Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
தேசியம்
தேசியம்

தேச முகடுகள் தோறும்
தேசியம் மலரும் என்று
வாசலை நோக்கியே
வலு இழந்து போனது
வாழ்க்கை.....
இனி எந்த்தத் தேசத்தில்
தேசியம் மலரப் போகிறது

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.
தேசியம்...

மனிதநேயம்
மலராத வரையிலும்
தேசியம் என்பது
தேர்தல் நேரத்தில்
தெருவில் கட்டியவிழ்க்கும்
தோரணங்கள்தான்...!


செண்பக ஜெகதீசன்...
தேசியம்

சடை சிலிர்ப்பிக் கரணமடித்த
சாப யுத்த தாண்டவத்தில்
வாழ்விழந்த
வழியிழந்த
உனக்கெனக்கு
தேசம் எது? தேசியம் எது

நளீம் இலங்கை
தேசியம்.

தேசியம் பவித்திரமானது.
நேசிக்கப்பட வேண்டியது.
காசினாலும், யாரும்
தூசித்தாலும் கூட
நசித்திடக் கூடாதது.
யோசிப்பார் யாரிவ்விதம்!

தேசியம் ஓரினத்தைப்
போஷிக்கும் காவலரண்.
தேசியம் ஓரினத்தின்
ஆசியுடை அடுக்குமாடி.
தேசியம் தெருவில்
வீசிவிடும் விடயமில்லை.

தேசியத்தைஒரு வாசியான வழியாக்கி
காசினைச் சேர்ப்பவர்
பாசியைத்தான் சமூகத்தில்
பரத்துகிறார். - இவர்
தூசிக்குச் சமானம்.

கொடுமைகளைமக்களுக்குக் கொடுத்து
தமிழ்த் தேசியத்தைத்
தடுக்கிறார், அழிக்கிறார்.
குடும்பச் சொத்தாக்கி
குடுமியைப் பிடித்து
கெடுக்கிறார் தேசியத்தை.

வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-12-2009.
தேசியம்

களை களைவதாய் சொல்லியே
தளிர்களின் தலைகளைக்கிள்ளும்
வெள்ளைச் சிரிப்பினுள்ளே
விலங்கின் கோரப்பல் கொள்ளும்
சில்லறையாய் இதம் தூவியே
சிலந்தி வலைச்சிறையாகிக் கொல்லும்
தேசம் பொசுக்கி மீந்ந சாம்பலிலே
தன் நிழற்படம் வரைந்து கொள்ளும்

எஸ் பாயிஸா அலி, இலங்கை.
தேசியம்

தேசமில்லாத
தமிழர்கள்
இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும்
ஒரே வார்த்தை
தேசியம்

நாசுக்கும் மூச்சுக்கும் ஒற்றுமைகாட்டி
நலினமாய் ஒருமையை மேலாக்கி
தாசுகளுக்கு முரிமை தான்வழங்கி
தரணியில் சோபை கொள்வதே தேசியம்!

ஒன்றை விரும்பி மற்றதை யிகழ்ந்து
ஒருவருமறியா முகமூடியொடு வாழும்
தான்தோன்றித்தன தேசியம் வீழட்டும்
தரணியில் நீதியோதும் தேசியம்வாழட்டும்!

விலங்கின மனதினை யுள்வாங்கி
விகற்பங்கள் செயும் தேசியம்வீழட்டும்
நிலையினில் தளரா நீதிமிகு தேசியம்
நிலத்தினி லுயர்ந்து மிளிரட்டும்!

நனிமிகு தேசியத்தை நேசிப்போம்நாம்
நிலத்தினில் பாகுபாட்டினை அழிப்போம்
பனியென மனங்களை ஒன்றிணைக்கும்
புனித தேசியம் பவனிவரட்டுமென்றும்!

கலைமகன் பைரூஸ்
இலங்கை.
எங்கள் தேசம்...

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
நாடென்று பெருமை பேசுகிறோம்..

ஏட்டிலும் எழுத்திலும் மட்டுமே

வீட்டிலும் வீதியிலும்
ஒற்றுமை என்றால்
என்ன விலை என்றே
கேட்கிறோம்...

தேசியம் என்பது
அறியப்படாத
அர்த்தமற்ற வார்த்தையாகவே
அகராதியில் தேடப்படுகிறது..

சுயநலம் என்பது
எங்கள் சூத்திரமாகிப்போனதால்..

வரப்புகளில்லும்
வீட்டின் சுவர்களிலும்
மாநிலங்களின் மனத்திலும்
துளிர் விட்டிருக்கிறது.
பிரிவினை

பாரதிமோகன், சென்னை
தேசியம்

தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்ப்பென்னும தீநம்மை-சுற்றி


புலவர் சா இராமாநுசம்
அரங்கரசபுரம் சென்னை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்