Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
சுஜாதா - நினைவில் நின்றவை
சுஜாதா என்றொரு பிரபஞ்சம்.

- ருத்ரா

தமிழ்சிற்பியே
தமிழ் இலக்கியத்தை நீ
செதுக்கியபோது
தெறித்த "சில்லுகள்" தோறும்
கம்பியூட்டரின் சொல்லுகள் ஆயின.
"நைலான் கயிறு" மூலம்
ஊஞ்சல் கட்டி
உன் சிறுகதை விளையாட்டுகளை
தமிழ் வாசகர்களிடையே
ஆரம்பித்து வைத்தாய்.
உன் நைலான் கயிறு நடைக்குபிறகு
மற்றதெல்லாம் "காயிலான்"
கடைச்சரக்காகி போனது.
காதலாவது..கத்தரிக்காயாவது
என்று ஒரு உட்குறிப்பை
பொதிந்து வைத்தாலும்
உன் கதைகள் லேட்டஸ்டாய்
சுடிதார் உடுத்திக்கொண்டு வந்து
முன்னே துறுத்திக்கொண்டு
குறுகுறுப்பதில்
கதையை கோர்க்கும் அச்சகத்து
கம்பாசிடர்கள் கூட
கணேஷ்களாயும் வசந்த்களாயும்
காலரை உயர்த்தி விட்டுக்கொள்வார்கள்.
துப்பறியும் கதைகளை
தொடங்கிவைத்தாலும்
துப்பு கெட்ட இந்த சமுதாயமே
ஒரு குற்றவாளிக்கூண்டில்
நின்று கொண்டிருக்கிறது
என்று
ஒரு புகைமூட்டமாய்
உன் எழுத்துக்களில்
நீரோட்டம் காட்டினாய்.
ஆம் நீயும் கூட
எங்களுக்கு ஒரு புதுமைப்பித்தன் தான்.
எலக்ட்ரானிக் யுகத்து புதுமைப்பித்தன் நீ.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில்
கிழிந்த கோரைப்பாய்களும்
காரை பெயர்ந்த வீட்டுச்சுவர்களும்
செட்டிங் போட்டு
உயிர்ப்போடு நிற்கும்.
செட்டியார் கடையில்
கடன் வாங்கும்
நடுத்தர நத்தைக்கூட்டுக்குள்
லாவாவை கொப்புளிக்கத்தெரியாத
எரிமலைகள்
அரைத்தூக்கத்தில் கிடக்கும்.
நீயோ
ப்ராக்டிகலாக
அதாவது
கற்றதையும் பெற்றதயும்
கலக்கலாக்கி
ஒரு அமிலக்கரைசலை
எழுத்துக்களில்
சிறு குழந்தை
சாதாரணமாய் ஒண்ணுக்கு போது போல்
காகிதங்களை நனைத்திநப்பாய்.
அதில் மெதுவாக தீ மூளுவது கூட
ஜெயராஜின் வண்ணப்படத்தில்
எழுச்சி காட்டும்.
நீ இன்னொரு புதுமைப்பித்தன் தான்.
இப்படி சொன்னால்
அந்த புதுமைப்பித்தன் ஒன்றும்
கோபித்துக்கொள்ளப்போவதில்லை.
மணிக்கொடி நரம்பின்
தொப்பூள் கொடி
அவனிடம் வேர் விட்டிருந்தது என்றால்
உன்னிடம்
அதன் உயிர்மகரந்தங்கள்
நிறையவே ஒட்டியிருக்கின்றன.
புதுமைப்பித்தன் கதைகளில்
மனிதனின்
மனவெளியின் வெடிப்புகள்
உருவெளி ஓவியங்களாய்
(ஹாலுசினேஷன்)
படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
போலித்தனத்தின் மீது
கண்ணுக்குத்தெரியாத
கருந்தேள் ஒன்று
கொட்டுவது போல்
ஆனால் கொட்டாமலேயே
ஒரு சமுதாயவலியை
ஊமையாய் "ஓங்காரம்"
செய்து கொண்டிருக்கும்.
உன் கதைகளில்
நாகரிகம்
விஞ்ஞானப் பூச்சுடன்
ஒரு அக்ரிலிக் சாயத்தில்
கண்களை
கூச வைத்துக்கொண்டே இருக்கும்.
மரத்துப்போன
இந்த பம்மாத்து
மனங்களுக்கு
நறுக்கென்று ஊசி போட்டு
கருத்து ஊன்றுவதில்
ஒரு நுட்பம் உண்டு.
ஒரு திட்பம் உண்டு
புதுமைப்பித்தனிலிருந்து
பதியம் போட்ட
புதுமைச்சித்தன் நீ.
மக்கள் உணர்ச்சிகளின் மண்ணணுவை
அணு அணுவாக
அவன் எழுதினான்.
நீயோ மின்னணுயுகத்தில்
மனிதனின் நிமிடத்துக்குள் கூட
நுழைந்து
அதன் கோடிக்கணக்கான
துடிப்புகளான
நேனோ செகண்டுகளை
ஒரு கரப்பான் பூச்சிபோல
"படம் வரைந்து பாகம் குறித்து காட்டிவிட்டாய்"
அவன் சமுதாயத்தை
தோலுரித்துக்காட்டினான்.
நீயோ
தோலுரிக்காமலேயே
உன் எக்ஸ்-ரே கண்ணால்
அந்த அவலங்களை
நிர்வாணமாக்கினாய்.
அவன் சமூகவிஞ்ஞானத்தை
எங்களுக்கு புகட்டினான்.
நீயோ
ஒரு விஞ்ஞான சமூகத்தை
எங்களுக்கு விளக்கிக்காட்டினாய்.
விஞ்ஞானிகளையும்
உன் பேனாக்களில் அடைத்து
அற்புதம் காட்டினாய்.
ஐன்ஸ்டீன்களையும்
டாக்டர்.பென்ரோஸ்களையும்
ஸ்டீ·பன் ஹாக்கிங்ஸ்களையும் கூட
எங்கள் நெஞ்சில்
நீங்காமல் நிற்கும்
கதாநாயகர்களாக காட்டியிருக்கிறாய்.
இயல் இசை நாடகம்
என்ற முத்தமிழ் தெரியும் எங்களுக்கு
ஆனால்
நீ தானே
"இயற்பியல் தமிழையும்" (thamiz with physics)
எங்களுக்கு இயல்பாய் ஆக்கினாய்.
அதனால்
இந்த மின்னணு யுகமும்
மின்னஞ்சல் யுகமும்
தமிழின் முகம் மாற்றின.
உன் கதைகளின்
காதலன் - காதலி கூட
உனக்கு வெறும் "பைனரி" தான்.
பூலியன் அல்ஜீப்ராவிலிருந்து
புளிச்சு போன இந்த
காதல் அல்ஜீப்ரா வரைக்கும்
நீ காட்டிய மந்திர வித்தைகள்
எங்கள் மனத்தையெல்லாம்
கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.
புளிக்க புளிக்கத் தான்
கள் சுவைக்கும்
என்று
உன் காதல் நாவல்கள்
ஒரு ·பார்முலாவை
உள்ளே
போர்த்திவைத்திருக்கும்.
விஞ்ஞானத்தின்
எந்த மூலையையும்
இனிப்பு தடவி
உன் எழுத்துக்களில்
நீ தரும்போது
தமிழ் வாசகர்களெல்லோரும்
கொள்ளையடிக்கப்பட்டுவிட்டார்கள்.
அப்படித்தான்
இதயத்தின் ஆரிக்கிள்- வெண்டிரிக்கிள் பற்றி
பத்திரிகையில்
நீ பாடம் எடுக்கும் போது
அந்த அற்புதத்தை அறிய
உன் இதயமே
அங்கு வந்து உட்கார்ந்துகொண்டது.
ஆம் அதனால்
அது துடிக்க மறந்தது...
அந்தோ கொடுமை..
இதோ
அந்த லட்சக்கணக்கான கண்களின்
கண்ணணீர் வெள்ளத்தில்
அந்த இதயமும்
வேதனையால் துடித்துக்கொண்டு தான்
இருக்கிறது.
தமிழ் எழுத்துக்களின்
கலைக்களஞ்சியமே!
உன்
கலைக்களஞ்சியத்தை நீயே புரட்டிப்பார்.
சுஜாதா என்ற வார்த்தைக்கு
என்ன அர்த்தம் போட்டிருக்கிறது என்று....
"பிறக்கும்போதே
21-ஆம் நூற்றாண்டை நூல்கண்டாக்கி
பட்டம் விடத்தெரிந்த மேதை."
ஆம்.
காலம் வேகமானது தான்.
அதையும் விட வேகமாக சிந்திக்கும்
ஒளியாண்டுகளை(light years)
உடையவன் நீ.
டேக்கியானின்(tachyon) வேகம்
உன் அறிவின் வேகம்.
காலமானார் சுஜாதா
என்பதைகூட
நீ கட்டுரை எழுதினால்
"சுஜாதாவால் காலம் தோற்கடிக்கப்பட்டது"
என்று தான் தலைப்பு கொடுத்திருப்பாய்.
அதுவே தனி முத்திரை கொண்ட
சுஜாதாவின் space-time எனும்
சுஜாதாவின் மகத்தான பிரபஞ்சம்.

- ருத்ரா
epsi_van@hotmail.com and epsivan@gmail.com

எண்ணப்பறவை எங்கே சென்றாய் ?

சிறகை விரித்து விட்டாய்
உயர எழும்பி விட்டாய்
உலகை மறந்து விட்டாய்

நீ எங்கே சென்று விட்டாய் ?

நீ சென்ற உலகில் கூட
நிறைந்திருக்கும் உன் வாசகர் கூட்டம்
நீ எழுதும் கதைகளை உன்
கருத்தான கட்டுரைகளை
கண்வழியே புசிப்பதற்காய்
பசித்திருக்கும் கூட்டம் ஒன்று

விஞ்ஞான உலகத்தில்
வியத்தகு வகையில் சிறப்புற்றும்
விடவில்லை அன்னைத்தமிழின் பற்று
விளையாடினாய் இலக்கிய முற்றத்தில்
வாசித்தோம்! அதனாலே
யோசித்தோம் .....

சுஜாதா என்னும்
சிந்தனைச் சிற்பி நீ
செதுக்கிய சிற்பங்கள் ஒவ்வொன்றும்
சொல்லும் கதை பன்முக வடிவங்கள்

"அம்பலம்" வழியே
அணை போட்டு பாய்ச்சினாய்
அன்னைத் தமிழின்
அன்பு இலக்கியத்தை

ஓரிரு எண்ணங்கள் என நீ
ஓராயிரம் கருத்துக்களை பகிர்ந்து
ஓடும் மனத்திரையின் காட்சிகளை
ஓவியமாய் வடித்த எழுத்தோவியன் நீ

பலகலைகள் தேர்ந்து நம் தமிழை
பலமான மொழியாக உயர்த்துங்கள் என்றே
பலமாகக் கத்திய முண்டாசுக் கவி
பாரதியின் கனவுகளை மெய்ப்பட வைக்க
பலதுறைகளிலும் உன் ஆற்றலை
பரிசாகக் கொடுத்தவன் நீ

சிறுகதைகள் மட்டுமல்ல , கட்டுரைகள் மட்டுமல்ல
திரைக்கதை வசனம் கொண்டு
திக்கெட்டும் திகழ்ந்தவன் நீ

தமிழகம் மட்டும் அழவில்லை சுஜாதா
தமிழர்கள் அனைவரின் கண்களிலும் நீர்
தம் வீட்டு இலக்கிய தோட்டத்து ரோஜா
தமை விட்டுச் சென்றதே என்று

உன்னுடல் இம்மண்ணை விட்டு
மறைந்திருக்கலாம்
ஆனால் உன் புகழ் இந்த
மண்ணோடு கலந்தது
அகிலம் முழுவதும் வாழும்
அனைத்துத் தமிழர்களின் மனங்களிலும்
அணையாது ஒளிவீசும் உன் புகழ்

இணையத்தின் மூலம் தமிழ் வளரும் என்று
இடித்துச் சொன்ன வீரத்தமிழன் நீ
இணையமொழி தமிழாக எத்துணை செயல்கள்
இனியவன் நீ ஆற்றினாய்
இதை இனி மறப்பரோ தமிழர்.

சுந்தரத் தமிழில் அற்புத படைப்புகள்
சிரப்புறக் கொடுத்தவனே எங்கள்
சுஜாதா உனது நினைவுடனேயே
சுடரும் எழுத்துக்கள் தெறிக்கட்டும்

உன் புகழ் வாழ்க ! உன் லட்சியம் வாழ்க !
உனை ஈன்ற தமிழன்னை வாழ்க
உன எம் சொந்தமாக்கிய தமிழ் வாழ்க

அன்புடன்
சக்தி சக்திதாசன்
தமிழை வளர்த்த அறிவியல்

நடைமுறையில் தமிழை வளர்க்க
நாற்றங்கால் அமைத்ததும்,
அறிவியல் உரத்தை
அதிலே தெளித்ததும்,
எதார்த்தத்தைக் கையில்
எடுத்துக் கொண்டதால் தான்.

விமர்சனங்களுக்கு ஆளான
போதும்,
விடாப்பிடியாய்க்
கொள்கைப் பிடிப்பைக் கொண்டது
எழுத்தில் கொண்ட பற்றினால்
தான்.

பொறியியல் வல்லுநரை
இயந்திர உலகம் மட்டுமல்ல,
இயற்றமிழ் உலகமும்
இழந்து நிற்கிறது.

சித. அருணாசலம்,
சிங்கப்பூர்
எழுத்தை ஆள்ப‌வ‌ரெல்லாம்
எழுத்தாள‌ர் ஆவாரோ?
எழுத்தாள‌னென்னும் பெய‌ருக்கு
ஏற்ற‌ம் த‌ந்த‌
எழுத்துல‌க‌ வேந்தே!

எம‌னுக்கென்ன‌ அவ‌ச‌ர‌ம்
எங்க‌ளிட‌மிருந்து
உன்னைப் பிரிக்க‌?

அறிவியலைத் தொட்டு
அத‌ன் எல்லையையே தொட்டு
அழ‌கு த‌மிழில் அத‌னையும்
அல‌ங்க‌ரித்த‌வ‌ன் நீ!

க‌லியுக‌மென்ற‌ பெய‌ரே
க‌லைந்துபோய்
க‌ணினியுக‌மாகிவிட்ட‌
கால‌க‌ட்ட‌த்தில்
அறிவிய‌ல் பூக்க‌ளால்
அன்னைத் த‌மிழை அல‌ங்க‌ரித்து
அகில‌ம் புக‌ழும்
அங்கீகார‌ம் பெற்ற‌வ‌ன் நீ!

த‌மிழ் இல‌க்கிய‌த்தில்
த‌ட‌ம் ப‌தித்த‌ உன் எழுத்துக்க‌ள்
த‌மிழ் வாழும் நாள்வ‌ரை
த‌ர‌ணியில் சிற‌க்க‌ வாழும்!
> கிரிஜா ம‌ணாள‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி,
த‌மிழ்நாடு.


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்