Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
கட்டுரை

தைத்திருநாள் விழா கவியரங்கம்-----2


தைத்திருநாள் விழா கவியரங்கம்-----1

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : திருவள்ளுவர் திருநாள் (மாதங்கி)

அறுவடைத் திருநாள்
அறிவுடைய விழாமட்டுமல்ல
திருவுடைய விழா
திருவள்ளுவர் விழா

வயிற்றுப் பசியோடு
வாழ்க்கை முடிவதில்லை
அறிவுப்பசி வேண்டும்
அதுதான் வாழ்க்கை

அறிவுப்பசிதான்
விலங்குப்பசியிலிருந்து நம்மை
வித்தியாசப்படுத்தும்

திருத்தலங்கள் எல்லாம்
தேடி அலைந்தாலும்--அங்கே
விக்ரகங்களை
விழுந்து வணங்கினாலும்
அறிவுப்பசி நீங்க
அறவே வழியில்லை

அறிவுப்பசி நீக்கும்
அட்சய பாத்திரம்தான்
அதிசய பாத்திரம்தான்
திருக்குறள்

திருக்குறள் தந்த
திருவள்ளுவர் திருநாள்பற்றிப்பாட
திருநெல்வேலி மங்கை
திருமதி மாதங்கி வருகிறார்

கலைமகளின் மறுபெயர்
மாதங்கி-இந்தக்
கவிமகளின் இயற்பெயரோ
மாதங்கி
மதுரை மீனாட்சியின்
மறுபெயரும் மாதங்கி

விழியில் மீனாட்சி-விழி
வில்லில் மானாட்சி
சொல்லில் தேனாட்சி
எழுத்தில் தமிழாட்சிச்செய்கிற
மாதங்கி வருகிறார்

தமிழாட்சிச் செய்கிற திருமதி
தமிழச்சி மாதங்கி
இங்கே
கவியாய் ஒருகாட்சி
கவிதைக்காட்சி
காட்டப்போகிறார்

வாருங்கள் மாதங்கி--இங்கே
பாடுங்கள் குர்லோங்கி


( திருவள்ளுவர்நாள்பற்றி மாதங்கி பாடுதல்)
/////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
///////////////////////////////////////
மறைமலை சொல்லித்தான்
தமிழ்மறை
தமிழ்த்திருமறை
திருக்குறள் தந்த
திருவள்ளுவர் திருநாள்
கண்டதைச்சொன்னார்

உண்மையைக் காட்டிலும்
பொய்யுக்கு வேகமென்றார்
அதுதான்
உண்மையான உண்மை

திருக்குறளில் மதமில்லை
இனமில்லை ஜாதியில்லை
மண்டிக்கிடக்கும்
மூடப்பழக்கமில்லை
மானுடம் அழியும்
வன்முறைக்கு வழியே இல்லை

அதில்
அன்புண்டு பண்புண்டு
அறமுண்டு அடக்கமுண்டு
எதையும் அடையும்
இனிய வழிகளுண்டு
எல்லோர்க்கும் உண்டான
இன்பத்துப் பாலுமுண்டு

இன்பத்துப்பால் உண்டு
இல்லறம் எனும்
நல்லறம் நடத்த
நல்லவழி பலஉண்டு--இன்னும்
என்னன்ன உண்டோ
அத்தனையும் உண்டு
அதுதான்
திருக்குறள் என்று
தௌவாகச்சொன்னார் மாதங்கி

தொடக்கத்தில் அவரைத்
திருநெல்வேலி என்றேன்
திருநெல்வேலியென்றால்
இலக்கியம் சுவைத்த டி.கே.சி
நினைவுக்கு வரலாம்
விடுதலை உணர்வுதந்த
வ.ஊ.சி வரலாம்
வாழ்கிற தி.க.சி வரலாம்
எட்டயபுரம் வரலாம்
கட்டபொம்மன் வரலாம்
இன்னும்
எத்தனையோ வரலாம்
ஆனால் கண்டிப்பாக
'அல்வா'
நினைவுக்கு வரக்கூடாது

'அல்வா' பிரியர்களாய்த்
தமிழர்கள் ஆனதால்தான்
பலரும் தமிழருக்கு
'அல்வா' கொடுக்கிறார்கள்

ஆனாலும்
திருநெல்வேலி அல்வாவின்சுவை
அலாதிதான்
அச்சுவையை
கவிச்சுவையாய்க் காட்டிய
கவிஞர் மாதங்கிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்


(அடுத்தவாரம் தொடரும்)
 
 
தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்
வாமன விதையின் விருட்சம்
நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும்
சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி விழா
சிங்கப்பூர் கணையாழி விருது-2006
தைத்திருநாள் விழா கவியரங்கம்
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 - 52 நூல்வெளியீடு
சிங்கப்பூர் வாசகர் வட்டம் - கதை விவாத நிகழ்வு
துபாய் கவிதைத் திருவிழா
26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
கணையாழி விழா 2007
நேற்றிருந்தோம் 2007
இப்படிக்கு இவனும், இவனது கவிதையும் …
அம்பறாத்தூணி
ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்
துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி
கவிதை தொடர்பான கட்டுரைகள், நிகழ்வுகளைப் பதிவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். தொடர்புகட்கு
நூல் விமர்சனம்
உராய்வு
  - சஞ்சீவ்காந்
"காலத்தின் கவிக் கூர்" இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது
என்.செல்வராஜா
மேலும்...            
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்