Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
சே குவேரா
வீரத்திற்கு மரணமில்லை

பொலிவியா நாட்டில் பிறந்தவனே
புரட்சியின் புனலாய் புலர்ந்தவனே
சரித்திரமாக மிளிர்ந்தவனே
சந்தனமாகத் தேய்ந்தவனே

உரிமைப் போருக்கு உரமாய்
உண்மை விடுதலைக்கு வேராய்
உலக விழிப்புக்கு ஆதவனாய்
உயிரைக் கொடுத்த உன்னதமானவனே

சேகுவாரா என்னும் பெயரை
செதுக்கினாய் உலக வரலாற்றில்
உழைக்கும் மக்களின் தலைவனாய்
உன்னை நீயே உருவாக்கினாய்

காலங்கள் காற்றாய்ப் பறந்திடும்
மறைந்திடும் சந்ததி ஆயிரம்
மாறாமல் இருப்பது ஒன்றேதான்
மக்களுக்காக போராடும் வீரமே

- சக்தி சக்திதாசன்
எதிரில் நடக்கும் அநீதிகண்டு
மனம் கொதித்த போதும்,
ஏதும் செய்யாமல்
அமைதியாய் வந்து விடுகிறேன்.
பிறகெப்படி ஆவது
உன் நண்பனாய்?

களத்தில் இறங்கும் கோபத்தில்
கனன்று நின்றபோது,
வாழ்க்கை என்னவென்று
புரியவில்லை உனக்கென்றார்கள்.
தவறுகள் நடப்பது கண்டும்
எதிர்க்குரல் எழுப்பாமல்
தலை குனிந்து
திரும்பிய போது,
புத்தி வந்தது
பிழைத்துக் கொள்வாய் என்றார்கள்.
பிறப்பெடுத்து வந்தது
வெறுமனே
பிழைத்துக் கொள்ளத்தானா?

அநீக்கெதிரான
எங்களின் கோபங்கள்
இழப்புகள் குறித்த
தயக்கங்களாலேயே
வீரியம் குறைக்கப்படுகின்றன!

ஆனாலும்
பத்திரமாய் பதுக்கி
வைத்திருக்கிறோம்
உன் துப்பாக்கியை!
அதை கையிலெடுக்கும் நாளை
எதிரிகள் தீர்மானிப்பார்கள்.
அன்று பிழைக்காமல் போனாலும்,
உன் நன்பனான பெருமிதம்
நிச்சயம் மிச்சமிருக்கும்.

- இளஞ்சிறகு

நீ பிறந்த தேசம் வேறு
உன் மொழி வேறு-
தொழில் வேறு
உனக்கிருந்த ஆவல் வேறு
எங்கோ ஒரு தேசத்தில்
ஏழ்மை தெரியாமல்பிறந்த நீ -
எதிர்முனை ஆள்பவரின்
எண்ணச் சிறைகளை
தகற்த்தெறிந்தாய் வாய்ச்சொற்க்கள்
பேசாமல் உன்
தோள்பட்டைதோட்டாக்கள்
பேசிய வார்த்தைகள்
ஆயிரம்
தொழு நோயாளிகளுக்காய் -
நீ அலைந்த தென்னமெரிக்க
சாலைகளை விட உன்
கனவு மிகநீண்டிருந்தது-
உனக்கிருந்த ஆஸ்துமா கூட
உன்னை தாக்கிய போது
நோய்பட்டிருக்கும்
சுதந்திரமில்லா தேசங்கள்
தேடி சுதந்திரமாய்சுற்றிய நீ
கம்யூனிசம் என்பதன் ஒரே
அர்த்தம்
காம்ரேடு என்பதற்கு
முழு முகவரி
உன் பொலிவிய நாட்குறிப்பு
கூறுவது போல் ஒரு
முடிவற்ற பயணி நீ
உனக்குள் இருந்த போராளி
விழித்த போது உடன் விழித்த
தேசங்களை எண்ண விரல்கள்
போதாது.
நீ பயணம் செய்த பாதைகளில்
இருப்பவை வரலாற்று மைல் கற்கள்.
பிறந்த தேசம் வேறெனினும்
நீபோராடிய நாடு உனக்கு பதவி
தந்தது எல்லாம் தந்தது நீ
தேடிய ஒன்றை தவிற
உலக விடுதலை
காங்கோ காடுகளுக்கும்
உனைதுளைத்த அந்த
கள்ள தோட்டாவுக்கும்
வாயிருந்தால் சொல்லும்
அது பெற்ற
பெறும் பேற்றை.

-மகேந்திரன்.பெ
United arab emirates


சே குவேரா
எனது அகராதியில்
'அன்பு' எனும் வார்த்தை
கிடையாது........
அங்கே 'அம்மா' மட்டுமே
அது பொல் இனி
'போராளி'
எனும் சொல்லும்
கிடையாது........
உன் பெயர் மட்டுமே.

-- சதீஸ்
சே குவேரா !
----------
1928 யூன் பதின்னான்கில்
உலகிற்கோர் புரட்சிகரப்
புன்னகையாய் பூத்தவனே
உலகுக்கு ஒளியேற்ற
உதித்தவனே சேகுவேரா !

ஓருலகம் பற்றி இப்போ
பேசுகின்ற திவ்வுலகு
அன்றே சொன்னானே
சமத்துவத்தில் ஓருலகை
படைத்திடலாம் நாமென்ற
புரட்சிகரத் தத்துவத்தை
உலகெங்கும் எடுத்துவந்து
உலகப் போராளி
ஆனவனே சேகுவேரா !

உலகப் பெருவெளியில்
ஒடுக்குமுறைக்கு எதிரான
புரட்சியின் குறியீடாய்
பிரபஞ்சமேவிய
மாற்றங்கள் தேடிய
உண்மை மாந்தனாய்
உலகெங்கும் பறந்து
புரட்சியைப் படைத்தவனே
உலகம் மக்களுக்காய்
என்ற தத்துவனே சேகுவேரா !

உலகை விழுங்கிவரும்
அமெரிக்க ஏகாதிபத்தியம்
1967 ஒக்டோபர் ஆறினிலே
உன்னையும் விழுங்கியதே
கொலைக் கரத்தின் பிடியினிலே
கொலையுண்டு போனாலும்
கொள்கையின்றும் வாழ்கிறது !

அமெரிக்கா வாழ்வதற்காய்
அப்பாவித் தேசங்களை
சுரண்டுவதும் அழிப்பதுமாய்
இன்றும் தொடர்கிறது
புதிய உலகுதேடிப்
புரட்சிகளும் ஓயவில்லை !

அமெரிக்க முதலைகளின்
சுரண்டற் சொத்துக்கள்
வரண்டு போகிறதாம்
சுரண்டல்கள் நிலைப்பதில்லை
நிதர்சனமாய் தெரிகிறது
உலக மாற்றமொன்று
உயிர் பெறும் காலம் வரும்
உலக மக்கள் மனங்களிலே
உயிர் வாழும் சேகுவேராவே !


மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
சே!
புரட்சியின் புனை பெயர்
நீ இல்லாமல் போய்விட்டாய்
இருந்திருந்தால்
உனக்கும் முடிவு
முள்ளி வாய்க்காளில் தான்
நீ பொலிவிய காடுகளில்
கோழையைப் போல் சுடப்பட்டாய்
அன்று
உன் தம்பிகள் முள்ளிவாயக்காளில்
அம்மனமாய் புதைக்கப்பட்டார்கள்
இன்று
சே புரட்சியின் புனை பெயர்
உன்னை போல தான்
எங்கள் விடுதலையையும்
அழிக்க முடியாது!

-வரன், இலங்கை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்