Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
இசை மகன்
மரணம்
இசையை
கொன்றுவிட்து
- இளைய அப்துல்லாஹ்
இங்கிலாந்து - ஹவுன்ஸ்லோ
இசை மகன்

இசைக்கு
புது வடிவம் தந்தவனே
பாட்டோடு நடனத்தை
பல நாடுகளில்
பரவச் செய்தவனே
உன் இசையை
ரசிக்காதோர்
யாருமிலை
எங்கள் கண்ணீர் அஞ்சலிகளை
உமக்கு காணிக்கையாக்குகின்றோம்

-நந்தனா, கனடா

இசை மகன்...

மரணம் என்பது
மைக்கேல் ஜாக்ஸன் என்னும்
இசைமகனின்
மனித உடலுக்குத்தான்...
மனதைக் கொள்ளைகொண்ட
மாமேதையின் இசைக்கல்ல...,
மௌன இசையில்
இதய அஞ்சலி...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.

இசை மகன்

என்றும் எங்கள்
இதயங்களில்
உயிராய்
உணர்வாய்....
சுவாசத்தில்
கலந்துவிட்ட
காற்றாய்...
வாழ்ந்திருக்கிறான்...

இசைமகன்
இவனுக்கு...
மரணம் என்பது
ஆயிரம் முறை வந்தாலும்
வானம் இருக்கும் வரை
இந்த பூமி இருக்கும் வரை...

காற்றின் வாசமே
மனித குலத்தின்
சுவாசமாக இருக்கும் வரை...

உயிரிழந்து போனாலும்- என்றென்றும்
உயிர்த்திருப்பான்
இசை மகன்
இவன்
மரணிப்பதில்லை.

- பாரதிமோகன்
India
இசைமகன். 7-7-2009.

இசைமகன் இசை கேட்டு அசையாத உள்ளமுண்டோ!
விசையாக ஆடினான் - வெகு
விநோதமாய் ஆடினான் - விழித்து
அசைபோட்ட இளையவர்
அசைந்தனர், நகலாக ஆடினார்.

அவன் நிலவு நடையை
பிரதி பண்ணாதார் யார்!
டேஞ்சரஸ், திரில்லர், கிஸ்ரறியென
அறுபது பாடல்களைப் பாடியுள்ளாராம்!
கோடிக் கணக்கில் தானம் செய்தார்!
ஆடம்பர விரும்பியின் நெவலாண்ட் பண்ணை 2600 ஏக்கராம்.

ஏகலைவன் அவனெனக் கொண்டு
எழுந்தவர் பலர் கலங்குகிறார்.
நாகரீகம், போதையில் மயங்கி
சாகசம் செய்வதாய்த் தன்
தேகாரோக்கியமிழந்த இசையரசன்
மெழுகுவர்த்தியாய் உருகினான்.

பாலபருவப் பாசக் குழப்பத்தால்
நாசம் செய்தான் தன் தோலை.
காசும், வாலிபமும் அழியாப்
பசையென்று, நிறம் மாற்றும்
வேள்வியால் சிறுகச்சிறுக உயிருக்குக்
கொள்ளியிட்ட இசைச் சக்கரவர்த்தி.

அற்புத இசைக்கோலம் உலகுக்கு.
நற்தவமாய்த் தன் வாழ்வையாக்காது
போதை நுரையுள்ளே வாழ்வின்
வாதையை மறைக்க முயன்றவன்.
ஐம்பது வயது வரை மில்லியன்களோடு விளையாட்டு.
நல்லபடி அவன் ஆத்மா சாந்தியடையட்டும்.

- பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ், டென்மார்க்.

கூவித் திரிந்த குயிலே
உன் குரலடங்கிப் போனதுவோ?

"பொப்" இசையின் மன்னா, - நீ
போவதற்கு அவசியந் தான் என்ன?
இல்லை
அவசரந் தான் என்ன?

உன்
இசையின் பயணத்தில் - ஓர்
இடைவெளியை ஏன் தந்தாய்?

குரலாலேயிந்த குவலயத்தை ஆள
வருவாரெவரோ உனக்கு நிகராக?

நீ........
இறந்து விட்டாயாம்............
ஆனாலும்
வாழ்ந்து கொண்டுதானிருப்பாய்
இந்த வையகத்தில் "இசை " வாழும் வரை........

-சியானி

மேற்கிலிருந்து ஒரு புயல்

=======ருத்ரா

வலிநிவாரணங்களுக்கு
வழிதேடிப்போகும் பயணிகளே!
ஒலி நிர்வாணத்துக்கு
ஒன்பது விதமாய் உடை உடுத்துவரும்
அந்த "ராஜ கீதம்" உங்களுக்கு கேட்கிறதா?
அந்த பறவையின் சிறகு நிழலில்
சற்று அமருங்கள்.
இசையை உண்ட அந்த பறவை
இறக்கையில்..ஆம்
"இறக்கையில்" கூட‌
அது விரித்துப்பறப்பதை பாருங்கள்.
கிழக்கில் உழக்கை பார்த்துக்கொண்டு
கிடந்தது போதும்.
"கௌபீனம்" கசக்கிப்போட்டு கசக்கிப்போட்டு
வந்த "ஆலாபனை"சங்கீதங்கள் இன்னும்
கிராமத்து கோவணத்து அத்தியாயங்களுக்கு
போய்ச்செரவில்லையே!
மேற்கிலிருந்து ஒரு புயல்...
எல்லா தூசிகளையும்
அடித்து விரட்டிக்கொண்டு
மேற்கிலிருந்து ஒரு புயல்!

கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...
"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...
குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.

எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
ந‌க்கிக்காட்டுகிற‌து அது.
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
ந‌ம்பிக்கையின் மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.

தியாகைய்ய‌ர் ஆராத‌னையென்றாலும் ச‌ரி
செம்ம‌ங்குடியின் தொண்டைக்குழியென்றாலும் சரி
அதில் மைக்கேல் ஜாக்ஸ‌னின்
ஜெண்டை வ‌ரிசையும் க‌ம‌க‌மும்
கார்வையுடன் நூற்கிற‌து.
அந்த‌ திருவால‌ங்காட்டு சிவ‌ன்
மைக்கேல் ஜாக்ஸ‌னாய்
மைக் பிடித்துக்கொண்டு ஆடிப்பாடுகிறான்.
திவ்ய‌மாய் கேட்க‌லாம் வாருங்க‌ள்.

==================================
ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.
< epsivan@gmail.com >
முடங்கிப் போன இசை
--------------------

குரலை நினைத்து
இருமாந்திருக்க வேண்டிய
குயிலொன்று
மயிலின் தோற்றத்திற்காய்
மதிகெட்டது போல,
உருவம் முக்கியமாகிப் போக,
உயர்ந்திருந்த திறமை
ஒரேயடியாய்
முற்றுப்புள்ளிக்குள்
முடங்கிப் போனது.

-சித. அருணாசலம்.
சிங்கப்பூர்.

இசை மகன்

அவன்
கால்களின் வேகம்
கண்களைக் கட்ட
குரலிசை பாய்ந்து
காதினை திருட
பேச்சும் அற்று
மூச்சும் அற்று
உயிரது பிரிந்து
உன்னதம் அடையும் !
அவனுக்கு
எல்லாம் இருந்தும்
எல்லாம் இழந்த
நிலையது ஏனோ?
ஐந்தில் தொடங்கிய
அற்புதம் தன்னை
ஐம்பதில் அடக்கிய
கடவுளின் செய்கை
கொடுமை கொடுமை !
கடவுளும் செய்த
பாவம் இதுதான் !

-அரவிந்த் சந்திரா-{அடையாள எண் : 352 }
இசை மகன்

நிலவு நடை தந்த
பாப்பிசைச் சூரியன் !
அவனுக்கு
மரணமும்
ரணமாகிவிட்டதுதான்
சோகம் !

-அரவிந்த் சந்திரா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்