Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
கோடை
கோடை – ஒரு அயல் தேசக் கணவனின் பார்வையில்...!


[சமர்ப்பணம்;
பள்ளி விடுமுறையை
பாதிக்காரணம் காட்டி
(இந்தியாவில்)
அம்மா வீட்டில் இளைப்பாறும்
அத்தனை மனைவியருக்கும் ]
அலுவலகத்தில்
அனுதினமும் போய்வரும் வாகனத்தில்
அடுக்குமாடிக் குடியிருப்பில்

எங்கும்
குளிரூட்டும் எந்திரங்கள் சூழ
குடிநடத்தும் என்னிடம்

கோடையைப் பற்றிச் சொல்ல
குறிப்பாய் ஒன்றுமில்லை.

எனினும்

கொளுத்தும் வெயில்
கொட்டும் வியர்வை
இரவுத்துயிலின்போது
இணைப்பு போகும் மின்சாரம்

இத்தனையும் சகித்து
அம்மா வீட்டிற்குப்போய்
தங்கி இளைப்பாறும்
அருமை மனைவியரைக்
கேட்டால் சொல்லக்கூடும்...

கோடையின் வெம்மையை
தணிக்கும்
உறவுகளின் அண்மை என்று.
(அம்மாவின் கைச்சமையல் என்றும்
அதை அடக்கமாய் பொருள் கொள்ளலாம்)

-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
கோடையில்...

வறுத்தெடுக்கும்
வானத்துச் சூரியனால்
வந்த தாகத்தால்,
வாயைப் பிழக்கிறது
பூமி..
பஞ்சாய்ப் பறக்கிறது
மேகம்..
மனித வாழ்வில்-
சோகம்...!

-செண்பக ஜெகதீசன்
கோடை


வானத்துச் சூரியன்
வாரி இறைக்கும்
வெப்பக் கதிர்கள்,
பூமியில் வளரும்
புல் பூண்டுகளையும்
பொசுக்கி விடுகிறது.

விளைந்த நிலம்
பொக்கைவாய் கிழவனைப்போல்
பிளந்து கிடக்கிறது.

மாரி பொய்த்ததால்
நீராதாரங்கள் வறண்டு
வடிவம் இழந்தன.

குடிக்கும் நீருக்காய்
குடத்துடன் பெண்களின்
பாதயாத்திரை.

தண்ணீர் வண்டியை
எதிர்பார்த்து வீதியில்
தர்ணாக்கள்

பஞ்சம் பிழைக்க
பாரதப் புத்திரர்கள்
பயணம்

குளுகுளு அறையில்
கோடைவாச தலத்தில்
கூடும் பணமுதலைகள்

வறண்ட காவிரி பாயுமா?
திரண்ட மேகம் பேயுமா?
மிரண்ட மக்கள் உய்யுமா?

மு.பாலசுப்பிரமணியன்
(பரிதியன்பன்)
புதுச்சேரி
இந்தியா
கோடை

கோடையென்றால்
கொளுத்துகின்ற வெயில்
கொதித்துக் கொண்டே உலவும்
கோடைகால மனிதர்

தாய்மண்ணின் தனியான
தகமைகளில் கோடையின்
தணியாத வெப்பம் ஒன்று

புலம்பெயர் மண்ணிலே
புதிராக கோடைக்கு அவர்கள்
பதுங்கிக் கொண்டே காத்திருக்கும்
பாங்கான போக்கு

குளிர்கால விறைப்பில்
உறைந்து போயிருக்கும்
உள்ளங்கள் பாவம் ஆறுதலுக்காய்
உவகையுடன் கோடையை எதிர்பார்த்து

மாரி, இளவேனில், வசந்தம், கோடை
மாறிக்கொண்டே இலையுதிர்காலம்
பாவம் கோடையை மட்டும் ஏனோ
கொதிப்புடன் ஒப்பிடுகிறோம்

கோடையில்லை என்றால்
மாரியின் குளிர்மைக்கு எங்கே மதிப்பு ?
இளவேனில் இன்பத்துக்கு என்ன சிறப்பு ?
வசந்தத்தின் வருகைக்கு என்ன உயர்வு ?

கோபிக்காதே !
கோடையே ! உன்னையும் நாம்
எதிர்பார்த்தபடியே ..
ஏனெனில் நீ தான்
ஓப்பிட்டுக்குத் தேவை

சக்தி சக்திதாசன்
கோடை 11-07-2008.

கோடை டென்மார்க் குளிருக்குப்
பாடை கட்டும் காலநிலை.
பீடை மன அழுத்தத்திற்கு
கூடை மலர்களை இதயத்துள்
கோடையாய்க் கொட்டும் காலநிலை.
உடைப் பாரம் உதறிவிட்டு
உல்லாசத்தை ஒரு துளியும்
உதிர்க்காது ரசிக்கும் காலநிலை.

மூன்று மாதக் கோடையை
முழுதாய் அனுபவிக்கும் நாடிது.
ஆடையால் மூடி உடலை
அடைகாத்த உம்மணாமூஞ்சிகள்
தடையின்றி உடலை, வெய்யிலில்
கடை பரப்பும் கோடையிங்கு.
நடையில் கும்மாளம் நளின
உடையில் சிக்கனக் கோடையிங்கு.

பாளம் பாளமாய்ப் பூமி
பிளந்து, குளம் வற்றி,
தெருவில் தார் உருகி
கருகருவெனப் பாதணியில் ஒட்ட,
பெரும் தாகம், வெப்பம்,,
குருமணலாய் வியர்வைப்
பரு சிவந்த கோடையது,
ஒரு காலமெம் தாய் நிலக்கோடை

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
கோடை


நரகத்தின் தீத்துளியோ நாம்காணும் கோடை
பெருவெப்ப மெங்கும் பெருக - மறுகும்
உணர்வினுக்கு மருந்தாய் உயர்வின் கவிதை
மனதில் பொழியும் மழை!

-இப்னு ஹம்துன்
இந்தியா
கோடை
-------
மனித மனங்களில் மொத்தமாய்
நேயம் கோடையாகிப் போனது.

செயல்கள் எல்லாம் சோடையாக
நேர்மை கோடையாகிப் போனது.

தன்னலம் பெருகியதால் இங்கே
கனிவு கோடையாகிப் போனது.

சுற்றுப்புற சிந்தனையும்
கோடையாகிப் போனதால்
காலங்களில் சுழற்சி கோளாறhகி
கோடையே எப்பொழுதும்
நிலையாகிப் போனது.

சித. அருணாசலம்,
சிங்கப்பூர்.
கோடை
-------
உன் முகம் பாரா நாட்கள்
கடும்கோடை
உன் இதழ் உதிர்க்கும்
புன்னகையில்லா நிமிடங்கள்
கடும்கோடை.....
உன் இன்சொற்கள் கேளாத பொழுதுகள்
கடும்கோடை.....
மொத்தத்தில் நீ இல்லாத வாழ்க்கை
கடும்கோடை!

- கவிஞர் அ. கௌதமன், திருச்சி
தமிழ்நாடு.
கோடை என்றாலே
எல்லோருக்கும் லீவு,
ஆச்சி,தாத்தா ஊருக்கு டூரு.
எங்களுக்கு மட்டும்
எதுக்கு எப்போதும்
தீக்குச்சியும்,வெடி மருந்தும்
கோடையில் பணமிருந்தால்
மலையேறி வெயில்
தவிர்க்கலாம்.
எங்க ஊரில் மரமே இல்லை
வெயிலை தவிர
என்ன செய்யலாம் ?
கோடையின் கொடுமையைத் தாங்கிட முடியாது
கொக்குகள் கூட குளம் விட்டு நெடுந்துரம்....
யாரிடம் சொல்லுவது என்று புரியாது
உடமைகள் அனைத்தையும் அப்படியே விட்டு
எம் குஞ்சு குருத்துக்களை சாகாது காப்பதற்காய்
குண்டினது கொடுமைக்குப் பயந்து ஓடுகிறோம்
ஈழத் தமிழினத்தின் இத்துயர் கண்டும்
அனைத்துலக சமூகத்தின் மனங்கள் கூட
அருங் கோடையாகிப் போனது ஏனென்று புரியாது
கோடையை வென்ற அனைத்துலகை கேட்கிறது
ஈழத் தாயவளின் குழந்தையொன்று
தமிழராய் பிறந்ததுதான் குற்றமா என்று !

- M.பாஸ்கரன்

கோடை

விவசாயக் கிழவனின்
நெற்றிச் சுருக்கங்களின்
ப்ரதிபலிப்பாய்
ஏரி குளங்களில்
பூமி வெடிப்புக்கள்
பழுப்பு இலைகள்
பெருகிய போதும்
நிழல் தரும்
மரங்களின் கனிவு
காதறுந்தும் ஏழையின் காலை
காக்கும் செருப்புகள்
எதையோ இழந்துவிட்டோம்
என்பது புரியாமலே
இருக்கும் நம்மேல்
கோபப்படும் சூரியன்
கோடையின் கொடை
புரிந்தால் சரி

-அரவிந்த் சந்திரா
{ அடையாள எண்:352 }
கோடை

கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த ததாய் ஆகிடவே
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே

பச்சைப் பயிரும பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே

பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்
எத்னை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலென தேடு கின்றார்
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்த சூட்டோடு
பித்தனைப் போலவர் தமக குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே

வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே
பற்றி எரிய முற்ற றாக
பறந்திட காற்றில பஞ் சாக
வெற்றிடம் தன்னில கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்