து, வாசகர்களை அறிவால் மகிழ்வித்து வார்க்கும் ‘வார்ப்பு’ மேன்மேலும் சிறந்துவிளங்க வாழ்த்துக்கள்.

வார்ப்பின் காரணகர்த்தாக்கள் அனைவர்க்கும் நன்றிகள்
 
 
பெயர்
  கிரிஜா மணாளன்   நாடு   Tamilnadu, India.
தளம்
  http://www.yahoo.com   திகதி   2008-02-15
இம்மாதம் 21 ஆம் நாள் வருகிறது 'சர்வதேச தாய்மொழி நாள்'. நமது தமிழைச் சிறப்பிக்கும் வகையில் சிறந்த கவிதைகளைப் படைக்க நமது வாசகர்களுக்கு ஓர் வாய்ப்பளிக்கலாமே?
> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
 
 
பெயர்
  கிரிஜா ம‌ணாள‌ன்,   நாடு   India
தளம்
  http://www.yahoo.com   திகதி   2008-02-11
ப‌ட‌மும் வ‌ரிக‌ளும்...த‌லைப்பைக் கொடுத்து, ஒவ்வோர் க‌விஞ‌ரின் உள்ள‌த்திலும் க‌ற்ப‌னை ஊற்றைச் சுர‌க்க‌ச் செய்து, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌வியாற்ற‌லைப் பெருக்கிக்கொள்ள‌ச் செய்யும் ப‌ய‌னுள்ள‌ ப‌குதி. பாராட்டுகிறேன்!

> கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.
 
 
பெயர்
  I.Thilaga   நாடு   India
தளம்
  http://www.geocities.com\thilaga_iyadurai   திகதி   2008-02-09
இயந்திர வாழ்க்கையில் இனிய பொழுதுபோக்கு கவிதை… கவிதை எழுதுவது சுவை என்றால் பிறர் கவிதைளை வாசிப்பது அதைவிட தித்திப்பானது.. கவிதைப் பூக்களால் இனிய பூங்கா அமைத்த வார்ப்புக்கு நன்றி.. கவிதையை ரசிக்க ஆரம்பித்தபின் உலகம் இன்னும் அழகாக தெரிகிறது. என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன்…

- ஐ. திலகா (வைகறை நிலா)
 
 
பெயர்
  யோகப்ரபா   நாடு   இந்தியா
தளம்
  http://kuzhaam.blogspot.com   திகதி   2008-02-04
இவ்விதழ் பற்றிய ஆய்வில் இதில் வெளிவந்துள்ள கவிஞர்களின் பெயர்களைக் கொண்டு எத்தனை பெண்கவிஞர்கள் இவ்விதழில் பங்கெடுத்துள்ளனர் என்பதை அறியமுடியவில்லை. மேலும் ஆண்டுவாரியாக இவ்விதழை எவ்வாறு பார்ப்பது என்னும் தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.


யோகப்ரபா
புதுச்சேரி.
 
 
பெயர்
  யோகப்ரபா   நாடு   இந்தியா
தளம்
  http://kuzhaam.blogspot.com   திகதி   2008-01-29
மின் இதழ்களில் நான் அறிந்தவரை இவ்விதழில் தான் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில் இவ்விதழ் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத இருப்பதால் வார்ப்பின் முதல் இதழிலிருந்து இன்றுவரை வெளிவந்துள்ள இதழ்களை பார்க்கும் முறையினைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாசகி

-யோகப்ரபா
புதுச்சேரி
 
 
பெயர்
  kuneswaran   நாடு   sri lanka
தளம்
    திகதி   2008-01-22
வார்ப்பு கவிதைத் தளத்தின் வடிவமைப்பும் படைப்புக்களும் மிகச் சிறப்பாக உள்ளன. கவிதைக்கென்று வெளிவந்த சஞ்சிகைகள் உள்ளன. இணையத்தளத்தில் கவிதைக்கென்று வெளிவந்து கொண்டிருக்கும் வார்ப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. கவிதைகளை விட கவிதைகளுக்கு தாங்கள் தெரிவுசெய்யும் படங்கள் சிறப்பு என்பதைக் கூறியே ஆக வேண்டும். தொடரட்டும் வார்ப்பின் இலக்கியப் பணி.

அன்புடன் சு. குணேஸ்வரன்
அல்வாய். யாழ்ப்பாணம்.
 
 
பெயர்
  டீன்கபூர்   நாடு   இலங்கை
தளம்
    திகதி   2008-01-11
வணக்கம்.

நான் மிகவும் மகிழ்வுற்றிருக்கிறேன்.

தங்களது ‘வார்ப்பு’ தளத்தில் எனது கவிதைகளையும் இணைத்து வருகிறீர்கள், எனக்கும் ஒரு இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்வைத் தருகிறது. அத்தோடு அண்மையில் நான் வெளியீடு செய்த ‘திண்ணைக் கவிதைகள்’ கவிதை நூலை “நூலகம்” பகுதியில் சேர்த்திருப்பது இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது. என்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

இத்தோடு நூலகத்திலுள்ள எனது ‘திண்ணைக் கவிதைகள்’ நூலோடு இணைத்துக் கொள்ள திண்ணைக் கவிதைகளில் உள்ள சில கவிதைகளை அனுப்பிவைக்கிறேன். சேர்த்துக்கொள்ள ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

என்றும் உங்கள் தளத்தோடு இருக்கும்
டீன்கபூர்
 
 
பெயர்
  கிரிஜா ம‌ணாள‌ன்   நாடு   India
தளம்
  http://www.yahoo.com   திகதி   2008-01-08
வார்ப்பு என்னும் இணைய‌ த‌ள‌ த‌லைவாழை இலையில், க‌விதை என்னும் அறுசுவை விருந்து ப‌டைத்து எங்க‌ளை ம‌கிழ‌ச் செய்யும் எண்ண‌ற்ற‌ க‌விஞ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் ந‌ன்றி!
க‌விஞ‌ர்க‌ளின் வேட‌ந்தாங்க‌லாய் திக‌ழ்ந்திடும் வார்ப்பு இணைய‌த‌ள‌த்துக்கும், ப‌ங்கேற்கும் க‌விஞ‌ர்க‌ளுக்கும் எங்க‌ள‌து அமைப்பின் ப‌டைப்பாள‌ர்க‌ள் அனைவ‌ர‌து சார்பிலும் வாழ்த்துக்க‌ள்!

> கிரிஜா ம‌ணாள‌ன்
> பா.ஸ்ரீராம்
> அ.க‌வுத‌ம‌ன்
> ச‌ர‌சுவ‌தி ப‌ஞ்சு
> இள‌ஞ்செல்வி செல்வ‌ம‌ணி
> ஜோதி கார்த்திக்
(திருச்சி மாவ‌ட்ட‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம்)
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.
 
 
பெயர்
  ரவி   நாடு   Swiss
தளம்
    திகதி   2008-01-01
வார்ப்பு இதழ் 2008 இல் தனது கவிதைகளைப் பரப்ப எனது வாழ்த்துக்கள்!. டபிளன்.கொம் என ஒரு கூட்டைக் கட்டிய இணையஇதழொன்று இன்று தனைச் சுற்றி வனமொன்றை நிர்மாணித்திருக்கிறது. மரங்களும் நதிகளும் நட்சத்திரங்களும் வானமும் மண்ணும்... என இயற்கையாய் நீண்ட வனமொன்று கவிதைக்காடாகியது.

வடிவமைப்பில் உறுத்தல்களையெல்லாம் அது நீக்கிக்கொண்டு கொண்டு புதிசுபுதிசாய் அது பரிணமித்திருப்பது மகிழ்ச்சிதருகிறது. இவ்வளவு பெருந்தொகையான கவிதைகளை, கவிதை முயற்சிகளையெல்லாம் அது அரவணைத்துக் கொண்டுள்ளது. இடறல் தரும் கவிதைகளிலிருந்து உணர்வைத் தாக்கும் கவிதைகள்வரை -செடிகொடிகளும் வானுயர்ந்த மரங்களும் மண்ணையும் வானத்தையும் இணைக்க வார்க்கும் பசுமைபோல்- வார்ப்பு நிர்மாணித்தபடி இருக்கிறது.

எது கவிதை என நடக்கும் முடிவுறா விவாதங்களை இதன் நிழலில் நின்று நடத்த போதுமான வெளிகளை வார்ப்பு உருவாக்கித் தந்திருக்கிறது. நல்ல பல கவிஞர்களை அது இனம்காட்டிக்கொண்டிருக்கிறது. நல்ல பல கவிதைகளை அது வாசிப்புக்குத் தந்திருக்கிறது. தமிழ்க் கவிதை பற்றிய ஆய்வுகளை நேர்மையாக மேற்கொள்ள முயலும் எவரும் வார்ப்பை தவிர்த்துவிட முடியாது என்ற நிலைக்கு அது தன்னை உயர்த்தியபடி முன்னேறுகிறது என்பது ஒன்றும் முகமன் கூறும் வார்த்தைகளல்ல. வார்ப்பின் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை அதனுடனான எனது தொடர்பு என்னை மகிழ்வுறச் செய்கிறது. தொடர்ந்தும் வார்ப்பு வனத்தில் காற்றின் ஓசையையும் ரீங்காரங்களையும் குயில்களின் இசையையும் நதிகளின் பாடல்களையும் கேட்டபடி இந்தப் புதுவருடத்தை வரவேற்போம். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! -ரவி
 
 
பெயர்
  Girijamanaalan   நாடு   Tamilnadu (India)
தளம்
  http://yahoo.com   திகதி   2007-12-29
ப‌ல‌வ‌கையான‌ க‌விதைக‌ளை விரும்பி வாசிக்க‌த் த‌க்க‌ இணைய‌த‌ள‌ம் வார்ப்பு! ஒவ்வொரு க‌விதையிலும் அத‌ன் ப‌டைப்பாள‌ரின் உள்ள‌த்துடிப்பு தெரிகிற‌து.
> கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
 
 
பெயர்
  கவிமதி   நாடு   துபாய்
தளம்
  http://www.kavimathy.blogspot.com   திகதி   2007-12-28
கவிதைக்கென்று உள்ள உறுப்படியான தளங்களில் மிக முக்கியமானதாக நமது வார்ப்பு தளம் வளர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது வார்ப்பு பற்றி மக்கள் தொலைக்காட்சியின் தமிழ்க்கூடல் பகுதியில் அறிமுகம் செய்தார்கள். நீங்களும் கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன், நண்பர்கள் சிலரும் மக்கள் தொலைக்காட்சியும், ஆனந்த விகடனிலும் பார்த்துவிட்டு சொன்னார்கள் மகிழ்ச்சியாக இருந்தது. மென்மேலும் நமது வார்ப்பு வளர வாழ்த்துகள்

நண்பர்கள் சார்பில்

கவிமதி
துபாய்
 
 
பெயர்
  பாண்டித்துரை   நாடு   சிங்கப்பூர்
தளம்
  http://pandiidurai.wordpress.com   திகதி   2007-12-26
உணர்வான கவிதைகள் வார்ப்பின் வழி உயிராகிறது. கவிதையுடன் இன்னும் சில அழகியல்கள் இணைந்தால் இன்னும் ஒரு முகம் கூடுதலாய் தெரியும். அப்படியே வார்ப்பில் கவிதையுடன் இணைக்கப்படும் ஓவியமும் மற்றும் புகைப்படங்கள். தலைப்பில்லாத கவிதைகளையும் எழுதிய கவிஞர்களின் பெயரில் சில உலவ கண்டேன். (அதில் என்னுடைய கவிதையும் அடங்கும்) இந்த போக்கு அதிகரிக்ககூடாது என்ற எண்ணப்பாடககூட இருக்கலாம்.( தலைப்பில்லா கவிதைகளை தவிர்த்துவிடுங்கள் என்று வந்த அறிவிப்பு.) தளிருக்கும் இடமளித்து மிளிர்வதே வார்ப்பின் சிறப்பு.

தோழமையுடன்
பாண்டித்துரை
 
 
பெயர்
  தமிழ் ராஜா   நாடு   இந்திய
தளம்
  http://tamilraja-thotil.blogspot.com   திகதி   2007-12-13
உங்களின் இந்த தளத்தை இன்று தான் தான் கண்டேன். மிகவும் மகிழ்கிறேன். நிறைய செய்திகளுடன் , நெஞ்சை மென்மையாக வருடும் கவிதைகளுடணும் படிப்பவரை ஈர்கிறது . உடனே உங்களின் இணையத்தில் சேரவேண்டும் என்ற ஆவலினால் இதோ இதை எழுதுகிறேன்
 
 
பெயர்
  றஞ்சினி   நாடு   Germany
தளம்
    திகதி   2007-11-14
வார்ப்பு உண்மையில் நல்லா வந்து கொண்டிருக்கு ,நிறையப்பேர் பார்க்கிறார்கள்போல, வாழ்த்துக்கள் . கவிதைகளுக்கு போடும் படங்கள் மிகவும் அழகு. வார்ப்பில் அறிவிப்பு பார்தேன் தலைப்பில்லாத கவிதைகள் தகுதியற்றவை எனக்கெருதப்படும் என்று எழுதியது கொஞ்சம் கஸ்டமாக இருந்தது ,அப்போ தலைப்புடன் வரும் கவிதைகள் எல்லாம் தகுதியானவையா என்ற கேழ்வி எழுகிறது அல்லவா? தலைப்பிடாமல் வரும் கவிதைகள் வார்ப்பில் பிரசுரிக்கப்படமாட்டாது என்று போட்டிருக்கலாமோ என்று தோன்றியது இது எனது கருத்து ,இதை நீங்கள் பெரிது படுத்தத்தேவையில்லை. மற்றும்படி வார்ப்பை அழகாக வடிப்பதற்கு
வாழ்த்துக்கள்

நட்புடன்
றஞ்சினி
 
 
about us button   
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்