Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காதலர் தினம்
காதலர் தினம்
==========

கருத்தொருமித்த காதல்
காலத்தால் அழியாது.
கட்டுப்பாடான உணர்வுகளோடு
காதல் வளர்த்தால்
காண்போர்களிடம்கூட
காதலுக்கு மரியாதை!

காட்டாற்று வெள்ளமாய்
காதலுணர்வு கரைபுரண்டால்
நட்டாற்றில் வீழ்கின்ற
நாட்களே உருவாகும்!

தனிமைச் சந்திப்பிலும்
தரங்கெடா ஒழுக்கமே
இனிமை சேர்த்திடும்
இல்லறம் வரையிலும்!

காதலைக்கொண்டாடுங்கள்
கனிவோடு இதயத்துக்குள்.
காட்சிப்பொருளாய் ஆக்காதீர்
காதலென்ற புனிதமதை!

காதலியின் கழுத்தில்
கட்டுகின்ற மஞ்சள் நாணே
காதலின் பரிசென்று
கவனத்தில் கொள்வீராக!

வாழ்த்து அட்டைகளும்
வகைவகையான பரிசுகளும்
ஆழ்த்திடுமோ காதலியின்
அகத்தை மகிழ்ச்சிதன்னில்?

காதலர்தினக் கொண்டாட்டம்
கலாச்சாரச் சீரழிவே!
ஆதலினால் இளையோரே....
அப்புனிதம் குலைக்காதீர்!

- கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
மதத்தை சாதியை
சம்பிரதாயத்தை
உடைத்தெறிய
இளைஞர்களுக்கு
கிடைத்த ஆயுதம்
"காதல்"

இனம், மொழி
எல்லைகளைக் கடந்து
மனம் மட்டும்
பேசிக் கொள்ளும்
மொழி
"காதல்"

காதல் செய்வோம்
என்றழைத்தான் பாரதி
அவன் பெயருக்கேற்ப
பார் அதிர
காதலிப்போம்
வாருங்கள்..

- க.அருணபாரதி
மனமொன்றி நேசித்து
மனைவியாய் மாறியும்
வாரிசுகள் பெற்று
வசதிகள் பெருகியும்
வாழ்க்கைப் பிரச்சினைகள்
வதைப்பது தாளவில்லை.....
திருமண வாழ்க்கை
தூரத்துக் கானல்நீர்....
மீண்டும் வராதோ அந்த
மெல்லிய உணர்வுகளென
ஏங்கும் என் துணைவியை
எப்படி நான் தேற்றிடுவேன்?

- கிரிஜா மணாளன்.
ஒரு மலர்
இதழ் விரித்துக்
காத்துக்கொண்டுள்ளது
ஒரு வண்டின்
இதழுக்காக.

- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி
பேதைப் பெண்ணே உணராயோ


உன்னைக் கண்டான்- இல்லை
உன் அணிகளைக் கண்டான்
காதலுற்றான்
ஞாயும் உந்தையும்
யாரெனக் கண்டான்
அவர் தம் சொத்தை ஆழமாய் அறிந்தான்
திருப்தியடைந்து உன் பின் தொடர்ந்தான்
உன்னை எனவே நீயும் வழிந்தாய்
உன் சொத்தை என்பதை
உனரியோ உணராயோ

- கலியுகன்
என் கண்களில்
எல்லாமே அழகாகத் தெரிகின்றன.
பிடிக்காததெல்லாம்
இப்பொழுது பிடிக்கிறது
அவளையும் சேர்த்து
கவிதையின் கருப்பொருளுக்கு
கவலைப்படுவதில்லை
என் பேனா
நானும்
காதலிக்கிறேன்.

- யோகப்ரபா
கண்ணீர் சிந்துகின்றன
ரோஜாச் செடிகள்
காதலர் தினம்.

-வீ.விஷ்ணுகுமார்
கிருஷ்ணகிரி
முத்தம்

குழந்தையின் உதடுகளில்
எறும்பு கடித்தது போன்ற
பழுத்த உதடுகள் உனக்கு
இதழ் குவித்துப் பேசுகையில்
இதழ்களின் பாதைகளில்
பயணப்படும் என் மனது இதழ்களின் இடைவெளியில்
இறுக்கப் பட்டிருந்தது
என் உயிர் மூச்சு
இன்னும் கனத்துக் கிடக்கிறது
நெஞ்சில்...
விட்டுப் பிரிகையில்
வெகு கவனமாக
எச்சில் படாமல்
நீ கொடுத்த
அந்த சம்பிரதாய முத்தம்

-ஜெ.நம்பிராஜன்
கண்கள் பேசிய
வார்த்தை ஜாலத்தை
விட அதிகமாய்
கூறப்போவதில்லை,
வாழ்த்து அட்டையும்!
ஒற்றை ரோஜாவும்!
மனதில் கொண்டாடு
காதலர் தினத்தை!
கண்டுகொள்கிறேன்
கண்களில் காட்சியாய்.

-கவி.வள்ளி
காதலர் தினம்
============

களிப்புடன் காதலர் தினம்
கடந்துபோனது...
கவலையோடு மலர்களைப் பிரிந்த‌
ரோஜாச் செடிகள்.

> கிரிஜா மணாளன்.
சிறந்த பரிசு நீ
------------------

கவிதை போட்டியில்
கலந்து கொண்டேன்
காதல் என்று
தலைப்பு தந்தார்கள்
எதுவுமே
எழுத தோன்றவில்லை..
உன்னிடம்
என்ன சொல்ல
என்று நினைத்தபோது
என்னுள் தோன்றியதை
எழுதி கொடுத்து விட்டேன்...
சிறந்த கவிதை
என்று
முதல் பரிசு
தந்தார்கள்
அதனிலும்
சிறந்த பரிசு நீ
- வைகறை நிலா
காத‌லைச்சொல்லிக் க‌ளிப்ப‌டையும்
காத‌ல‌ர்தின‌ப் பெருவிழா!
இத‌ய‌ங்க‌ளின் இணைப்புத் திருவிழா..
இனிய‌ ந‌ட்பின் முதிர்ச்சிப் பெருவிழா!
உயிரைப் பிரிந்தால் உட‌ல் மாயும்
உள்ள‌க் காத‌லை ம‌ற‌ந்தால்
உயிர்போகும்!
காத‌ல் செய்து உயிர் வ‌ள‌ர்ப்பீர்..
கால‌ம் முழுதும் ம‌கிழ்வ‌டைவீர்!

> அ. கௌத‌ம‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
காணி நிலமும் தருகிறேன்
பத்தென்ன பதினைந்து
தென்னைமரமும் வைத்துக்கொள்
பராசக்தி - என்பத்தினியைக்காட்டு

- புதுவைபித்தன்
காத‌ல‌ர் தின‌ம்
============

ஆழிப் பேர‌லையால்
அடித்துச் செல்ல‌ப்ப‌ட்டாயோ?
ஊழின் திருவிளையாட‌ல்
உன்னை விழுங்கிய‌தோ?
ம‌ல‌ர‌ன்ன‌ உன்னுட‌லைத் த‌ன்
ம‌டிமீது தாங்கிட‌த்தான்
க‌ட‌ல‌ர‌ச‌ன் ஆசைகொண்டு
க‌ட‌த்திச் சென்றானோ?
ஆழிப்பேர‌லையின்
ஆசைக்குப் பலியான‌
அன்புக் காத‌லியே!
இணையைப் பிரிந்து காத‌ல் விழா
இவ்வுலகம் ஏற்காது!
வாட்டுகின்ற‌ என் நெஞ்சை
வ‌ருடிச் சுக‌ம‌ளிக்க‌
வ‌லைவிரித்துத் தேடுகிறேன்
இன்னொரு காத‌லியை!

> கிரிஜா ம‌ணாள‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி.
காதல் என்றால் தெய்வீகம்

-சக்தி சக்திதாசன்

காதல் என்னும் மூன்றெழுத்தை
கடமை என்னும் மூன்றெழுத்தால்
கவலை என்னும் மூன்றெழுத்தாய்
காலம் என்னும் மூன்றெழுத்து
ஆக்கியதால்

முகம் முழுதும் தாடி வைத்து
அகம் முழுதும் சோகம் வைத்து
இகம் என்னும் கானகத்தில்
சுகம் இழந்த பிணமானான்

நிஜம் என்னும் கொடுமையின்
நிழல் கொடுத்த தகிப்பினால்
நினைவு எல்லாம் அனலாக
கனவு தொலைந்த இரவுகளே
கண்டான்

காதல் அது தெய்வீகமானது
காதில் விழும் இரைச்சல் கேட்டு
கோவில் நோக்கிப் போகின்றான்
நேரில் கேட்டால் பதில் வருமோ ?
காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை

-நிர்வாணி
ஆயிரம் ஆசைகள் !!
அத்தனையும்
நிறைவேற்ற
ஆயிரம் ஆயுள்
வேண்டும்
உன்னோடு மட்டும் !!!

- தர்மா
பெங்களுர்
வாழ்க்கை
தெரியவும்
புரியவும்
உன்னோடு
வாழவேண்டும்
ஓர்
வாழ்க்கை

- தர்மா
பெங்களுர்
காதல் பறவை
பட்டாம் பூச்சியாய் அமர்ந்து
பறவையாய் பறந்து சென்றாள்...
இரை தேட அல்ல
நல்ல துனை தேட...

- வசந்த்
சென்னை
இரங்கற்பாவில்
உருவான
ரோம் கவிதை.

கல்லறை மேட்டில்
எடுத்துக்கொள்ளப்பட்ட
காதல் பட்டயம்.

காலாவதியான
வாலண்டைனின்
ஞாபக ஓலம்.


இன்று
காதலர் தினம்
காதலுக்கல்ல
காமுகர்களுக்கு.


வைரபாரதி,இந்தியா
நீ பூமி
நான் வானம்,
இடையில்
தென்றலுக்குப்
பொறாமை,
தேனிலும்
இனிமையிலும்
இனிமை!

நம்
காதலைப்போல்
எதுவும் இல்லையாம்!!!


சதீஸ்
அன்பே
கடற்கரையில் நீ நடக்கும் போது அலைகளுக்குள் போராட்டம் உன் பாதங்களை யார் முதலில் முத்தமிடுவது என்று!!!

அருண்பாபு
"இதயத்துடிப்பின் அர்த்தம்"
உன் இதயத்தை கேட்டு பார்
ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு அர்த்தம்
சொல்லும்.
ஆனால் ....
என் இதயத்தை கேட்டு பார்
ஒவ்வொரு துடிப்பின் அர்த்தமே நீதான்
என்று சொல்லும்...!!!

-செல்வதுரை
திருச்செந்தூர்
நினைச்சவளோட வாழ
குடுத்து வைக்காவிட்டாலும்
அவள் வாழ்க்கை பட்டுப்போக
காரணமாய் இருப்பதல்ல காதல்
அவள் வாழ்க்கைப்பட்டுப்போற இடத்துல
சந்தோசமாய் வாழணும்னு நினைப்பது தான் உணமைக்காதல்....

-G.K.நிமல்
அறிமுகம் இல்லாத எண்ணம்
மறைந்து போகும்
உன்னை கண்டால்

-விக்னேஷ்
காதலை தேடிய
காகிதம்!
காகிதத்தை தேடிய
பேனா!
பேனா உள்ளே உறங்கிக்கொண்டு
இருக்கும் மை!
இதுதான் காதல்

-யோகேஷ்
மூதூர், இலங்கை
வாழ்க்கை எனும் கடலில்
காதலெனும் கப்பலோட்டி வாழ்க்கை எனும் முத்தெடு........

-A.GANAPATHY SURANDAI AKM
எண் அற்ற பெண்கள் கூட்டம்
என் கண் முன்னே
ஆனால்
என் கண் தேடுது
உன் முகத்தை.

-தனு செங்கலடி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்