Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
பட்டிணியால் வாடும் வன்னி மண்
பட்டினியால் வாடும் வன்னிமண்...

வன்னி மண்ணில்
வரவைத்த படடினியில்
வாடும் தமிழ் மதலை
விலாவில் தெரிவது
எலும்புகளல்ல...
ஈழத்தமிழர்களைக் காக்கத்தெரியாமல்
இவர்களை வைத்துப்பிழைக்கும்
ஈனத் தமிழர்
எண்ணிக்கைதான்...!


-செண்பக ஜெகதீசன்
விஜயநகரி.
பட்டினியால் வாடும் வன்னி மண்

வன்னி மரம் சூழ்ந்த
வனப் பகுதி இப்போது
வறுமை தாண்டவமாடும்
வரலாற்று அவலமாய்...

வளமையைப் போர்த்திய
வன்னி மண் இப்போது
வறுமையை வளர்க்கும் நிலையில்....

போரை நிறுத்தச் சொல்லி
ஊரை நம்ப வைக்க
உடனுக்குடன் அறிக்கைகள்-ஆனால்
தடவாள உதவிகளைத்
தயங்காமல் செய்கின்ற
தறிகெட்ட கேவலச் செயல்கள்.

ஆலமரமாய் வளர்ந்த
அரசியல் இயக்கம்
அன்றாடம் தமிழினத்திற்கு
அல்லல் தருவதில்
தன் நிழலில் கூட
நஞ்சைச் சேர்ப்பதை
நாளும் நடத்துகிறது.

புலிகளை ஒழிப்பதாய்ச் சொல்லிப்
பசுக்களை அல்லவா
பாடாய்ப் படுத்துகிறார்கள்.

சொந்த மண்ணிலே அகதிகளாய்
வெந்த புண்ணிலே வேதனைகள்.
நொந்த மனங்களுக்கு விமோசனம்
வந்து சேராத என்ற எதிர்பார்ப்புகள்.

வன்னி மண் தமிழினத்தை
வாழவைக்க வேண்டும்.
இன்னல் களைந்தே
இனிமையைப் பயிர்செய்ய வேண்டும்.

-சித.அருணாசலம்
சிங்கப்பூர்.
பட்டினியால் வாடும் வன்னிமண்.

ஆதிச் சிங்கள வழித் தோன்றல்
விஐயனும் தோழரும் வந்திறங்கிய
தாமிரவர்ணி, தம்பிரவர்ணி,
தம்பபன்னி, அல்லது தம்மன்னா.
வர்ணி – வன்னியாக மருவியது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு
வன்னி மண்ணென ஆகியது.
தன்னிறைவு கொண்ட நிலமது.

‘சிந்த்’ லிருந்து விஐயனும் தோழரும்
வந்திறங்கிய இடம் சிலாபமென்ற கெலவற்ற. சிந்த் சக கெல
சிங்களம் என்று ஆனது.
ஆறாயிரத்து ஐந்நூற்றி எண்பது
கிலோமீட்டர் பரப்பு வன்னியில்
ஐந்துஇலட்சத்து ஏழாயிரம் மக்கள்.
குந்தியிருக்க இடமின்று பட்டினியில்.

சிறுநிலப்பரப்பிலின்று பெரும் தொகையினர்.
சிறகொடித்த வாழ்வு சித்திரவதையுள்.
சிரிப்பிழந்த பட்டினி வாழ்வுப் பரப்பு. சிதைந்த உடலங்கள் நாற்புற மண்ணில்.
தும்பிக்குச் செய்யும் கொடூர வதையாய்
கம்பிவேலி மிருக வதைக்குள் மனிதர்.
நம்பி நடக்க முடியாத அதிகாரம்.
தேம்பும் இதயம் அளந்த வரையறையுள்.

அலை கடல் ஓடி உழைத்தார்.
வலை விரித்து மீன் பிடித்தார்.
நிலையாக வளமாக வாழ்ந்த மக்கள்.
நிலம் கொத்தி பயிர் வளர்த்தார்.
குலம் செழிக்க வயல் விதைத்தார்.
நலம் நிறைந்து வாழ்ந்த மக்கள்
கோலம் மாறியிருப்பது அவலம்!
காலம் நல்ல பதில் சொல்லும்!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-04-2009.
துடிப்பு
---------------

மூச்சடங்கி இருப்பது உயிர்
கண்களுக்குத்தெரியாத
உணர்வுகளினூடு இழைவது
சில முரண்களுக்குள்ளும்
சில சுவாத்தியங்களினூடும்
இணைத்து இணைத்து இன்னும்
இளைத்து விடாத ஒன்று
தானாக பிரிந்து விடத்துடிப்பதும்
வாழுகின்ற போது ஒரு துளி இன்பத்தையும்
பருகிவிட எத்தனிக்கும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கிராகதர்கள் ஒரு கூட்டமாய்
உயிர் பறிக்க அலைவதும் கனைப்பதும்


சில காட்டிற்கு நடுவில் சில ஆகாயத்தில்
சில தற்கொலையால் சில பெரிய மனிதரால்
கத்தியால் துப்பாக்கியால் கோடரியால் நெருப்பால் சதியால் விரக்தியால் பொதுமென்றாகி தானாகி

ஆனாலும் வாழத்துடிக்கிறது கண நேரமெனினும்
உயிர்.

இளைய அப்துல்லாஹ்
இங்கிலாந்து (லண்டன்)
பட்டினியால் வாடுவது வன்னிமண்

பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே

ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சென்னை 24
தமிழீழத்தின் விசுவாசிகள்

தேசியம் கதைத்தார்கள்
இறுதிப்போருக்கென
நாட்டுக்காய் - ஓடி ஓடி
பணம் சேர்த்தார்கள்

முத்தமிழ் விழா
பொங்குதமிழ்
மாவீர்நாள்
முன்னுக்கு நின்று நடத்தினார்கள்

தமிழீழம் எங்கள் மூச்சு என்றார்கள்

இப்போ - தம்
பிழைப்பிற்காய்

தலைவர் இருக்கிறார் என்று
ஏமாறும் ஏமாளிகளை ஏமாற்றி
சேர்த்துவைத்த நிதிப்பணத்தை
மனைவியின் பெயரிலும்
மாமனின் பெயரிலும்
கானி வாங்குகிறார்கள்
வீடுகட்டுகிறார்கள்
கோயில் வாங்குகிறார்கள்
வட்டிக்குக்கொடுக்கிறார்கள்
வேறும் என்னவெல்லாமோ வாங்குகிறார்கள்??

ஒரு கணம் ஏனும் சிந்தித்தார்களா?

போரினால் முழுதையும் இழந்த
வன்னி மண்ணையும்
மக்களையும்
முன்னாள் போராளிகளையும்ஜெயதா,சுவிஸ்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்