Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மண்ணுக்கு மரியாதை
மண்ணுக்கு மரியாதை...

மண்ணுக்கு மரியாதை செலுத்திட
இன்னுயிரை ஈந்த
ஈழத்தமிழர்களுக்கு
கண்ணீரில் நம் அஞ்சலி..
எண்ணத்தில்
எழுதிடுவோம் பரணி...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
மண்ணுக்கு மரியாதை

தென்னையும் பனையும்
மாவும் பிலாவும்
நெல்லும் கொள்ளும்
விளைந்திட்ட மண் - இன்று
புல்லுகள் படர்ந்து
வெடி மருந்துகள் முதல்
பல உயிர்களின் இரத்தத்தால்
மெழுகப்பட்டு
இராணுவச் சிப்பாய்களின்
கால் தடங்களை
வேதனையுடன் தாங்குகின்றது - இன்னும்
தமிழீழக் கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி

-எதிக்கா
மண்ணுக்கு மரியாதை.


பிறந்த நாட்டை விட்டுப்
பிழைப்பிற்காய்ப்
புலம் பெயர்ந்த இடத்தை
நேசிக்கும் நேர்த்தியும்,
வாழ்வளிக்கும் வாய்ப்பிற்காய்
நன்றியை சுவாசிக்கும்
நல்லுள்ளமும் தான் - என்றும்
மண்ணுக்கு மரியாதை -அது
வாழ்த்தப்பட வேன்டிய
வாழ்க்கைப் பாதை

-சித.அருணாசலம்..

முகமூடிகளுக்குள் ஒளிந்து கொண்டு
சமாதானம் பேசும்
குள்ள நரிகள்....
வாயில் குருதி ஈரம்
குறையாமல்

கிழித்துப் போட்ட
காகிதங்களாய் மனிதங்கள்..
குப்பைக் கூடங்களில்
ஒப்பந்தங்கள்..
புத்தன்கூட கற்பழிக்கப்படலாம்
தமிழனாய் பிறந்து வந்தால்..

தீப்பற்றி எரிகின்றன
உரிமை வாதங்கள்..
குடை பிடிக்க வரும்
வல்லரசுகளின் கைகளில்
இன்னுமோர் முகமூடி !

-- முனியாண்டி ராஜ்
மலேசியா
மண்ணுக்கு மரியாதை.

கருவில் விதைத்த விந்து பயிராகி
உருவில் உயிர் கொண்டு மனிதமாகி
அருமை மதிப்புடை மனிதனாகும் போது,
பெருமை மனிதம் மரியாதையடையும் போது,
வருமே தானாக மண்ணுக்கு மரியாதை! - அது
கருமையற்ற புனித மனிதநேய தேசமாகுமே!

தாய் சேய் உறவுகள் ஊருடன்
பாய் விரித்துப் பகிர்ந்து மகிழ்ந்தாடிய
தாய் மண்ணின் ஆனந்த மலர்வுகள்,
காய் கவருவதாகக் கவரப்பட்ட தென்பது,
தூய்மை மண்ணிற்கு மரியாதை தராது,
தூசாக எண்ணுகிறார் என்பது தானே!

சத்தமற்ற நச்சுவாயுக் குண்டுக் கொலையங்கு!
ஓத்தபடி அரசுகளின் கவனயீர்ப்பு இங்கு!
மொத்த வெளிநாடு வாழ் தமிழரும்
கத்தியின்றி இரத்தமின்றி தீவிரமா யொரு
யுத்தமொன்று மண்ணக்காய் நடத்துகிறாரிங்கு!
சத்தியமாயிது மண்ணுக்குத் தரும் மரியாதையே!

-வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-4-2009.
மண்ணுக்கு மரியாதை

மண்ணுக்கு மரியாதை தாமே-பிறந்த
மண்ணுக்கு தருவது ஆமே
விண்ணுக்கு சென்றாலும மறையா-சிங்கள
வெறியர்கள் வென்றதும் முறையா
கண்ணுகுத் தெரிந்திட ஈழம்-விரைவில்
'கை'தட்டி வரவேற்க வாழும்
புண்ணுக்கு மருந்தாக நன்றாய்-உலகம்
போற்றிட சேருவோம் ஒன்றாய்

ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
இழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்

இன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும வேளை
ஒன்றது வந்திடும் பாரும-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திட துணையாவோம் இன்றே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்