Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
எனது ஊர்
எனது ஊர்...

தோப்பும் துறையும்
மாறவில்லை எனது ஊரில்,
மாறியது நான்-
ஒற்றை மரமாய்...!

-செண்பக ஜெகதீசன்...

சாதி மத பேதம் இன்றி
இளைப்பார இடம் தந்து
சுற்றுசூழல்க் காக்கும்
மரங்களிடமிருந்து பாடம் கற்று
தமிழீழ
சகோதரர்களின் உரிமைகள் கிடைக்க
குரல் கொடுப்போம்

முருகன் சுப்பராயன்
மும்பை

வறுமையிலும் என்னை வளர்த்து
வாழ்க்கையிலே என்னை உயர்த்தி
வெறுமையான தோற்றத்தோடு
விளங்குகின்ற எனது ஊருக்கு....
செல்கின்ற போதெல்லாம்
சிலிர்க்கின்றேன் மனசுக்குள்
காலமான என் தாயைக்
காண்கின்ற உணர்வோடு!

- கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.
எனது ஊர்


யாழ்ப்பாணத்தில்…….
வலிகாமம் கிழக்கு கோப்பாயில் மக்கள்
வலிமையாய் வாழ நகரபாதுகாவலர் நிலையம்
பொலிவாக நிறுவினர் என் தந்தையும், பெரிய தந்தையும்.
நன்மையான திறப்பு விழா நன்நாள் 1954ல்.

அற்புதமான நாளது என் ஏழுவயது.
அழகாக நாவலர் பாடசாலையே திரண்டு
அகமகிழ்ந்து வாழ்த்துப்பா பாடினோம் அன்று.
அர்த்தமானது எனது ஊர் கண்ட ஆனந்தம்.

நாளது அரசு கையேற்கும் வரை
நாவலர் பாடசாலை நிறுவனரான அப்பப்பா
நாமகள் நேசமுடைய முருகேசு சுவாமிநாதர்
ஒரு காலம் நாயகரானார் கோவைப் பதியில்.

வயல், குளம், கோயில்கள் சூழ
வசதியான மருத்துவமனை தபாலகமுடன் நான்
வளர்ந்;த ஊர், கண்ணி வெடி நிறைந்து
வளமிழந்து, வாழ்வும் அங்கு துன்பம்.

போரின் கிலி மறைந்து, ஊரிற்குப்
போகும் நிலையும், மகிழ்வும் விரிந்து
பொங்கும் மகிழ்வு என்று திகழும்!- என்
பிறந்த ஊரை என்று காண்பேன்!

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
எனது ஊர்
---------

கடைவீதியில் சிலமணி நேரம்
காத்திருந்தால் கூட
ஆட்களின் நடமாட்டத்தை
அதிகமாய்க் காணமுடியவில்லை.

வீதிகளில் மகிழ்ச்சி
வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோடியது
மறந்து போனது மட்டுமல்ல,
மலையேறியும் போய்விட்டது.

வீடுகள் எல்லாம் வெறுமையாக
விழாக்களின் போது மட்டும்
விருந்தோடு கூடுவதே
வாடிக்கையாகி விட்டது.

உயிரோட்டமாய் இருந்த
ஊர்களெல்லாம் இனிமேல்
ஒரேயடியாய்
உருக்குலைந்து விடுமோ
என்கிற கவலை மட்டும்
எனக்குள் அடிக்கடி
எட்டிப் பார்க்கிறது.

-சித. அருணாசலம்,
சிங்கப்பூர்
கடல் கடந்து
போனாலும் எப்போதும்
என்னுடன் வரும்
எனது ஊர்
என் நிழலாய்.

- பந்தர் அலி ஆபிதீன்
தமிழ் நாடு
காவிரியாள் அலை நிறைத்து
கவிபாடும் குளிர்தண்டலை
மாறுகின்ற காலத்தினூடே
மாறாத வளநகராய் திகழ்கின்ற
தேடிநிதம் தமிழ் வளர்க்கின்ற
திக்கெட்டும் தமிழர் நலன் பாடுகின்ற
பண்பாளர் நிறை பாங்குடை நன்னகராம்
பகட்டில்லா ஊரே எனது ஊர்!

- கவிஞர் அ. கௌதமன்
திருச்சி, தமிழ்நாடு
வானவில்

எங்கள் ஊர்
என்றாலே...

மெயின் ரோடு
அருகிலிருக்கும்
மணி கூண்டு
ஓடாத கடிகாரத்தை
ஓடி வந்து
வியந்து பார்த்த
நாட்கள்

ஐந்து மணிக்கும்
பன்னிரண்டு மணிக்கும்
ஐந்து நிமிடம்
மூச்சுவிடாமல்
அலறும் சங்கு

ஒரு பக்கம்
ரப்பர் பந்தாய்
துள்ளலும் ஓட்டமுமாய்
ரயில் பிடிக்க
ஒரு கூட்டம்

இன்னொரு பக்கம்
வெள்ளை உடுத்திய
தேவதைகளாய்
மருத்துவமனை செல்லும்
செவிலியர் கூட்டம்

மாடுகளோடு
மனிதர்களும்
நடமாடும் மார்கெட்

திருவிழா காலம்
மட்டுமே
வீதி உலா வரும்
மார்வாடிப் பெண்கள்

நானும் அவளும்
சேர்ந்து எழுதிய
நான்காம் வகுப்பு
வீட்டுப் பாடம்

என்ற வண்ணப்பூச்சு
என் மேல்
குடையாய் விரியும் போது....

என் தாய்க்கு
கொள்ளியிட்டுவிட்டு
நான் கதறியழுத
மயான பூமியின்
பதிவுகள்
புயலாய் எனை சூழ்கின்றது !

இந்தக் காற்றின்
வேகத்தில்
வண்ணங்களாய் வந்த
வானவில்
மறைந்து போகிறது

ஒவ்வொரு முறை
என் ஊர் பற்றி
நான் சிந்திக்கும்
போதும்....!

- ரா.கணேஷ்.
சென்னை
கடலுக்கு
முகங்கொடுத்தாலும்.... கவனமெல்லாம்
கரைகளில்தான்...
நிமிர்ந்தும்..வளைந்தும்..அணைத்தும்
இந்த
மரங்கள் எல்லாம்
மனிதர்கள் போல தான்
ஆழிப்பேரலை
வேர்களைப் பிடுங்கி வீசும்
வரை !!!!
- முனியாண்டி ராஜ்
எனது ஊர்

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

எனது ஊர்...

வேல் வந்தணைந்ததனால் வேலணையென்னும் என் ஊரில்
பனை மரங்கள் மேல் தழுவி
பசுங்காற்று பவனி வரும்
தென்னைமர நிழனிலே
தேன்கவிதை சுரந்து வரும்
கடல் அலைகள் கால்தழுவ
கவலைகள் தான் மறையும்
மணல் மீது கால் புதையும்
மனம் ஏனோ தான் பறக்கும்---
நிலவெறிக்கும் நேரமொன்றில்
என்னூரின் அழகெழுத
தமிழுக்கே அழகு வரும்.


வேலணையூர் தாஸ்
ஊர் !!!!!!!!!!!
பூவுக்கும் ஒரு நிறமுண்டு..என் ஊருக்கும் ஒரு பெயர் உண்டு !!
வேல் வந்து கரை ஒதுங்கி.....வேலணை என்ற பெயர் தந்து ...
சுற்றிவர கடல் வந்து...சுவை நிறைந்த மீன் தந்து...

பச்சை ஓலை பனைமரங்கள் வளர்ந்து ..அதில் நுங்கு என்னும் கனிதந்து !!
பனம் பழங்களும் அதில் வந்து..பனம் கிழங்குகளும் தினம் தந்து !!
கள்ளு என்ற மது ரசம் உண்டு..பல்லு விழுந்த பல பேர் உண்டு !!
தென்னை மரங்கள் பல உண்டு..அது விண்ணை நோக்கி வளர்ந்ததுண்டு !
தாகம் என்று வருவோர்க்கு..இளநீர் கொடுக்கும் தாயின் குணமுண்டு !!
தென்னை ஓலைகள் கொண்டு.. சிறு குடிசைகள் அமைப்பதுண்டு..

சுட்டுவிடும் சூரியன்..சுற்றிச் சுற்றி வந்தாலும்..
மழைமேகம் ....கூடி வந்து ..மாரி மழை பொழிந்தாலும் ..
கட்டிய வீட்டினுள்..மழைத்துளிகள் நுழையாது..
கதிரவனின் ஒளியும்..கண் எதிரில் தெரியாது...
சுத்தமான தூக்கம் வரும்......தூங்கும் போதும் கடல் அலையின் சத்தம் வரும் !

வீட்டின் வாசல் அருகில்..பசு வந்து பால் தருவதுண்டு !!
அதன் மடியில் சுமந்துவந்த பாலை..சுவை நிறந்த காப்பியாய்..
நுரை ததும்ப..நுகர்ந்து....ஊதி ஊதி ..குடித்ததுண்டு !!
பெரும் குளம் ஒன்று உண்டு..அதில் திமிங்கிலங்கள் ஏதும் இல்லை !!
கரும் கூந்தல் கலைந்து.... பெரும் கூச்சல் போட்டு .நீச்சல் ஆடும் .....
கரும்பான மேனி கொண்ட கன்னியர்கள் வருவதுண்டு !!

இடுப்பில் இரு குழந்தை..விரல் இடுக்கில் ஒரு குழந்தை !!
வயிற்றில் ஒரு குழந்தை..வாசல் வெளியில் ஒரு குழந்தை !!
கறி அடுப்பில் ஒரு கண் இருக்கும்..
கடமை முடிக்க மறு கண் துடிக்கும ..

கிராமத்து அன்னையிடம்..துணிவென்ற தூண் இருக்கு !!
மழலைகளை மன்னர்களாக்கும்..மதிநுற்பப் கலை இருக்கு !!
இன்று மூவுலகம் சுற்றிவரும் ..நம்நாட்டு மன்னர்களுக்கு !!
பால் கொடுத்து வளத்தவளை..அவள் கால் தொட்டு வணங்கிடுவோம் !!
மனப் பூந்தோட்டத்தில் ..அவள் பெயர் சொல்லி சுவாசிப்போம் !!..


வேலணையூர் லிங்கா
கெடுப்பதற் கோர்கூட்டம் கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

அகரம் அமுதன்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்