Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
குருடாகிப்போன சர்வதேசம்
குருடாகிக்போன சர்வதேசம்

தமிழர்க்கோர் நீதி
மற்றவனுக்கோர் நீதி - என
பொய்யும் மெய்யும் கலந்துரைத்து
நீதிக்கோட்டின் விளிம்பில் இருந்து
வழுக்கி விழுந்து
இறுதியில் குருடாகிப் போனது
சர்வதேசம்

ப்ரியா, கனடா
குருடாகிப்போன சர்வதேசம்.

உண்மையின் பாதச் சுவடுகள் கண் முன்னாலேயே அழிக்கப்படுகிறது.
பொய் இறக்கை கட்டி உலகில் ஒய்யாரமாய்க் கொடிகட்டிப் பறக்கிறது.
உலங்குவானூர்தியில் அவர்கள் உலா சென்றார்களாம் வன்னியில்.
இறுதிப் போர்க் களத்தில் மக்கள் வாழ்ந்த சுவடே இல்லையாம்!
குருடாக இருந்து ஈழவர் இதயத்தை வருடாத ஆதரவற்ற உலகச் செயல்,
கருடனாக எம் அருமைச் சுதந்திரத்தைக் கபளீகரம் செய்யும் செயல் கொடுமை!
சட்டங்கள் இருந்தும் சதுரங்கமாடி திட்டமிட்டதாக குறிப்பிட்ட
நாடுகள் கட்டும் பொய்க் கதைகள் ஐயகோ!
சுட்டுவிடுகிறது எம் இதயத்தை!
குழந்தைகளுக்குப் பெற்றவர் இல்லை!
பெற்றவருக்குக் குழந்தைகள் இல்லை!
அங்கமிழந்து மன ஆரோக்கியம் பங்கமான எம்
ஈழ உறவுகள் கம்பி வேலிக்குள் மந்தைகள் போல.
கருணைக்குப் பெயர்போன புத்தரின் அடித் தொடர்பாளர்கள் செய்யும்
கருணையில்லாக் காடைத்தனம் அங்கு!
ஆதியிலிருந்து அடி தொடரும் அருமையான மூளைச் சலவையால்
அடிப்படைப் பிரச்சனையை விளங்காத அகிலம் தப்புக் கணக்குப் போடுகிறது.
இத்தனை மக்கள் இறந்தும் உலகம் எதுவும் நடக்காதது போலக்
கண்மூடி நாடகமாடுவது இலங்கையில் அவர்கள்
சுரண்டக் கனிவளமில்லை என்பதால் தானே!

வேதா.இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க்.
குருடாகிப்போன சர்வதேசம்

எரிகின்ற நெருப்பில்
எண்ணை ஊத்தாதே!
எம்மண்ணில்
சுயலாபமில்லாமல்
மௌனமாகிய
உலகமே!
பதில் சொல்வாய்
ஒருநாள்!
எம்தேசம் எழும் மீண்டும்
எம்மறவீரர் பிறப்பர்
வெற்றி மாலை சூடுவர்

கரிகாலன், கனடா
குருடாகிப்போன சர்வதேசம்...

சாகும் தமிழனைப் பார்த்து
சக தமிழனே
சந்தர்ப்பவாதம் பண்ணும்போது
சர்வதேசம் குருடாகிப்போனதில்
சங்கடம் எதற்கு...!


செண்பக ஜெகதீசன்,
விஜயநகரி.
இந்தியா
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என்றோம்,
லெமுரியாவிலிருந்து,
சிந்துவெளி நாகரிகத்திலிருந்து,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
தமிழ்க்குடி என்றெல்லாம்
பழம்பெருமை பேசுகிறோம்.
மறு கன்னத்தை காட்ட சொன்னவர்கள்தான்
சிலுவைப்போரை நடத்தினார்கள்.


உலகப்போருக்கான ஒத்திகையா?
என்று என்னும் வகையில்
நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன்
சொந்த மண்ணில்
பீரங்கி தாக்குதல்,
செல் வீச்சு,
கொத்து குண்டுகள்,
வான்வெளி தாக்குதல்,
பாஸ்பரஸ் குண்டு வீச்சுக்கள்
என்றெல்லாம் தமிழ் இனத்தை
பூண்டோடு அழித்தொழிக்க
சிங்கள இன வெறிக்கூட்டம்
ஆட்டம் போட்டாலும்,
புவி சார்ந்த சர்வாதிக்க போட்டி என்று
உளுத்துப்போனவற்றை பிதற்றி
மனித நேயத்தை தொலைத்து விட்டது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பொய்யானதா?


புத்தம் போதித்ததுதான் என்னவென்று
வரும் தலைமுறை கேட்டால்
செம்மணியை சொல்வதா,
செஞ்சோலையை சொல்வதா,
தமிழ் ஈழத்தின்
ஒவ்வொரு பகுதியும்
தாக்கப் படும்போதுதான்
உலகத் தமிழர்களுக்கு
தமிழ் ஈழத்தின் வரை படம்
மனக்கண்ணில் பதிந்தது.
தாக்கப்பட்டப் பகுதிகள்
அத்துணையும்
தமிழனுக்கு சொந்தமானது
என்று சிங்களவனே
உலகோருக்கு
சொல்லி விட்டான்.


போர் இன்னும் ஓயவில்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்கிவிட்டதாக எக்காளம் இடுகிறதா சிங்களம்?
அச்சத்தின் உச்சியில் நின்று
உண்மைகளை மறைக்க முயன்று தோற்கிறதா?
தமிழர் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன்
உரிமையை மீட்டிட
ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும் தருணம் இது.
எல்லா வகையிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும்
போராட்டம் தொடரவேண்டும்.


இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை.
இமைப்பொழுதும் மறக்க இயலாதவை.
விதைக்கப்பட்டவை வீர விதைகள்.
தமிழர் நம் நெஞ்சில் உரமானவை.

கதிரவன், தமிழ்நாடு
குருடாகிப் போனதா--சர்வதேசம்

குருடகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம்
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதனை

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்