Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
என்றும் அன்புடன்..
என்றும் அன்புடன்...

ஊஞ்சலில்
ஒன்றாயிருந்த பந்தம்-
நினைவில்...,
காலனாய் வந்த
காலம் பிரித்ததில்
என்றும் அன்புடன்
ஏங்கும் இதயங்கள்-
நனவில்...!


செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
என்றும் அன்புடன்..

என்றும் அன்புடன்
என் அப்பப்பாவின் பாசம்,
என்றும் அன்புடன்
என் அம்மம்மாவின் ஆதரவு,
என்றும் அன்புள்ள பெற்றோர்
என் உறவுக்காரரின் உறவு
இன்றும் தேனாக இனிக்கிறது
இந்தப் புலத்து வாழ்வில்.

பாந்தமான தென்றல் காற்றோடு
அந்த மாமர ஊஞ்சல்,
அழகிய எனது கிராமம்,
ஆலயத்தோர மணல் மேடு,
சுழன்றோடும் ஓடை நீர்,
நலமாக என்றும் அன்புடன்
பலமான தென்பு தருகிறது.
நிலவு விரிக்கிறது மனதில்.

வேதா. இலங்காதிலகம்
18.06.2009
என்றும் அன்புடன்..

உனக்கென ஒரு குடும்பம்
உன் கணவன்
உன் பிள்ளைகள்
என்றானதும்..

இப்போது நினைக்கிறேன்..

அன்பு தம்பியாக
உன்னோடு வளர்ந்ததுக்கு பதிலாக
உன்னில் வளர்ந்திருக்க கூடாதா என்று..


பாரதிமோகன், இந்தியா
என்றும் அன்புடன்
இருக்க வேண்டும்
என்றுதான் நானும் நினைக்கிறேன்...

பாழாய் போன இந்த கோபம்
எப்படிதான் வருகிறதோ...

காலை நேர பரபரப்பில்...
அலுவலக டென்ஷ்னில் ...
நினைத்தது நடக்காமல் போகும்போது...
என்பதோடு மட்டுமில்லாமல்
இன்னும் எத்தனையோ..
சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம்
என் கோபத்தால் காயப்பட்ட
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

பாரதிமோகன் இந்தியா
என்றும் அன்புடன்

மானசீகக் கவிஞனின் கையெழுத்தானதால்
மடிப்பு கலையாமல் இன்னும்
மணக்கும் பெட்டிக்கடியில்
‘என்றும் அன்புடன்’ வார்த்தைகள் தாங்கிய
கைக்குட்டை,.,.,.,.
கடைசி நாள் சொல்வெட்டுகளாகும்
ஆட்டோகிராப் டைரிகளை
அலசி ஆராய்ந்ததில்
‘என்றும் அன்புடன்’ என்பதாகவே
ஏராளம் முடிந்திருக்கின்றன,.,.,.,.

கைதட்டல்கள் விசில்கள் எனத்துவங்கி
கைக்குட்டைகளையும் முந்தானைகளையும்
கண்ணீரில் நனைத்து முடிக்கும்
இயக்குனர்களின் இறுதிக் காட்சிகள்
‘என்றும் அன்புடன்’
என்பதாகவே முடிக்கப்படுவதேனோ,.,.,

திருமண வாழ்த்தோ பிறந்தநாள் வாழ்த்தோ
வந்த படமோ வரப்போகும் படமோ
அரசியலுக்கோ அட ஆன்மீகத்துக்கோ
விடாப்பிடியாய்ச் சுவரொட்டிகளை
விட்டு நகர மறுக்கிறது
‘என்றும் அன்புடன்’

இந்தக்கவிதைக்கான பூச்செண்டோ
மலர்வளையமோ விமர்சனமாய்
மின்னஞ்சல் கதவு தட்டுகையில்
என் விழிகள் இறுதிவரிதேடி அலையும்
‘என்றும் அன்புடன்’ எதிர்பார்த்து

-சரவணவேல், சிங்கப்பூர்
என்றும் அன்புடன்..

அண்டை வீட்டு
ஊஞ்சலில்
நாம் இருவரும்

ஆடியது
உனக்கு நினைவுள்ளதா ?

இது போல்
படம் பிடிக்கவில்லை

ஆனாலும்
மனச்சுவரில்
தொங்கிக் கொண்டுதானிருக்கிறது

உன் கணவன்
உன் குழந்தைகள்
உன் வீடு
என்று
நீ மட்டும்
ஆடிக்கொண்டிருக்கிறாய்
நானும் இல்லை
ஊஞ்சலும் இல்லை

சகோதரியே...
உன்
திருமணச்சடங்கில் கூட
ஊஞ்சல் இருந்தது

அதன் பிறகுதான்
தொலைந்து போனதோ ?

-ரா.கணேஷ்
சென்னை
என்றும் அன்புடன்

காதலின் பரிச்சயதிற்கான
காலத்தின் பரிசு நீ.
அன்புத் தூரிகையால
அழகான ஒவியத்தை
இதயத்தில் தீட்டியவன் நீ.
வாய் வார்த்தைகள் எல்லாம்
வருடுவதாகவே வந்துநிற்கிறது.
என்றும் அன்புடன் என்று
என்னை எண்ண வைத்தவன் நீ.

-சித.அருணாசலம்.
சிஙகப்பூர்
கள்ளமில்லாத சிரிப்பு
கவலையில்லாத வாழ்வு
நீயும் நானுமாய்
கூடிக் குதூகலித்த எங்கள் குடும்பம்
இன்று............
நீயும் நானும்
வெல்வேறு தேசம்
நிறத்திலும் மொழியிலும்
நமக்குள் பேதம்
.....................
மீண்டுமொருமுறை
குழந்தைகளாக........
ஒரு தாய் வயிற்றில்
..............
காத்திருக்கிறேன்
என்றும் அன்புடன்

சியானி
அச்சுவேலி
என்றும் அன்புடன்...

பேசித் தீர்த்து விடு உன் கனவுகளை
உன் கண்ணீரை மடைதிறந்தது போல்-
தோள் கொடுக்கத் தோழனாய்
தவறிச் சரிகையில்
தாங்கிக் கொள்ளும்நண்பனாய்
நாளைக்கு இருப்பேனோ இல்லையோ நேற்றைக்கு இருந்த என் அன்னையும், அப்பாவும் உன் தாயும் தந்தையும் தொழுகையிலேயே குண்டடிப்பட்டார்கள் வீடுசென்று சேருமுன்னே என் இருப்பும் அப்படியே குறைந்தபட்சம் உன் வலி தெரிந்தவனாய் உயிர் பிரிதல் எனக்குப் பிடித்தமே!

அப்துல் ஹமீத்
என்றும் அன்புடன்...

கடல்கனவுக்குள் மிதக்குமோர் வெற்றுப்புன்னகை
அறிவாயா என் உடன்பிறப்பே!
நீயில்லா இடைவெளியில்
நிறைந்துபோன நம்மூர்ச்சேதிகளை.

அள்ளியிறுக்கிய புத்தகப் பொதியோடும்
புனிதம் பொதிந்த வேதமறையோடும் உன்
சின்னச்சைக்கிள் வாரிலெனைச்
சுமந்தலைந்த
பழமையணிந்த பள்ளிக்கூடங்களும்…..
மத்;ரசாக்களும் ஏன் வாசிகசாலையுங்கூடத்தான்
நவீனங்களின் சோடனைகளுக்குள்
வண்ண மாடங்களாய்…..!

வண்டிச் சில்லுகள் புதையப்புதைய
நேற்றுப் பயணித்த புழுதி ஒழுங்கைகளும்
கிறவல் சகதி ததும்பும் படுகுழிப் பாதைகளுங்கூட
அகலித்த கொங்க்ரீட்டும் காரோடும் கார்ப்பெட்டுமாகி
குறியீட்டுப்பதாகை,கலர்விளக்கோடு கலகலக்குதடா.

அவலம்பாதி ஆனந்தம் மீதியென
உச்சி வெயிலில்கூட உப்புநீர்த் திவலைகளில் முகங்குளிக்க
காலங்காலமாய் கடல்கிழித்தே துறைகடந்த
படகுப்பாதைபோய்…..
சீனச்சுவராய் நீள்பாலம் குறுக்கோடி அதிசயம் பாடுதடா!

தென்னங்கீற்று வளைத்தே நாம் துள்ளும் இறால்குஞ்சுகள் பிடித்த
கடலோரத்து உடைந்த கருந்தோணிகளி;ப்போ
உறுமும் பச்சை நீலப்படகுகளாய்
நிரம்பி நிரம்பி வழிந்தபடியே சுனாமி புகழ் பாடுதடா.
கடும்பச்சைக் கண்ணாடியாய் மினுங்கும்
கன்னாச்செடிகள் உப்புக்காற்றின் மெல்லிசையில்
கலைந்தாடிய கரையோரங்கள் முதலைகளின் பிளந்த வாய்களுக்குள்
சிப்பியாலைகளாய்…..இறால்பண்ணைகளாய்
நச்சு ரசாயனங்கள் கக்கியபடியே கண்ணீர் சொரியுதடா.

தும்பியும் வண்ணாத்தியும் பிடித்திட நாமே
தும்பியாய் வண்ணாத்தியாய் பறந்தலைந்த பசுஞ்சோலைகளிப்போ
கொங்க்ரீட்மரங்களும் இரும்புமனிதர்களுமாய் இறுகியே கிடக்குதடா.
அன்பாலானவனே ….!
அன்றைக்கும் அணில் கடித்த பாதிமாங்காய் ஐஸ்பழம் தும்புமிட்டாயென
எல்லாந்தந்தாயுன் அன்பெனுந் தூயசாற்றை அள்ளியள்ளிப்பூசியே…!
இன்றைக்குங்கூட-
எல்லாமுந் தருகிறாயுன் தகுதிக்கேற்றாற்போலே.
ஆனாலும்…..
கடலாய் கனவிருந்தும் என்னதான் செய்துவிட முடிந்ததென்னால்
ஒவ்வோர் கோடைவிடுமுறையிலும் எம் குடில்நோக்கிப் பறந்து வந்தென்
தோளமர்ந்தே அண்ணாந்து பார்;க்கும் உன்
சின்னக் குருகுகளை நோக்கியோர்
வெற்றுப் புன்னகை சிந்துவதைத்தவிர.

கிண்ணியா எஸ்.பாயிஸாஅலி.
என்றும் அனபுடன்

என்றும் அனபுடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவயா
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே

கட்டிய கணவண் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே
விட்டுப போனது சரிதானா
விதியே எனபது இதுதானா
மெட்டியை காலில் நான்போட
மெல்லிய புன்னகை இதழோட
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில முள்தைக்க
கொட்டும தேளாய் கணந்தோறும
கொட்ட விடமாய் மனமேறு்ம
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காணபதடி
செவ்வண் வாழ்ந்தோம ஒன்றாக
சென்றது ஏனோ தனியாக

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்து சென்றுவிடு
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக
இங்கே நானும தனியாக
இருத்தல் என்பது இனியாக
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி
செய்வாயா--

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
கண்ணே (அபி-எனது மகன் அபிச்செல்லம்)
-----------------------------------------

உறவுக்கு அர்த்தம் தந்த புதுவரவே
சோலையில் பூத்த புதுமலரே
தந்தையெனும் பதக்கத்தை
மணிமுடியாய் எமக்களித்த
மனம் வீசும் மல்லிகையே ...
நெஞ்சத்தில் வஞ்சகமில்லா இன்பச்சிரிப்பே
மாசில்லா மாணிக்கமே ....
குறும்பில் குவித்து வைத்த இரத்தினமே ....
பாசத்தில் பதுக்கி வைத்த பவளமே ....
உள்ளத்துள் பூரணமாய் நிறைந்த கோமேதகமே ....
வையத்தில் வளம்பெற்று
வாழ்விருக்கும் வைடூரியமே....
மழலை மொழிபேசும் மரகதமே....
தளர் நடையில் தரணியாளும் புட்பராகமே ...
குலம் செழிக்க இறையளித்த அருட்கொடையே ....
இன்பத்தில் யாம்பெற்ற பெரும் பேரே .....
இணையில்லா இன்பத்தின் ஊற்றே
எமது நாமத்தை கூறவந்த குறைவில்லா முத்தே
முக்கனிகள் பிசைந்தளித்த இன்பச்சாரே
முத்தமிழின் இசைபொருந்திய
இன்பக் களஞ்சியமே
உள்ளத்துள் இரண்டுற கலந்த எனதுயிரே...


இளையகவி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்