Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
அந்த ஒரு நாள்..
அந்த ஒரு நாள்..

கரும் மை பூசிய இரவு
மருண்ட கண்களுடன்
பாத்திருந்தேன் - இல்லை
காத்திருந்தேன்

வரவில்லை அவன்

கடிகார முட்களும்
இன்னமும் தம் பந்தையத்தை
விட்டுக்கொடுப்பதாய் இல்லை
என் கண்களும்
அவையோடு போட்டியாக
ஓடிக்கொண்டே இருந்தது

அவன் படுக்கையின் இடைவெளிகள்
இன்னமும் நிரப்பப் படாமல்
அவன் அறைகள்
குளிர் காற்றால் நிரம்பி வழிந்திருந்தது

நிசப்தத்தை குலைத்துக்கொண்டு
பனிகள் மூடிய சாலையோரத்தில்
தள்ளாடித் தள்ளாடி
வந்து கொண்டிருந்தது
அந்த வண்டி
என் மகனின்
துயரச் செய்திகளோடு..

எதிக்கா, கனடா
அந்த ஒரு நாள்..

பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாய்,
தீவிரமாகத் தம்பட்டம் அடிபடுகிறதே,
தீந்தமிழே இதைக் கேட்டால் வெட்கமுறும்!

எரிகுண்டு, நச்சுவாயு வீசி மக்களை
மரிக்கவைத்த அந்த ஒரு நாள்,
பெரிசும்சிறிசுமாய் இருபதினாயிரத்திற்கும் மேலான
அரிய உயிர்களை எடுத்தது அன்பின்வாதமா!

தினம் ஆள்கடத்தல், வன்புணர்ச்சிகளின்
கனம், கொள்ளையடிப்பு, அகிம்சைவாதமா!
அரசதீவிரவாதம், அரசபயங்கரவாதம்
உரசாத பரவச ஆட்சியா நடக்கிறது!

அந்து ஒரு நாள் மட்டுமல்ல
வந்த பல தசாப்தங்களாக நம்மைக்
கடந்த இனவாதக் கொடுமைகளையடக்க
நடந்த போராட்டத்தாலெழுந்த முட்கம்பி வேலியது!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-10-09
அந்த ஒருநாள்...

வேலிகள் விழாதிருந்த
அந்த ஒருநாள் நினைவு
ஆட்டிப்படைக்கிறது மனதை...
முழுதும் இன்று
முள்வேலிகள்...
நிலத்தில் மட்டுமல்ல-
நெஞ்சிலும்தான்...!

செண்பக ஜெகதீசன்
அந்த ஒரு நாளில்

உருகிப்போகும்
மெழுகல்ல...

உடைந்து போவதற்கு
கண்ணாடியும் அல்ல..

உருக்குலைந்து போக
நாங்கள் ஒன்றும்
உருவ பொம்மைகள் அல்ல

வெட்ட வெட்ட தழைக்கும்
வாழை
சாம்பலிலும் முளைக்கும்
பீனிக்ஸ்

முடிந்துவிட்டதாக
எண்ணாதே...!

ஈழத்துக்கனவு
விடியும் ஒருநாளில்...!

மடிந்துவிட்ட
எங்கள் உறவுகளின்
உயிர்களை உறமாகக்கொண்டு
எழுவோம் ...
மீண்டும் எழுவோம்...!

அந்த ஒரு நாளில்
ஈழம் தனி நாடாகும்

ரத்தம் சொரிந்த
எங்கள் பூக்களின் வேர்களில்
சிங்களத்து பூமி புதைக்கப்படும்

பாரதிமோகன்
அந்த ஒரு நாள்....

முன்னொறு தடவையிலும்
நான் நினைத்ததில்லை
அந்த ஒரு நாள் பற்றி..

எல்லா முனைத்தாக்குதல்களும்
என்னை நிராயுதபானியாக்கி
பந்தாடிய அவலம்
அந்த ஒரு நாளில் தான் அரங்கேரியது

முதற்தடவையாக
மிக நீண்ட பிரயத்தின் பின்னர்
என் காதலுக்கு சம்மதம் சொன்னாய்
எல்லாம் அழித்து உன்னையும்
தன்னுடனயே அழைத்துச் சென்றது
அந்த நாள் பற்றி...........
என் கண்ணீர்த்துளிகள் நினைத்துப்பார்க்கிறது.

நாச்சியாதீவு பர்வீன். இலங்கை.
மறக்கவொண்ணா நாள்

உன் பிறந்த நாள் காலையில்
மஞ்சள் பூசிய முகத்தோடு
ஈரம் சொட்டச்சொட்ட
என் கன்னத்தில்
ஓடி வந்து
இச்சென்று உன்
எச்சில் தெறித்த
முத்தம் தந்த
அந்த ஒருநாள்
மறக்க முடியவில்லை
என் செல்ல
மகளே!

இளைய அப்துல்லாஹ்
அந்த ஒரு நாள்

கருங்குரங்கு
ஒண்றைகண்ணி
அதிர்ஷ்டகட்டை என
எனக்கு அடைமொழிகள்
எத்தனை எத்தனையோ
கண்டால் ஆகாது
கைபட்டால் மீளாது
சொன்னாலும் தீராது
என வாய்கள் அசைக்கும்
என் பெருமை இசைக்கும்
வாழ்வென்னை துரத்தியது
சாவென்னை ஒதுக்கியது
மொத்தத்தில்
கண்ணாயிரங்களும்
பல்லாயிரங்களும்
தொடர்தென்னை ஒறுத்தியது
அந்த ஒரு நாள்
பிடிப்பில்லா வாழ்க்கையும்
பிடித்துப்போனது
மரத்துபோன சொற்களும்
மறந்து போனது
என்னவர்
புறப்பார்வை இழந்தாலும்
என் அக அழகை
கண்டெடுத்த கணத்திலே!!

சத்தியசுகன்யா சிவகுமார்
பனிமூடிய வேளை...!

எங்களுக்குள் உறவுகள் வளர்த்தோம்
ஏற்றத்தாழ்வு எங்களை விலக்கின
ஏங்கினோம் சேரமாட்டோமா என
எங்களுக்குள் ஓருதயம் பிறந்ததே!

முள்வேலிகள் தாண்டி நாம்
முதுகினைக் கிழித்துக்கொண்டேனும்
முன்னே வரமுடியும் எங்களுக்கும்என
முத்துப்பனிகொட்டும் வேளையில் நாம்...

எங்கள் உறவுகளைப் புதுப்பித்தது
எவரும் விழிக்காத அந்தப்பொழுது
எங்களுக்குள் பல வார்த்தைகள் உதித்தன
எவரையும் குறைகூறாமல் பனிதுதித்தோம்

ஒன்றைப் புரிந்துகொண்டோம் நாம்
ஒட்டுமொத்தமாய் பனிபடர்ந்தால்
நன்றாக வாழ்வு மலருமே என்று -ஆம்
நமது சாதி சமூகக்கண்களை மறைக்குமே!

பன்னீர் தெளிக்கவேண்டிய பொழுதுகளிலும்
பன்னீராய் இரத்தமே எங்கனும்
குன்றுங்குழியும் கடந்து இவ்விடம்வந்தோம்
கனத்தது உள்ளம் இப்பொழுதினைக்கண்டு!

வேலிகள் தாண்டிவிடுவோம் நாம்
வெற்றிகள் எமைஆளும் நாள்எதிரே
கோலியெடுப்போம் சாதியின் சதி
கொடியசைத்து மனிதம் எம்மிலென்போம்

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - இலங்கை
அந்த ஒரு நாள்..

பனிப்பெய்த ஒரு இரவும்
அதிகாலைக் குளிர் புல்லும் சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயரத்திலோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க
நார்போல வந்துவிடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்

எஸ்.நளீம்
அந்த ஒரு நாள்
கொஞ்சம் நினைவில்லை...
நெற்றி முழுதும் வியர்வை போல்
ரத்தம்.
பிண வாடைகளே
சுவாசிக்க தரப்பட்டது.
குழந்தைகள் எல்லாம்
விழிக்காமல் உறங்குகின்றன
இன்று வரை..
ஓடிய பாதையில்
எங்கும் கலவரம்.
பாதையில் இருட்டு.
வாழ்கையிலும் தான்..

சுடச் சுடச் சூரியன் வந்தான்.
கைகள் கட்டப்பட்ட
அடிமைகளை கண்டான்.
என்ன அவலமென்று
அவன் அன்றோடு மறைந்தான்.

சக்தி, இந்தியா
அந்த ஒருநாள்

அந்த ஒருநாள் அறிவீரா-அவர்
அழைத்தால காண வருவீரா
சொந்த மண்ணாம் தனிஈழம்-உலகம்
சொல்ல வளமே நனிசூழும்
நொந்த மக்கள் கொண்டாட-அவரை
நேகச் செய்தார் திண்டாட
வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர்
வாழ்ந்த முறையை நிறைவேற்ற
காண
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந்திடுவோம்

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
அந்த ஒரு நாள்..

தன் பட்டுணிதனை பெரிதென
கொள்ளாள் என் தாய்
என் பசி தீர்த்து
முகம் மலர்ந்து கிடப்பாள்
இருந்தும்
என் தாயிலும் மேலாய்
இயற்கை தாயை
நான் அதிகளவு நேசித்தேன்

அந்த ஒரு நாள்
என் கண் முன்னே
இன்றும் விரிகின்றது
தண்ணீருக்கும்
தாகம் எடுத்ததை கண்டேன்
பூமிக்கும்
பசி வந்ததை கண்டு துடித்தேன்
ஆயிரம் அயிரமாய்
பல்லாயிரம் ஜீவன்களை
நாடு நாடாய் புகுந்து
அள்ளி தின்டுவிட்டு
ஏதும் அறியாதவள் போல்
கிடக்கிறாளே இயற்கை தாய்
இவள் தாய் அல்ல
பேய் என
அந்த ஒரு நாளில்
உணர்ந்துகொண்டேன்.

வல்வை சுஜேன்
அந்த ஒரு நாள்

கண்களை வெட்டிய மின்னல் போல்
கணப்பொழுதில் விழிகளோடு
கலந்து போன அவள் பார்வையும்
கவிதை சொன்ன அவள் விழிகளும்

ஆம் அந்த ஒரு நாள் !

நெஞ்சினில் சுரந்த உணர்வுத்துளிகள்
நிறைத்திடும் இதயத்தை இன்பத்தினால்
நினைவினில் மீட்டிடும் சங்கீதம்
நித்தமும் வாட்டிடும் ஏதோ உணர்வுகள்

ஆம் அந்த ஒருநாள் !

வந்து வந்து போகும் நாட்களில்
வராது வந்தது அந்த ஒருநாள்
வஞ்சியவள் கண்களில் விழுந்த நாள்
வாலிபத்தை என்னுள்ளே வரைந்த நாள்

ஆம் அந்த ஒருநாள் !

வருடங்கள் பறந்தன காற்றாய்
வசந்தங்கள் மறைந்தன பலவாய்
வாடாத நினைவாய் அந்த ஒருநாள்
வாழ்ந்து கொண்டேயிருக்கும்

சக்தி சக்திதாசன்
அந்த ஒரு நாள்
-----------------------

இன்று எனக்கு
அருந்தக் கிடைத்தது
ஒரு கோப்பை
கசந்த தேநீர்தான்

தாய் ஊரில் இல்லாத போது
அருந்துகின்ற
தேநீர் கூட
கசப்பாய்தான் இருக்கிறது

உம்மா
எனககு நீ ஊட்டாத
தாய்ப்பாலின் சுவை
எப்படி இருக்கும் உம்மா..?

குழந்தையாய்
உன் மடி மீது கிடந்து
நான் அழுத போதெல்லாம்
நீ ஊட்டிய
புட்டிப்பால் கூட இப்படித்தான்
கசப்பாய் இருந்தது உம்மா

அந்த ஒரு நாள்
நான் பிறக்காமலே
இருந்திருக்கலாம்


ஸமான்
¤

*நான் பிறந்த போது என் தாயின் மார்பில்
பால் சுரப்பு இருக்கவில்லையாம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்