Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மனித உரிமை
சாதித்து என்ன‌ ப‌ய‌ன்?
....................

வீசுகின்ற‌ தென்ற‌ல் என்றும்
பேத‌ம் பார்ப்ப‌தில்லை
வ‌ண்ண‌ வ‌ண்ண‌ ம‌ல‌ர்க‌ளும்
வாச‌ம் த‌ர‌ ம‌றுப்ப‌தில்லை
எண்ணில‌ட‌ங்கா க‌னிவ‌கையும்
சுவைகூட்ட‌ ம‌றுப்ப‌தில்லை

ம‌னித‌ உரிமை இருந்தும்
ம‌னிதா அதை நீ
ம‌ற‌ந்து சாதி ப‌ற்றிப் பேசுகிறாய்
ச‌ட‌ங்குக‌ளைச் சேர்க்கிறாய்
சாதி இழிவு செய்கிறாய்...நீ
சாதித்து என்ன‌ ப‌ய‌ன்?

> க‌விஞ‌ர் அ.கௌத‌ம‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி
த‌மிழ்நாடு.
உன்னை நீயே கேட்டுக் கொள்

மனித உரிமை என்றொரு சொல்
மனதில் என்றும் நிற்பது உண்மை
மறந்து அதனைக் கடைப்பிடிப்போர்
மண்னில் எத்தனை பேர் ?

உரிமை கேட்டுப் போரிடுவோம்
உரிமை மீறி நடந்திடுவோம்
உறவுகள் என்றோர் பந்தத்தில்
உரிமைகளி அனைத்தையும் மறுத்திடுவோம்

மனித உரிமை என்பது
மீறப்படுவது அரசியல்வாதிகளால்
மட்டும் அல்லவே .....
மனிதர் என்று கூறிக்கொண்டு
மனிதம் நிறைந்தோர் என்றே
மனதில் நான் என்னும் மமதை கொண்டு
மண்ணில் நடப்பதும் நிச்சயம்
மனித உரிமை மீறலே ....

நாளைய உலகின் விடிவெள்ளி
நட்சத்திரங்களாய் மின்னும்
நம் வருங்காலச் சந்ததியின்
நலமான வாழ்வை மறுக்கும்
ஒவ்வொரு செயலும் மனித உரிமைக்கு
ஒவ்வாத செயலே...

கண்ணியமான வாழ்வமைக்க
கண்ணீரன்றி எதுவுமற்ற
கன்னியர் பலரின் வாழ்வை
காளையர் சிதைக்கும் வரதட்சணை
அதுவும் கூட மனித உரிமை
அடிப்படை மீறலே....

ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை
ஒருமுறை பார்த்து உணர்ச்சியோடு
ஓரக்கண்னில் நீலிக்கண்ணீர் வடித்து
ஒப்பற்ற பெற்றோர் சுதந்திரம் தன்னை
தன்னலத்திற்காய் மறுக்கும் மாக்கள்
நிச்சய்மான மனித உரிமை மீறலே...

மனித உரிமைகள் எங்கே
மீறப்படுகின்றன என்ற தேடலை
மறந்து விட்டு.. நண்ப உன்னுள்ளே
மானசீகமாய் மறைந்திருக்கும்
மனித்ததைத் தேடு
மீட்டுத் தரும் மனித உரிமையை
மறக்காதே இவ்வுண்மை !

-- சத்தி சக்திதாசன்
மனித உரிமை
============

ஆகாயம் காற்று நீர்
அக்னி நிலமென்னும்
இயற்கைக் கொடைகள்
இறைவன் தந்த உரிமை!

சமுதாய நலத்துக்காகச்
சட்டமியற்றி
அரசு தந்த சுதந்திரம்..
அதுதான் மனித உரிமை!

மேடைகளில் பேசுவதிலும்
ஏடுகளில் எழுதுவதிலும்
வாக்குரிமைதன்னை
வன்முறையாய் பெறுவதிலும்
அரசியல் கட்சிகள்
ஆதாயம் தேடும் நிலையில்..

காந்தி பெற்ற சுதந்திரத்தை
காலவெள்ளம் கொண்டுபோக,
நீந்திக் கரைசேரும்
நிர்க்கதியாய் நமது நிலை!

மனித உரிமைச் சட்டத்தின்
மாண்புதனைச் சிந்தித்தால்
சுதந்திர உணர்வலைகள்
சூழும் நம் இதயத்துள்!

> கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி,
தமிழகம்.
கோயிலுக்குள் நுழைவதற்குத் தடையாகும்
கொடூரம் இன்னும் இருக்கும் வரை,
பேருந்து வாகனங்கள் கலவரங்களால்
பெருஞ்சேதம் அடைவது தொடரும் வரை,
வன்முறைக் கலாச்சாரத்தால் குண்டர்களின்
வரைமுறையற்ற ஆதிக்கம் தொடரும்வரை
மனித உரிமைகள் பற்றிய சிந்தனை
மனங்களில் மலரும் வாய்ப்பே இல்லை.

-சித. அருணாசலம்
மனித உரிமை
-------------
மனித உரிமையென்று
மார்தட்டும் உலகே
புனிதனென்று சொல்கின்ற
புத்தரது புதல்வர்களால்
தினம் தோறும் இனக்கொலை
பிணக்காடாய் எம் தேசம்
மனித உரிமையென்ன
தமிழர்கள் மனிதர்களேயல்ல
என்ற மமதை கொண்ட
சிங்களத்து ஆட்சியரால்
வதைபட்டுச் சிதைவுற்ற
எம்மினத்து நிலை கண்டு
மனித உரிமைகளின்
நிலைதனை அறிந்துகொள்ள
ஒருமுறை வருவாயா (?)

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
09.12.2008
மனித உரிமை

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடயும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவுகள் தேடிவரும்-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவரும்
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்