Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
என் காதல் கவிதையும் நீயும்..
என் காதல் கவிதையும் நீயும்..

தினம் கவிதை கேட்கிறது
உன் இதழ்
உடனே தந்தும் விடுகின்றன
உன் கண்கள்
எழுதத்தான் மனமில்லை
வெற்று மைக்கொண்டு
உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை.

கண்ணன், தமிழ்நாடு
என் காதல் கவிதைகள்...

கண்ணே உன்னைக்
கண்டவுடன் என்
எண்ணத்தில் பறக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்-
காதல் கவிதைகளாய்...
காதல்தந்த என்
கவிதையே நீதானே...!

செண்பக ஜெகதீசன்
என் காதல் கவிதையும் நீயும்..

அன்பே..
நானும் நீயும் வாழ்க்கையெனும்
ஓடத்தில் ஏறினோம்
ஓடம் கரை சேர்வதும் சேராததும்
எம் கையிலே..
அதற்குள்ளே
காதல் கவிதைகள்பாடி
உன்னை நான்
கொச்சைப்படுத்த விரும்பவில்லை
ஏனெனில்
கவிதைகள்..
வெறும் வார்த்தைகளே

எதிக்கா, கனடா
என் காதல் கவிதையும் நீயும்

விழியால் விதைத்து
இதழில் மலரும்
இனம்புரியாத குதூகலிப்பு
கனவுக்கானல் நீரில் நீந்திக்கடந்தேன்
அவள் ஒலி கேட்க
காது மடல்கள் தவமிருக்கும்
உணர்வுகள் உந்தித்தல்ல
உடல் மட்டும் ஏனோ
கல்லாய்ப்போக
உள்ளலை அடிக்க
ஓடாமலே மூச்சு வாங்க
உனதுருவம் எண்ணியதும்
எனதியல்பை இலக்க
உனைக்காண எனைத்தடுக்கும்
எனது இமை மீது கோபம்.

இரா.சதீஷ்மோகன், இந்தியா
என் காதல் கவிதையும் நீயும்.

உன்னை நோக்கிய
எனது தேடல்களில்
எஞ்சியது
என் காதல் கவிதைகளும்
உன் நினைவுகளும் தான்.
எனக்குள் எதிர் பார்ப்புகளை
ஏற்படுத்தியது போலவே
ஏமாற்றத்தையும் தந்து விட்டீர்கள்
என் காதல் கவிதையும் நீயும்...

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.
எழுத்தாய் உதிரும் நாம்

மனதில் அடைகாத்து
உயிர்த்தெழுந்து பறக்கும்
அக்கவிதையிலிருந்து
தன்னை விடுவித்து வீழ்கிறது
இறகுகள் - அது நான்
மிக மென்மையாய் காற்றிலசைந்து
அது உன் கைக்கெட்டியதா
உதிரி எழுத்தாய்
என்னைத்தான்
உதிர்த்துக்கொண்டுமிருக்கிறேன்
கண்டுகொண்டாயா
உன் பெயரில் என் எத்தனை எழுத்துக்கள்
இப்படியாய் நம்மைக் கலைத்துப்போடும்
அழகு இலட்சணங்களிலிருந்துதான்
நம்மைநாம் வரைந்தாக வேண்டும்
திக்குத்தெரியாத இடத்தில் நீ
நான் எங்கே
ஒரு மலர்ச் செண்டு வாழ்த்து அட்டை
காகிதமாகவேனும்
இல்லையேல்
ஒரு ஈமெயிலாகவேனும் வருவாயா
என் முகவரிக்கு
காத்திருக்கிறேன்
நான் எழுதி முடிக்கவேண்டும் நம்மை

எஸ்.நளீம், இலங்கை.
என் காதல் கவிதையும் நீயும்..

பனிப் பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்.

எஸ். நளீம் - இலங்கை
என் காதல் கவிதையும் நீயும்..

உள்மனதில் உனைத் தாங்கி
உனக்கென நானலைந்த நாழிகைள்
முள்ளாகத் தைக்கிறதின்றும் சகியே
மலரின் மணமென நினைத்ததுதப்பா?

பருவங்கள் பருவதமாயும் குழியாயும்
பக்குவந்தா னில்லாமல் நீண்டதாயும்
புருவங்கள் உயர்ந்துநிற்க நின்றக்காலும்
புன்னகையுன்னில் கண்டது தானெப்போ?

உறவினை யுன்னிலேற்றி யறைந்தேன்
உத்தம விறவினை மெத்தவுரைத்தேன்
புறங்காட்டி யெனையிகழ்ந்தாய் நீ
பேதையுன்னால் பேதையானேன் நானே!

கருவமிறங்கிய துந்தன் பொற்பாதங்களினூடு
கருணாமணாள னென எனையேற்றாய்
உருவிழந்த தென்னில் உயிர்பிறந்ததடி
உயிரில் கலந்தாய் உறவுபூத்ததே யுன்னால்!

நாழிகைகள் அந்தோசென்றிட நிமிர்ந்தாய்நீ
நீயென்ன பேறாறோ எனவிகழ்ந்தாய்
பழியெல்லாம் உனிலென்றாய் சுட்டெரித்தாய்
பந்தமிழந்து நாதியற்று எனையிழந்தேன்!

நானாக வில்லாமல் எனில்வளர்ந்துதாடி
நாணினேன் பலவாறு எனையென்னி நானே
தேனான யுன்மொழியே ஒலித்ததெங்கனும்
தேம்பினே னுனையென்னி இப்பொழுதும்!

நமதான இனியபொழுதுக ளொவ்வொன்றும்
நம்மிருவர் சுகங்கண்டு கண்கூசு மப்போது
சுமைதாங்கி நீயென்று யெனையிழந்தேனே
சுடுமணலிலும் உன்நினைவில் நானே!

அழியாத சுவடெனவே நீயென்னில் பெண்ணே
அத்தானா யெனையேற்றாய் அதுவும்நன்றே
ஊழியை நினைந்து உயிர்த்தேன் நானே
உந்த னலைகள் காதல்கவியாயின என்னில்!

கலைமகன் பைரூஸ், இலங்கை
என் காதல் கவிதைகளும் நீயும்

ஒரு பொங்கலுக்கு
வெள்ளை அடிக்கும் போது
என் கையில்
கிடைத்தது
உன் டைரி

ஆணுக்கே உரிய
அவசர புத்தியோடு
அதை மறைத்து
பின்னொருநாளில்
வாசித்தேன்
தனிமையில்

பக்கத்துக்கு பக்கம்
பாதுகாக்கப்பட்டிருந்தது
என் உள்ளம்...
சேகரிக்கப்பட்டிருந்தது
என் காதல்...

கடைசிப்பக்கத்தில் மட்டும்
ஒற்றை வரியில்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது
உன் காதல்...!

"தொகுக்கப்பட இந்த
கவிதைகளின்
ஒவ்வொரு வார்த்தையிலும்
வாழ்ந்து கொண்டிருப்பது
நான் மட்டுமே!

பாரதிமோகன்
சென்னை, தமிழ்நாடு
என் காதல் கவிதையும் நீயும்...

மொழியும் உணர்வும் பின்னிய பந்தம்,
விழியாக வாழ்விற்குக் காதல் சந்தம்.
வழியொன்றில் பயணிக்கும் காதலும் கவிதையும்
அழிவற்று நீளும் வாழ்வு முழுதும்.

தேன் சொட்டும் உன் அன்பும்
எம் காதல் கவிதைகளும் கூடி
வழியும் தேன் ஆறாக ஓட
துளித்துளியாய் கொட்டட்டுமெம் வாழ்வு முழுதும்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-11-2009.
என் காதல் கவிதையும் நீயும்...

01)
யாருக்குமே தெரியாது
உன் மீதான என் காதல்...
உனக்கும் கூட.....

02)
பெண்ணே என்னை நீ
அடிக்கடி எரிக்காதே...
ஏற்கனவே நான் சாம்பல்....

03)
நான் உனக்களித்த பரிசு
காதல்...
நீ எனக்களித்த பரிசு
காயம்

04)
நீ பேசும் வரை
தெரியவில்லை
குழலிசைக்க மூங்கில்
தேவையில்லை என்பது..........

05)
என்னைப்பார்க்கும்போதெல்லாம
பொய்க்கோபம் கொள்கிறாய்...
எனக்குத்தெரியும்
அது கோபமில்லை வெட்கம் என்று..........

06)
காதலியே நிலவில் தண்ணீர் உண்டு
உன் முகத்தில்
வியர்வைத்துளிகள்...

07)
நீ அனுப்பிய காதல்
கடிதங்களை எரித்து விடலாம்
மனப்பாடம் செய்த மனசை எங்கே
போய்த்தொலைப்பது.......

நிந்தவூர் ஷிப்லி, இலங்கை
என் காதல் கவிதையும் நீயும்..

பிறப்பால் உன்னை சார்ந்தது
என் கவிதைகள்.
அது
உன் விழிகளால் வாழ்கிறது
சுவாசிக்கவும் செய்கிறது...
தினம்
உனக்காகவே உயிர்க்கிறது.

என்றாவது உன் இமைகள்
மூடி இருக்கும்....
அந்த ஒரு நாள்
என் கவிதைகளுக்கு இறுதி ஊர்வலம்....

சக்தி, இந்தியா
காதல்

உன் உதட்டின்வாசம்
எனக்குள்
ஒட்டிய படியே இருக்கிறது.
நீ
இன்னொருவனை
முத்தமிட்டாலும்
நான் இன்னொருத்தியை
முத்தமிட்டாலும்


இளைய அப்துல்லாஹ்

மறந்ததை மறக்காமல்…

உன்னை மறந்ததை இன்னும்
மறக்காமல் இருக்கிறேன்
என்னை இழந்தும் இன்னும்
இறக்காமல் இருக்கிறேன்
உன்னைத் தேடி வெளியே
அலையும் கண்களை
எனக்குள்ளே திருப்பி
பஞ்சடையா உன்
பழைய முகம் காட்டி
பசியாற்றுகிறேன்
காணமுடியாதென்றில்லை
அன்று கண்டுகொண்ட கண்கள்
இன்று உண்டு முடித்த களைப்பில்
காணக் கூடாதென்றல்லவா
கழட்டி விட்டன காதலை

உன்னைக் காணா நொடிப்பொழுது
வெடித்தழுத என் நாடி பழுது
பஞ்சு மெத்தை மார்புக்காரி – நீ
நெஞ்சழுத்தக்காரியடி
புதுக் காதல் ரத்தம் மாற்றிக்கொண்ட
இதயத்துக்குச் சொந்தக்காரி

என்னைத் தூண்டிலிட்ட கண்களும்
துவம்சம் செய்த குறுநகையும்
வழியெல்லாம் மறைக்குதடி – என்
வாழ்வையே மறிக்குதடி

நாம் சென்ற வழிப்பாதையெல்லாம்
நம்மை நாம் கடத்திய கதை கூறுதடி
நீ மீண்ட கதை மறைக்குதடி

கவிதைக்கு விதைப்போட மட்டுமா
நீ என்னைக் காதலிச்சே
கொல்லும் கற்பனைக்கு பதிலாகக் காதல்
கொள்ளாமலே போகலாமடி

உன்னை நாடி இதயமது துடித்தாலும் அதை
தாங்கும் நிலை வந்ததடி
அதுவே என்னைக் கொல்லுமடி!

கிருஷ்ணாசேகர்
சென்னை, தமிழ்நாடு
என் காதல் கவிதையும்
உன்னை
மறந்ததை
இன்னும்
மறக்காமல்
இருக்கிறேன்

அசன், இலங்கை
என் காதல் கவிதையும் நீயும்..
செல்லக்குழந்தையாகியே…..!
பரபரத்தலையும் இயந்திரக் கணங்களுள்ளே
அன்பெனும் பொன்விதை
பிதுக்கி வீசப்பட்ட சூனியப் பூமிகூட
ஒரு வெங்காயந்தான்.
உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லாத
இவ்வழுகிய வெங்காயத்திலே
உள்ளீடுகள் செறிந்த உச்சத்து சூரியனாய்….
உள்ளுக்குள்ளே உறைந்து நிறைந்து கிடக்கிறாயே
முழுதுமாய் பூவாகிக் கண் சிமிட்டுமோர்
மல்லிகைக் கந்தாகியே
உன் ஈரப்பூக்களை அள்ளிச் சொரிந்தபடி.
என் திசை பார்த்துச் சொரிந்த
ஒற்றைப்பூவைக்கூட நழுவ விடாத நிதானங்களோடு
சேகரஞ் செய்தனைத்தையுமே
உயிரின் மடல்களுக்குள் நாருரிந்தே
நான் கோர்த்த மாலைக்காகவே
என்னளவுக்கும் குறுகிக் குள்ளமாகியே
சூடிக்கொள்ளத் தலை சரிக்கிறாயோ
நம் செல்லக்குழந்தையாகியே.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி.
இலங்கை.
என் காதல்கவிதையும் நீயும்.,

என் காதல்கவிதையும் நீயும்
என் சுவாசம்.
சுவாசிக்காமல்
உயிர்வாழும்
ஜீவன் எது..?

கி.சார்லஸ், தமிழ்நாடு
என் காதல் கவிதையும் நீயும்..

எழுதாத ஒரு கவிதை எழுது என்றாய்
எழுதவா.....
நீ தான் எந்தன் கவிதை என்று.

பாவி (மெ.பாபுஜி) - இலங்கை
என் காதல் கவிதையும் நீயும்..

ஏடெடத்தேன் கவிஎழுத ஓடிவந்தாய்-அடி
என்னவளே எதற்காக ஊடிநின்றாய்
பாடிநான் முடிப்பதற்குள் வாடிப்போனாய்-என்
பாவுக்கு நீதானே பொருளா யானாய்
தேடியதைபோகாமல் சொற்கள் தாமே-என்னை
தேடியிங்கே வந்துவிட உடனேநாமே
கூடிமகிழ வருவாயா பெண்ணே-இன்பம்
கொள்ளையோ கொள்ளை கவிதைபெண்ணே

இனிமேலும் வேண்டாமே சண்டித்தனமே-நான்
என்றேனும் கோபித்த துண்டாதினமே
நனிமேலும் ஊடியே செல்லவேண்டாம்-அது
நன்மையா அல்லவே எண்ணிலீண்டாம்
கனிமேலும் கனிந்தாலே கெட்டேபோகும்-இது
கதையல்ல தொடர்பின்றி விலகலாகும்
பனிப்போரை நீக்கிவிட நீயும்பெண்ணே-உடன்
பறந்திங்கே வந்திடுவாய் கவிதைப்பெண்ணே

அதிகாலை உன்முகத்தை பார்த்துவிட்டே-என்
அடுத்தபணி அறிவாயா நெஞ்சைத்தொட்டே
புதுமாலை போன்றவளே புரிந்துமேனோ-நீ
புரியாத போல்நடித்தல் நியாம்தானோ
மதுமாலை வருமுன்னர் வருவாய்வீணே-நீ
வருகின்ற வழிபார்த்தே யிருப்பேனானே
இதுகாறும் கூறியதைக்கேட்ட பெண்ணே-உடன்
இனிதாக வந்திடுவாய் கவிதைபெண்ணே

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சாலை சென்னை 24

உன் விழிகளை கண்டு
மறந்தேனடி
இவ்வுலகத்தை
நானும் நீயும்
வாழும் வாழ்க்கையை
உன் விழிகள் தந்ததடி
என் காதல் பெண்ணே!

மணிகண்டன்,தமிழ்நாடு
என் காதல் கவிதையும் நீயும்...

உன்னை பற்றி எழுதும் போது
வார்த்தைகள் வரம்பெறுகிறது
சொற்கள் சொல்லாமலே
தனனை சோடித்து கொள்கிறது
பேனா கர்வம் கொள்கிறது
உலகில் அழகான கவிதை
உன்னை பற்றியதென்று
ஒன்று தெரியுமா
என் கவிதையே நீ தான்.

வேலணையூர்-தாஸ்,இலங்கை
ஒரு ஆண் தனது இரண்டாவது
தாயையும்
ஒரு பெண் தனது முதல்
குழந்தையையும்
தேடுவதே காதல்

-இமாமுதீன் முகம்மது றிஸ்வி
இலங்கை அட்டாளைச்சேனை-02
மனித இதயம் ஒரு வெள்ளை
காகிதம் போலத்தான்.
அதில் கவிதை எழுதிய கைகளை விட,
அதை கசக்கி எறிந்த
கைகளே அதிகம்...

-நந்தகுமார்
மறக்க செல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொல்லைந்த என்னையா
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும் உன் நினைவுகளைய
நினைவுகளையா

-ஏசுமணி அருண்,தமிழ்நாடு
உன்னை அங்கும்
என்னை இங்கும்
பிரித்துவைத்து
விளையாடுகிறது
காதல்...

-றிகாஸ் ஐி
சிலர் காதலை மனதிற்க்குள் புதைத்து வைத்துள்ளனர்!
நான் விதைத்து வைத்துள்ளேன்!
அது வளரட்டுமென்று!

அனுரூப்
கடற்கரை மணலில் பதியும் காலடிபோல..
சட்டென்று என் மனதில் பதிந்தவளே.. ..
புவியீர்ப்பு விசை போல என் காதலடி...
உன்னை பிரிந்திருந்தும் நினைவுகள் உன்னையே நோக்கி ஓடுதடி....

உன் தாய் உன்னை பத்து மாதம் சுமந்தது போல..
பல வருடங்கள் நானும் உன்னை சுமக்க ஆசையடி...
என் உடலின் உயிராக உன்னை சுமப்பேனடி..
நீ பிரிந்தால் உயிரை நானே இழப்பேனடி...

உன் வாழ்க்கை துணையாக வர ஆசையில்லை....
உன் வாழ்க்கையாகவே வர என்னுயிர் ஜீவன் நினைக்குதடி.....
கண்மூடித்தனமான நம்பிக்கை உன்மேல் எனக்கும் உண்டு....
என் கண்ணையே திறந்தவள் நீ என்பதால்....

மல்லிகை பூவை உன் தலையில் சூட மனம் ஏங்குமடி....
உன் கைகோர்க்க உயிர் உன்னை தேடுதடி...
உன் பெயர் உச்சரித்தால் தென்றல் காற்று வீசுமடி...
வாழ்க்கையே நீயானால் வசந்தமே வாழ்த்துமடி...

-குமரேசன்
உன்னை முதன்முதலில் பார்த்தபோது
உன் பெயர்கூடத் தெரியாதெனக்கு
இப்போது இனிஷியல் முதற்கொண்டு தெரியும்.
அழகான பாதங்களில்
செருப்பின்றி நடக்கிறாய்
டைல்ஸ் தரையே ஆனாலும்
வீணாகிறதுன் பாத ஸ்பரிசம்.
கைரேகை சோதிடம் பார்க்க
எனக்குன் மலர்க்கரத்தைத் தருகிறாய்
அதை ஆண்டு அனுபவித்துவிட்டுத்
திருப்பித் தந்த பின்பு சிரிக்கிறேன்
எனக்குச் சோதிடம் தெரியாதென
மோதிர விரலை பூமத்திய ரேகை
எனச் சொன்னபோதே தெரியும்
என்று நீயுஞ்சிரிக்கிறாய்.
ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ.
குடையோ ஒதுங்கிடமோ
இல்லாத பெருமழையில்
தொப்பலாக நனைந்தபோதுதான்
பர்ஸில் உன் புகைப்படம்
நினைவுக்கு வந்தது
அட, உன் புகைப்படமும்
தொப்பலாக நனைந்திருக்கிறதே!
சத்தமில்லாமல் முத்தமே
கொடுக்க வராதா என்று
கிசுகிசுப்பாய்க் கடிந்துகொள்கிறாய்
நாங்களெல்லாம் அப்படித்தான்.
உனக்கொரு கட்டவுட் வைத்து
அதை என் முத்தங்களால்
அபிஷேகம் செய்யும் வரை
ஆறாது இந்த மனது!
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் எனக்காகத்தான் கேட்கிறேன்
அதையும் உன்னிடம் மட்டும்தான் கேட்கிறேன்
அதற்கே இந்த கலாட்டா

-கௌதம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்