Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
வெளிச்சம்
1.கல்லுக்குள் தேரைக்கு வெளிச்சம் என்றால்
கருணையவன் அளிக்கின்ற உணவே அன்றோ!
சொல்லுக்குள் வெளிச்சத்தை உணர வேண்டின்
சொல்கின்ற கருத்துக்குள் வாழ வேண்டும்
இல்லத்தில் வெளிச்சத்தை வேண்டும் யாரும்
இருட்டான உள்ளத்தை விளக்க வேண்டும்.
'அல்'லுக்கும் பகலுக்கும் வேறு பாட்டை
அறியாத மனிதருக்கு ஏது பாட்டை? (பாதை)


2.இந்த வெளிச்ச உபகாரிகள்
உள்ளார்ந்த ஆர்வத்தால்
எதிர்ப்படும் இடங்களில்
தம் பெயரை
எழுதிக்கொள்ள விரைகிறார்கள்
கற்றை விளக்கொளியை
கண்ணில் அடித்தவாறே
தாமே இருட்டில்
இருப்பதறியாமல்.!

- இப்னு ஹம்துன்

வெளிச்சம்!
==========
ஏழை மக்க்களின் வாழ்வை
இருளாக்கி
எத்தனையோ கோடிகளை
எளிதில் தனதாக்கி
ஆலயச் சன்னிதியில்
ஆண்டவனுக்கு
"வெளிச்சம்"போடும்
வீணர்களின் வாழ்வு
இருளாகும் அந்நாளே
ஏழைகளின் வாழ்வில்
வெளிச்சத்தின் விடியல்!

- கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.

வெளிச்சம்...

உண்மை வெளிச்சத்தில்
தெரியுது-
இவன் இதயமுள்ள மனிதனல்ல.. இடம்மாறும் எலும்புக்கூடு என்பது...!

வெளிச்சம்
-----------
இரவின் முடிவில்
பிறக்கும் குழந்தை
கருவில் இருக்கும்
தமிழீழக் குழந்தையும்
இப்போது இருளில்
எல்லோரும் ஏனின்று
குழந்தை வெளிச்சம்
வருவதை வெருட்சியோடு....

நீதியின் குழந்தையை
நீதியற்ற உலகிலே
யாரும் விரும்புவதில்லையே
நீதி வலம் வரும்
வெளிச்சம் பாயும்
சோகங்கள் தீரும்
சொந்தங்கள் கூடும்
ஒளிரும் வெளிச்த்தில்
எம் மாவீரர்கள் வதனங்கள்
பெரு வெளிச்சமாய் காண்போம் !


இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
11.11.2008
வெளிச்சம்
--------------


விளக்கு என்ற கருத்தில்……..

கருநீல வானில் நிலவு வெளிச்சம்
ஒரு நிம்மதிப் பொலிவு அற்புதம்.
ஒரு மழலையின் சிரிப்பு மொழி
பெரும் துன்பத்திலும் ஒரு வெளிச்சம்.
குலவி இணையும் முறையான வாழ்வில்
கலவி ஒரு அற்புத வெளிச்சம்.

பெண்மையின் தாய்மை, பாசக் களிப்பு
மண்ணுலக வாழ்வில் மாபெரும் வெளிச்சம்.
புன்னகை எவரும் விலைமதிக்;கவொண்ணா
நன்னகை வெளிச்சம் மனித வாழ்வில்.
மாய வாழ்விற்குத் துணிவு, நம்பிக்கை
ஓயாத வெளிச்சம் தரும் மின்சாரம்.


பகட்டு என்ற கருத்தில்…..

பூமாலை, பொன்னாடை வாங்கிக் கொடுத்துப்
பாராட்ட வைக்கும் கூட்டமொரு வெளிச்சம்.
உயர் பாணி உடை, பாவனைப் பொருள்,
துயருடை நோயில்லா உடல் தமக்கென்று
அயர்வின்றிப் பதவிசாகப் பலர் இங்கு
பெயருக்குக் காட்டுகிறார் பெரு வெளிச்சம்.

பணம் பாலாக விழாவெடுக்கப் பாயும்
குணம் இங்கிது ஆடம்பர வெளிச்சம்.
மேற்குலக மொழிப் பாவனையால் வாரிசுகளுக்கு
தாய்மொழி வராதெனக் காட்டுவார் வெளிச்சம்.
தங்க நகையணிந்து காட்டிய வெளிச்சம்
மங்கி வருகிறது போலி வண்ண நகைகளால்.


தெளிவு என்ற கருத்தில்…..

மனித சிந்தனை வெளிச்சம்
மாபெரும் செயல் வெளிச்சமாகும்.
வெளிச்சம் தரும் விளக்கம்
தெளிவற்ற நிலை விளக்கும்.
இளிவான தீமையுடை நடத்தை
வெளிச்சமான வாழ்வு தராது.

வேதா. இ.லங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
16-11-2008.
வாழ்ந்து முடிந்த
மனிதனாய்..
நெட்டுயர்ந்த மரம்..
நிறங்கள்
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
நேரம்..
இளமை வேர்களில்
வெளிச்சமாய்..
முதுமை
கருமையாய் சூழ
ஒரு
வாழ்ந்த முடிந்த மனிதனாய்
மரம்
விரல்களை எல்லாம் விரித்து
வானத்தை நோக்கி
தவம் காண்கிறது..
பாவங்களைக் கழுவ !!!
-முனியாண்டி ராஜ்
வெளிச்சம்
---------------------

வெளிச்சம் விரும்பித் தான்
விளக்குக் கேட்டோம்
சூரியனையே...
வாங்கி தந்தவரை அல்லவா
முதலில் சுட்டோம்.

அண்ணலே மகாத்மாவே....
சுதந்திர இந்தியாவின்
முதல் சமாதி
உன்னிடமிருந்து தானோ...?

இந்தியாவின் குடிமகனாய்...
காரணம் தேடி தேடியே
விளங்கவில்லை இதுவரை.


-மதுக்கூர் சர் மதிநா
துபாய்.
வெளிச்சம்

மின் விளக்கேற்றி
தன் இருள் போக்க எண்ணும்
மானுடா...
இருள் எது-என
உணர்ந்தே
உன் ஒளி தேடு ...

தனக்கென்று தனக்கென்று
எல்லாம் தேடி
தனக்கேதும் கிட்டாது-என்று
தெரிந்தும்...

தன்நலத்தோடு வாழும்
தரங்கெட்ட மனிதா..

இருள் எது-என
உணர்ந்தே
உன் ஒளி தேடு ...

வெளிச்சம் என்பது
வெறும் விளக்கேற்றி
பெறுவதில்லை...

மனத்தின்
இருள் அகற்றி
இறையின் ஒளியில்
வெளிச்சம் காண்போம்


பாரதிமோகன்
வெளிச்சம்...

வேண்டாம வெளிச்சம எதானாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிசம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும
முடிவில் விளைவே சுடுகாடாம
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்