|
| |
| கட்டுரை |
என் பார்வையில் சென்ற மாதம் சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி
விழா (ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்)
பாரட்டுகளும் விமர்சனங்களும் வரவேற்க்கதக்கதே, விமர்சனங்கள் குறைகளை சுட்டிக்காட்டி நிறைவான
பாதைக்கு அழைத்து செல்வதாக அமையவேண்டும்.
கணையாழியில் நான் கண்டது
நிகழ்வின் சிகரம் திரு.சித்தார்தன் இருக்க, நிகழ்சியின் சிகரமாய் அமைந்த சில நிகழ்வுகள்
உங்களுடனே.........
திரு.இனியதாசன், திரு.முத்துகுமாரின் பாடல்கள் நல்வரவேற்பை பெற்றது, சிறப்பு விருந்தினரும்
இக்கருத்தையே வலியுறுதினார்.
கவிஞர் சேவகன் தலைமையில் நடைபெற்ற கவிமாலையில் கவிஞர்கள் கண்ணன், திருமுருகன், அழகுராஜா,
சின்னபாரதி, நான் உள்ளிட்ட கவிசகோதரர்கள் அவரவர் பார்வையில் நட்சதிரமாய்
மின்னினர். கவிஞர் சேவகன் அவர்களும் அவருக்கே உரிய நையாண்டி கலந்த தொனியில் அறிமுகபடுத்தியும்,
விமர்சித்தும் இன்னும் அழகுபடுத்தினார்.
கவிமாலையின் சிறப்பே கலைஞர்களை அடையாளம் கண்டுகொண்டு வாயப்புகொடுத்து வளரசெய்வதே,
இதற்கு சான்று 75வயது முதியவரை கௌரவபடுத்தியது.
பெண்கவிஞர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருட்டடிப்பு செய்யபட்டே வருகின்றனர்.
விதிவிலக்கு கவிமாலை.
கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கமே சான்று.
கவிஞர் மலர்விழி இளங்கோவன் கவிஞர் மாதங்கி தவிர்த்து எனக்கு அனைவருமே புதுமுகம். கவிஞர்
இன்யா, கவிஞர் சரண்யாவின் பேச்சுக்கள் சிறப்பாக அமைந்தன. என் நண்பர்களும் இதே
கருத்தை வலியுறுத்தினர். கவிஞர் சரண்யாவின் பேச்சுக்களால் கவியரங்கம் இன்னும் அழகுபெற்றது.
கவிஞர் மாதங்கி அவர்களின் பேச்சுக்கள் என்றும் தனி மகுடமே. கவிஞர் மலர்விழி இளங்கோவன்
அவர்களும் திறம்படவே செய்தார். இவரது பேச்சுகளால் கேட்டுணர்ந்தவர்களின் மனது நிரம்பியிருக்க
வேண்டும். கவியரங்க முடிவில் என் ஊர் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.
முக்கனி, முத்தமிழ், மூவேந்தர் போல
கவிமாலை பிறக்க முக்கவிகள் காரணம்
ஆனால்
கணையாழி நிகழ்வில் களபணியாற்றிய முக்கவிஞர்களை சொல்லவேண்டும். கவிஞர்
பிச்சனிகாடு
இளங்கோ மற்றும் ந.வீ சகோதரர்கள். ந.வீ சகோதரர்கள இரட்டைபிறப்போ என நான் எண்ணியது
உண்டு, காரணம் இரட்டையர்களின் குணாதிசயங்கள், எண்ணங்கள்தான் 95% ஒத்துபோகுமாம்.
கவிஞர் பிச்சனிகாடு இளங்கோ அவர்களை குறிப்பிட்டே சொல்லியாக வேண்டும். அங்கும், இங்கும்
ஓடி என்னை ஒத்த இளைஞனாக காட்டிக்கொண்டார். மேலும் திரு. சித்தார்தன் பேசும் போது
அவரின் பேச்சுகளை நாங்கள் செவிமடுக்க கவிஞர் பிச்சனிகாடு அவர்கள் மைக்கை ஏந்திகொண்டது
அவரை குழந்தையாகவே மாற்றியது. ( ஆம் கவிதை இளமையானது கவிதை குழந்தையிடமிருந்துதான் பிறக்கிறது).
முன்வரிசை தேடி அமர்வர் மத்தியிலே கவிஞர் அன்பழகன் பின்னே அமர்ந்து இருந்து பேச்சாளர்களின்
பேச்சுகளை நாங்கள் உள்வாங்க நண்பர் முத்துகுமாரிடம் ஆலோசனை வழங்கிய விதமும் விருது நாயகரை
அறிமுகபடுத்தியதையும் நினைவுகூறுகிறேன்
புரியாத புதிர்
புதிர் போட்டி நடந்திருந்தால் 20 நிமிடம் காலவிரயம் ஆகியிருக்கும்.
இந்த போட்டியை தமிழ்முரசுவில் வெளியிடலாமே?
சிறப்பு விருந்தினர் கவிஞர் பாலாவின் பேச்சுகள், நான் கண்டு ரசித்த கவிஞர்களிலிருந்து
வித்தியாசபடுத்தி காட்டியது. காலத்தை சுருக்கி, பிறர் காலத்தை சுருக்கி கவிஞர்
பாலாவின் பேச்சுகளை பெருக்கிகாட்டியிருந்தால் இன்னமும் மகிழ்திருப்பேன்.
இவ்வளவையும் சொல்லிவிட்டு ஒன்றை மட்டும் மறந்துவிடுவேனா என்ன?
என் பார்வையில் முதல் சிகரம்
கவி கோ. இளங்கோவின் " இசை நாட்டியத்தில் இலக்கியம' "
திரு.ஸ்டாலின் கவிதையை நேசித்து வாசித்தது நாட்டியத்தின் கம்பீரத்தை அதிகரித்தது எனலாம்.
இதில் சிறப்பு கவி கோ. இளங்கோ தவிர அனைவரும் புதுமுகமே, நண்பர் பிரபு நிகழ்சியின் முதல்நாள்
தான் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடதக்கது. நாட்டியத்தில் கவி கோ. இளங்கோ வெளிவந்த
தருணம் எல்லோரையும் கவர்ந்தது, அதற்கு அரங்கம் நிறைந்த கரவொலியே சான்று. ( இந் நிகழ்வின்
முதல் வாரத்தில்தான் கவி கோ. இளங்கோ சிலப்பதிகாரத்தை எளிய நடையில் எழுதி நாட்டிய
வடிவில் மலேசியாவில் அரங்கேற்றம் செய்யபட்டதை நினைவு கூறவேண்டும்)
நிகழ்வுகள் பதிவுசெய்யபடவில்லை, இதை நேரிடையாகவே வெளிகாட்டினேன். இன்னும் கொஞ்சமாய்
நாம் முயன்றிருக்க வேண்டும்.
நிகழ்வுகள் பதிவுசெய்யபடவில்லை என்பதைவிட கவி கோ. இளங்கோவின் " இசை நாட்டியத்தில்
இலக்கியம' பதிவுசெய்யபடாததே என்னில் வருத்ததை அளித்தது.
நன்றி
எண்ணப்பழையிருந்தால்
செதுக்கிட உளியாய் வாருங்கள்.
நட்புடனே
நீ"தீ"
006598870725 |
|
|
|
| |
|
கவிதை தொடர்பான கட்டுரைகள், நிகழ்வுகளைப் பதிவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள்.
தொடர்புகட்கு
|
|
|
| நூல் விமர்சனம் |
|
 |
நங்கூரம் - நளாயினி |
பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்
கன்னிக்கோயில் இராஜா |
| மேலும்... |
|
|
|
|