Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
முகமூடிகள்
முகமூடிகள்...

முகத்தைவிட
முகமூடிகளுக்குத்தான் இப்போது
மரியாதை-
அரசியலில்...!

- செண்பக ஜெகதீசன்
நான் யார்?

யாருடையோ நிழலாம் நான்
சில நேரங்களில்
தாத்தா பாட்டி
பல நேரங்களில்
அப்பா அம்மா
ஆசிரியர் நண்பன்
இப்படியாக…

நகல்களை கிழித்தெறிந்து
நான் நானாக
கடக்க முயன்ற
என்னை
திமிரானவன்
பைத்தியம்
என்கிற
முகமூடிகளை
அணிவித்து
காறி உமிழ்ந்து
தூக்கிலிட படுகிறேன்…

சாம்பலை மீன்கள் திண்ற
மூன்றாம் நாள்
எனது புகைப்படத்துக்கு
தங்க பதக்கம் அணிவித்து
கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள்
சமர்ப்பிப்பதை
மீன் தொட்டியிலிருந்து
பார்க்கிறேன்
மீன் குஞ்சுகளாக…

- முருகன் சுப்பராயன்
முகமூடியின்றி...
=================
திருட்டுக் கொடுத்தும்
திண்டாடவில்லை நான்.
திருடியது ஓர்
திறந்த முகம், திறந்த அகம்!

பொருளைத் திருட வருபவன்தான்
போட்டுக்கொள்வான் முகமூடி.
பொக்கைவாய்ச் சிரிப்பைக்காட்டி என்
மனதைத் திருடிச்சென்ற அந்த
மழலையை என்ன செய்வது?

- சி. கலைவாணி, ஆரியூர்.
(வேலூர், தமிழ்நாடு)
முகமூடி!
=======
கடவுள் படைக்கும்
களங்கமில்லா முகத்தில்
காலம் வலுக்கட்டாயமாய்
மாட்டிவிடுகிறது
ஏதேனும் ஒரு முகமூடி!

- அ. ராஜீவ் காந்தி
செய்யார், தமிழ்நாடு.
முகமூடி.

அழகிய முகத்திற்கு முகமூடியேன்!
பழகிய முகங்களை ஏமாற்றுவதேன்!
அழகாய்ப் புனையும் புனை பெயரும்
நிழலாய்ச் சுயம் மறைக்கும் முகமூடி!

பொங்கி வழியும் அன்பு மொழியும்
தங்க முலாம் பூசிய புன்னகையும்
தனித்துவ உண்மை மனிதம் மறைக்க
தடையாகும் சிலநேர முகமூடி தான்.

மௌன மொழியையும் ஒரு நேரத்தில்
யௌவன முகமூடியாக்குகிறான் மனிதன்.
திருடனுக்கும் பெரும் உதவி செய்யும்
அரும் பெரும் சொத்து முகமூடி.

கலைப் பின்னலுடை தங்கம், வெள்ளி
வலைத் துணியால் முகம் மூடி
இலையாலே கன்னிமை மறைப்பதாய் மணவறைக்கு
சிலையாக நடப்பாள் புது மணமகள்.

அக்கறையோடு இஸ்லாமியரிடும் முகமூடி
சிக்கல் இணைப்பாய் மேற்குலகக் கலாச்சாரத்தில்
எக்கச்சக்க முரண்பாட்டு விவாதங்கள் கிளப்புகிறது.
பக்க விளைவாய்ச் சமூகநிலைகளும் வழுக்குகிறது.

நல்லவராய் முகமூடி போட்டு நாட்டில்
நயவஞ்சகம் செய்வோர் பலர் உளர்.
முகம் மூடி தன்னை மறைப்பது
அகம் மூடும் அவல நிலை தானோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
முகமூடிகளில் தெரியும் முகங்கள்.
-----------------------------

சூழ்ந்திருந்த தனிமையில்
சுகமுணர்ந்த மனநிலையில்
மெல்லக் கழற்றினேன்
முகமூடி தன்னை!

அதன்மேல் தான்
எத்தனையெத்தனை
அபிஷேகங்கள்
போலிப்பெருமையின்
பாலாபிஷேகம்
புகழ்மொழிகளின்
பன்னீராபிஷேகம்
கூடவே
இச்சையின் எச்சிலும்
இயல்பின் பிச்சையும்..

வியந்துபார்த்தன கண்கள்
நாவுக்கோ நாணம்
அதன் நர்த்தனம்
காணக்கிடைக்கலாம்
இன்னொரு முகமூடி மீது!

- இப்னு ஹம்துன்
உலகம் கூட
இதயவடிவில் தெரிகிறதே!!!
எனக்குள்ளும் வந்ததோ
உன்னையே சுற்றும்
அந்த காதல்!!!!!

-ஜோதி
முகமூடிகள்

தாயிடம் அன்பு மகனாய்
தந்தையிடம் அடங்கும் பிள்ளையாய்
தம்பியிடம் அடக்கும் அண்ணனாய்
அக்காவிடம் பாசமான தம்பியாய்
ஆசிரியரிடம் நல்ல மாணவனாய்
மனைவியிடம் கனிவான கணவனாய்
பிள்ளையிடம் பண்பான தந்தையாய்
எனக்கு முகமூடிகள் பல
நானோ
என் உண்மை முகம் மறந்த நிலையில்!!!

சத்தியசுகன்யா சிவகுமார்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்