Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
வேட்டைக்காரர்
வேட்டைக்காரர்...

தான் வேட்டையாடப்படப்போவது தெரியாமல்
மான்வேட்டையாட நிற்கிறார்-
பின்னால் புலி...!

-செண்பக ஜெகதீசன்
இந்தியா
பிரியமான என் வேட்டைக்காரன்...!
* செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


இடதுபக்கம் மூக்குத்தி அணிந்திருப்பாள் அமுதா.
எதற்கும் வாதிடுவாள் ராதா.
சிரிப்போடுதான் பேசத் தொடங்குவாள் சுசீலா.
சிறிது கூன்போட்டு நடப்பாள் கீதா.

கண்கள் பேசும் பானுமதிக்கு.
கடைசிவரை பேசாமல் புன்சிரிப்போடு போனவள் மோகனா.
மையிட்ட கண்கள் மாலதிக்கு.
மல்லிகைச் சரமின்றி காண்பது கடினம் நிர்மலாவை.
அபூர்வமாய் சுடிதாரில் வருவாள் ஜெயந்தி.
அடிப்பதுபோல் பேசுவாள் வசந்தி.
கேள்விகளோடே வருவாள் புவனேஸ்வரி.
துருதுருவென்றிருப்பாள் சந்திரா.


தோழியர் எல்லோர்க்கும்
வாய்த்திருக்கும்
ஒன்றிரண்டு பிள்ளைகளுடன்
ஒளிமயமாய் ஒரு குடும்பம்.

எப்படியும் வரக்கூடும்...

நாளை வரும் நாயகனுக்காய் - இந்த
நாற்பதிலும் காத்திருக்கும்
பெண்மான் எனைக் கொண்டு செல்லும்
பிரியமான என் வேட்டைக்காரன்.
வேட்டைக்காரர். 28-05-2008.

காட்டில் மட்டுமா வேட்டைக்காரர்!
நாட்டிலும் நால்வகை வேட்டைக்காரர்.
ஆட்டமிடும் உலகக் காட்டில்
நோட்டமிடும் சங்கதிகளை ஊட்டமாக்கி
நாட்டமிடும் தேட்டம் வென்றிட
கூட்டம் கூட்டமாக கூடும்
வாட்டமற்ற வேட்டைக்காரர்;, வெற்றி
ஆட்டமாக்கும் வேட்டைக்காரர் மனிதர்.

தினம் அப்பாவி மக்கள் உயிரெடுப்போரும்
தினமொரு பெண் தேடிக் காமுறுவோரும்
பணம் தேடும் வேட்டையில் பலரும்
குணம் மாறி ஆடுகிறார் ஆட்டம். வன்முறை வேண்டாமென வாழ இடமும்
இன்னலெனும் பசிக்கு உணவும் நீரும்
சந்நியாசம் பூண்டு சாந்தி தேடுவோரும்
எந்நாளும் ஒரு வகையில் வேட்டைக்காரரே.

வேட்டைக்காரனும் வேட்டைக்காரியுமாய்
ஊட்டமிகு வாழ்வுக்காய் நாம்
வேட்டம் கொள்வதும் அதை
ஈட்டுதலும் வேட்டையாகிறது. தமிழ் வார்த்தைகள் வேட்டையாடி
தரமான பாவினைப் புனைந்து
தரவேண்டும் ’வேட்டைக்காரர்’ தலைப்பில்
தவிப்பில் நானுமோர் வேட்டைக்காரி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
நாட்டை வேட்டையாட
ஓட்டை வேட்டையாடும்
வேட்டைக்காரர்களின்
கைகளில் தருகிறோம்
நம்மையடிக்க நாமே
செங்கோலை.

வீ.விஷ்ணுகுமார்.
வேட்டைக்கரன்
கல்விச்சாலைகளில் கடும் வேட்டை,
கறாராய் நடக்கிறது நன்கொடைத் தேட்டை!
காணமுடியாது இதுபோல் பெருங்கொள்ளை,
இதனால் விளைவது பெற்றோர்க்குப் பெருந்தொல்லை!

-கவிஞர் அ. கௌதமன்,
திருச்சி,தமிழ்நாடு.
வேட்டைகளாய் இருக்கிறது வாழ்வு
வேட்டையராய் இருக்கின்றார் மனிதர்.

எப்போதும் இருக்கின்றன
ஏதேனும் இலக்கு
தப்பலாம் இலக்குகள்
தாக்குதல் மாறாது.

தான் சார்ந்தோ
தன்னைச் சார்ந்தோ
வேட்டையின் நுகத்தடியில் விதிக்கப்பட்டிருந்தும்..
'விதி'யை உருவகப்படுத்துகிறோம்

-இப்னு ஹம்துன்

மகத்தான வேட்டையனாய்!

விலகுதல் சாத்தியமற்ற
வேட்டையின் ஆட்டத்தில்
ஓயுங்காலத்தில் உணரப்படலாம்
ஒப்புக்குச் சப்பாணி
மலைக்காடுகள்
நதியோரம்
ஆற்றோரம் என்று
எங்கே தேடியும்
காடுகள் காணவில்லை!

ஓ வேட்டைக்காரர்களே
நீங்கள் நூற்றாண்டு
தவறிவிட்டிர்கள்!

இங்கு பாலைவனப் பாதைகள்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது!

-கே.பாலமுருகன்
வேட்டைக்காரர்

வேட்டைக்காரர்
ஆம் அவர்கள்
வேட்டைக்காரர் தாம்

இதயங்களை வேட்டையாடி
இன்பத்துக்காய் விலைபேசி
துன்பத்தைப் பரிசாய்க் கொடுக்கும்
துணிச்சலான வேட்டைக்காரர்

துப்பாக்கி இருக்காது கைகளில்
துர்ப்பாக்கியவதிகள் விழுவர் இவர் கைகளில்
காதலென்னும் வலைவீசி பாவம்
கன்னியரை வேட்டையாடிடுவர்

நாளை என்னும் கனவுலகைக் காண
இன்றிரிவர் விரித்த வலையில்
நேற்றுமனிதர் அனுபவங்களை மறந்தே
நங்கையிவர் வழுக்கிடுவர்

உணர்ச்சிகளின் மதிப்பறியா
உள்ளமற்ற வேட்டைக்காரரிவர்
உயிர்கொல்ல மாட்டார் பெண்கள்
உள்ளத்தினைக் கொன்றிடுவார்

யாரிந்த வேட்டைக்காரர் என்னும்
கேள்வி எழுகின்றதா உள்ளத்திலே?
இளமை என்னும் சூழ்ச்சி கொண்டு
காதல் தன்னை சூதாக்கி

கன்னியர் பலர் வாழ்வை அழிக்கும்
கட்டவிழ்ந்த காளையர் சிலரே
கண்ணில் தோன்றும் கொடிய
கருத்துகுருடரான வேட்டைக்காரரென்பேன்
-சக்தி சக்திதாசன்
வேட்டைக்காரர்கள் !
--------------------
வேட்டைக் காடாச்சு எம் ஈழ தேசம்
விலங்குகளாகத் தமிழினமன்றோ
போட்டது போட்டதாய் விட்டவர் ஓடி
ஒதுங்கிடக் கூட முடியாத சோகம் !
சிங்கப் படையுடன் நரிகளும் பேய்களும்
மனித வேட்டைக்காய் எம் தேம் புகுந்தே
தினம் தோறும் அங்கே நரபலி வேட்டை
ஒருமைப்பாடென்று வேட்டைக்குப் பேராம்
ஒத்து ஊதிடும் உலகுக்கும் பங்காம்
மொத்தமாகக் கடை விரிக்கவே
இரண்டு தேசம் இடஞ்சலாய் போகுமாம் !
ஐம்பது நாட்டிடம் கையேந்தி விற்று
இறைமை பற்றிப் பேசியே கொல்லும்
வேட்டைக்காரனின் கொட்டமடங்கும்
வேட்டைக்கொருநாள் புலி போகும் போது
சிங்கமும் நரியும் பேயுடன் ஓட
பொங்கிடும் அமைதியில் பொழுது புலருமே !
வேட்டைக்காரர்கள் இல்லாத பொழுதாய்
நாட்டில் அமைதி நன்றே செழிப்புறும் !


இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
17.10.2008
வேட்டை வேர வேட்டைக்காரர் வேர வேட்டை தொழில்
வேட்டைக்காரர் ஒரு இனம்
ஜாதி கண்ணப்பர் வழி
வந்தவர்கள் வேடர்
வேட்டுவர் களுடன் தெடர்புடையவர்கள் தமிழ் நாடு மட்டும் இல்லை
இந்தியா முழவதும்
பலபல பெயர்களிள் வாழ்கிறார்கள்

ஐயப்பன்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்