Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
குடை
நாம் சண்டையிட்டு
பிரிந்த அந்த
கடற்கறை சந்திப்பின்
அடையாளச்சின்னம்

இன்னமும்
அங்கேயே வானம்பார்த்து
வரமொன்று கேட்டு
தவம் செய்கின்றது.

மனசை நகங்களில்
வைத்திருக்கும் தேவதையே
உன் கைசேர!

என்னைபோலவே!!

- தொட்டராயசுவாமி.அ,
கோவை.
குடை
======

வெயில், மழை என
எந்த நேரத்திலும்
குடையாகிறது
ஏழைத்தாயின் சேலை.

- யாழி, கோவை, தமிழ்நாடு.
குடை
======

மறந்தார்கள் குடை கொண்டுவர,
மழைக்காகப்
பிரார்த்தனை செய்தபோது.

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
குடை
=========

கொட்டும் மழையில் நனையாதிருக்க
தலைக்குமேல் விரிக்கும்போதெல்லாம்
கேள்வியில் நனைகிறது
மனசு.
எல்லோரும் ஒரே குடையின்கீழ்
வருவது எப்போது?

- ஆங்கரை பைரவி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு.
குடை

குடையின் கீழ் மனிதன்
குடையின் மேல் மழை என்றால் ....

குடையின் உள்ளே பொழியும்
குற்ற உணர்வில் நனையும் போது
குடை ஒன்று விரியுமா ?

மேகத்தின் சேர்க்கையால்
சோகத்தின் வடிவமாய்
பொழியுமந்த மழையின் போது
பதுங்குகிறோம் குடையின் கீழ்

சொந்தத்தின் சேர்க்கையால்
விளையும் சோகத்துக்கு
குடை எங்கே வாங்குவீர்
உமைத்தானே கேட்கிறேன் ?

நியாயம் என்னும் குடையின் கீழ்
நிம்மதி என்னும் நிழலை
நிறுத்து வாங்கும் சமுதாயம்
நின்று பார்த்தால் பரிதாபம்

தன் குடையை பகிர்ந்தளிக்கும்ம் தரமான மனிதன் ஒரு புறம்..
இரவல் குடையினுள் பகிர்ந்தவனை
இடித்துத் தள்ளித் தனதாக்கிக் கொள்ளும்
பேராசைக்கார மனிதன் மறுபுறம்

வாழ்க்கை இதுதான் தோழனே
வாழ்ந்து பார்த்ததும் ஏனோ
மழை பெய்யும் போது
மனம் குடையைத் தேடவில்லை

சக்தி சக்திதாசன்
குடை.
6-5-08.


இடை குடையோவென
படை கொண்டு வந்து,
குடை விரித்துக் காதலாடி
நடை விரிக்கிறது நானிலத்து வாழ்வுக்கு.

வெப்ப சாமரமிடும்
வெயில், வெகுமானமான
வெகுமாரியிலும் கவிந்து
வெளியேறப் பாதுகாக்கும்.

சின்னக் குழந்தைக்கு
வண்ணமய வடிவில்
என்னமாய் மகிழ
பின்னப்படும் தொழில்நுட்பம்.

நூலில் நடக்க
நிதானம் பலக்க
விதானமாகி
ஏதுவாகும் குடை.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
நனைவதற்கு ஆசை
தன்னிச்சை கைகளிலோ
குடை.

-------------------
பிழிந்தெடுக்கும் கதிரவன்
பொழிந்துவிடும் மேகங்கள்.
குடைகளோ சலனமற்று.
---------------------------
தேவையை தீர்மானித்தாலும்
தெரியாது வானத்திற்கு
குடையின் உபயோகம்.
------------------------------

அழுகையும் நகைப்பும்
அதிகமானால் கறுப்புக்கொடி தான்
வானத்திற்கு!

>இப்னு ஹம்துன்
குடை...

வெயில் மழை விட்டால்
வேறெதுக்குக் குடை-
கடன் கொடுத்தவன்
கண் மறைக்கத்தான்...!

>செண்பக ஜெகதீசன்
மழையை விற்று
வாங்குகிறோம்
குடையை.


வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி
விரித்து மூடும்
இடைவெளியில்
நீ நனைவதைப் பற்றி
யாருமே
கவலப்படுவதாகத் தெரியவில்லை!

மழைக்கு
உன் மீதுதான்
தீவிர கோவம்!
மனிதனுக்காக
வலி சுமக்கும்
உன்னைப் போல
தியாகி
இந்தச் சமூகத்தின் கோமாளி!

-கே.பாலமுருகன்
கடற்கரையோரமாக
மழைக்காகக் காத்திருந்தே
தலை கவிழ்த்து
இமை மூடிவிட்டாய்!

அலைகளின் ஓசையைத் தவிர
வெறொன்றுமில்லை
இங்கே!

-கே.பாலமுருகன்

குடையே.. .. ..
----------------
மழை வரும்போதெல்லாம்
வெறுப்பை உமிழ்வது போல்
கருப்புக் கொடி காட்டுவதன்
காரணம் தான் என்ன?

மனிதனுக்காக நீ
செய்கிறாயென்றால்
ஒருமுறைக்கு இருமுறை
சிந்தித்துப் பார்த்து
மனதை மாற்றிக்கொள்.
மனிதனுக்காக நீ
மழையைப் பகைத்துக் கொள்ளாதே!
தேவைக்கு மட்டுமே
தேடிவருபவன், மனிதன்.

சித. அருணாசலம்.
சிங்கப்பூர்
குடை
--------
என்று நாம் ஒருகுடைக்கீழ் ஒன்றாவது என
ஈழக் குடை கேள்வி தொடுக்கிறது தமிழா !
உன் அற்ப சுகங்களுக்காய் பதவிக்காய்
தனித் தனியே மாற்றானின் பாதங்களில்...
குடையை பார்க்கும் போதெல்லாம்
தமிழினத்தைப் பழிப்பது போன்றதோர்
கூச்ச உணர்வால் கூனிக் குறுகி.....
எட்டுக் கோடியைத் தாண்டிய தமிழனுக்கு
ஒதுங்க ஒரு கோடி கூட இல்லையடா !
ஒரு குடைக் கீழ் அணிதிரண்டால்
கொடியொன்று பறக்குமடா இவ்வுலகில்
இளைப்பாறும் குடையாகும்
என்றுதான் தமிழர் நாம் உணர்வோமோ !

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
குடை


இயற்கையின்
தீர்ப்புக்கெதிராய்
மேல் முறையீடு....

-வடிவேல், இந்தியா
குடை...

ஒன்றாகி வென்றாக
வேண்டும் என்று
அன்றொரு நளில்
பெரும் தலைவன்
அணியிலே தமிழர்
ஓர் குடையின் கீழ்
நின்ற நினைவுகளை
சரிந்து கிடக்கும் குடை
அடையாளப் படுத்துவது
கனக்கிறது...........
குடை

அலை மோதும்
கடலின் கரையதில்
உள்ளங்கள் மோதிக்
கொண்டதோ??
மோதலின் அடையாளமாய்
குடையும் நிலைகுலைந்து
நிற்கிறதே?????

- பி.தமிழ் முகில்
12.12.2011


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்