Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
நாற்காலி
நாற்காலி

ஏய் மனிதா !

நாலு கால்களில்
நானுனைத் தாங்கி
நடந்து நீ வந்த களைப்புத் தீர
நயமாய் தருவேன் ஓரிடம்

பதிலாய் நீயென்ன தந்தாய்
பைத்தியக்காரன் !

எப்போதும் ஓட்டம்
எதிலுமே ஏக்கம்
ஏனின்னும் உனக்கு
ஆறாம் அறிவு துணை வரவில்லை ?

உட்கார இடம் கொடுக்கும் எனையே
உதைத்து விட்டுச் செல்லும்
நன்றி மறந்த ஜென்மமன்றோ நீ ....

எல்லா இடத்திலும் இருக்கும்
நாற்காலி என்னில்
மேலிடத்திலுள்ளோர்
அமரும் இடத்தை மட்டும்
அமுக்கி விட நீ படும் படாத பாடு
பேராசையின் மொத்த உருவம் நீ
மனிதா நீ எப்போதுதான்
மாறப்போகிறாயோ ?

உழைத்து உழைத்து உருக்குலைந்த
உண்மைத்தொழிலாளி அடையவேண்டிய என்னை
நீயறிந்த குறுக்கு வழிகளிலே வாங்கிவிட
நீ போடும் வேஷங்கள் தானெத்தனை ?

என்னில் அமர்ந்து
எனக்கு பெருமை சேர்த்த
எண்ணிலாப் பெருந்தலைவர்கள்
காலியாக்கிய என்னை அடைய
கால்காசு பெறாத நீ ஆடும்
காடைத்தனமான ஆட்டங்கள்
தான் எத்தனை எத்தனை ?

சுற்றுப்புரச் சூழல்களை அழித்து
சுற்றமாம் சொந்த மக்களை ஏய்த்து
சுகம் காண விழையும் உன்னை
சுமப்பதை வெறுக்கும் நாற்காலி நான்

பேராசை கொண்ட குறும்புத்தியுள்ள
அதிகாரிகள் அமர்வதற்கு ஆசையில்லை
நாளையுனை மாற்றி இந்தப் பூமிப்பந்தின்
அழுக்களைக் கூட்டி சுத்திகரிக்கப்போகும்
ஏழை இளம் சிறார்களின் சிறிய பள்ளிகளில்
ஏந்தியவர்கட்கு சேவை செய்யவே
வேண்டுகிறேன்

பொறு மனிதா பொறு
சமுதாயம் விழித்துக் கொள்ளும்
சரித்திரத்தை மாற்றியமைத்து
யுத்தமற்ற பூமியொன்றில்
இன,மன பேதமற்ற சகோதர
சமுதாயத்தை கட்டியெழுப்பும்
தலைமுறையொன்றைத் தாங்கி
நற்சேவை நான் புரியும் காலம்
தொலைதூரத்தில் இல்லை.

அப்போது என் மீது
நீ உட்கார வந்தால்
நானுன்னை எட்டி உதைப்பேன்

-சக்தி சக்திதாசன்
நாற்காலிகள்
-ருத்ரா

1

உயிரற்ற இது
தின்றதோ எத்தனை உயிர்கள்?
ஆட்சியின் சரித்திரம்.

2

ஐந்தாண்டுக்கொரு முறை உயிர் வரும்
அது வரை
காத்திருக்கும் இந்த சடலங்கள்.

3

ஐந்தாண்டுக்கொரு முறை சீட்டுகள்
ஏலம் போகும்.
ஜனநாயகத்திற்கு மானம் போகும்.

4
எல்லோருக்கும் நாற்காலிகள் கிடைத்த‌ன‌.
வெளியில் நின்ற‌து ஜ‌ன‌நாய‌க‌ம்.
ஆட்சி ம‌ன்ற‌ம்.

5

மோடிக்கும் மோசடிக்கும் வித்தியாசமில்லை.
உட்காரச்சொல்லிவிட்டோம்..வெறும்
மர நாற்காலிகள் தானே நாங்கள்.

6

அவர்கள் உட்கார நாங்கள்
நின்று கொண்டே இருக்கிறோம்.
எங்களுக்கு மட்டும் எப்போதும் தேசீயகீதம்.

7

நான்கு காலிலிருந்து மீண்டும்
நான்கு "காலிக்கு" ஒரு பரிணாமம்.
பதவிக்கு அடிதடி.

8

கால் உடைந்தது.கை உடைந்தது.
சிகிச்சை மட்டும் அவர்களுக்கு.
"கேள்வி நேரம்"

9

இங்கு செயல்படாத திட்டங்களின்
குப்பைத்தொட்டிக்கும் நான்குகால் தான்.
அமைச்சரின் நாற்காலி.

10

மக்கள் கொடுத்த விளையாட்டுப்பொம்மை.
அப்புறம் இங்கு
ம‌க்க‌ளே விளையாட்டுப்பொம்மை.

11

எங்க‌ளுக்கு மேலே ஒரு வாச‌க‌ம்.
"இன்று ரொக்க‌ம் நாளை க‌ட‌ன்" மாதிரி.
நாளை இங்கு வாய்மை ஜெயிக்கும்.

12

ராமர் வேடம் ராவணன் வேடம்
பாஞ்சாலி வேடம் காந்தாரி வேடம்...
மாறுவேடங்களின் வேட‌ந்தாங்க‌ல் இது.

13

கேட்பாரற்றுக் கிடந்தது பரண் மேலே
அக்பர் உட்கார்ந்தது என்று சொன்னேன்.
கேட்டார்கள் விலைக்கு லட்சத்துக்கும் மேலே.

14

மைக்குக‌ளிட‌ம் அடிவாங்கினோம்.
அடித்த‌து வெள்ள‌ய‌னா? க‌ருப்ப‌னா?
வ‌லித்த‌து "சுத‌ந்திர‌த்திற்கு" தான்.

15

சும்மாசனமா? சிம்மாசனமா?
சும்மாதானேகிடைத்தது,சொல்லுங்கள்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று.

16

கணிப்பொறிக்கும் எலிபொறிக்கும்
இதுவே எப்போதும்
தேர்தல் காலத்து மசால்வடை.
நாற்காலி

புத்தனுக்கும் பித்தமேற்றி
சித்தம் மாற்றி
சித்தார்த்த‌னாக்கிப் பார்க்கும்
நாற்காலிக‌ள்.

(பி.கு: இவை போதி ம‌ர‌த்தில் செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ ஒரு வ‌த‌ந்தி!)

> ராத்திகா
திருச்சிராப்ப‌ள்ளி,
த‌மிழ்நாடு
நாற்காலி
========

எல்லோருக்குமான இருக்கைகள்
நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்
அடுத்தவரின் நாற்காலியை
முடமாக்குவதில்
குறியாய் திரிகிறார்கள்
உளுத்துப்போன‌
மனிதர்கள்.

> கவிஞர் யாழி
கோவை,
தமிழ்நாடு.
புதுநாற்காலி

நாற்காலி செய்ய
வந்திருந்தார் அவர்.
வேப்பமரத்தில்
இழைப்புளி கொண்டு
முன்னும் பின்னுமாய் இழைத்து
சட்டங்களை இணைத்து
முப்பரிமாணங்களில்
சதுரம் அமைத்தார்.
சித்திர வேலைப்பாடுகள் செய்த
முதுகுப்புறமும்
கைகளையும் கால்களையும் இணைத்து
நாற்காலி செய்து முடித்தார்.
அதன் அழகில் வயப்பட்டு
உட்காரப்போன குழந்தைகளை
அதட்டினார் அப்பா.
தாத்தாவை கூட்டிவர
ஆள் அனுப்பிவிட்டு
காத்திருந்தோம் வரிசையில்.
தாத்தா வரவில்லை.
தோகையாய் விரிந்து
தோட்டத்தில் நிழல்தந்து
வெட்டப்பட்டு கிடந்த
வேப்பமரத்தின்
பாதத்தைப் பற்றியபடி
இறந்து கிடந்தார்.
தூக்கிவந்து கிடத்தினோம்
அவர்
நீரூற்றி வளர்த்த
நிழல் மரத்தின்
மிச்சமாய் கிடந்த
புது நாற்காலியில்!

-அருணாசலசிவா,
சென்னை, தமிழ்நாடு
நாற்காலி


மாமன்னர் அமர்ந்த
மகத்தான சிம்மாசனத்தின்
மரபுவழி வந்த சாதனமே!

அறம்பட ஆண்ட
ஆன்றோர் திறமைக்கு
அணிசெய்த ஆசனமே!

நாட்டுப்பற்றே உயிர்மூச்சாய்
நம்மிடையே வாழ்ந்து சென்ற
நல்லோர்களைத் தாங்கிய நீ
நோட்டுப் பற்றே உயிர்மூச்சாய்
நுகரும் பொல்லார்க்கும்
ஆசனமாய் ஆனது ஏன்?

அமரும் சாதனம் உன்னை
அவைகள் பலவற்றில்
எறியும் ஆயுதமாக்கும்
இழிநிலையை என்சொல்வேன்!

நாற்காலி ஆசை கொண்ட
நாலாந்தர மனிதர்களால்
நாட்டின் ஆட்சி நிலை
நலிந்துவிட்ட நிலை இன்று!

மண்ணுள்ள வரைக்கும் உன்
மதிப்பு என்றும் அழியாது...
உன்னருமை புரிந்த
உத்தமர்கள் உள்ளவரை!

> கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி.
நாற்காலி

ஆளுமையின் அடையாளம்
அதிகாரத்தின் குறியீடு
ஆட்சியின் சாட்சி

உழைப்பாளியின் உறுவாக்கம்
முதலாளியின் சிம்மாசனம்
நாட்டாண்மையின் நங்கூரம்

மேலாதிக்க இருப்பிடம்
மேலாண்மையின் பிறப்பிடம்
மேட்டுக்குடியின் வசிப்பிடம்

உத்தமர்களைச் சுமந்தது
உதவாக்கரைகளை அடைந்தது
உண்மையைப் பிரிந்தது

பொதுநல இருக்கை
சுயநல ஆக்கிரமிப்பு
சுதந்தரத்தின் எதிரி

மு.பாலசுப்பிரமணியன்
(பரிதியன்பன்)
புதுச்சேரி
இந்தியா
நாற்காலி...

நிரந்தர இருக்கையல்ல
நாற்காலி..
மனிதா,
நிரந்தரமாய் இருக்கவிரும்பினால்
நீயொரு பிணம்தானே...!

>செண்பக ஜெகதீசன்...
நாற்காலிகள்
நடப்பதில்லை
எங்கேயும்.

நாற்காலிகளின்றி
நடப்பதில்லை
எதுவும்
எங்கேயும்.

வீ.விஷ்ணுகுமார்.
நாற்காலி

நல்லபடம் போட்டீராம நீருமிங்கே-பதவி
நாற்காலி போட்டிதான் பாரும்நன்கே
சொல்லமனம் கூசுதையா பேசிப்பங்கே-தாம
சொன்னதற்கு மாறாக சொல்லியங்கே
வெல்லவழி போடுகின்றார் ஆளக்கூட்டே-அட
வெட்கமின்றி கேட்பாராம் தினமும் ஓட்டே
கள்ளஓட்டு போடுவதும உண்டேஉண்டு-எல்லா
கட்சிகளும் செய்யுமிந்த தொண்டேதொண்டு

ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ஊராள வந்தாலும் கட்சிதோறும்
மாற்றமில்லை கேட்பாராம் நாளுமநாளும-இனி
மனமாற வழியில்லை மேலும்மேலும்
ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம கடசித்தொண்டை

வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிட பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே நாமும்பின்னால
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயவர் ஆடசியும் இன்றேல்வீணே

புலவர் சா இராமாநசம்
அரங்கராசபுரம் சென்னை 24
நகரா நாற்காலிகள்தான்
நகரங்களையே
நகரவைக்கின்றன

-ஆலிம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்