Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மே தினம்
மே தினம்.

உழைப்பின் ஊதியம் இளைத்தது.
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்.
களைப்பில் மனிதர் வளைந்தனர்.
சளைக்கவில்லை பலர் விழித்தனர்.
நுழைந்தது கேள்விகள் - கொதித்தனர்.
விளைந்தது போராட்டம் - குதித்தனர்.

சிக்காகோ, நியூயோர்க் பொஸ்டனீறாக
அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்.
நோக்கம் நிறைவேற போராட்டம், சிறை.
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி.
உழைக்கும் நேரம் எட்டுமணியாக
உரிமையை போராடி வென்றனர்.

தொகுதியாய் கூட்டங்கள் உரிமைபேச
தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று.
எப்போதும் பணத்தில் குறியானவர்கள்,
தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள்,
எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ பலருக்கு மே தினம்!


கோவைக்கோதை.
ஸ்கன்டிநேவியன்.
2-4-2009.
மே தினம்...

உழைப்பால் உருவாகுது
உறைவிடம்-
பறவைகளுக்கு...
சிறக்கும் வாழ்வு
சிந்திடும் வியர்வையால்-
மனிதர்களுக்கு...
உழைப்பின் உயர்வுக்கு
ஒரு தினம்-
மே தினம்...!


செண்பக ஜெகதீசன்.
விஜயநகரி.
அபகரிப்பு
-----------------

எனக்கான பாதையில்
தலை குனிந்தபடி நடக்கிறேன்
என்னைச்சுற்றிலும் ஒலிகள்
மனித அழுத்தங்களை இறுக மூடிய படிக்கு
சுதந்திரமாக
என்னை நடக்க விடுங்கள்

என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
தொந்தரவு செய்வதற்கென்றே வருகிறார்கள்

ஒரு நிமிடமும் என்னைத்தனிமையில்
ஏகாந்தமாய் என் மனதோடும்
அந்தரங்கங்களோடும் இருக்க விடுகிறார்களில்லை.

மௌனம் எனது மொழியாய் இருக்கையில்
தொந்தரவு அவர்கள் மொழிகளாய் இருக்கின்றன

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?
பரமபிதாவே இவர்களைச்சபியும்
என்னை தொந்தரவாளர்களிலிருந்து இரட்சியும்

அழுத்தங்களற்ற ஒழுங்கான சுதந்திரமான
பூமியொன்றை நோக்கிய
பயணத்தில் என்னை
நோக்கியபடிக்கு பயணிக்க விடுங்கள்


இளைய அப்துல்லாஹ்
மே தினம்

வேர்வை சிந்திடும்
தொழிலாழிகளை
உற்சாகப்படுத்தும் நாள் - ஈழத்தின்
காவலர்களை
இரத்தம் சிந்திடும் போராளிகளை
"தீவிரவாதி" என்ற போர்வைக்குள்
போர்த்திவைக்கும்
உலகநாடுகளில்
இன்னமும் - ஏன்
இந்த மேதினக் கொண்டாட்டம்

பிரியா
மே தினம்

விரைவில் வந்திடும் மே தினமே-ஈழ
விடுதலை வேண்டுது நம்மனமே
வரையிலா துயரமும பட்டோமே-அரக்க
வடவரின் செயலால் கெட்டோமே
கரையில் நின்று அழைத் தாலும்-நம்
காதில் சத்தம் நுழைந் தாலும்
திரைகடல் நீந்தும் தூரமதான்-அங்கே
தினமும் மரண ஓலமதான்

உழைப்பவர் போற்றும மேதினமே-இவ்
உலகம் போற்றும் மேதினமே
பிழைப்பை வேண்டி உலகெங்கும-இன்று
பிரிந்த ஈழர்துயர் நீங்கும்
ஒருநாள்
தழைக்க ஈழம் தனிநாடாய்-ஈழத்
தமிழனை வாழ்த்த நனிஏடாய
அழைக்க வந்திடு மேதினமே-அதுவரை
அமைதி காணா எம்மனமே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

எத்தனை
வியர்வைத் துளிகள்
திருடப்படுகிறதோ...
அல்லது
திருடப்பட்டுக் கொண்டிருக்கிறதோ

முன்னைற்றம்-எங்கே
எங்கள் தொழிலாளர்களுக்கு...!


ஞா.மகேஷ்
அரங்கம் குப்பம்
பழவேற்காடு 601205
ஒரு பொருளை உருவாக்குபவன் தொழிலாளி....!

அவனை ஒரு பொருளாய் உபயோகிப்பவன் முதலாளி....!!

தொழிலாளியின் வியர்வை
தங்கத்தை காட்டிலும் மதிப்பானது...!
வைரத்தை விட ஜொலிப்பானது....!!
முத்தை விட அழகானது.....!!!
இம்மூண்றையும் முதலாளிகளுக்கு சொர்ப்பனமாக்கி தந்துவிட்டு சொப்பனம் காணும் தொழிலாளர் தான் நாம்.

-பா.பாதுஷா,இந்தியா
உலகெங்கும் தொழிலாளர் உண்டு-அவர்
உயர்வுக்கு வழி செய்தல் நன்று ...

ஏற்றம் அடைந்திட வேண்டும்-அவர்
ஏழ்மை அகன்றிட வேண்டும்

பாடுபடும் தொழிலாளி-அவர்
பாரினில் உயர வேண்டும்...

ஆ.தமிழ் இனியன்
தொழிலாளத் தோழனின்குரல்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உலகின் படைப்புக்கள் எங்கள்
உழைப்பெனும் உளியால்
செதுக்கபட்டவை....

இரத்தமும்,வியர்வையும்
விலையாக கொடுத்து
கல்லிலும்,மண்ணிலும்
கலைபொருள் தந்தோம்....

வியர்வை துளிகளை
ஒன்றினைத்தே...
பேரணிகண்டோம்!
மே தின பேரணிகண்டோம்.

குரு.இளங்கோ, இந்தியா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்