Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
விடியலுக்கான நாட்கள்...
விடியல் எப்போது?
----------------------

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!

-தமிழேந்தி
ஆயிர ரூபாய்
பணம்
கை மாறியது
செங்கல் சூளையில் நான்
விடியல் எப்போது?

-பந்தர் அலி ஆபிதீன்
தமிழ்நாடு

குடும்பக் கூட்டைக்
கலைக்க வந்த
கண்ணி வெடி
விவாகரத்து
ஒழியும் நாள் வரும் !

மருமகள்கள்
மகள்களாகும்
மாயமில்லா
ஜாலம்
நிகழும் நாள் வரும் !

பெவிகாலாய்
இதயங்களில்
ஈஷியிருக்கும்
சாதிப்பித்து
உதிரும் நாள் வரும் !

புத்தகப்பை
சுமக்காத
இளம் முதுகுகளில்லை
என்ற நாள் வரும் !

எங்கள் நாட்டில்
சுயநலமில்லா தலைவர்கள்
முளைக்கும் நாள் வரும் !

அன்றல்லவோ
உண்மையான விடியல் !

நிலவைக் காட்டி
சோறூட்டிய நாள் போய்
தொலைக்காட்சியைக் காட்டி
சோறூட்டிய காலம் கரைந்து
சூரியனைக் காட்டி
சோறூட்டும்
தாய்மார்கள் வரும்
நாள் வரும்

அன்று கூவும்
இந்தக் குயில் !
இச்சூரியனுக்கும்
கை முளைக்கும்
வணக்கம் சொல்ல !


- ரா. கணேஷ்
சென்னை
விடியலுக்கான நாட்கள்

மனிதன் மனிதனாக
வாழாத வரையில்
நாட்கள்
விடிவதில்லை
தன்னை அறிந்த
மனிதனுக்கு
வாழ்க்கை
விடியாமல் போனதில்லை...!

- கிளியனூர் இஸ்மத்
விடியலுக்கான நாட்கள்...

பறவை பார்த்துக்கொண்டிருக்கிறது
விடியலுக்கான பொழுதை-
இரை தேட...
மனிதன் தேடிக்கொண்டிருப்பது
விடியலுக்கான நாட்களை-
வீடுதலைக்காக...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
விடியலுக்கான நாட்கள்...
-------------------------------------------

உயிர் தின்னும்
கோரப் பிசாசுகள்
ஆழிக்கூத்தாடும் - எம்
தேசத்தில்
விடிவு வரும் வரும் - என
காத்திருக்கும் நாங்கள்

-எதிக்கா
கனடா

விடியலுக்கான நாட்கள்

இரவு தேவைதான்
கண்கள் ஓய்வெடுக்க
காதலர் சேர்ந்திருக்க
உயிரினம் ஓய்வெடுக்க
வெண்ணிலா அழகருந்த
ஆனால்-
விடியலுக்கான நாட்கள்
வேண்டியிருக்கிறதே
வாழ்ந்து காட்டிவிட

2.இருளைப் போக்க
வெடிகுண்டு வெளிச்சங்களை
நம்பித் திரியும்
மனிதா-
அந்த இருளைப் போக்க ஒரு
கதிரவன் உதயம் போதும்
அந்த உதயம் உன்
மனத்துள்ளும்
இருக்கலாம்
இல்லையா?


3.வெளிச்சத்தில் இருக்கும் போது
இருட்டை விரும்பிக்கொண்டு
இருட்டில் இருக்கும்போது
விடியலுக்கான நாட்களுக்காக
ஏங்குவது
வேடிக்கையாக இல்லை?
-அரவிந்த் சந்திரா
[ அடையாள எண்:352 }

வெடிக்கின்ற குண்டுகளால்
துடிக்கின்ற ஈழத்தமிழர்களுக்காக - நாம்
வடிக்கின்ற கண்ணீர் நிற்க, - எப்போது
வரும் அந்த
"விடியலுக்கான நாட்கள்"?

கிரிஜா மணாளன்,
(அடையாள எண்: 260)
திருச்சி, தமிழ்நாடு.
விடியலுக்கான நாட்கள். 30-1-2009.

பஞ்சு மெத்தைப் படுக்கை.
பாதம் நோகாமல் பாதணி,
பலவகை உணவு பசிக்கு
புலம் பெயர் வாழ்விங்கு.
நிலம் போகுது அங்கென
கலங்கும் நெஞ்சங்கள் இங்கு.

வெடிக்கின்ற குண்டு மழையால்
வடிகின்றதங்கு இரத்த ஆறு.
இடியும் ஊர், உடைமைகள்
மடியும் பல்லுயிர் தாய்நிலத்தில்.
அடிவானத்திலும் தெரியவில்லை
எம் விடியலுக்கான நாட்கள்.

தேடித்தேடி உயிரழிப்பு.
கொடிய அரசோடு சேர்ந்து
கூடி உதவிடும் நாடுகள்.
முடியாதா போராட்டம் என்று
துடிக்கிறதெம் மனம் துவளுகிறது
விடியலுக்கான நாட்கள் எப்போது!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

விடியலுக்கான நாட்கள்!
=====================
விதியெலாம் வலியது என்றால்
வலியெலாம் விதிசெய லென்று
வேதனை சுமத்திடல் முறையோ?

சதிதனில் விழுந்த தமிழர்
சாக்காட்டில் அழிதல் கண்டும்
சரித்திரத்தில் மௌனம் ஏனோ?

மண்குழி வாழ்வில் அஞ்சி
மழலையர் அலறித் துடிக்கும்
மரணஓலம் நின்றி டாதோ?

போர்க்கள மாய்எரியும் பூமி
புகைமண் டலத்தில் இருளும் பூமி
விடியல் ஒன்றைக் கண்டிடாதோ?

வலம் வரும் தமிழரினம்
நலம் இழந்து போனாலும்
நாதியற்றுப் போகலாமா?

அனுமன் மீட்கச் சென்றானே!
அனுமதி கேட்டுச் சென்றானா?
தூதே! தூதே! உனக்கென்ன தயக்கம்?

செங்கதிரோன் ஒளிர்ந்து நிறைய
செங்கமலம் விரிந்து மலர
தமிழர் பூமி குளிர்ந்திடாதோ?

காண்மின்! காண்மின்! தமிழர்
துயர் களையும் விடியலொன்று
விரைந்து வருவதைக் கண்களால் காண்மின்!

மெய்யாத்தூர் சொ. வேல்முருகன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
விடியலுக்கான நாட்கள்...

இலவுகாத்த கிளிபோல
இதயம் நோக
காத்திருந்தேன்...
விடுதலை விருட்சம்
வீரியமாய் முளைக்கும் என்று
ஆனால்......
அது விதையாக
இருக்கும்போதே
விதிவந்து விளையாடி விட்டது
விதிமட்டுமல்ல....
சிலர் செய்த சதியும்தான் கேளீர்


இராமசாமி ரமேஷ், இலங்கை
விடியலுககான நாட்கள்

விடியலுககான நாட்கள் எப்போது-ஈழம்
விடுதலைப் பெறுவதும் எப்போது
கொடியவன் பக்சே தற்போது-ஆள
குமுறியே ஈழம எழும்போது
வடியும் கண்ணீர் பேரலையாய்-பொங்கி
வந்திடமறவர் அலையலையாய்
முடியும் ஆட்சி அப்போதே-நாம்
முயல்வோம் முயல்வோம் இப்போதே

வெள்ளி முளைத்தால் விடிவதுண்டே-விடி
வெள்ளியாம் காந்தியின் வழிகொண்டே
கொள்ளி வாயுள பேயவனை-எதிர்
கொண்டே அழிப்போம் கொடியவனை
தள்ளிப் போகலாம் அக்காலம்-ஆனால்
தடுக்க இயலா முக்காலும்
முள்ளி வாய்க்கால முடிவல்ல -மேலும்
முயலும் முயலும் நாம்வெல்ல

முடிவாய் வெற்றி நாம்பெறுவோம்-அகிம்சை
முறையில் நாளும் போரிடுவோம்
விடியும் நாளும் வந்திடுமே-பெரும்
வெற்றியை நமக்குத் தந்திடுமே
கொடியார் சிங்களர் கொடுங்கோலும்-அவர்
கொடுமைகள முடிய அடிகோலும்
வெடியா அன்னவர் வெடிகுண்டே-உலகு
வெகுளும் வெடித்தால அதுகண்டே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்