Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
நீதி தேவதை
நீதி தேவதை

பூமாதேவியின்
செல்வப் புதல்வியே

கற்களும் முட்களும்
நம் வீடுகளைக்
கொஞ்சி விளையாடுகின்றது

வீதிகள்
இரத்த வெள்ளத்தால்
தினமும் அடித்துச்
செல்லப்படுகிறது
இப்படியே
நம் தேசம் தினமும்
கொடூரம் நிறைந்து
ஈவிரக்கமின்றி
பஞ்சத்தால் குளிப்பாட்டப்
பட்டுக்கொண்டிருக்கிறது

நீ இறந்து எத்தனை
ஆண்டுகள் தான் ஆனதோ
தெரியவில்லை!
இன்னமும் உன் இழப்புக்கு
ஈடிணையாய் யாருமே
இங்கு வரவில்லை …

--எதிக்கா
நீதி சொல்லும் தேவதை!

காத்திருந்தேன் காலமெல்லாம்
காலமொன்று கனியுமென்று
காத்திருந்த என்னெஞ்சும்
கவலையிலே கரைந்துவிடும்.

கண்தந்த கடவுளதன்
கடமைதர ஏன் மறுத்தான்?
கண்ணாடி என் மனசில்
கல்லெறிந்து ஏன் சிரித்தான்?

கன்னியென்றும் காதலென்றும்
கவிமனதில் ஏன் விதைத்தான்?
பாதியிலே பிரித்தெடுக்கும்
பாதகமும் ஏன் புரிந்தான்?

நீதி சொல்லும் தேவதையே
நியாயமதை நிலை நாட்டு.
இறைவனுக்கா கவிஞனுக்கா
இறங்கும் உன் நீதித் தட்டு?

-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
நீதி தேவதை...

கண்களில் கட்டிய
கறுப்புத் துணியால்
கைத்தராசில்
கவனம் செலுத்தமுடியாமல்
சிலநேரம்
தப்புத்தப்பாய்த்
தீர்ப்பு வழங்கிடும்
தர்மதேவதை...!

-செண்பக ஜெகதீசன்
விஜயநகரி, இந்தியா.
நீதி தேவதை
--------------

கைகளில் தராசுத்தட்டு
கண்களை மூடிக் கறுப்புத்துணி
காலகாலமாய் நீ புவியுலக மாந்தர்க்கு
காட்டி நிற்பதென்ன நீதி தேவதையே ?

புரியாமல் மாந்தர் கூட்டமிங்கு
புலம்பிக்கொண்டே மந்தைகள் போல்
புலருமோ பொழுது இவர்கட்கு
புரிந்திடுமோ நீதிதேவதையே உந்தன் தன்மை

கண்ணால் காண்பதும் போய்
காதுகளால் கேட்பதுவும் பொய்
தீர விசாரிப்பதுவே மெய்
தெளிவான உன் கருத்தைப் புரிவரோ

உலகத்தின் நீதியெல்லாம் இப்போ
உள்ளோர்கள் கையிலம்மா
உண்மையின் எடை உன் தட்டில்
உருவமற்றுப் போனதம்மா

எழுதாத கவியமாய் தினம் வாடும்
ஏழையின் கண்ணீரெல்லாம்
நீதிதேவதை உந்தன் பெயரால்
நித்தமும் அவனியில் ஆறாகி ஓடுகின்றன

ஒன்றே சொல்லி ஒன்றே செய்வார்
ஒருவர் வாழ்விலும் நிம்மதி இல்லை
என்றோ உந்தன் கண்களைக் கட்டியதும்
ஏமாற்றியதாய் எண்ணும் புல்லர்கள் கூட்டம்

நீ விழித்துக் கொள்ளும் பொழுது
நீசர்கள் பதறிக் கொண்டு ஓடும் காலம்
நீதிதேவதை உந்தன் கைகளில் உள்ள
நீதித்தராசின் எடையைப் பார்த்தபடி
நிற்குதொரு மானிடர் கூட்டம்

சக்தி சக்திதாசன்
லண்டன்
நீதி தேவதை
------------

கண்கள் கட்டப்பட்டதால்
நிதி தேவதையாகத்
தெரிகிறாளோ,
நிதி வாங்கிக் கொண்டு
நீதிக்குக் குழி தோண்டும்
நீதிபதிகளுக்கு.

-சித. அருணாசலம்
சிங்கப்பூர்
நீதிதேவதை.

ஊதி எரியும் இனபேதம்
தீயாய் எமைச் சுடும் போது,
பீதியின்றி நாம் உலாவ
சோதி தருவாயெனும் நம்பிக்கையில்
வாதிட்டாலும் அநீதியே வெல்கிறது. நீதியின் ஆதிதேவதை தான் நீ.
நாதியில்லா நீதிக்கொரு
நீதி வழங்கும் தேவதையானாலும்
சேதியின் உண்மை இது தான்.
நீதி பாதியிடங்களில் வீதீயில்,
கைதியாயன்றோ நீ.!

26-06-2008.
வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க்.
நீதி தேவதை


கண்கள் கட்டப் பட்டதால்
அநீதியை அறிய முடியா
குருட்டுத்தனம்.

தேங்கிக் கிடக்கும்
வழக்குகளைக் கூட
அறிய முடியா நிலை.

வழக்கறிஞர்களாலும்
நீதிபதிகளாலும்
பேரம் பேசி விற்பனை.

சொந்த நாட்டில் அடிமைகளாய்
வந்த நாட்டில் அகதிகளாய்
அலைகழிக்கப்படும் அவலம்

நீதிதேவதை உண்மையில்
உயிரோடிருந்தால்
வீதியில் இருக்கும் தமிழினம்
தன் சொந்த நாட்டின்
தேசியக் கொடியை அல்லவா ஏந்தியிருக்கும்

மு.பாலசுப்பிரமணியன்
(பரிதியன்பன்)
புதுச்சேரி
இந்தியா
நீதி தேவதையே!

வெளிச்சத்துப் பார்வையில்
வேறுபாடு நிகழலாம்
என்பதால் தானே
கறுப்புத்துணி கொண்டு
கண்கட்டிக் கொண்டாய்
இன்றோ அது
உன் வாசலில்
இறந்துவிடும்
நீதிகளுக்கான
இரங்கற் சின்னமாகிவிட்டதே..

நிர்த்தாட்சண்யத்தின் குறியீடாக
நிலைபெற்ற வாள்
உன்னொரு கையில்
இன்று எதை
வெட்டுகிறது?
எளியோரையல்லவா!

மற்றொரு கைத் தராசு
மாறா நீதிக்கன்றோ
சொல்,
எடைகளைப் பொறுத்து
விடையளிக்கும் விந்தை ஏனோ?

- இப்னு ஹம்துன்

நீதி தேவதை !
-------------
நீதி தேவதையே
உன் கண்கள் கட்டப்பட்டு
நீணட நாள் ஆனதால்
நீதியின் சுவாசத்தை
எம் மண் இழந்ததோ !
சிங்களர் தேசம் உன்னை
நிர்வாணப்படுத்தியதால்
உன் நிழல் தொலைந்ததோ !இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
07.11.2008
நீதித்தாய் நிலை

நீதித்தாய் கண்களை
மூடிக்கொண்டாள்
அனைவரும் அவளின்
பிள்ளைகள் என்பதால்

இன்று செவியையும்
மூடிக்கொண்டாள்
உண்மை இலாத இடத்தில்
செவியும் தேவையில்லையென

பிரபுமுருகன்
நீதித் தேவதை

நீதித் தேவதை எங்கே எங்கே-பெரும்
நிதிதனைப் பெற்றோர் வாழ்வதும் அங்கே
வீதித் தேவனை வணங்கிடும் ஏழை-இன்று
வீழ்வான் அந்தோ பணமில் பேழை
சாதித் தேவனும் அங்கே உண்டே-ஏன்
சமயத் தேவனும் வருதல் உண்டே
ஆதியும் அந்தமும் காணும் உருவம்-என
ஆனதே தேவதை நீதியே அருவம்

புலவர் சா இராமாநுசம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்