Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
கட்டுரை
புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 - 52 நூல்வெளியீடு

நூற்றாண்டுகள் தாண்டிவிட்டாலும் இன்னமும் புதுமைபித்தனின் படைப்புகள் சர்சையாகவே உள்ளன. தொடர்ந்நது பல எழுத்தாளர்களால் பேசபட்டும் வருகிறது. இச்விழலில் சிங்கப்பூரகதின் பேராசிரியை எழுத்தாளர் முனைவர் எம்.எஸ்.லக்சுமி புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 - 52 எனும் நூலினை 24.02.2007 சனிக்கிழமை சிங்கப்பூரகத்தில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடுகண்டார். (இந்த புத்தகம் ஏற்கனவே தமிழ்நாட்டில் மதுரையில் வெளியீடுகண்டது குறிப்பிடதக்கது)
புதுமைப்பித்தனின் பெயருக்கேற்ப இவ்விழாவிழும் சில புதுமைகள் நிகழ்ந்தது. நூல் அறிமுகம் செய்யவேண்டிய எழுத்தாளர் பீர்முகமது வராத காரணத்தினால் தலைமையுரையாற்றிய கவிமாலையின் கணையாழி விருதுபெற்ற எமுத்தாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் தலைமையுரையாற்றி புத்தகத்தை வெளியிட்டு நூல்அறிமுகமும் செய்துவைத்தார். நூலை வெளியீடு செய்யவேண்டிய தமிழ்தொண்டர் நாகை தங்கராசு முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். வரவேற்புரையாற்றி நிகழ்சியின் நெறியாளராக சமீபத்தில் திரவியதேசம் புத்தகத்தை வெளியீடுகண்ட கவிஞர் ந.வீ.விசயபாரதி பணிமேற்கொண்டார்;.

மூத்த கவிஞர் முருகடியானின் புதல்வி புனிதா அவர்கள் தனது தந்தையார் இயற்றிய மொழிவாழ்த்து பாடலை இனிமையாக பாட நிகழ்ச்சி இனிதே ஆரம்பம் ஆகியது. கவிஞர் ந.வீ.விசயபாரதியின் எளிய இனிய வரவேற்புரையையடுத்து தலைமையுரையாற்றினார் எமுத்தாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன். பேசும் பொழுது எழுத்தாளரின் பணி என்ன ஆய்வாளரின் பணி என்ன என்பதை எடுத்துகூறினார். வாழ்க்கையின் படபிடிப்புத்தான் இலக்கியம் என்றும் அத்தகு இலக்கியம் வாழ்க்கையை உயர்த்தபாடுபடவேண்டும் என்றும் உயிருள்ள இலக்கியம்படைக்க ஆய்வாளர்களை பற்றி கவலைப்படாமல் வாசகர்களை கவனத்தில்கொண்டு எழுத்தாளர்கள் எழுதவேண்டும் என்று கூறி குணம்நாடி குற்றமும்நாடி எனும் திருக்குறளை மனதில்கொண்டு ஆய்வாளர்கள் நூலினை ஆய்வுசெய்யவேண்டும் என்றுரைத்து தலைமையுரையாற்றினார். வெண்பாச்சிற்பி இக்குவனம் அவர்கள் வாழ்த்துக்கவிதை பாடினார். சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கண்ணு வாழ்த்துரையாற்றினார் (இவர் நூலாசிரியரிடம் மாணக்கனாக இருந்தது குறிப்பிடதக்கது). இவர்கூறும் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் நூலாசிரியருக்கு கருத்துக்களை சொல்லும் உரிமை உண்டு என்று பேசினார். கருத்தோடு கருத்து மோதவேண்டும் பலதிறனாய்வாளர்கள் சிலரின் முதுகினை சொறிவதாகவும் (நம் இலக்கியம் உலகத்தரமடையாததிற்கு இதுவும் ஒரு காரணம் என்றார்) எப்போது நாம் பிறரை பாராட்டுகிறோமோ அப்போது நாமும் பாராட்ட படுவதாகவும் அப்போதுதான் ஆரோக்கியமான இலக்கியம் உருவாகும் சூழல் ஏற்படுவதாக வாழ்த்துரை அமைந்தது.

இப்புத்தம்பற்றியும் நூலாசிரியர் பற்றியும் புதுமைபித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் எமுதியனுப்பிய கடிதத்தை பாடகர் கவிஞர் இனியதாசன் வாசித்தார்.

நூல்அறிமுகம் செய்த எமுத்தாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் சொன்னதையே திரும்பதிரும்பச் சொல்லி கேட்பவர் மனதில் ஆழப்பதிந்தார். மேலும் இந்த நூல் ஆய்வுநூலாகாது என்றும் இது ஒரு வரலாற்று நிகழ்வின் ஒரு அத்தியாயத்தின் பதிவு என்றும் தமிழ்நாட்டைவிட இங்குதான் முதல்சிறுகதை எமுதப்பட்டது எனும் ஆசிரியரின் பதிவைபற்றி பேசுவதாக அமைந்தது.

ஏற்புரை ஏற்று பேசிய நூலாசிரியை நான் உண்மையை பேசுவதால் எதிர்பின் மூலம் என்னை புகழ்யடையசெய்கிறார்கள். புதுமைபித்தன் மட்டுமல்ல இந்த ஆய்வின் மூலம் தானும்பல சோதனைகளை கடந்து வரவேண்டியதாக அமைந்தது தமிழத்தில் நூல்வெளியீடு கண்டால் பணம் கொடுத்துவாங்கும் கலாச்சாரம் கிடையாது இச்சூழலில் தனது இரு புத்தகங்கள் தமிழ்நாட்டில் வெளியீடு கண்டதையும் சங்காலத்து கடையெழுவள்ளலாக தமிழ்தொண்டர் நாகை தங்கராசு காட்சி தருவதாகவுமாக நினைவுகூர்வதாக அமைந்தது இவரின் ஏற்புரை. புதுமைபித்தன் என்றாலே சர்ச்சை என்ற காரணத்தாலோ என்னவோ கவிஞர்கள் பிச்சனிகாட்டு இளங்கோ அன்பழகன் பாலுமணிமாறன் எமுத்தாளர் ஜெயந்திசங்கரன் என ஒருசிலரையே காணமுடிந்தது.

பதிவு: பாண்டித்துரை
தொடர்புக்கு: 00659734597
 
 
 
தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்
வாமன விதையின் விருட்சம்
நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும்
சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி விழா
சிங்கப்பூர் கணையாழி விருது-2006
தைத்திருநாள் விழா கவியரங்கம்
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
தைத்திருநாள் விழா கவியரங்கம் - 2
சிங்கப்பூர் வாசகர் வட்டம் - கதை விவாத நிகழ்வு
துபாய் கவிதைத் திருவிழா
26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
கணையாழி விழா 2007
நேற்றிருந்தோம் 2007
இப்படிக்கு இவனும், இவனது கவிதையும் …
அம்பறாத்தூணி
ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்
துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி
கவிதை தொடர்பான கட்டுரைகள், நிகழ்வுகளைப் பதிவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். தொடர்புகட்கு
நூல் விமர்சனம்
நங்கூரம்
  - நளாயினி
பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்
கன்னிக்கோயில் இராஜா
மேலும்...            
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்