Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
உயிர்ப்பு
உயிர்ப்பு...

வெடித்துச் சிதறினாலும்
வேறுவேறாய் உடல் சிதைந்தாலும்
உறுதியான மனங்களின்
உயிர்ப்பு அழிவதில்லை..
உயிர்த்தெழுந்து வரும்
உறுதியாய் ஒரு நாள்...!


-செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.
உயிர்ப்பு

என் வீட்டு
வேலியோரமாய்
கூடுகட்டி வாழ்ந்தது
ஒரு பறவைக்கூட்டம்
ஏதேற்சையாக
சிறுவன் எறிந்த
கல்வீச்சுக்கு
இலக்கான கூடு
முற்றாய்
அழிந்தது
ஒரு நொடிப்பொழுதில்

மீண்டும்..
அப்பறவைகள்
கூடுகட்டின
பக்கத்து வீட்டு வேலியோரத்தில்..

பிரியா
உயிர்ப்பு

பிய்த்து எறியப்பட்ட உடலில்
சுவாசம் மறக்கடிக்கப்பட்டாலும்
புதைப்பட்ட சுவடின் தடங்கள்
எவ்வெளியிலும்...
திரும்பும் திசையெங்கும் ஒளிரும்
மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்டவர்களின்
வாழ்ந்து முடிந்த அடையாளங்கள்
உயிர்ப்பாய்....

- துர்கா
தமிழ்நாடு
உயிர்ப்பு:

உன்னுடைய
அழைப்பின்றி
உயிர்ப்பு
இல்லாமல்
கிடக்கிறது.....
என்னுடைய
கைப்பேசி.

- கி.சார்லஸ்
இந்தியா
உயிர்ப்பு. (மூச்சு) 14-08-2009.

தந்திர முள்வேலியுள் பெறும்
இயந்திர வாழ்வு தராது
சுதந்திர வாழ்விற்கு உயிர்ப்பு.

உயிர்ப்பு (காற்று)
விலை கொடுத்து வாங்காத
விலையில்லா ஒளடதம்
மலைப்பிரதேசத்து உயிர்ப்பு.

உயிர்ப்பு. (நறுமணம்)
இயற்கைப் பரிசாம் நல்
உயிர்ப்புடை மலர்களால்
உல்லாசச் சூழல், நல்
உணர்வின் மகிழ்வால்
உயிரும் மகிழ்வடைகிறது.

உயிர்ப்பு. (புது வலிமையடைதல்)
அருவிச்சாரலாக மனிதனை நிதம்
மருவும் குளிர் மொழிகள்
அருமை உறவிற்கு தரும்
விருப்புடை உயிர்ப்பு.

உயிர்ப்பு. (இளைப்பாறுதல், உயிர்த்தெழுதல்)
வேலையில் இடைவேளை,
வெயிலில் அருமை நிழல்,
நாளின் இரவுத் தூக்கம்
பாலைவனப் பசுஞ்சோலை மனிதனுக்கு.
தாளின் புதுப் பக்க உயிர்ப்பு.

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம். - ஓகுஸ், டென்மார்க்.
உயிர்ப்பு

ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றாய் ! – பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனென
பேருனக்கேன் சீச்சீ பிழை !

எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி
அமிழா திருக்கும் அமர்.

ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! – ஏய்த்திடுவாய் !
சீச்சீ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !

தீச்செயலில் தில்லி திளைத்து.
கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்
பங்கேற்றார் தில்லியுடன் பார் !
ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில்
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! – ஈடு
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !


தமிழ்நம்பி
தமிழ்நாடு
சரியான தருணத்தில் வைத்திய சாலை அடைந்த நோயாளி பிழைத்துக் கொள்வது போல - அந்தக் கொடிப்பூக்களும்
உன் கூந்தலை அடைந்ததனால்..,

- முத்துசாமி
தமிழ்நாடு
உடையும் தணலிடை
என் கோலம் சிதையும்
உருக்கோலங்கள் மாறுகின்ற
நரகத்து வாழ்க்கை
மாறும்.

ஒரு நாள் முகாம்
அழியும்
நாமும் வருவோம்
பிறந்து

-இளைய அப்துல்லாஹ்
இங்கிலாந்து

உயிர்ப்பு

யாரோ விதைத்தார்கள்
எப்படியோ முளைத்தேன்
ஆனால்
இப்போதும் நினைக்கிறேன்

கண்டு காணாமல்
எல்லோரும் சென்ற போது....

நீ மட்டும்
நீர் ஊற்றி
உயிர்ப்பித்தாய்...

உனக்குள் இருக்கும் ஈரத்தை
இப்போதும் நினைக்கிறேன்...

-பாரதிமோகன்
தமிழ்நாடு
உயிர்ப்பு

என் காதலை தெரிவிக்க
உயிரை கவிதயாய் வடித்தேன், முழுவதும்.
கவிதையை படித்தவளின் கண்ணசைவிலேயே
உயிர் பெற்றேன் காதலில்.

பொபின்
மும்பாய், இந்தியா
ஒவ்வொரு நேரமும்
நினைவுகள்
உண்ணுடன் சிரித்து விளையாடுகிறது

நீ கோபமாக பேசும்
நேரங்கள் அத்தனையும
என் இதய தாமரைகள்
கருகி கண்ணீர் சிந்தி
கதறி அழுதிருக்கிறது

உ ன் மூச்சு காற்று பட்டால்
உடலில் மின்சாரம் உற்பத்தியாவதாக
உணர்கிறேன்
சில வேளை என் மூச்சு நின்றுவிட்டால்
உண் சுவாசத்தால்
உயிர்ப்பேன்.

அ.தேகதாஸ்
அன்னை என்னும்
மூன்றெழுத்துக்கு
ஈடே
தமிழ் என்னும்
மூன்றெழுத்து

மதிவதனி, இலங்கை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்