Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
கறுப்பு ஜூலை
கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்

விக்கிபீடியாவில் இருந்து...
கறுப்பு யூலை 1983. 26-07-2009.

கறுப்பு யூலை 1983, யாரும்
மறுப்பதற்கற்ற பெரும் தொடர் கதை.
பொறுப்பற்ற மனநோயாளர்களால் எடுத்த பெரும்
வெறுப்புடை வன்செயல் ஆட்டம் அது.
நாடித் துடிப்பில் நடுக்கமோட அன்று
ஆடிக் கலவரம் பற்றி எரிந்தது.
கடும் இனத்துவேச மாவட்ட வாழ்விடம்
கழுத்துறை தேயிலை, றப்பர் தோட்டத்தில் நாம்.
காடைக் குழுவினரிடமிருந்து எம்முயிர் காக்கும்
கடமையை உணர்ந்தார் சிங்கள அதிகாரி.;
பாதுகாப்பு விடுதிக்கு எம்மையழைத்துச் சென்று
பத்திரமாகக் காத்திட வாகனத்தோடு வந்தார்.
பார்த்தார் இனிய அதிகாரியெம்மை, இளம் சோடியாக.
பாதி வழியில் அரசபடையால் எம்முயிருக்குப்
பங்கம் வருமோவெனக் கலங்கினார், தடுமாறினார்.
பதுங்கு குழியிலாவது இங்கேயே ஒழிந்திருங்களென்றார்.
என்ன செய்வது! எங்கு ஒழிவது!
எவரையும் நம்பும் துணிவு வரவில்லை.
ஒருவீட்டார் அறியாது மறுவீட்டில் சிங்களருடன்
ஒளிந்திருந்தோம் கிலியுடன் ஆறு இரவுகள்.
கலவர நிலையறிய வெருதாஸ் பிபிசி செய்திக்காய்
கை வானொலி, உணவுப் பொதியுடன்
தேயிலை, றப்பர் காடுகளிலும் மறைந்திருந்தோம்.
தொழிலுக்குப் பயமின்று யாழ் செல்லப் பணித்தனர்.
மூன்று மாத யாழ்நகர் வாசம். அறிவிப்பு
மும்மரமானது வானொலியில் ‘’வேலைக்குத் திரும்பிடுக!’’
மறுபடி பணியேற்க கழுத்துறைக்குப் பயணம்.
மறக்க முடியாத கறுப்பு யூலை அது!
எண்ணிறந்த மக்களுயிர் - உடைமைகள் - வாழ்வு
கண்ணெனும் அங்கங்கள் இழந்தது மாதுயரமே!
அன்று சிறந்த சில சிங்களரும் எம்முயிர் காத்தனர்.
மறக்காத நம் நன்றி பலருக்கு உரியது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
கறுப்பு ஜூலை...

மனித உரிமைகள்
மறுக்கப்படும்
மாதங்கள் எல்லாமே
கறுப்பு ஜூலைகள்தான்...
மனித மனங்களில் பிடித்த
மதம் மாறாதவரை
மாதங்களெல்லாம் கறுப்புத்தான்...!

-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.

புத்தரின் பெயரால்
தமிழனை
சிங்களவன்
உயிரோடு விழுங்க
முடியும்
என்று சொன்ன நாள்.

இனிமேல்
கொழும்பு வர மாட்டோம்
என்று சொன்ன யாழ்ப்பாணி
திரும்பியும்
கொழும்பில் கிடப்பதுதான்
விதி.

எரிந்த வீதிகள்
உடல்கள்
இன்னும் என்னை
கலங்க வைக்கின்றன.

ஆனால் அழிச்சாட்டியத்தின்
வடுவாக கொழும்பு
இன்னும் கிடக்கிறது
புகைந்தபடிக்கு.

- இளைய அப்துல்லாஹ்
இங்கிலாந்து
கறுப்பு யூலை

கறுப்பு யூலையின் விழித்துளி அகல
ஆதவா உன் நெருப்புக் கதிரொளியை
எனக்குத்,தா என் விழிகளுக்குள் குடிவைக்க

வழித்தோன்றலாய் வந்த எமது விருச்சத்தின்
வேரடி மண்ணை நீயும் அறிவாய்
இந்த உலகும் அறியும்
எல்லாள ராசா முதல் யாழ்ழாண்ட
சங்கிலி ராசாவினதும் விழுதுகளாய்
நாடாண்ட மன்னர் குலக் கொடிகளாய்
வேரூன்றி வாழ்கிறோம் ஆதித் தமிழ்குடியாய்

தக தகவென தணலிடும் சூரியத் தேவா
உனக்கும் தெரியும் உலக மாந்தருக்கும் புரியும்
வானுயர்ந்த கருமண்டலக் குடை கட்டி
சிங்கள இனவெறிக் காடையர்கள்
தமிழின மாமிசக் கறி உண்டு
கொழுத்த முதல் நாளே அந்த யூலை

எண்பத்திமூண்டின் கறுப்பு யூலையே
நீ மெளனித்திருக்க
அரச அரங்கின் இனக்கொலைக் களம் உளன்று
கற்பிளந்த தங்கையரும் மார்பிளந்த மாதருமாய்
நிர்வாண மேனியராய் நெருப்பாற்றில் உருக்குலைந்து
சொந்தங்கள் வீழ்ந்து வீதியில் எரிந்திடக் கண்டும்
காங்கேசன் வந்தோமே கப்பலேறி ஏதிலியாய் அன்று

உதிர்ந்த பூக்களை மறக்காத காம்புகள் நாங்கள்
காலாண்டு கரைந்து நூறாண்டும் வரட்டும்
பனித்த கண்களுக்குள் எரியுண்ட எம்மவரின்
ரணங்கள் திரையோடி கிடக்கின்றன
வேரும் விழுதும் கொண்ட காதல்
மண்ணையும் விண்ணையும் முத்தமிட்டே மேவும்
தமிழினம் செப்பனிட்டே வாழுவும்.
கறுப்பு ஜூலை

பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்
செழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதே கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மறவீர் மறவீர் நீரே வெல்வீர்

புலவர் சா இராமாநுசம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்