Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
கடிகாரம்
கடிகாரம்...

கண்முன்னே
கண்ணாடிக்குள் நடக்கும்
காதல் ஓட்டத்தில்
காண்பது நாம்-
காலத்தை...!

-செண்பக ஜெகதீசன்
இந்தியா
காலம் காலமாய்
தோற்றாலும்
தனது முயற்சியில்
பின் வாங்காமல்
ஓடுகிறது
பெரிய முள்ளை
வென்றுவிட வேண்டுமென்று
சிறிய முள்.

-வீ.விஷ்ணுகுமார்.
காணாமல் போன கடிகாரம்

>செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

௧ளவு போனது.

கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு
அருவிக்குளியல்

தந்த
ஆனந்தமும்.

கடிகாரம்
--------

காலில்லாக் கடிகாரம்
கடத்துதம்மா காலத்தை
கண்முன்னே தெரியும் உண்மை
கருத்தினுள்ளே பதிவதில்லை

மனித வாழ்வின் நீளத்தை
மனிதனுக்கே அளந்து காட்டும்
மாயமிந்த வாழ்க்கையென்னும்
மகாதத்தூவம் உணர்த்தி நிற்கும்

சிறியதான ஒரு முள்ளும்
சற்றே பெரியதான் மறுமுள்ளும்
சேர்ந்தங்கே இயங்கும் போதே
சரியான நேரம் தெரியும்

உயிரில்லாக் கடிகாரம் சொல்லிடும்
உண்மையை உணர்ந்தீரோ ?
பெரியவர், சிறியவர் என்றவர்கள்
பாரினிலே சேர்ந்தால் தான்
பயனுள்ள நிகழ்வுகள் நிகழும்

நான் என்னும் இறுமாப்பு கொண்டு
நானிலத்தில் நடப்போரே ! கேளீர் இதை
வினாடியை நிமிடமாக்கி நிமிடத்தை
வியப்பான மணியாக்கும் கடிகாரம்
வேலையற்று நின்று போனால்.....
நீர் என்று எதுமில்லை
நெஞ்சினிலே நிறுத்திடுவீர்

கடிகாரம் போன்று சுறுசுறுப்பாய்
கணநேரம் நிற்காமல் தம்பணி
கண்ணியமாய் புரிந்திட்டால் - புவியினிலே
காண்பதெல்லாம் வெற்றிதானே !

>சக்தி சக்திதாசன்
தன் சுழற்சியால்
எல்லோரையும் சுழலவைக்கும்
ஆதியந்தமற்றப் பரம்பொருளாய்
கடிகாரம் உபதேசிப்பதெல்லாம்
ஒன்றுதான்,
கடமையைச்செய்
பலனை எதிர்பார்க்காதே!
நம்புங்கள்,
இறைவன் படைத்த
இன்னொரு கடவுள்தான்
கடிகாரம்.

- கவிஞர் ரத்திகா, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு.
ஒவ்வொரு தருணத்தையும்
நம்மின் ஏதாவது ஒரு
நிகழ்வை நினைவுபடுத்தியே
சுழல்கிண்றன
கடிகார முட்கள்.

- கவிஞர் யாழி, கோவை
தமிழ்நாடு.
கடிகாரம்.

மின்சாரம் தன் சாரமாக்கும் கடிகாரம்.
கண் ஓயாது தரிசிக்கும் மையப்புள்ளி.
எண் ஆரம் கொண்டு எத்தனை அலங்காரம்!
வண்ண ஆரம் கரத்தினிலும் பல்லுருவம்!

எதிர்வாதமற்றவன், ஏவற்காரன் கண்காணிப்பாளன்.
அதிகாரம் முழுமை பெற்ற சட்டக்காரன்.
அதிகாரன் உலகை ஆட்டுவிக்கும் வணங்காமுடி.
சதிகாரன், சர்ச்சைக்காரன் இவன் சோம்பேறிக்கு.

”கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” என
திடமாய் திருப்பள்ளியெழுச்சி பாடும் திறலோன்.
திடசித்தன், மணிக்காதலிக்கு மணிக்கொரு தடவை
நடனமாடி முத்தமிடும் நிமிடக் காதலன்.

ஊருறங்கும் போதினிலும் யாருமற்ற வேளையிலும்
பாருறங்காது பாதுகாக்கும் பாகுபாடற்ற பாகன்.
”திருவினையாக்கும் முயற்சி ” யென்ற முதுசொல்லிற்கு
பெருமையான உதாரணம், இவனைப் பேசாதார் யார்?.

முடிப்பான், விடயங்களைத் தொடங்குவான் தொடர்வான்.
நொடிக் கொரு பேச்சு மாறாதவன்.
முடிப்பான் பேச்சு என்றாலவன் இறப்பான்.
கடிகாரத்தை மதிப்பவன் கௌரவம் பெறுகிறான்;.


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-05-2008.

( திறலோன் -வல்லமையுடையவன்.)

காலதேவனின் ஊழியனாய் அவன்
கடமையைச் செய்பவன் நான்,
என்னிடமிருந்து நீங்கள்
என்னதான் கற்றுகொண்டீர்கள்?

'உயிர்'தரும் உங்களை
உள்ளத்தில் நேசித்து
ஓயாமல் காலம் காட்டும்
உண்மை ஊழியன் நான்.

வரம்புக்குள்தான் வாழ்க்கையென்பதை
வகுத்துக்கொண்டவை
முட்களான என் பிள்ளைகள்,
ஆனால் நீங்கள்?

உங்கள் நாட்கள்
எண்ணப்படுவதை
உணர்த்துபவன் நான்,
ஆனால்
உணர்கிறீர்களா நீங்கள்?

இரவு பகலென்று
இடைவிடாத என் பயணத்தில்
எத்தனை நிகழ்வுகளை
இவ்வுலகம் கண்டிருக்கிறது!

அருகிவரும் உங்கள் ஆயுள் முடிவை
உருகிநின்று உள்ளம் வருந்தாமல்
நல்லவை செய்யுங்கள்
ஆம்.....உங்கள்
நாட்கள் எண்ணப்படுகின்றன!

- கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு.
சப்தமிடும் நிசப்தங்கள் ...
===================

நிசப்தமாய் நின்றிருந்த நீர் பரப்பில்
கற்களை எறியத் துவங்கினேன்

முற்றிலும் எதிர்பாராத சலனங்கள் ...
வளர்தலை மட்டுமே பறைசாற்றப் பிறந்த வட்டங்கள்
அவற்றினூடே பிம்பமாய் நானும் வளர்கிறேன்
சின்னக் குழந்தையின் குதூகலத்தை ஒத்த நீர்த்திவலைகள்
அசைந்திராத எல்லாமும் அசைகிறது
குறுகிய எல்லாமும் வளர்கிறது
எனினும்
வளர்ந்த எதுவும் மேலும் வளரவில்லை
தேய்தலுக்கு உட்படவும் இல்லை
இறத்தலை ஒத்த பிரிதல்
மீண்டும் நிசப்தம் ...



இம்முறை நேர்ந்த
நிசப்தம் கொடியதாய் தோன்றியது
நான் ஏற்படுத்த விழைந்த சலனத்தின் பிரிவு
நீர்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாய் தின்னத்தொடங்கியது ...



அவசியமற்றதாகத் தோன்றியது என் செயல்
நிகழாமை நிகழ்ந்திருக்கலாம்
உன்னில் வாழ்ந்த அதே குரூரம் இப்பொழுது என்னிலும் ..
நீர்பரப்பை ஒத்திருக்கிறது என்நெஞ்சம் .

-சகம்பரி
க‌ண்மூடித் திற‌ப்ப‌த‌ற்குள்
கால‌ம் ஓடிவிடுமென்ப‌தைக்
க‌ண்முன்னே உண‌ர்த்துகின்ற‌
கால‌க் க‌ருவியே க‌டிகார‌ம்.

செய்யாத ‌வேலையையும்
செய்ய‌வைக்கும்
செய்கின்ற‌ வேலையைச்
செம்மைப் ப‌டுத்தும்
சீர‌ன‌ வ‌ழிகாட்டியாய்த் திக‌ழ்கின்ற‌
செம்மைக் க‌ருவியே க‌டிகார‌ம்.

> க‌விஞ‌ர் அ. கௌத‌ம‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
கடிகாரம்
--------

சிறிய வட்டத்திற்குள்
சுற்றி வந்து,
கடமையில் கருத்தாகிப் போன
உன்னைப் பக்கத்தில்
வைத்துக் கொண்டே,
மனிதன் மட்டும்
செய்யும் தொழிலில்
திருப்தி அடையாதது,
ஆறாவது அறிவின்
அனாவசியமான வெளிப்பாடு.

சித. அருணாசலம்
சிங்கப்பூர்.
ஓர் உடலின்
இரு ஆன்மாக்கள்!

சிறியதும் பெரியதுமாய்
காலத்தின் உயிரைப்
பிடுங்கிச் செல்ல
ஒன்றையொன்று
துரத்திக் கொண்டிருக்கின்றன!
கடிகார முற்கள்!

-கே.பாலமுருகன்
திரும்பத் திரும்ப தீரா ஓட்டம்
அலுக்கவேயில்லை
கடிகாரம்
---------------------------

சிறைப்பட்ட முட்களிரண்டில்
கட்டுப்படும் மனித இயக்கம்
கடிகாரம்
-----------------------

"இயக்கத்தை நிறுத்தாதீர்"
எழுதப்படாத அறிவுரை
கடிகாரம்.
---------------------
மாறாத வேகத்தில் பயணித்தும்
மனிதர் பழிப்பர் கடிகாரத்தை.
"நேரம் சரியில்லை"
----------------------------
-இப்னு ஹம்துன்
கடமை
-------
ஒரு நாளில் இருமுறை
சரியாய் நேரம்
காட்டிடும் கடிகாரம்
நின்ற பிறகும்
கடிகாரம்...

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
கடிகாரம்...

சுற்றும் உலகம் தன்னோடு-முள்
சுற்றி வருமே என்னோடு
சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
கடிகாரம்...

இரு கைகொண்டு
உலகையே
கட்டி ஆளும்
சக்ரவர்த்திகள் !!!
நம் வாழ்வின்
பயணமென்பது-
முன்னோக்கியே
இருக்க வேண்டுமன்றி
பின்னோக்கி அல்ல
என்ற உயர் தத்துவத்தை
உணர்த்திக் கொண்டே
இருக்கும் செயல் வீரர்கள் !!!
வாழ்வதில் எத்தடை வரினும்
நாம் கொண்ட
லட்சியப் பயணத்தில்
முன்னேறிக் கொண்டே
இருக்க வேண்டுமென்பதை
உணர்த்தும் ஆசான்கள் !!!

-பி.தமிழ் முகில்
முள்ளில்லாக் கடிகாரம் !!

துரத்துவதும் துள்ளுவதுமாக இருந்த--
முள்ளிருந்த கடிகாரங்கள்--இன்று
கள்ளு அருந்திய--காளையர்கள் போல்-
கண்சிமிட்டி -கண்சிமிட்டி--காலத்தை காட்டுகின்றன !!!

வஞ்சி அவள் கையில்.-
கொஞ்சும் தொலைபேசியில்
தஞ்சம் அடைந்திருக்கின்றது--முள்ளில்லாக் கடிகாரம் !!

பள்ளிச் சிறுவர்களின் பைகளிலும்...
படுத்துறங்கும் பாட்டியின் கைகளிலும்--
கொள்ளை அழகோடு துள்ளிவிளையாடுகின்றது---
முள்ளில்லாக் கடிகாரம்--

""தாய்யாக சிறிய முள்ளையும்- --தந்தையாக பெரிய முள்ளையும்
குழந்தையாக விரைவாக ஓடிச் செல்லும் அடுத்த முள்ளையும் காட்டி --
பூமி என்னும் உருண்டையின் மேல்--பூத்திருக்கும் குடும்பம் ஒன்றை-
தத்துவமாகக் விளக்கிய அந்தக் கடிகாரம் ----
இன்றும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது ""

-வேலணையூர் லிங்கா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்