Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
புதைகுழிகள்
மாவீரர்களே !
உங்களின் கல்லறைகளில்
தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது
வீரம் செறிந்தவன் தமிழன் என்று
உலகம் உணரச் செய்ததால்
உங்களின் கனவு நிச்சயம் நனவாகும்
அதற்கான நாட்களை மட்டும்
நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம்
உங்களைப் பெற்ற அன்னையர்
தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட
ஆர்ப்பா¤ப்பில்
வீரத்திலகங்களே !
நீங்கள் மரணித்தவர்கள் அல்ல
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
மரணித்து வாழ்பவர்கள்

-நிர்வாணி
புதைகுழிகள்...

விளைநிலங்களாகின்றன
புதைகுழிகள்..,
புதைக்கப்பட்டவை
போராடியவர்களின் உடல்கள் மட்டுமே,
அதில்
புதிதாய் முளைத்திடும்
புத்துணர்ச்சி
பெருகவைக்கும் போராட்டத்தை...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
தேவை புதைகுழி
--------------------------

கடைசி வரையில் கைவிடேன்...
என்ற சொல் மட்டும்
வெறும் வார்த்தைகளாய் போக...

"கைம்பெண்"-என்ற
கடும்மொழி உச்சரிப்பால்
கரைந்துப் போகிறாள்.

மஞ்சளுக்கு...
மங்களகரமான பெயர் மட்டும்தானா...?

உப்பில்லா உணவும்-
வெற்றுத்தரைக் கிடப்பும்-
பொங்கும் உணர்வுக்கு...
ஐதீகம் கலந்த ஆதிக்கத் தடுப்பா...?

வெற்றுடல் என்றால்
வெறுத்திடலாம்-ஆனால்
இந்த-
பருவ விண்ணில்
உணர்ச்சி மேகங்கள் அல்லவா...
உரசிப் பார்க்கிறது
பாவை நிலையின் பரிதவிப்பு உணராமல்.

பாழ் சமுதாயத்திற்கு...
பார்வையால் மட்டுமே பரிதவிக்க தெரிகிறது.
சோகத் தாமரையென...
சுரம் பிரிக்கத் தெரிகிறது.

பாவையோ....
உண்மை உணர்வுகள் இல்லா
ரோமியோக்களுக்கும்....
இனம் பிரிக்கும்
சாக்கடைக் கலாச்சாரத்திற்கும் இடையில்.

பழைய சம்பிரதாயங்கள் மரணித்தும்
ஏனோ இன்னும்
இவர்கள் தகனம் செய்யாமலே
தரிசிக்கும் கொடுமை
இங்கே தான் இங்கே தான்.

இருட்டை நேசிக்கும் மனிதர்கள்
வெளிச்சத்தில்
விழி மூடிக்கொள்வதைப் போல்

தீண்டாமை எனும்
மாயையில் மாட்டிக்கொண்டப்பின்
மனிதர்கள்
மனம் மூடிக்கொள்கிறார்கள்.

மின்மினியை...
வெறும் பூச்சியாய் பாவிக்கும் நிலையில்
எங்கே உணர்வது...?
அதன் -
வெளிச்சத்தின் ஆச்சிரியம்.

இந்த பூமிக்கும்-
இந்த ஆகாயத்துக்கும் இடையே
எந்த எண்ணம் வலுப்பெறுகிறதோ....
அதன் அடிவாரம்
புதிய பிரபஞ்சம் பிரசவிக்கும்.

பாவம் என்ற சொல்-வெறும்
சொல்லாய் பழகிவிட்டப்பின்
அங்கே தெரிவதில்லை மனிதர்களின் மனம்.

எதையும் ரசிக்க முடிவதில்லை..
அன்று மலர்ந்த மொட்டு
அதிகாலை உதயம்
தூரத்து ஆகாயம்
வெட்டவெளி தூரம் எதையும்.
விட்டுச்சென்ற
கணவனின் நிணைவுகளைத் தவிர....

தீண்டாமைக் கலாச்சாரங்கள்
ஐதீக-
சாக்கடை சம்பிரதாயங்கள்-இந்த
பூமியை விட்டு அழிய
தேவை புதைகுழி.


-மதுக்கூர் சர் மதிநா
துபாய்.
புதைகுழி.

புதையற் புதைகுழியைப் பூதம் காத்தது!
கதை கதையாம் சாகசக் கதைகள்
இதை அதிசயம், அற்புதமென்று கேட்டு
எதை நம்புவதென்று குளம்பிய சிறுவயது!

மஞ்சு மூடும் வானம் போல
கொஞ்சும் காதல், பாசம், அன்பு
அஞ்சும் வஞ்சம், பொறாமை துன்பமென
கொஞ்சம் அல்ல மனதுள் புதைக்கிறோம்!

பிரபஞ்சத்திலும் மகா பெரிய மனித
நெஞ்சம் ஒரு இரகசியப் புதைகுழி!
கொஞ்சம் கொஞ்சமாய் அது கிளறப்பட்டால்
அஞ்சிடும் சேதம் மனித மனத்திற்கு.

பிஞ்சு வயதுப் பெரும் மனத்தாக்கங்கள்
பூஞ்சணமாகிப் பின்னாளில் பூதாகரமாய் அதிரும்.
நெஞ்சப் புதைகுழியைச் சுத்தமாக்க மனவியலில்
விஞ்சிய மருத்துவர் பெரும்பாடு படுவார்.

ஆரோக்கியம் அற்ற உணவைத் தினம்
நீரேற்றால் வயிறும் ஒரு நோயென்ற
போர் ஏற்றுக் கொள்ளும் புதைகுழியே!
யாரேனும் இதை மறுப்பதற் கில்லை.

புதைகுழியில் புதைக்காத உடலங்கள்
சிதையில் வைத்து எரிக்காத உடலங்கள்
விதைக்கப் பட்டது கிளிநொச்சி, முல்லையில்.
கதையல்ல உண்மை, போரவலமன்றோ இது!

-வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2009.
புதைகுழிகள்..

தமிழனமே
எங்கள் நிலையைப் பார்
நாங்கள் அலங்கரித்துப்
பார்த்த எம் கனவுலகம்
சிங்கள வெறியரின்
கோரச் செயலால் நாளுக்கு
நாள் சிதைந்து கொண்டே போகிறது

எங்கள் தேசத்தில்
புதைகுழிகள்
ஒவ்வொரு கண இடைவெளியிலும்
விரிந்து கொண்டே போகிறது
நேற்று பிரசவித்த
பிஞ்சுக் குழந்தை கூட
இன்று புதைகுழிக்குள்
மண்ணோடு மண்ணாய்ப்
போய்க்கொண்டிருக்கும்
நிலை எங்கள் மண்ணில் தான்
உக்கிரமாய் நடந்துகொண்டிருக்கிறது

புதைகுழிகள் நிரம்பி வழிந்து
பிண வாடையும்
வெடிகுண்டுகளின் மருந்து
வாடையும் கலந்து
வீசி வீசியே எஞ்சிய
மக்களின் சுவாசங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
அழித்துக்கொண்டு போகிறது

ஐயோ என்று கத்தி
அழும் நாதியற்ற கூக்குரல்களும்
மனித அவலங்களும்
கண்ணை மூடினாலும்
கண்ணைக் குடைகிறது

ஈழத்தின் நிலையை
நினைக்கையில்
இதயம் வெடித்துச் சிதறிவிடும்
போலுள்ளது

-எதிக்கா
புதைக்குழி நாயகன்

பள்ளி வயதில்
புதைக்குழிகளுக்கும்
பிணங்களை ருசித்து உண்ணும்
உடும்பபுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு
என்பதை அறிந்துள்ளேன்

இன்று
உணக்கும் புதைக்குழிக்கும்
ஜென்ம தொடர்பு உள்ளதை
என் மக்களின் மரண ஓலையின்
மூலம் தெரிந்துக் கொண்டேன்

ஏய்! ராஜ பக்சே
சரித்திரத்தில் இன்று முதல்
நீ ஒருவன் மட்டும்
"புதைக்குழிகளின் நாயகன்" என்று
சித்தரிக்கப் படுவாய்
இது நிச்ச்யம்!!!


-பிரான்சிஸ் சைமன்,
பினாங்கு, மலேசியா.
புதைகுழிகள்!

எதிர்கால பூமியின் வெளிச்சத்தை
தன்னுள் புதைத்து
மனிதனைக் குருடாக்கப்போகிறது
பாலிதீன் புதைகுழிகள்!

-தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு.
புதைகுழிகள்!

சுதந்திர இந்தியாவின்
சுடர்தீபம்
முற்றிலும் ஒளிராமல்
புதைந்து கிடக்கிறது
சோம்பேறிகளின்
புதைகுழியில்!

-தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு.
புதைகுழிகள்!

பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட
பதுங்கு குழிகள்,
பாரதம் கைவிட்டதால்
'புதைகுழி'களாய்..

-யாழி
கோவை, தமிழ்நாடு.
புதைகுழிகள்!

தடம்பார்த்து நடப்பவர்களைத்
தவிர்த்து,
தடுமாறி நடக்கும்
பாதங்களை மட்டும் புசிக்கும்
புதைகுழி....'மதுபானம்'!

-அ.ராஜீவ்காந்தி
செய்யாறு, தமிழ்நாடு.
புதைகுழிகள்..
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
தானே
புதைகுழிகள்

இது
பிணங்களை விழுங்கும்
புதைகுழியல்ல
மனங்கள் விழுங்கிய
புதைகுழி

அன்னபூரணியாய்
இருந்த
என் பாட்டி

என் எல்லாமுமாய்
இருந்த என் தாய்

என்னையே எனக்கு
அடையாளம் காட்டி
அறிமுகம் செய்த
என் முதல் காதல்

என்னை முன்னிறுத்தி
என் பின்னே
ஊர்ந்து போகும்
என் வயதுகள்

இத்தனை மரணங்களையும்
விழுங்கி
என் நாளையை
மட்டும் நிலை நிறுத்தி
என்னுள் ஒளிந்து
கிடக்கும்
இருட்டல்லவா
புதைகுழி

ஆம் !
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
தானே
புதைகுழிகள்

-ரா.கணேஷ்
சென்னை
புதை குழிகள்

புதைக்கப்பட்ட 'வாழ்வின் மடியில்'
உறங்கும் தருணமிது....
நேந்து கொடுக்கப்பட்ட வாழ்வில்
மீட்டெடுக்க போராடிய மனங்கள்
மௌனமாய் யோசிக்கும் வன்மமான காலம்!
விண்ணவனின் எல்லையைத் தாண்டிய
நின் புகழின் உச்சியில் மறிக்கப்பட்ட வாழ்வு!
ஆம்,
அனைவரின் வாழ்வும் புதைக்கப்பட்டுவிட்டன
தாண்டவமாடும் அதிகாரத்தோடும், புதைகுழிகயோடும்...
சுவாசக் காற்றெங்கும் சிங்களவனின் நாற்றம்
சுவாசிக்க வெறுத்து
உறங்க சென்றுவிட்டீர்களோ?
முடங்கி கிடக்கும் உமது வீரத்தின் நுனியில்
புதைகுழியும் பெருமைபடுகிறது
புதைபட்ட உமது சுவடுகளில்
நாங்கள்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போமா?

-துர்கா
புதைகுழிகள்!

புதைகுழிகளும்
விதைகுழிகளாகின்றன...
ஈழத்தில்!

-பெ. பாண்டியன்
திருமயம், தமிழ்நாடு.
மரணம்


இப்பொழுதெல்லாம் எந்த
சந்தடியுமில்லாமல் வருவது
இது ஒன்றுதான்

ஊமத்தங்கூவை,நாய்,ஆந்தை,பிராந்து
இவையெல்லாவற்றின் கண் மீது
மண்ணைத்தூவி விட்டு
சந்தடியில்லாமல் வந்து விடுகிறது மரணம்

வீட்டு முகட்டில் முந்தியெல்லாம்
அம்மா வெள்ளைக்கொடி கட்டுவா

ஊமத்தங்கூவை வந்து கூவினால்
எங்கள் வீட்டில் யாரும் இறந்து விடுவார்களாம்
வீட்டில் அப்பொழுது வயதாகி இருந்தவர்
அம்மய்யாதான்

வெள்ளைக்கொடியைப்பார்க்கும் போதெல்லாம்
அம்மய்யா செத்து விடுவாரோ
என்ற அச்சம் மட்டுமே இருந்தது

ஊமத்தங்கூவை ஆந்தை கத்தாமல்
ஆயிரம் ஆயிரம் செத்த வீடுகள்

எந்த அசுமாத்தமுமில்லாமல்
வருகிறது மரணம்


-இளைய அப்துல்லாஹ்
இங்கிலாந்து
புதைக் குழிகள்

புதைக் குழிகள்
புதைந்து விட்ட
வீரர்களின்
விதைக் குழிகள்
அதில் பூக்களாய்
நாளைப் பூக்கும்
புகழ் மொழிகள்
இருப்பவருக்கு
அது கூறும்
வாழும்
வழி முறைகள்

-ராஜா கமல்
வார்த்தைகள் வர மறுக்கின்றது மாயமன சூழல் தோன்றுவதாக உணர்கிறேன்
நான் காணும் காட்சிகள் மனதை கடிக்கின்றது எவ்வாறு ஆறுதல் செய்வது என தெரியவில்லை
எங்கு பார்த்தாலும் சுயநல சிந்தனையால் மனம் நினைப்பதொன்று செய்வதொன்றாக நிலைமை மாறுகிறது
காற்றடிக்கும் திசையில் மேகம் செல்வது போல் மனித நடத்தைகளும் ..........
நான் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பதால் இங்கு நல்லவற்றை காணமுடியவில்லை
பழிவாங்கும் உனைர்வுதான் மனிதனைப் பந்தாடுகின்றது ஈழம் முதல் பாலஸ்தீனம் வரை இதுவே நடக்கின்றது .........

அ.தேகதாஸ்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்