Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
உலக பெண்கள் தினம்
உலகத்துப் பெண்ணியமே! ஒன்று படு!
- ருத்ரா

பெண்ணே
அதோ பார்
உலக மகளிர் தின விழாவின்
தோ"ரணங்கள்" ஆடிக்கொண்டிருக்கின்றன.
கொஞ்ச நேரம்
உற்றுப்பார் அந்த ஊமை ரணங்களை.
மி்ன் மி்னி பூச்சியல்ல நீ.
மி்ன்னணு யுகத்தின் சுடரேந்தி நீ.

காதல்
உன் பயணத்தில்
ஒரு மைல் கல் தான்.
ஆனாலும்
தன் ஜிகினா எழுத்துக்களால்
அதை மாணிக்க கல்லாக்கிவிட
புறப்பட்டு விட்டது
புதுக் கவிஞர் கூட்டம்.
அந்த பாராங்கல்லில் நசுங்கிவிடாமல் இருக்க
பாராமுகம் காட்டு!..பெண்ணே
பாராமுகம் காட்டு நீ.

இந்த பட்டாளங்களிடையே
நீ பட்டுப்போய் விடாதே.

கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை
காதல் பற்றிய
"ஹைக்கூக்கள்" என்று
அழைக்கப்படுகின்றன.
சொற்களுக்கு
முட்கிரீடம் சூட்டி
சூன்ய வாதத்தையும்
மாயா வாதத்தையும்
காதலாக்கி
உன்னை
ஆதாம்களுக்கு ஏற்ற ஏவாளின்
மாடல்களாக்கி
மனம் களிப் பவர்களின்
தீனியாகி விடாதே.
மாதர் தம்மை அடிமையாக்கும்
மடமையை கொளுத்தும்
தீயாகி விடு.
காதல் சாக்கரின் தடவிய
இந்த பஞ்சுமி்ட்டாய்க்காரர்கள்
தூர ஓடிவிடுவார்கள்

உன்னைச்சுற்றி
சிலந்தி வலைகள் போல்
"ஜொள்" வலைகள்
பின்னும் இந்த கவிஞர்களிடம்
கவனம் தேவை..பெண்ணே
கவனம் தேவை.


இளந்தளிர்களே!
காதல் எனும்
மனிதநேயத்தின்
முதல் தீப்பொறியிலேயே
காதலைச் சுட்டு தின்று
உணர்ச்சியை பூதாகரமாக்கும்
புதுக்கவிதைப்பூச்சாண்டிகளை
புறந்தள்ளுங்கள்.


மிக மிக மெல்லிய
சோப்புக்குமிழிகளில்
சொர்க்கத்தீவுகள்
அமைத்து
கவிதைகளில்
கல்லா கட்டும்...இந்த
குல்லா வியாபாரிகளின்
குரல்களைப்
புரிந்து கொள்ளுங்கள்.

எதேச்சையாய்
அவர்கள் பேனா தெளித்த
மைப்புள்ளிகள் எல்லாம்

கால்விரல் நகத்துக்கு
பூசிய"மெகந்தி" என்பார்கள்.

சன்னல் கம்பிகள் வழியேயும்
முத்தம் இட
அந்த நிப்புமுனைகள்
உதடு குவிக்கும்.
கேட்டால்
அந்த பஞ்சுமேகம்
உன்
கன்னம் என்பார்கள்.

உன் கால்
கொலுசுகளின் ஓசைகள் பற்றி
"கொசுக்கடிகளாய்"
அவர்களின் வர்ணிப்புகள்.
அதற்கு யார் மருந்து அடிப்பது?
கவலை வேண்டாம்.
இந்த உலக மகளிர் தினமே
மருந்து அடிக்கட்டும்.
அதற்கான நேரம் இது.
உன் காற்சிலம்பை கழற்றி உடை.
உன் அறிவின் கதிரியக்கத்தில்
வைரங்கள் தெறிக்கட்டும்
வைரஸ்கள் தொலையட்டும்.

ஒரு புழுக்கைப்பென்சிலை
வைத்துக்கொண்டு
நகரப் பேருந்து நடத்துனர்
எச்சில் தொட்டு
கொடுத்த
பஸ் டிக்கட்டின்
பிஞ்சு சீட்டில்
ட்ஹ்இடேர்என்ர்உ
வானவில்லையும்
வண்ணாத்திப்பூச்சியையும்
அதில்
கசக்கிப்பிழிந்து
வார்த்தைகளை வார்த்து தருவார்கள்.
கேட்டால்
அந்த பஸ்ஸில் வந்த
உன்
சுடிதார் வர்ணங்களே
அவை என்பார்கள்.


அண்ணா சாலை தோறும்
தூவிக்கிடப்பது
தூசிகள்
இல்லையாம்.
காதலிகளின்
இதய ரோஜாக்கள் தானாம்.
கேட்டால்
அண்ணா சாலை
அன்று மட்டும்
தார் பூசவில்லை
ரோஜாக்களை
பூசிக்கொண்டது.
ஏனெனில்
அன்று காதலர் தினம்
என்று ஒருவன் கவிதை எழுதுவான்.


!

வாசலில்
உன் சுண்ணாம்புக்கோல
வளைவு நெளிவுகள்
அவன் அம்மா
பிழிந்து தந்த
ஜிலேபியையை விட கூட
இனிப்பு என்பான் இன்னொருவன்

இந்த தப்புத்தாளங்களை
வைத்துக்கொண்டு
சாரம் இல்லாத சில
வாரப்பத்திரிகைகள
காரம்
ஏற்றிக்கொள்ளுகின்றன.


காதல் எனும்
பூங்குமிழிக்கு..அவர்கள்
பூப்பல்லக்கு தூக்கட்டும்.
ஆனால்
பெண்ணியம் எனும்
கண்ணியம்
உருவாகவிடாமல்
அதன் சவப்பெட்டிக்கு
அல்லவா
அந்த காகிதப்பக்கங்களில்
சல்லாத்துணி விரிக்கிறார்கள்.

மெல்லிய
மயிலிறகுகளைக் கொண்டு
காது குடையும்
இவர்களது
கிளு கிளுப்பு வேலைகளில்
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எங்கோ
தொலைந்து போகக்கூடாது அல்லவா?

கம்பியூட்டர் வகுப்புகள்
காமன் கரும்பு வில்லேந்தும்
களம் ஆகிப்போனதாய்
கணினியின்
பூலியன் அல்ஜீப்ராவில்கூட
காதலியின்
"ப்ரா" தைத்து
இவர்கள் கவிதை எழுதிவிடுவார்கள்.


கார்டியாலஜி என்றால்
இதயம் பற்றி
மட்டுமே
இந்த மக்கு டாக்டர்கள்
விரிவுரை ஆற்றுவார்கள்.
இதய வடிவில்
அவள்
அனுப்பியிருக்கும். அந்த
வேலண்டின்
"கார்டு"பற்றி
இவர்களுக்கு என்ன தெரியும்.
இந்த கார்டு
கொஞ்சம்
கசங்கினாலும்
எனக்கு
"இஸ்கேமியா" தான்.
காதலின்
இன்னொரு
இனிமையான பெயரும்.
இஸ்கேமியா" தான்.
மூட ஜனங்களே தெரிந்து கொள்ளுங்கள்
என்று
காதல் பற்றி ஒரு "மேனிபெஸ்டோ"
எழுதித்தள்ளுவான்
ஒரு இந்திரஜாலக்கவிஞன்.

புதுக்கவிஞர்களே
இன்று மட்டுமாவது
உங்கள் கவிதைகளுக்கு
விடை கொடுங்கள்.

இதற்கு
உலகத்து பெண்ணியமே
ஒன்று படு! போராடு!
இதனால் நீங்கள் இழக்கப்போவது
ஒன்றுமி்ல்லை.
முலாம் பூசிய
புதுக்கவிதைகள் எனும்
காக்காய்ப்பொன் விலங்குகளே

- ருத்ரா
உவ‌மை இல்லாத‌தாய்
பெண்மையின் தாய்மை
அது இல்லையெனில் ஏது
ஆண்மையின் ஆளுமை?

ந‌ல்லோர் தீயோர் பாராது
ந‌ல‌ம் ப‌ய‌க்கும் ந‌திக‌ளுக்கு
ந‌ங்கைய‌ரின் பெய‌ர் வைத்திருக்கும்
ந‌ம் நாட்டில்
ந‌ம்புங்க‌ள், ந‌ம்மைப் பெற்ற‌வ‌ளும்
தெய்வ‌ம்தான் என்று.

க‌ண்ணிய‌ம் மிக்க‌
பெண்ணிய‌த்தைப்
போற்றுவோம் எந்நாளுமே!
..............................
க‌விஞ‌ர் யாழி,
கோவை, த‌மிழ்நாடு.
உல‌கப் பெண்கள் தின‌ம்


ம‌னுத‌ர்ம‌ சாத்திர‌மும்
மாற்று ம‌த‌ங்க‌ளின் வேத‌ங்க‌ளும்
ம‌க‌ளிர்த‌ம்மை
ம‌திக்காம‌ல் ஒதுக்கி,
ஆணாதிக்க‌ம் த‌லைதூக்க‌
அடிமைப்ப‌ட்டக் கால‌த்தில்...
மார்த‌ட்டி எழுந்த‌ ம‌க‌ளிர்த‌ம்
ம‌ன‌வெழுச்சியின் அடையாள‌ம்
மார்ச் எட்டு!

இல்ல‌ற‌ இன்ப‌ நுக‌ர்வுக்கும்
இல்ல‌ப் ப‌ணிக‌ளுக்குமே
இறைவ‌னின் ப‌டைப்பென‌
இக‌ழ‌ப்ப‌ட்ட‌ ம‌க‌ளிர் குல‌ம்
ஓர‌ணியாய்த் திர‌ண்டெழுந்து
உல‌கையே விழிக்க‌வைத்த‌
உன்ன‌த‌ நாள் மார்ச் எட்டு!
...........................

> கிரிஜா ம‌ணாள‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்
மகளிர் தினத்தில் மனத்தைத் திறந்து.....

மண்டபம் நிறைகிறது
மாவிலைகள் சலசலக்கின்றன
மின்னும் விளக்கில் தோரணங்கள்......

வெள்ளை வேட்டிகள்
வெறும் பேச்சுகள்
வேடிக்கையான கூட்டங்கள்
வாடிக்கைதானே! இவர்களுக்கு...

தேர்தல் காலமல்லவே....
திருவிழாவும் இல்லையே...
திரும்பிப் பார்த்த ஒருவர் சொல்கிறார்
தினமடா இது, சர்வதேச மகளிர் தினமென....

திகைத்து விட்டான்
தனைமறந்தே கேள்வி ஒன்றும்
தயங்கித் தயங்கிக் கேட்டே விட்டான்
தினமென்று சொன்னீர்களே ஜயா
தலைவலிக்கும்வரை தேடிவிட்டேன்
திரைமறைவில் நிற்கும் ஓரிரு மகளிரை விட்டால்
தினத்தைக் கொண்டாடத் தலைவர்கள் தானே ஐயா....

'நாகரிகம் தெரியா மூடனை
நடுமண்டபத்தில் விடாதே என்றே சொன்னேன்.
நாவளைய கேட்டு விட்டான்.
நலிந்த இவன் நாலு பைசா பெறாக் கேள்வி.
போடா போ... ஓடியே போ'
நாகரிகம் தெரிந்தவரின்
நாவசைந்து திட்டு வாங்கிச் சென்றான்.

போகும் வழியில் பார்த்த காட்சிகள்
பேதைப் பெண்கள் நின்ற கோலங்கள்
கையில் தட்டுடன், கண்ணில் நீருடன்
சேலைத் தலைப்பினை இழுக்கும் குழந்தை....
அவளும் மகளிர் தானோ?
அவனுக்கொரு சந்தேகம்.

பள்ளிக்குச் செல்லும் வயதில்
பாவம் கழிவகற்றும் வேலையில் சிறுமி ஒருத்தி..
பாடசாலை வாயிலில் வேடிக்கை பார்த்து
பூத்திருக்கும் விழிகளில் ஏக்கம் கொண்டு
சின்னஞ்சிறுமி ஒருத்தி .......
ஓ இவர்களும் மகளிர் தானோ?
மீண்டும் நெஞ்சில் கேள்வி எழுந்தது.

குடித்து விட்டு அடித்தே உதைக்கும்
குடும்பத் தலைவனுக்காய்
அடுத்த வீட்டில் அரிசி கேட்டு
அடுப்படியில் சாதம் வடிக்கும்
அழுத கண்களுக்குச் சொந்தக்காரி
அவளும் கூட மகளிர் தானோ?

படித்தே விட்டான் என்னும் காரணத்துக்காய்
பணத்தை தட்சணையாய்க் கேட்கும் வரன்கள்
பேதைகள் வாழ்வின்றித் தவிக்கும் கோலம்
பாவியர் உலகில் இவர் பெயர் மகளிரோ!

ஓ இப்போதுதான் புரிந்தது அவனுக்கு....
இப்போது அவன் தெருவில் பார்த்த
இன்னல் மிகுந்த மகளிர் வதனங்களில்
இனிமையான புன்னகை எப்போது
தெரிகின்றதோ! அப்போதுதான்
தெரியும் உண்மையான மகளிர் தினம்
அதுவரை பயணம் தொடரும்....

பேரூந்து நிறுத்தப்பட்டு விட்டது
அவன் இறங்க வேண்டிய இடம்
"மனிதாபிமானம்" என்னும் தரிப்பு
இங்கே காணவில்லை அந்த
அரசியல் பெருந்தலைகளை....

- சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து
உற்ற‌த் தோழியாய்
உய‌ர்குடும்ப‌த் த‌லைவியாய்
ந‌ற்ற‌மிழ்ச் செல்வியாய்
ந‌ல‌ம்பாடும் ச‌கோத‌ரியாய்
உற்ற‌துரைக்கும் உய‌ர்க‌னிமொழியாய்
க‌ற்ற‌த‌னைத்தும் க‌டைப்பிடித்து
க‌ட‌மையாற்றும் காரிகையாய்
வாட்ட‌ம் போக்குகின்ற‌
வ‌ண்ண‌ப் புதும‌ல‌ராய்
காட்சியில் திக‌ழும்
க‌ன‌க‌த் திர‌ளாய்
விள‌ங்கும் புதுமைப் பெண்க‌ளை
வாழ்த்திப் போற்றுவோம்
ம‌க‌ளிர் ந‌ன்னாளில்!
...............................

> அ. கௌத‌ம‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
உள‌மார‌ வாழ்த்துவோம்!
=====================
அமுது படைப்பதில்
ஔவையாய்...
அன்பு செலுத்துவதில்
அன்னை தெரசாவாய்...
வீரத்தில் ஜான்ஸி ராணியாய்...
விவேகத்தில் அன்னை
இந்திராவாய்...
சரித்திரம் படைப்பதில்
சுனிதா வில்லியம்ஸாய்...
சாதனை படைப்பதில்
சானியா மிர்சாவாய்...
இப்படி...இப்படி...
உலகுக்குத் தெரியாமல்
உயர்ந்த சாதனைகள் படைக்கும்
உல‌க‌ ம‌ங்கைய‌ர் அனைவ‌ரையும்
உளமாற வாழ்த்தி ந‌ம்
உள‌ங்க‌ளிப்போம் ம‌க‌ளிர் நாளில்!

- க‌விஞ‌ர் ஸ்வேதா,
அரிய‌லூர், த‌மிழ்நாடு.
உலகப் பெண்கள் தினம்

வெற்றி தினம்!
=============

விடுதலையின் வெற்றி சுத‌ந்திர‌தின‌ம்
விய‌ர்வையின் வெற்றி மே தின‌ம்
அன்பின் வெற்றி அன்னைய‌ர் தின‌ம்
அகில‌ உல‌க‌ ம‌ங்கைய‌ரின் வெற்றி...
அக‌ம் ம‌கிழும் இந்த‌ ம‌க‌ளிர் தின‌ம்!

- கவிஞர் ர. அனுசா,
அரியலுர், தமிழ்நாடு.

ஒருநாளே பெண்களுக்கு
ஒதுக்கினர் ஆண்கள்
'உலகப் பெண்கள் தினம்'

"ஒருநாள் இது மாறும்
ஒதுக்கலாம் ஆண்களுக்கு"
உலகப் பெண்கள் இனம்.
-இப்னு ஹம்துன்
உலக பெண்கள் தினம்
-------------------------
நாட்டின் கண்கள்
பெண்கள் என்றார்கள்
அப்படி நடத்துகிறார்களா ?

இராமனுக்கு சீதையும்
பாரதிக்கு கண்ணம்மாவும்
போல் எல்லோருக்கும்
எல்லாம் வாய்க்குமா ?

எப்போது பெண்கள்
விடுதலை , சுதந்திரம்
அடைவது ?
பெண் விடுதலை
எப்போது கிடைக்கும்

காத்து இருக்கிறார்கள்
அகதியாய் , அநாதையாய்
தவிக்கிறார்கள் இன்று
உலகில் பெண்கள்

ஒருவரும் கவனிப்பாரற்று
தெரிவிலும் , அநாதை
இல்லங்களிலும் பிள்ளைகளுடன் ...

இதெல்லாம் நடப்பது
வறிய நாடுகளில்
தான் என்று நினைப்பதற்கு
மிகவும் மன
வருத்தம் தான் எமக்கு...

பவி
பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது
உண்மையான மாற்றம் வரும் அப்போது

லக்ஷ்மி
உலகப் பெண்கள் தினம்

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாடசி

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா

புலவர் ச இராமாநசம்
சூரியன் இன்றி பூமி
சுழலாது
பெண்கள் இன்றி
இப் பூவுலகம்
இயங்காது

-கார்- வீரா
தமிழ் நாடு விருத்தாசலம்
பெருமைமிக்க மகளிர் தினம்
----------------------------------------

என் ஊமை பெண் பேசிவிட்டால்
இனி--
அவளின் தாசி பட்டம் ஒழிட்டும்.
''ம்''- அவள் நிமிந்து பேசிட்டால்
இனி ------
அவள் இயற்கையாய் பூப்எய்தாலும்
அந்த பார்ப்பன தீட்டு பட்டம் ஒழிட்டும்.
மலடியென எவன் சொன்னாலும்
அவள் தாய்மை
அவனைவிட மேலென யாகுட்டும்.

ஓ...என் ஊமை பெண் பேசிவிட்டால்
இனி சிங்கள காடையன் -அவளின்
மார்பை அறுப்பானெனில்
அவள் எப்போதுமே
கறும்புலியாகவே பிறக்குட்டும்.

ஆம் --
இனி ஆணாகிய நான் -எவனோ
செயற்கையாய் விதைத்த
அந்த நஞ்சு ஆணவத்தை அழித்து
அவளின் தோழமையாக பயணிக்கிறேன்.

தோழமையுடன்

-கனல்மைந்தன்
உலகம் நிரப்பும் பெண்மை
________________________________
கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்
ஆண்கள் மட்டுமே படைக்கப்பட்டனர்
ஆண்டவனால் அவன்
ஆணென்பதால் ,
வண்ணமின்றி வறண்டிருந்தது பூமி
அப்போது ,
இலை பூ காய் கனியின்றி
தண்டுகளையும் குச்சிகளையும் மட்டுமே தாங்கியிருந்தன தாவரங்கள்
உணவென்பது இவை மட்டுமே
ஆடவனுக்கு ,
சேர்ந்து விட்ட வெறுமை நீக்க
அமிர்த கலசத்தை அன்பால் நிரப்பி
உயிர்ப்பித்தான் பெண்ணை ,
பசுமை பூத்தது
உயிர்ம்மை வழிந்தது
உலகம் செழித்தது ...
பெண்ணின் பிரம்மாண்டத்தில்
அசந்த ஆண்டவன் தனக்கிணையாய்
பெண் தெய்வங்களை
உருவாக்கி கொண்டான் ,
ஆண் தெய்வங்களை விஞ்சின
பெண் தெய்வங்கள் ,
பெருமிதத்துடன் பெண்மை போற்றினான் கடவுள்
பொறாமை தீ பற்றி எரிந்தான் ஆடவன்
தன்னை மிஞ்சும் பெண்மை
தஞ்சம் எண்ணமில்லை ஆடவனுக்கு
தஞ்சமளிக்கும் எண்ணமுமில்லை
வஞ்சிக்கு
இணை சேர்ந்து தோழமை பூணவே
தவித்தது பூவை உள்ளம்
நட்பினை உதறி ஆளுமை கையெடுத்தான்
தவித்தாள் மங்கை தடுமாறினாள்
தவமிருந்து நட்பை யாசித்தாள்
தெய்வம் நீயென உச்சி ஏற்றி
சூழ் வட்டமிட்டு
வளையாலும் கொலுசாலும்
காப்பு பூட்டினான்
அடிமை இன்பத்தை அணுஅணுவாய்
ரசிக்க தொடங்கினாள்
காலம் செல்ல தந்நிலையுணர்ந்து
தளை நீக்க தாகம் கொள்ள
அவன்
வெகுண்டெழுந்து பிடியிறுக்க
கண்ணுற்ற படைத்தவன்
பாதுகாத்தான் தன் படைப்பை
மடியிருத்தி ,
ஜாக்கிரதை !!
கடவுள் மடியிருப்பை கருக்க
நினைப்பவன்
உரமாக்கப்படுவான் வயலுக்கு உரமுண்டு செழிக்கும் மரங்கள்
பெண்மை துப்பும்
உலகம் நிரப்பப்படும்
பெண்மையால்.

-பத்மாகிரகம்,இந்தியா
பெண்ணே உன்னை கண் என வைத்தார்கள்!
பத்திரமாக பார்த்துக்கொள்வதற்கல்ல!சிறைபிடிக்க!
முடங்கிவிடாதே!
பாரதிகண்ட புதுமைபெண்ணாய்
பொங்கி எழு!


சிவசங்கரி
அன்பின் மறு உருவம்
-----------------------------

அன்பை அள்ளித் தரும் அன்னையாய்
பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்
சகல நேசங்களையும் கொட்டிடும் சகோதரியாய்
அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்
பெரிதுவக்கும் பண்புகளில் பெரியம்மாவாய்
சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்
அன்னைக்கு அடுத்தபடியாக அண்ணியாய்
இவை அனைத்திற்கும் மேலாக
கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய்
தோள் கொடுக்கும் தோழியாக
உள்ளத்தில் மட்டுமல்ல
உணர்வில் மட்டுமல்ல
உடைகளில் மட்டுமல்ல
உணவில் மட்டுமல்ல
உயிரிலும் கலந்திருப்பது
நீங்கள் தான்
சரித்திரம் படைத்த பல பெண்மைகளுக்கும்
புதிய சரித்திரம் படைக்கப் போகும் பெண்மைகளுக்கும்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள் பல
தோல்விகள் பல உங்களை மிக
எளிதாக கடந்து போகலாம்
துவண்டு விடாதீர்கள்
உங்களை தங்கமாய் புடம் போட வந்த
படிக்கட்டுகள் காத்திருங்கள் நாளைய
ஊடகங்கள் உங்களை மட்டுமே
சிலாகிக்கப் போகிறது
புதிய யுகம் உங்களால் மட்டுமே
மார்ச் 8
மறக்க முடியாத இமயம் தொட்டு


க.கமலகண்ணன், எழுத்தாளர்,
சென்னை.


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்