Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காத்திருக்கும் தோணிகள்..
காத்திருக்கும் தோணிகள்
கலங்கி நிற்கும் உள்ளங்களை
கரையேற்றி விட்டு விட்டு - தாம்
காத்திருக்கும் தோணிகள்

தோணிகளில் நம் பயணம்
தேவையான நேரங்களில்
தோணிகளுக்கோ பாவம்
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வாழ்க்கையே நீரிலே தான்

காற்று சூறையானால் நாம்
காற்றாகப் பறந்து எமை
காக்கின்றோம் இல்லங்களில்
காத்திருக்கும் தோணிகள் மட்டும்
சூறைக்காற்றினால் பரிதாபமாய்
சூறையாக்கப்படுகின்றன....
ஆம்
அவை காத்திருக்கும் தோணிகள்

சுனாமியோ ! சூறாவளியோ
சுற்றியுள்ள மானிடரைப் பற்றியே
சுழலும் அனைவரதும் சிந்தனைகள்
சற்றேனும் நினைத்தும் பார்ப்பீரோ
காத்திருக்கும் தோணிகளை ... இல்லை
உயிரற்ற ஜடங்கள் தானெ அவை

எத்தனையோ ஆயிரம் பேர்களை
எத்தனையோ ஆண்டுகளாய்
கரையேற்றி விட்டன -- இந்தக்
காத்திருக்கும் தோணிகள்

இவர்களுக்காய் ...
இதுவரை ...
காத்திருக்க யாருமில்லை..

சிந்தனை செய்து பார்த்தால்
சிரிப்புடன் கண்ணீரும்....
ஆசிரியர் .... பெற்றோர்
அவர்கள் கூட காத்திருக்கும் தோணிகள்
ஆனால் அவர்களைத் தேடி வரும்
கரையேறிய உள்ளங்கள் உலகிலே
கைவிட்டு எண்ணி விடலாமே....

தோணிகள் ..
அவைகளின் பணி கரையேற்றுவதுதான்..
கரையேறிவர்கள் பண்பு
காலத்தோடு மறந்து போவதுதான்...

ஏனெனில்....
தோணிகள் காத்திருக்கும்

-சக்தி சக்திதாசன்
கரை சேர்க்கும் தோணிகள்..!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபியாரோ ஒருவன்
ஒரு குருடனுக்கு
சாலையைக் கடக்க
உதவுகிறான்.

யாரோ ஒருவன்
மாநகரப் பேருந்தில்
தள்ளாடும் முதியவருக்கு
தன் இருக்கையைத்
தந்து உதவுகிறான்.


யாரோ ஒருவன்
பள்ளி சென்று திரும்பும்
சிறுமியொருத்தியை
பேருந்தில் இருந்து
கைபிடித்து
இறக்கி விடுகிறான்.

யாரோ ஒருவன்
சாலை நடுவே கிடக்கும்
வாழைப்பழத்தோலை
அப்புறப்படுத்துகிறான்.

கைபிடித்து
கரை சேர்க்கும் தோணிகளாய்
இதயங்கள்
உள்ளவரை

இன்னமும்
முழுக்க
அன்பற்றவர்களாய்
ஆகிவிடவில்லை
நாம்.
காத்திருக்கும் தோணிகள்...

பாத்திரமும் பசித்த வயிறும் காய
ஆத்திரமுற்ற அரசின் அவசரகால நிலையால்
நேத்திரம் சோர மீனவர் கரையிலே,
காத்திருக்கும் தோணிகள் மீன் பிடிக்கவென.

உயிருக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமின்றி
உற்றம் சுற்றம் பார்க்காது மக்கள்
ஊரை, நாட்டை விட்டு வெளியேற
உதவும் குழுக்களுடன் காத்திருக்கும் தோணிகள்.

களுகங்கை பெரு மழையால் பெருகியது.
கடலாகப் பாதை, தோணியில் பயணம்.
காலையும் மாலையும் தேயிலைக் கொழுந்துகளை
காத்திருந்த தோணிகளில் தொழிற்சாலைக்கு ஏற்றினர்.

கழுத்துறை மாவட்ட கொக்கேனைத் தோட்டத்தில்
கணக்கற்று வெள்ளம் பெருகும் வேளையில்
காலையும் மாலையும் தோணிகளில் நாமும்
காஷ்மீரம் போல் சுற்றுலா காத்திருந்த தோணிகளில்.


வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
காத்திருக்கும் தோணிகள்..

வெறுமை படர்ந்து நிற்க
இன்னமும் தடம் பிரளாமல்
எவரேனும் வராரோ என்று
வங்கக் கடலில் தினமும் எமக்காய்
காத்து நிற்கும் தோணிகள்..

-எதிக்கா
ஏணிகள் ஏற்றிவிடும், இன்றேல் இறக்கிவிடும்
தோணிகளே காத்திருக்கும் துன்பங் கடந்திட
தன்பணி செய்யும் தலைக்கனம் இன்றியே
பண்புடன் பாடம் படி!

- இப்னு ஹம்துன்
இந்தியா.
பூத்திருந்த நந்தவனத்தில்
புயல் வந்து ஆடியதால்
புறப்பட்டோம் காற்றினிலே
புதுவாழ்வினைத் தேடியே

காத்திருந்தன தோணிகள்
கடந்தோம் கடலை; நாட்டை.
கடந்தவை ஏங்கவைக்க
காத்திருக்கிறோம் வாழ்வதற்காய்!

நேத்தைய வாழ்வதனை
நினைத்தாலும் முடியலையே
நிலைகுலைந்த அடிமையராய்
நின்றதுவும் மறக்கலையே

சேர்த்துவைத்தோம் அன்பொன்றே
சொத்தெல்லாம் உறவினம்தானென்றே
ஈர்த்தததுவோ இரத்தபாசம்
இனிவருமோ வசந்தகாலம்?!

நீர்த்துவிடாத நினைப்பினையே
நித்தமும் பற்றிக்கொண்டோம்
காத்துவரும் இறையவனே
கண்மூடுமுன் வாழ்வு கொடு!

-இப்னு ஹம்துன்
இளைப்பாறும் தோணிகளிடம் ...!
* செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

எக்கரையாயினும்
தங்கி
இளைப்பாறும்
தோணிகளிடம்
உண்டு.

எப்போதும்
அக்கரைப்பச்சை
தேடும்
மனிதனுக்கு

எளிதான
ஒரு பாடம்.

கடலாயினும்
கரைகளாயினும்

இருத்தலும் சுகம்.
இயக்கமும் சுகம்.

அந்தந்த நேரங்களில்
அங்கங்கே மனமிருந்தால்...
காத்திருக்கும் தோணிகள்...

கரைசேர்க்கும் தோணிகளுக்காக
கண்ணீர்க் கடற்கரையில்
காத்திருக்கும் தோணிகள்-
முதிர்கன்னிகள்...!

-செண்பக ஜெகதீசன்
விஜயநகரி, இந்தியா
காத்திருக்கும் தோணிகள் !
-------------------------
காத்திருக்கும் தோணியிலே
பாய்ந்தேறிப் பகை முடிக்க
கரும்புலியாய்த் தனை மாற்றிக்
காத்திருக்கும் வீரமகள்
தமிழினத்தைக் கரையேற்றத்
தானே தோணியானாள் !
இருப்பதியிரண்டு கடல் மைல்கள்
ஓய்ந்திருக்க முடியாது
தவிப்போடு காத்திருப்பு
காத்திருக்கும் தோணியேறி
தமிழீழ உறவுகளை
காப்பதற்காய் விரைகின்ற
காலமதை எதிர்பாரத்துக்
காத்திருக்கும் தோணிகளாய்
தாய் தமிழகத்து உறவுகள் !
காத்திருக்கும் தோணிகளில்
கரையேறும் தவிப்போடு
காத்திருக்கும் தமிழீழவர்கள்
உலகெங்கும் வாடுகிறார் !
தோணிகளின் காத்திருப்பு
நீண்ட காலம் தொடராது
என்ற சேதிதனைத்
தமிழகத்தில் காண்கையிலே
தமிழீழவர்கள் மனமெங்கும்
புத்தூக்கம் பிறக்கிறது !

இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
06.11.2008
காத்திருப்பு

காத்திருப்புக்குள்
கரைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை.
ஒவ்வொரு காத்திருப்பும்
பதிவு செய்யப்படாத உன்
வருகையோடு மட்டுமே முடிந்துபோகிறது.

கனிமொழி
வருகை...

அவனுக்காக காத்திருந்த
நாட்களில்
பல மணிநேரம்
என் கண்ணீரிலே
கழிந்து
போனது
என் வாழ்க்கை
"அவன் வருகையை
எதிர்பார்த்து"

-இராமச்சந்திரன்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்