Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
விடுதலை வேள்வி
விடுதலை வேள்வி

இருள் ஒதுங்கும் மூலை
அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுருட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
விடுதலை வேண்டி
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி....
அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக் கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்...?

எஸ்.நளீம்
வேள்வி செய்வோம்!

நாள் தோறும்
வேள்வி செய்வோம்
நல்லவர்கள் வாழ்வுக்காய்.

கோள்,பொறாமை,கயமை
இன்ன பிற இழி குணங்கள் மாற
நாள் தோறும்
வேள்வி செய்வோம் ...
பழிபாவம் செய்கின்ற
பாதகர்கள் அழிந்து விட
நாளும் நாமினைந்து
வேள்வி செய்வோம்.

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.
விடுதலை வேள்வி...

மெழுகுவர்த்திகளாய்
மேனி உருகி மறைந்த
தியாக தீபங்கள்
தொடங்கிவைத்த
விடுதலை வேள்வி
முடிந்துவிடவில்லை..
தொடர்ந்துகொண்டுதானிருக்கும்
தீர்ப்பு நல்லதாய்க்
கிடைக்கும் வரையிலும்...!

செண்பக ஜெகதீசன்...
விடுதலை வேள்வி

இளம் தென்றலே!
இளம் தென்றலே தெரியுமா!
இது எமது ஆட்சிக்காய்
இன்னுயிர் ஈந்தவர் ஆலயம்.
முன்னர் ஆண்ட ஆட்சியை
முடியாதெனத் தடுப்போரை அடக்கும்
முனைவில் உயிர் இழந்தோரிவர்.

சாவென்பது தூசு என்றவர்.
சீவுவோம் எதிரி தலையையென
சீறினார் களத்தில் புலியாக.
காவு கொடுத்தனர் தம்முயிரை.
பாவுவோம் அஞ்சலிப் பாக்கள் - மலர் தூவுவோம் மாவீரர் வாழ்கவென.

பரிந்துரை பேசும் பரிதாபம்
விரியாது, புரிந்து போராடும்
தெரிந்த உள்ளத்துணை கிட்டட்டும்!
விரிந்து சுதந்திரம் மலரட்டும்!
உரிந்து காற்றோடு கலந்த
உயிர்கள் சாந்தி அடையட்டும்!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
வேள்வி?


தமிழர் உயிர் 20 ஆயிரம்
வேள்வி கொடுத்துதானே
விடுதலை
முடிந்தது.

இளைய அப்துல்லாஹ்
லண்டன்
விடுதலை வேள்வி

தலைகள் பல அறுத்து
இரத்த வெள்ளத்தில்
தொடங்கியது இந்த
வேள்வி
பல குடும்பங்கள் சிதைந்து
விதவைகள் பலவாகி
அனாதைகள் பலவாகி
விளைவாக
பைத்தியங்களாகி - எம்
உறவுகளிருக்கவும்
தொடர்கிறது மீண்டும்
இந்த விடுதலை வேள்வி..

பிரியா, கனடா
விடுதலை வேள்வி

அனைவரின் வாழ்வும் விற்பனையாகிவிட்டது
மீதம் இருப்பது உடலும் வெற்றுயிருமே!
கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுகளும், தழும்புகளும்
அடையாள சின்னமாக...
நாற்றமே சுவாசமாய்!
ஒவ்வொரு விடியலும்!!!

துர்கா
தமிழ்நாடு
விடுதலை வேள்வி

மெழுகாய் உருகி
உருக்குலைந்து போனாலும்
திரியில் நின்று
கனன்று கொண்டிருப்போம்....

வெட்டி வீழ்த்தி
புதைத்துவிட்டுப் போனாலும்
முட்டி முளைத்து
உயிர்த்து நிற்போம்...

உளியால் உடைத்து
சிதைத்துப்போட்டாலும்
உருண்டு திரண்டு
எரிமலையாய் உருக்கொள்வோம்...

எங்களுக்குள்
எரிந்துகொண்டிருப்பது
ஊதி அணைக்கும் தீபமல்ல
விடுதலை வேள்வி..!

பாரதிமோகன், இந்தியா
விடுதலை வேள்வி

மெழுகுவர்த்திகளாய்
மேனி உருகி மறைந்த
தியாக தீபங்கள்
தொடங்கிவைத்த
விடுதலை வேள்வி
முடிந்துவிடவில்லை..
தொடர்ந்துகொண்டுதானிருக்கும்
தீர்ப்பு நல்லதாய்க்
கிடைக்கும் வரையிலும்...!

விக்னேஷ்
விடுதலை வேள்வி

விடுதலை வேள்வி எதுவென்ற-பிறர்
வினவும் கேள்விக்கு மிகநன்றே
கெடுதலே அறிந்தும மெழிகுவத்தி-ஒளி
கொடுத்திட உருகும் தீயும்பத்தி
கொடுத்த படமே விடையாகும்-வேள்வி
கொண்டனர் தியாக மரபுயென்ன
தொடுத்தவர் பெற்றார் விடுதலையே-நாம்
தொடரக் காணபது கெடுதலையே
என்ன செய்கிறாய் இறைவாநீ-இன்னும்
எதற்கு இருக்கிறாய் மறைவய்நீ
பொன்னைப் பொருளை தேடுவதம்-அதை
போற்றிக் காக்க நாடுவதும்
தன்னை வளர்ப்பது பொதுவாழ்வே-என
தரமிலார் பெற்றனர் புதுவாழ்வே

புலவர் சா இராமாநுசம்
சென்னை- 24
காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....!

ஆளரவம் தொலைத்த
அடர் வனங்கள்
அன்றைக்கு மௌனித்து
மயானம் பூண்டு
ஆட்களற்றுப் போனது.

ஆழகான புற்தரைகளின் பச்சையம்
ஆட்களற்றுத் தனித்த
பனித்துளியின் ஈரம்
குருதித் துளியாகிக்
காயத் தொடங்கியது.

நீங்களும் வெடியாகி இடியாகி
வெளியில் வராத ஒளியாகிப்
போனீரென்றுதான் காலமழுதது.
எனினும் போரின் கறைகள் காயாமல்
கண்ணீரின் ஈரம் தோயாமல்
நீங்களெல்லாம் வனமளப்பதான
வதந்திகளையெல்லாம்
மௌனங்கள் காடேற்றிக்
கடந்தது காலநதி.

உங்கள் நிழலைக் கூடத்
தொட்டறியாத பேயெல்லாம்
உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது
அங்கென்றும் இங்கென்றும்
அறிக்கைகள் கொடுத்தது.

சொல்லியழ முடியாத் துயர்
கண்ணில் நிறைந்தாலும்
வெளியில் சொல்லியழும் தைரியமின்றி
தனிமையில் தொலைந்த நாட்கள்....!

தட்டச்சு விசைப்பலகை வீரரின்
வீணாய்ப் போன கதைக்கெல்லாம்
வாயடைத்து மௌனித்து
காலம் வருமென்றெண்ணிக்
காத்திருந்த காலமொன்றில்
கருவிழி நிறைந்த இருள்.

காலம் மீண்டும் கண்ணீரை
விழியெங்கும் நிரப்புகிறது.
மீண்டும் இருள் நிரம்பி உறைகிறது
வனங்களும் எங்கள் மனங்களும்
மேலும் இருள்கிறது.

காடறியும் பனித்துளியில் - உங்கள்
காற்தடங்கள் கரைகிறது.
ஊரறிய ஒப்பாரி வைத்து
நாடழுத காலங்கள் போய்
மீண்டும் காலமறியாக் கற்பூரங்களாய்
காடுகளில் நடந்தவரே....!

காலமும்மைக் கைபற்றி
வருமொருநாள்
அதுவரையும் காலமறியாக்
கடவுளர் அறியாத காலத்தின்
சுடர்களாய் வாழும் தெய்வமாய்
வாழ்ந்திடுவீர்.


-சாந்தி நேசக்கரம், ஜேர்மனி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்