Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
துளிர்
நினைவுகள்

என் நினைவுகளிடம் கேட்டேன்
உன்னை நினைக்கிறேனா என்று!
என்னிடம் இல்லை என்றன அவை
உன் நினைவுகளை அல்ல
என் உணர்வுககளை!.

-C.சரஸ்வதி
தமிழ்நாடு
விரல்நுனி ஸ்பரிசம்...!
* செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

அதிகாலைக் கதிரவனுக்காய்
அனுதினமும்
காத்திருக்கும்
இலைநுனி
நீர்த்துளிபோல

சும்மா ஒரு
சுவாரஸ்யத்திற்காக
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என் சோக பிம்பத்தை.

இதமாய்
என் தலைகோதும்
உன் விரல்நுனி
ஸ்பரிசம் வேண்டி.
துளிர்!
=====

இளமையில் துளிர்விட்ட
என் ஆசைகளை
என் குடும்ப ஏழ்மை மேய்ந்தது.

இளைஞனான பின்
இதயத்தில் துளிர்விட்ட
காதல் ஆசைகளை
பெற்றோர் மேய்ந்தனர்.

இடைவிடா முயற்சியில்
எனக்கென்று ஒருத்தி
இதயத்தில் புகுந்தாள்.

ஆனால்....
அவள் இன்று
அடுத்த காதலனைத் தேடிப்போய்
என் வாழ்க்கையையே
மேய்ந்துவிட்டாள்!

துளிர்விடும் ஆசைகளை
துவக்கத்திலேயே
கிள்ளியெறிந்து விடுபவனாக
இப்போது நான்!

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
துளிர்க்கின்ற எதுகண்டும் துலங்கும் உள்ளம்
களிக்கின்ற மனதுக்கே கவிதை வெள்ளம்
அளிக்கின்ற குணமிருக்கும் அதனால் 'தரு'வாம்
வளர்க்கின்ற எவருள்ளும் வாசம் மிகவாம்!

மகிழ்வின் உணர்வை மனதில் சுவையாய்
நிகழ்த்தும் இயற்கையின் நெஞ்சம்-திகழுற
ஆயிரம் காவியம் ஆங்கே தமக்குள்ளே
தூயமொழி பேசும் துளிர்.

- இப்னு ஹம்துன்
மண்ணைத் துளைத்து வரும்
துளிர் போலே
மனதை துளைத்து வரும்
துளிர்கள் தான் எத்தனை
அன்பு துளிர்
ஆசை துளிர்
பாசத் துளிர்
காதல் துளிர்
இதில் எத்தனை தான்
பாத்திகட்டி பாதுகாத்தாலும்
தளிராகி மரமாவது எத்தனை
துவக்கத்திலேயே
இயக்கமற்று போவது எத்தனை

- ராஜகமல்
துளிர்...

துளிர்க்கும் பூவில்
துளியாய்ப் பனிநீர்-
அழியப்போகும் பூவுக்காக
ஆண்டவன் கண்ணீரோ...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி, இந்தியா.
பிறந்ததும்
அன்னையை நேசித்தேன்
வளரும்போது
உறவை நேசித்தேன்
பழகும் போது
நண்பனை நேசித்தேன்
பருவத்தில்
பெண்ணை நேசித்தேன்
மணவாழ்க்கையில்
மனைவியை நேசித்தேன்
பெற்றக்குழந்தையையும்
அவர்கள் பெற்ற
பேரன் பேத்திகளையும்
நேசித்தேன்

மரணவாசலை நோக்கி
மனம் எண்ணும்போது
நினைவுக்குள் துளிர் விட்டது
என்னை நேசிக்க
மறந்தேனே........!

-கிளியனூர் இஸ்மத் துபாய்
விதையாய் தரை புகுந்து
துளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்

கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
களம் புகுந்து
போரடிக்கையில்சிதறாமல்

வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்

மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி

---------------

உலகமே காலையில் தன்
முகம் பார்த்துக்கொள்ளும் கண்ணாடி:
துளிர் நுனி பனித்துளி

-துரை.ந.உ தூத்துக்குடி.
துளிர்!
=====
உழைப்பென்னும் விதையூன்றி
விடாமுயற்சியென்னும் நீரூற்றி
தன்னம்பிக்கையென்னும் உரமிட்டால்...
துளிர்விட்டு வளரும்
வளமான வாழ்க்கையென்னும்
மரம், நமக்கு வரமாக!

- சி. கலைவாணி
அரியூர், (வேலூர், தமிழ்நாடு)

வானமே, நீவிரிந்து படர்ந்து கிடந்தாலும்
மனம் கவரும் வண்ணக் கலவை உனக்குண்டோ?
சுவையான தேனையடக்கும் திறமையும் என்னுள்.
கவிகளின் கற்பனை 'ஊற்றும்'நானே

-வை.அண்ணாசாமி
இன்று

நாளை என்பது நிச்சயமல்ல
நேற்று என்பது நிரந்தமல்ல

- சரஸ்வதி
தனிமை

என் காதலியே!

காதலுக்கு தனிமை பிடிக்குமென்பதால்
நீ பயணித்தாயோ
கல்லறையை நோக்கி!
படர்ந்த மழைத் துளி நாளையும் கிடைக்குமா ?
என் சந்ததி நாளை பழிக்குமா ?...
கார்பன் கருப்பில் இருந்து பச்சையம் தப்புமா ?

துளிர் !
------
பயிர்களாகு முன்
கருக்கப்படும் துளிர்களாய்
தமிழீழக் குழந்தைகள் !
பிணங்களை என்ன செய்யலாம்
என்று பெரும் செலவு செய்து
தூர தேசங்களில் மாநாடு வேறு !
புத்தரின் புத்திரர்களுக்கு
தமிழ் ரத்த வெறி ஓயவில்லை
ஐம்பது ஆண்டுகளாய் !
சேடமிழுத்தபடி அறிக்கை விடும்
அமைப்புக்களின் தலைமைகள்
இது என்ன பிழைப்போ என்று
அரை குறையாய் கிடக்கின்ற
துளிரொன்று அழுதபடி கேட்கிறது !
நாளை அங்கவீனர்களுக்கு
உதவப் பணம் கேட்டு
இன்னொரு அறிக்கை விட
காரணங்கள் தேடுகின்றார் போலும்
என்கின்றாள் பாமரத் தாய் !
நிறுவனங்களின் இருப்புக்காய்
சாவுகள் அனுமதிக்கப்படுகிறதா
என்றவாறு அவள் மீண்டும்
ஆகாயத்தைப் பார்க்கிறாள்
அடுத்த குண்டிலிருந்து
தப்பிவிடும் நோக்கோடு ....!


இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
17.10.2008

மளிதச் செடிகளில்
மனிதாபிமானம்
துளிர் விட வேண்டும்

வரட்சி வரண்டு போக
உலகச் சோலையிலே
வளம் துளிர் விட வேண்டும்.

நோய்கள் எல்லாம்
நொடித்துப் போக
சுகாதாரம் துளிர் விடவேண்டும்.

சித. அருணாசலம்,
சிங்கப்பூர்.
மறந்து விடு என
ஒற்றைவரியில்
விலகிச்சென்றாய்
ஆனாலும்
துளிர்கிறது
உன் நினைவுகள்
என் மனதில்.

- பந்தர் அலி ஆபிதீன்
மலர்கள்
--------------

ஓரறிவு வண்டிற்கும்
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயந்திரமில்லா இயற்கை
கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துத்பார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .

தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?

தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல் நீ
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .

மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .

அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைக்காண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .

அரளியே
மக்களால் நீ தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நீ மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .

போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்க்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே நீ
காதலுக்கு தூது.

முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை இரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நீ வெளிச்சமே .

ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மாதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .


இளையகவி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்