Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்
கொஞ்சநாட்களில்
இடிந்து
விழுகின்ற நிலையில்
பள்ளிக்கூடம்.
கான்கிரீட் கட்டிடத்தில்
அரசு மதுபானக்கடைகள்.

- கி.சார்லஸ்
தமிழ்நாடு


பள்ளிக்கூடம்

பெற்றவர் சுமந்த கனவு
முதுகில் புத்தகச் சுமையாய் !
இஞ்சினீயர், டாக்டர்
என்ற
ஏராளமான
எதிர்பார்ப்புகளில் -
குழந்தை
குட்டி போடுமென்ற
ஆசையில்
புத்தகத்தில் வைத்த
மயிலிறகை
மறந்து போனது !

- அரவிந்த் சந்திரா

பள்ளிக்கூடம்

அம்மா என்று
பேச ஆரம்பித்த
பிள்ளை
மம்மி டாடி என்று
தமிழை மறக்க
தேடிச் சேர்த்த
இடம் !

- அரவிந்த் சந்திரா
வெளியேறலின் வலி
---------------------

பள்ளிக்கூடத்தின்
மேற்கூரையில்
ஒரு தனி ஓடு
சரிய தொடங்கிய
தருணத்தில்
எல்லாம் மறந்து
வெளியேறியவர்களை
சரிபார்க்கையில்
மனது லேசாக வலிக்கும்.

விடுபடலின் பட்டியலில்
எடுக்காமல் விட்ட
புத்தகப் பையினுள்
தமிழ்ப்புத்தக நடுவே
இருக்கும் மயிலிறகு
போட்ட குட்டிக்கு
எப்படி அடிப்பட்டிருக்குமோ?

- என். விநாயகமுருகன்
India

ஒரே கோட்டில் தொடங்கினோம்
பந்தயம் முடிக்கையிலே - பல
பேரைக் காணவில்லை
பள்ளிக் கல்வி!

- முத்துசாமி பழனியப்பன்
சென்னை
பள்ளிக்கூடம்...

பசுமை நினைவாய்
பள்ளியில் படித்தது...
பகைமை உணர்வால்
புகையாய்ப் பள்ளிகள்...
புதிதாய்க் கற்றது-
பூமியில் பதுங்கிட...
இனப்படுகொலையை
இவன் கற்றது
எந்தப் பள்ளியில்...!- செண்பக ஜெகதீசன்...
விஜயநகரி.

பள்ளிக்கூடம்

அறிவை
அறிமுகம் செய்யும்
கோயில்...

அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம்

பள்ளிக்கூடம்

நட்பை
விதைக்கும் இடம்...

இங்கே!
பலருக்கு
காதல் வந்து
கைகுலுக்குவதுமுண்டு...!

பள்ளிக்கூடம்

ஏடும்.. எழுத்தும் மட்டும்
அறியுமிடமில்லை

நாம் யாரென்று
நம்மை நமக்குக்காட்டித்து....
மனிதனை
மகானாக்குவதும்...
இந்த பள்ளிக்கூடமே...

பாரதிமோகன்
-சென்னை
*தமிழ்நாடு
பள்ளிக்கூடம்.
----------------------

பேசாமல்
சில
நாட்கள்.
பார்க்காமல்
பல
வருடங்கள்.

மயிலறகுச் சண்டையில்
மனசு உடைந்த நிணைவு.


எப்படி மறக்க முடியும்....?
தொலைத்தது
பள்ளியை மட்டுமல்ல

எங்கோ
தொலைத் தூரம் வாழூம்
நண்பனையும்.


சர்-மதிநா, துபாய்
03-09-09
பள்ளிக்கூடம்...


சின்ன சுட்டு விரல் பிடித்து ஆனா
சொல்லித்தந்த
எனது வாத்தி அக்காவின்
முகம்
30 வருடங்களின்
பின்பும்
மனதில் ஒட்டியபடியே இருக்கிறது
அகலாமல்

இளைய அப்துல்லாஹ்
பள்ளிக்கூடம்

ஒரு காலத்தில்
சந்தோசப்பறவைகளும்
நட்பு பறவைகளும்
குடியிருந்த
நினைவுக்கூடு.


அ.கில்டா சார்லஸ்
தமிழ்நாடு
பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம், கல்விச்சாலை
உள்ளத்தில் அறிவு விதைத்த
கள்ளமற்ற ஞானச் சாலை.
பிள்ளை விளையாட்டுக் களம்.

துள்ளிக் குதித்த ஆனந்தக்களம்.
கொக்கான்வெட்டு, கெந்தியடி
மாங்கொட்டையடி, கோலாட்டம்
கும்மியடிகளை எப்படி மறப்பது!

வெள்ளைக்கமலத்துச் சரஸ்வதியை
திருவள்ளுவரை, சமயகுரவர்களை
குருபூசைகளை, திருக்குறள் மனனப்
போட்டிகளை எப்படி மறப்பது!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-09-2009.
பள்ளிக்கூடம்

நாம் கூடும் முதல் கூடம்
பள்ளிககூடம்;
கூடாத செயல் அறியும்
அறிவுக்கூடம்
அறிவை படைக்கும்
தொழிற்க்கூடம்
பள்ளிக்கூடம்
கலைஇ அறிவு பலபாடம்
பயிலும் கல்விக்கூடம்
வாழ்வின் முதல் கூடம்
அங்கே
நம் அறிவு கூடும்.

-இராசுபாதன்

பள்ளிக்கூடம்

பிள்ளைகள்
பள்ளியில் சேர்ந்து
பாடங்கள் கற்கும் முன்
பள்ளியை நடத்துவோர்
கற்றுத் தேர்ந்தனர்,
"பள்ளிக்கூடம் ஒரு
பணம் காய்ச்சி மரம் " என்ற
பாடத்தை !

- அரவிந்த் சந்திரா-
அடையாள எண்:352
இந்தியா

சாதி இல்லை
மதமும் இல்லை
உள்ளிருந்து
கேட்கிறது.

சாதி சான்று
இலலாவிட்டால்
சாகும்வரை
படிப்பு இல்லை.

அய்யருக்கு பக்கத்திலே
அப்துல்காதர்
அவனுக்கு பக்கத்திலே
அந்தோனி-இருந்தாலும்

ராமரை தரிசிக்க
ராவுத்தரால் முடியாது
அல்லாவை தரிசிக்க
அந்தோனிக்கு உரிமையேது.

வேற்றுமையில் ஒற்றுமையாய்
இருக்க சொல்லுராங்க
வேற்றுசாதி பயலென்று
ஒதுக்கிவச்சி கொல்லுறாங்க

இருந்தாலும் குழந்தைகளே
இனியொரு விதி செய்வோம்
இணைந்தே பணிசெய்வோம்
இதயத்தை வென்றிடுவோம்

- கருவி பாலா
சிங்கப்பூர்
பள்ளிக்கூடம்

முதுமையில் மறதி என்னமாய்ப் படுத்துகிறது!
நேற்று நடந்தது இன்று நினைவில்லை; ஆனால்
'பள்ளிக்கூடம்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே
மனம் குதூகலிக்கிறது, தேனுண்ட வண்டாக!

பள்ளிக்கூடத்தை நினைத்த மாத்திரத்தில்
ஒன்றன் மேல் ஒன்றாக
அலைஅலையாய் மலரும் எண்ணங்கள்!
அடுக்கடுக்காய் தோன்றும் சிந்தனைகள்!
இக்கணம் நடந்தது போல்
துளிக்கூட மறக்காமல்
துல்லியமான நினைவலைகள்,
முப்பது வருடங்கள்
முடிந்தோடிய பின்னரும்!

கண்களில் எதிர்காலம் குறித்த
வண்ண வண்ணக் கனவுகளை ஏந்தி
மனக்கவலை ஒரு சிறிதுமின்றி
பட்டாம் பூச்சிகள் போல்
சிறகடித்த காலமல்லவா அது!

அறியாப் பருவத்தில் மலர்கின்ற நட்பில்
ஆதாயம் தேடும் கள்ளத்தனம் இல்லை;
ஆத்மார்த்தமான அன்பு என்றதும்
பட்டென்று நினைவிற்கு வருவது
பள்ளிக்கூடத் தோழி மட்டுமே!

By 'கலா'
பள்ளிக்கூடம்

நாங்கள்
பள்ளிக்கு செல்லும் முன்பு
எங்கள் தோல்பைகளில்
புத்தகங்களை எடுத்துவைக்க
மறந்தாலும் ,
சாப்பாட்டு தட்டுக்களை
எடுத்து வைக்க மறப்பதில்லை .,
ஆம்
நாங்கள் சத்துனவின்
ரசிகர்கள்தான் !!

ப.சங்கர், துபாய்
பள்ளிக்கூடம்

வேற்றுமையில் ஒற்றுமை....

"ஜாதிகள் இல்லையடி பாப்பா.."
பாடம் நடத்தினார்
ஆசிரியர்....
ஒரு பிரிவு மாணவர்களை
ஒதுக்கிவிட்டு....

ராஜா,இந்தியா
பள்ளிக்கூடம்

செருப்பில்லாக் கால்களும்
எண்ணெய் இல்லாச்
சிகையுமாய்
கனவுகள் சுமந்தக்
கண்களுமாய்
யாராக ஆக
இங்கே பயிற்சி?

**
விதைத்த உழவனும்
ஊன்றிய விதைகளும்
ஒன்றாக இருப்பினும்
நாற்றங்கால்களில்
நிமிர்ந்து முளைத்ததில்
பயிர்கள் நான்கு
பதர்களும் நான்கு
விதையில் குறையா?
விதைத்தவன் தவறா?
கூரைக்குள் இருந்த
காற்றில் தவறா?
புரிந்துக் கொள்வதற்குள்
தலைமுறை மாற்றம்.

அப்துல் ஹமீத்,
வில்லிவாக்கம்
சென்னை
பாகற்காய்த் தீவுகளுக்குள்
சிட்டுக்குருவிகளின் சிறைவாசம்


உயரப்பிடித்த குடையுள்ளும்
உச்சி வெயிலின் உப்பு மழை
உள்ளோடி நனைக்க, வீடேகிய வேளையிலும்
மீண்டும் தேடுது பள்ளியையே மனவலைகள்.
ஓவ்வோர் சீருடைத் தேன்சிட்டுகளின்
தேனிதழ்க் குறுநகையின் பின்னேயும்
விரிந்து கிடக்குது சோக சரித்திரங்கள் தனித்தனியே
கண்ணீர் சமுத்திரங்களாய்.
பூச்சியப் பலனாய்
கலாசாலை கல்லூரிப் பயிற்சிநெறிக் கலைத்திட்டங்கள்.
துளிர்களின் துயருணர முடியாப் பட்டங்களைத்
தூக்கிப்போட,குப்பைத் தொட்டிகள் வழிந்தோடுது
சாக்கடைதேடி.
உள்ளங்களை ஊடறுக்கத் திராணியற்ற
உளவியல் கற்கைகள்
எரிந்த காபன்முத்துகளாய்
குவிந்து கிடக்குது வெற்றுக் காகித அட்டைகளில்.
உளி நாம்-
உரோஞ்சல் காணா எம்முனைகள்
செதுக்கிய சிற்பங்கள் எங்கனம்
சீர்மை பெறும்?
பசித்திருக்கும்; மௌனக்குரல்கள் ஓங்கியொலிக்கும்
அறைகளின் கணங்களுக்குள்
எப்படி முடிகிறது எம்;மால் மட்டும்
எமதான ஈற்றுணாக்களின் உச்சங்களை உயரமாக்க?
மணியோசையில் விரல் சுளுக்க
வெண்தூசில் கண்குளிக்க
வாழ்க்கையெனும் அரும்பதம் மட்டும்
இடைவெளியான சொற்கூட்டங்களோடு
பாகற்காய்த் தீவுகளுக்குள் இந்தச்
சிட்டுக்குருவிகளின் சிறைவாசம்.
வாருங்கள்! அறிவியலின் நிறைவுகளுக்குள்
வெற்றிடமாகிக் கிடக்குமெம் மூளையச் சிற்றறைகளை
வேதமொழிகளாலும் கொஞ்சம்
நிரப்பிப் பார்ப்போம்.அப்போதுதான்
ஈரலிப்புக்காய் வரிசையிட்ட எமதான
வெற்றுப் பொன்குவளைகளுள்ளும்
வார்த்திடலாம் மிகத் தாராளமாய்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
பள்ளிக்கூடம்

தண்ணிர் குடிக்க
தனி குவளை
ஒவ்வொறு பொழுதும் தண்ணிர் குடிக்கும்போதும்
ஜாதியை நினைவுப்படுத்தும்
என் பள்ளிக்கூடம்

பந்தர்.அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை
பள்ளிக கூடம்


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-தலைப்பூ
சொல்லிய வார்ப்புக்கே முதல்நன்றி

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர்தாமே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட
கனிவாய் சொல்லல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பும மறைவது எந்நாளில்

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதர்
எனவே
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
பள்ளிக்கூடம்

இன்று............
முகம் தெரியாமல் போய்க்கொண்டு இருப்பவர்கள்
மாணவர்கள் மட்டுமல்ல,
ஆசிரியர்களும்தான் . . .(?)

சங்கிலிராஜ் .ம ,ஜெகதாபி ,கரூர்
இந்தியா
பள்ளிக்கூடம்

கல்வி
மனிதனை எந்த பேதமில்லாமல்
மனிதானகவே பார்க்க வைக்கும்
அறிவு கண்கள்

சிவலிங்கம் இந்தியா
வகுப்பறை
------------------

முழுவதையும் முறையாக கற்றோன்
கல்வியை கசடற கற்றோன்
தேர்வறை வசம்
கண்ணியமாய் ,பவ்வியமாய்
கைக்கடிகாரத்தில் கவனம் கொண்டு
சிந்தைக் கருத்தை
சீர்வரிசையாய் அடுக்குவான் .


அரைகுறைக் கற்றோன்
அங்கும் இங்கும் அலைப்பாய்சல்
ஒரு மதிப்பெண் அறிய
ஒட்டக சிவிங்கியாய் கழுத்து நீட்டம்
துண்டு சீட்டு நொட்டியாடும்
பறக்கும் படைக்கண்டு
உள்ளத்துள் பறையடிக்கும்
நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும்
கரம் பட்ட கைக்குட்டை
அடிக்கடி முகம் உரசும்
உடம்பில் உஷ்ணம் ஏறும்
கால் தட தடக்கும்
கைகள் தட்டச்சுபுரியும் .

ஒன்றும் படியாதான்
ஓரக்கண்ணால்
ஒத்திகைபார்பான் (ஜன்னலில் )
கடை வியாபாரம்
கடந்து செல்லும் பேருந்து
அவ்வழி நடக்கும் இளம் நங்கை
அருகே செல்லும் அவளின் தங்கை
அன்று புதிதாய் வெளிவந்த
அரைகுறை உடையுடன்
திரைப்பட போஸ்டர்
கழியாத நாளிகையைக் கண்டு
கடுகி கைகடிகார நோட்டம் .இளையகவி
பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்
சிறந்ததொரு பள்ளி கூடமானது,
இரவில்
வீடில்லா ஏழைக்கு.

-சங்கர் மாரிமுத்து
பள்ளிக்கூடம்

பள்ளி ஒரு ஆலமரம்
அதில் குருவியாக
மாணவர்கள் பழமாக
கல்வியை கொண்டு செல்வோமே

-கார்த்திகேயன்
நண்பர்களோடு நாட்கள்...
நரகத்தை மறந்து மூன்று நாட்கள்....
வீட்டை மறந்து,வினா தாளை மறந்து திரிந்த கல்லூரி வாழ்வின் மறக்க முடியாத மூன்று நாட்கள்...
இதற்காக ஏங்கியது எத்தனையோ நாட்கள்...
கை கூடும் நேரத்தில் சில கலவரங்கள்...
மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்...
தோழனோடு கவலையின்றி கலமாடிய நாட்கள்...
எண்ணும் போதெல்லாம் எதனையோ தொலைத்தது போல ஏக்கம்....
மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்....
இன்ப சுற்றுலா...

-குணா,இந்தியா
முதல்......
அடி..
படிப்பு
அழுகை
பிரிவு
நட்பு
ஆகியவை
துவங்கிய இடமும் முடியும்
இடம் பள்ளி .....

கார்த்திகா,தமிழ்நாடு
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்என்னும் கருவறையில்
பூவாய் மலர்ந்து தேனாய்வளர்ந்து
ஜாதி மாதம் இனம் என்று எதையும் பாராமல் ஒரு பூஞ்சோலையாய் இருந்த நாம் ஒரு தனி தனி பூவாக பிரிந்தோம் என்று

-புவனாசக்தி
படிப்பதற்கு இலவசமாக
புத்தகங்கள் மட்டுமல்ல. .
பழகுவதற்கு இலவசமாக
உள்ளங்களும் குவிந்து கிடக்கிறது
எங்கள் கிராமத்து பள்ளிக்கூடத்தில்

-கோ.சின்னத்தம்பி,இந்தியா
விடுமுறை தினங்களில் கூட
பள்ளி செல்ல முடியவில்லையே
என்று ஒருவித ஏக்கம்

மதிய இடைவேலையில்
வழங்கும் ஒரு நேர
சத்துணவிற்காக...

அபு பக்கர் சித்திக்,இந்தியா
கனவுகளை
சுமக்கும்
உலகத்தின்
மறுபெயர்
"பள்ளிக்கூடம்".

-செ.சேதுராமன்
பள்ளி என்ற களைக்கூடம்-நம்
வாழ்வைச் சிறப்பிக்கும் அன்றாடம்
சிலையாய் நம்மை செதுக்கும்- நல்ல
கலையாய் நம்மை ஆக்கும்

-B செல்வா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்