Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
ஈழத்தின் அவலம்
ஈழத்தின் அவலம் உங்களையுமா
விட்டுவைக்கவில்லை?


ஓன்றுமே அறியா வாய்பேசா
ஜீவன்களே
குண்டுகள் உங்களைத்
துளைத்தெடுக்கும் போது
நீங்கள் எவ்வளவு துடித்திருப்பீர்

உங்கள் இனங்கள்
தினமும் சிதறுண்டு செத்துமடிகிறது
இரத்த வெள்ளத்தில் நீங்களும்
குளிப்பாட்டப் படுகிறீர்கள்
ஈழத்தின் பட்டினிச் சாவுக்கு
நீங்களும் பலிக்கடா ஆகிறீர்கள்

ஆசையாய் கொஞ்சி மகிழும்
இளம் கன்றுகளை போரினால்
இழக்கின்ற உங்கள் அவலங்களை
சொல்லி அழ

மநுநீதிச் சோழனும்
செத்து மடிந்துவிட்டான்

-எதிக்கா
மரணத்தின் நடுவிலான வாழ்வு


சிதிலங்களுக்கு நடுவே
வாழ்வைத்தேடுகிறது மனிதம்.

ஒவ்வொருநாளும்

ஒரு சிறங்கை உணவு
ஒரு மிடறு தண்ணீர்
ஒரு சொட்டு உயிர்

ஒன்றுமே எட்டாதவையாகி விட்டன.
எவருக்கும் வாய்க்காத வாழ்வு

கண்ணீர் காயமுதல் மற்றுமொரு
பிரேதத்துக்காய் அழுவதற்கு மிச்சமில்லை.

மூளை பிய்ந்து போன மகன்
தலை கழண்டு போன மனைவி
முலை கிழிந்து போன அம்மா

நேற்றுத்தான் வயதுக்கு வந்து
விட்டதாக கூறிய மூத்த தங்கச்சி
இடுப்பு தெறித்த முண்டமாய்.

'தலையை மாத்தி இழுக்கபோறன்
நான் பெரியாளாகீட்டன்' என்ற
பதின்மூன்று வயது என்ரை
சிநேகிதன்.

எல்லாமே பிரேதங்கள் எல்லாமே பிரேதங்கள்.

எனது மாடு எனது ஜிம்மிக்குட்டி
எனது கோழி எனது வீடு
நான் அள்ளித்தின்ற எனது மண்
எல்லாமே பிரேதங்களாய்.....

பிய்ந்து போன உடலங்களை
கூட்டி அள்ளி றோட்டோர
கிடங்கில் போட்டு மூடிவிட்டு வருகிறோம்.

பாடைகட்டி சுன்னமிடித்து
ஐயர் வைத்து
வாய்க்கரிசி போட்டு
வெடி கொழுத்தி
சுடலைக்கு கொண்டுபோய்
கொள்ளி வைச்சு

ஒன்றுக்குமே தேவையில்லை
எரி குண்டுகள் எல்லாத்தையும்
முடித்து விடுகின்றன.

நாசமாய் போகட்டும் அவன்கள்
நாசமாய் போகட்டும்
இந்த அவலங்களுக்கு காரணமான
எல்லோரும்.

புழுத்தின்னட்டும் அவன் குலங்களையும்
கோத்திரங்களையும்.

- இளைய அப்துல்லாஹ்
ஈழத்தின் அவலம்.

எதுவும் பேசவியலாது இரத்தம் ஓழுக
இதுமாதிரி இருப்பது நாம் மட்டுமல்ல
ஈழத் தமிழனும் தான்.
நினைக்காத நேரம் குண்டு வீழும்.

இந்தக் கணத்தில் வாழ்கிறோம்!
அடுத்த கணத்து நிலை தெரியாது.
குண்டு அவலம், விமான இரைச்சல்
இப்போது வயிற்றிலும் தான்!

சுரப்பிகளும் சாகிறது மெதுமெதுவாக.
உணவாக இலைகள் என்று எதைஎதையோ
வயிற்றில் போடுவது மனிதர் மட்டுமல்ல
மாடுகளும் மற்றும் சீவராசிகளும் தான்.

இதைச் செய்பவன் தலையில் குண்டு வீழாதோ!
சதை பிரியும் கோரங்களைக் காணமாட்டானோ!
வதை அவன் குடும்பத்திற்கு, சமூகத்திற்கு வாராதோ!
பதைபதைத்து அவனும் வீழானோ!ஓகுஸ், டென்மார்க்.
13-03-2009.
ஈழத்தின் அவலம்...

இதயமில்லாதவர்களின் துப்பாக்கி
பதம்பார்த்தது
ஈழத்தமிழர்களை மட்டுமல்ல,
அவர்கள்
வளர்த்துவந்த
வாயில்லா ஜீவன்களையும்தான்...
இரத்தத்தில் எழுதப்படும்
இந்தக் கண்ணீர்க்கதை முடிவு
எப்போது...!

-செண்பக ஜெகதீசன்...
மரண ஓலம்!


இலங்கைத் தீவில்
அனியாயம் முளைத்து
ஆண்டு
பலவாய்ப் போனது
தமிழனுயிர்
ஒவ்வொன்றும்
செல்லாய்க் காசாய் ஆனது!

சொல்லாத் துன்பம்
சோக இரவு
புதுசு புதுசாய்
மரணவோலம்
அங்கும் இங்கும்
எங்கும்
தமிழன் அகதி!


ஆற்று வெளியில்
ஊர்த் தெருவில்
இல்லை
இப்போ ....
வன்னியெங்கும்
வீட்டுக்குள்ளேயே – மனித
சடலம் மிதக்குமவலம்!

உறவின்
சடலம் கடந்து
ஊரை விட்டே ஓடுமவலம்

ஈமைக் கிரிகை கூட
இன்றி
அகதியாகி
ஓடும் நிலைதான்
தமிழனுக்கு !

ஆதித்தமிழாம்
தேன் மதுரத் தமிழ்
ஆரியாரம்
பூசிய பைந்தமிழ்
சேடமிழுக்குது
தமிழ் நாட்டிலே
ஆதிக் குடியாம்
தமிழ்க்குடி
காலம் காலமாய்
வாழ்ந்த குடி
சேடமிழுக்குது
தமிழீழத்திலே!

தமிழனோலம்
மரணவோலம்
கேட்டும் கேட்காமலிருக்கும்
உலக மனச்சாட்சிகளே
கேட்கும் காலம் வரும்
உங்களுக்கும்
அப்போ…
கேட்க தமிழன்
இருப்பானா ..?


-இணுவை கக்திதாசன்
ஈழத்தின் அவலம்...

ஆராய்ச்சி மணியோசை கேட்க
மனுநீதிகள் இல்லாதபோது
வாயில்லா ஜீவன்களும்
வாயுள்ள தமிழினமும்
வதைபடும் அவலம்
வரப்பிரசாதம்தான்
அதை
வைத்துப் பிழைப்பவர்களுக்கு...!


-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
சுதந்திரம் ?


ஈர மனம் வேண்டும்
இரக்க சிந்தை வேண்டும்
தூரமதிகமிருந்தாலும்
ஊருமினமும் - என்றும்
நினைவிலிருக்க வேண்டும்
ஆலம் விழுதைப் போல
உணர்வு …
வேரை நாடவேண்டும்!

நான் பிறந்ததோ
பதுங்கு குழியில்
வளர்ந்தது அகதிமுகாமில்!
சிந்திக்கத் தொடங்கியது
சிறைக் கூடத்தில்

(சு)தந்திரம்
சுதந்திரமென்று
கத்தி
அது கிடைக்காமலேயே..
என்னுயிர்
போவதுறுதியென்றபின்
(சு)தந்திர வானிலாவது
பறப்போமென ..
மேலெழுந்தபோது ..
அங்கும் கழுகு கூட்டம்
அப்படியானால் ..
எங்கே கிடைக்க போகிறது
எமக்கு (சு)தந்திரம் ?


இணுவை சக்திதாசன்
ஈழத்தின் அவலம்

மனிதனைச் சார்ந்து
வாழ்ந்த மாடுகள்

மாடுகளைச் சார்ந்து
வாழ்ந்த மனிதர்கள்

மனிதன் தன்
இனத்தின் மீதிழந்த
ந்ம்பிக்கையினால்

எமன் வாயில்
போய் விழுந்த அவலம்

ரத்த வாடை தோய்ந்த
பதிவுகளாய் கண் முன்னே...!

-ரா.கணேஷ்
சென்னை
கொட்டிடும் மழைத்துளி குரிதியைச் சிந்திடும்.!
செத்திடும் தமிழ் மக்கள் செய்த கோடி பாவமோ.!
மண்ணோடு மண்ணாகி மடிகிறார் எம் மக்கள்.!
அவர்களுக்காக கண்ணீர்த்துளியை தானமாக்கி விடாதீர்கள்,
அது கடமையாகிவிடும்..?
அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து விடாதீர்கள்,
அங்கு செத்தவர்களே போதும்.!
மனிதாபிமானம் மட்டும் இருந்தால் போரை நிறுத்துங்கள்..!
இல்லையேல் மடியட்டும் எங்கள் மக்கள்.!
வடு இல்லாமல் அழிந்து போகட்டும் எங்கள் இனம்.!
மகிழ்ச்சியான நாளென்று அறிவியுங்கள் அந்நாளை..!!

- நவா நடா
1.ஒன்றுபடுங்கள்!

உலகத் தமிழர்களே!

ஒன்றுபடுங்கள்!

போராடுங்கள்!

சிங்கள
இனவெறியை
வேரோடு
வெட்டி சாய்ப்போம்!

ஈழத்தில்
சுதந்திர விதையை
நட்டு வைப்போம்!

நன்றி!


2.வீர தமிழன் முத்துகுமரனே!

வீர தமிழன் முத்துகுமரனே!

ஈழ தமிழர்களின்
நிலை கண்டு
மனம் நொந்தாய்!
தீயில் வெந்தாய்!
எழுச்சி தந்தாய்!

உன்
வீர தியாக மரணம்
தமிழர்களின் உள்ளத்தில்
தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது!

உன்
உயர்ந்த நோக்கம்
நிறைவேறவும்!

உன்
ஆத்மா சாந்தியடையவும்
வேண்டுகிறேன்!

3.ஈழம் - முகத்தில் அறையும் புகைப்படங்கள்

இரண்டு கால்களையும்
இழந்திருந்தால்!
சிரித்தபடியிருந்தால்!

நம் கன்னங்களில்
புன்னகையால்
அறைந்தால்
ஒரு சிறுமி!

மூன்று பத்து
ஆண்டுகள்
துணைவி!

ஒரு
குண்டு கிழித்து
எறிந்தது!

செவிடாக்கும்
குண்டுகளின்
இறைச்சலையும் மீறி
வெளிப்பட்டது
பெரியவரின் காதல்!

தலை நிறைய
ரத்த காயங்கள்!

மயங்கிய நிலையில்
ஏந்தியபடி
பெற்றோர்கள்!

நடுங்கியது உடல்
அக்காட்சியைய்
காணும்போது!


- முத்தமிழ் வேந்தன்
ஈழத்தின் அவலம்

முகமூடிகளுக்குள் ஒளிந்து கொண்டு
சமாதானம் பேசும்
குள்ள நரிகள்....
வாயில் குருதி ஈரம்
குறையாமல்

கிழித்துப் போட்ட
காகிதங்களாய் மனிதங்கள்..
குப்பைக் கூடங்களில்
ஒப்பந்தங்கள்..
புத்தன்கூட கற்பழிக்கப்படலாம்
தமிழனாய் பிறந்து வந்தால்..

தீப்பற்றி எரிகின்றன
உரிமை வாதங்கள்..
குடை பிடிக்க வரும்
வல்லரசுகளின் கைகளில்
இன்னுமோர் முகமூடி !

-முனியாண்டி ராஜ்
மலேசியா
ஈழத்தின அவலம்

ஈழத்தின் அவலத்தை சொல்லப்போக-அந்த
ஈனரின் குண்டாலே மாடும்சாக
வாழத்தான வழியின்றி பட்டிமாடாய்-மக்கள்
வாழ்வது ஆனதே துன்பக்காடாய்
வேழத்தை வென்றதாம நரிகளகூட்டம்-மா
வீர்ரை எதிர்காலம் கணமுன் காட்டும்
வீழத்தான் போகின்றாய் பகசேநீயும்-அது
விரைவாக உன்தலை மண்ணிசாயும்

கழிவரை போகவும வசதியில்லை-சிங்கள
கயவரின் கொடுமைக்கோ உண்டோஎல்லை
விழிநீரைத் துடைத்திட கையுமில்லை-குண்டு
வீச்சாலே நடந்திட காலுமில்லை
பழிதேடிக் கொண்டானே பக்சேபாவி-செய்த
பாவத்தின சம்பளமாய சுற்றம்கேவி
அழுவாரே அழிவானே வருமேஒருநாள்-ஈழம்
அடைந்தவரும் கொண்டாட மகிழும்திருநாள்

புலவர் சா இராமாநுசம்
நாயிலும் கேவலமாய்
தமிழன் நிலை....
கூறிடவேண்டுமோ
எங்கள் நிலை..........!

பச்சைப் பசேலென்ற
வீர பூமியில்-அன்று
பஞ்சமறியாமல்
வாழ்ந்துவந்தோம்...!

பேரினவாத அரக்கனின்
போரெனும் வன்முறையால்
வளர்த்தவன் சிதைய
புண்பட்டு வெம்புகின்றோம்..!

பகுத்தறிவற்ற காடையனின்
கொடுங்கோல் ஆட்சியில்
பிணமாகிப் போனது
கண்முன்னே எம் உறவு....!

பெரும் துயரங்கள் சுமந்து
செந்நீரை சிந்துகிறோம்
தமிழனுடன் வாழ்ந்த
தமிழர்களாய் நாமும்....!!!

துர்க்க நிலா, இலங்கை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்