Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
வருக புத்தாண்டே!!!
மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்

கலைந்தோடும் கனவுகளாய்
காற்றோடு மறையும் புகையாய்
காரிருளில் புதையும் பகலாய்
கடக்குது ஒரு வருடம் இங்கே

கால்கடுக்க ஓடி உழைத்து
காலமெனும் கடலில் நீந்தி
கன்னத்தில் கண்ணீர் கோடுகளோடு
கழித்து விட்ட வருடம் கழியுது

நிறுத்த முடியா காலக்கடியாரம்
நிறுக்க முடியா நிகழ்வுகளோடு
நிறைக்கும் அனைவரின் நெஞ்சங்களை
நிஜமாய் மறையுது வருடமொன்று

சிலரின் வாழ்வில் கண்ணீரும்
சிலரின் வாழ்வில் பன்னீரும்
சிலரின் வாழ்வில் செந்நீரும்
விளக்கமுடியா விளைவுகளே

நீயென்ன சொன்ன போதும்
நானென்ன செய்த போதும்
யாரென்ன முயற்சித்தாலும்
உலகம் உருள்வது உருள்வதுதான்

முதிர்ந்த உள்ளங்கள் உணர்ந்ததை
முளை விட்ட உள்ளங்கள் அறிந்திடவே
அனைவரும் ஒன்றாய் இணைந்து இங்கே
அறிவைப் பகிர்வோம் அவனிதனிலே

உலகம் மிகவும் சிறியதுதான்
உனக்கும் அங்கே உழைக்கும் தேவை
உயர்ந்து நீயும் உலகை உயர்த்து
உயரும் நாளைய ஏழையின் வாழ்க்கை

மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்
மேகக் கூட்டம் கலையுது வானில்
நாளைய உலகம் வெளிக்குது
நம்பி நாமும் நுழைவோம் அதனுள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்
01.01.2007
ஹேப்பி நியூ இயர்...!

பிறந்த நாள்
கொண்டாடுகிறது காலம்
மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து
அதன் கை குலுக்கி
வாழ்த்துச் சொல்லுங்கள்.

அதைக் கொடு
இதை நிறைவேற்று
என்று காலத்திடம்
கவிதையில் கோரிக்கை வைத்து
சலித்து விட்டது எனக்கு.

கேட்பதற்கு மிச்சம்
ஏதும் இருக்கிறதா
இங்கு...?

மீண்டும் மறப்பதற்கு
வசதியாக தள்ளுபடி விலையில்
ஒரு புத்தாண்டு உறுதி மொழி
கேட்டுப் பார்க்கலாம்.

மீண்டும் எங்கோ
ஒரு மூலையில்
நிகழப் போகும்
வன்முறையின்
பல ரூபங்களை

என்றோ சொந்த ஊருக்கு
வரும் போர் வீரனை போல
சந்திக்க எழுகிறது காலம்

நம்பிக்கையை மட்டும்
தனது வடுக்களில்
மருந்தாய் பூசியபடி

எங்கு செல்கிறாய் நண்பா
மகிழ்ச்சியை எடுத்துக்கொள்
காயப்படும் முன்
மீண்டும் பிறந்த நாள்
கொண்டாடுகிறது காலம்.
புதிய ஆண்டு (திருவள்ளுவராண்டு)

தெற்கில் ஒரு திருப்பத்தை ,
விரிசல்களில் ஒரு நெருக்கத்தை,
மேட்டுரின் ஏக்கத்தை,
பாலாறுகளின் தேகத்தை
கடலுரின் கனவுகளை
பசித்தவனின் விருப்பத்தை
புதைத்து விடாமல்
பூக்க வைக்கட்டும்..
நம்புவோம்
நாளை விடிவது
நமக்காக என்று...

தங்க.ரமேஷ்-
பாலி
25.01.2012
மலரட்டும் புத்தாண்டு!

சாதியுள்ள சமுதாயம் சரியட்டும்!
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
21.12.2011
புதுவருடம்....
---------------------

விடை ஒன்று கொடுத்து
புதியதை வரவேற்று
விண்ணுக்கும் மண்ணுக்கும்
துள்ளினர் ஒருபால்

வித விதமாக,
விழிகளை உயத்த வைத்த
விலை கொண்ட
ஆடையர் ஒருபால்

கடிகார முள்ளை
கன நேரமுற்று
காத்திருந்து கையிலிருந்த
வெடிதனை வெடித்தோர் ஒருபால்


பெடிகளாய் நின்று
கும்மி குத்தி
பெண்கள் பக்கம் திரும்பி
இளித்தவர் ஒருபால்

கைகள் வலிக்க வலிக்க
கஷ்டம் பார்க்காமல்
கனகதியில் SMS
அனுப்பினர் ஒருபால்

லட்டு ஜிலேபி என்றி
பட்சணங்கள் உண்டு
பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து
பறை சாற்றியோர் ஒருபால்


பீர் ஒரு கையில்
பிகர் ஒரு கையில் என்று
பின்விளைவுகள் அறியாது
சுத்தினர் ஒருபால்.

தேரடி வீதியிலும்
திரும்பிய திசைகளிலும்
சந்தோசம் கொப்பளிக்க
இருந்தனர் இவர்கள்

ஊரது ஒதுங்கிய இடத்தில்
ஒலைக்குடிசைக்குள்ளே
ஒன்றிலும் லயிக்காது
ஒதுங்கி இருந்தவன் ஏழை.

வல்வையூரான்.
புத்தாண்டில் எல்லாவற்றையும்
புதுபித்தேன் - ஆனால்
பாழாய்போன மனது மட்டும்
அழுக்கு படிந்த தண்ணீர் தொட்டி போல்
அப்படியே உள்ளது ......

-ஓபிலீ

குறிப்பு : உபயோகிப்பவர்கள் கலக்காமல் உபயோகிக்கவும்
புத்தாண்டுக்கு பழசெல்லாம் மாத்திட்டேன் - இந்த
பாழாய்ப்போன மனது மட்டும்
அழுக்கு படிந்த தண்ணீர் தொட்டியாக
அப்படியே உள்ளது.

குறிப்பு:- தயவுசெய்து கலக்காமல் உபயோகிக்கவும்

ஓபிலீ,ஒக்கரைப்பட்டி,ஆண்டிபட்டி,தேனீ


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்