Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
எதையும் தாங்குவோம்
எதையும் தாங்குவோம்.

பட்டுப் பட்டு
பழகிப் போனோம் ..
திட்டு வாங்கி..
திகட்டிப் போனோம்.
சிட்டுக் குருவி
வாழ்க்கை தேடி
சிறுது சிறுதாய்
அழிந்து போனோம்..
இடுக்கண் இனிமேல்
எப்படி வரினும்
எல்லாம் தாங்குவோம்
எதையும் தாங்குவோம்
இப்புத்தாண்டில்....

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.
எதையும் தாங்குவோம்

நீலப் பெருங்கடல்
மென்று பார்த்தது
சில உயிர்களையும்
உடமைகளையும்

நஞ்சகர்களின்
ஏவலால்
சிங்களக் குண்டர்கொண்டு
அரையும் குறையுமாய்
விடுங்கப்பட்டது
மீதிய சில உயிர்கள்

எஞ்சிய உயிர்கள்
வன்னிப்பெரும் இராட்சியத்தில்
ஓரிரு வாரங்களில்
துடைத்தெடுக்கப்பட்டது - இது
எத்தனையோ நெஞ்சங்களில்
வேதனையையும்
ஓரிரு நெஞ்சங்களில்
சந்தோசத்தையும்
அள்ளித்தந்தது

இன்னும் எத்தனை அழிவுகள்
எமை தீண்ட வந்தாலும்
எதையும் தாங்குவோம்
உறுதியான நெஞசழுத்தத்தோடு..

ஜணனி, சுவிஸ்
எதையும் தாங்குவோம்...

கொடுங்கோலர்கள் வெட்டிவிட்ட
குருதி ஆறு ஓடிஓடி
குளிரில் உறைந்து
பனிப்பாறையாய் மாறினாலும்
மாறாது எங்கள்
மனத்து விடுதலை வேட்கை,
அதற்காக
எதையும் தாங்குவோம்..
இதுதான் உண்மை...!


செண்பக ஜெகதீசன்
எதையும் தாங்குவோம்

எதையும் தாங்குவோம்
ஆனால்
தமிழைத் தாழ்த்தும்
தமிழனின் தரங்கெட்ட செயலை
தமிழே தடுத்தாலும் விடோம்

ஒய்யார்ஸி, சென்னை
எதையும் தாங்குவோம்......

மணல்
சரளை
கற்கள்
பாறைகள்
மலைகள்
பள்ளங்கள்
பாலைவனங்கள்
புல்பூண்டுகள்
சோலைவனங்கள்
இதுதான் உலகம்...
இங்கு நாம் நடைபோட்டால்தான்
பாதை பிறக்கும்
உட்கார்நதுவிட்டால்
உன்னைச் சுற்றி புல் முளைத்து
மலர்வளையம் வைத்துவிடும்
அதனால்....
எதையும் தங்கி
நட நட நட

ஒய்யார்ஸி
எதையும் தாங்குவோம்.....

தமிழ் என்பதை கூட
ஆங்கிலத்தில் எழுதும்
தாழ்மை தாங்கினோம்...

தமிழில் பேசினால் கைதட்டும் மக்களை
தமிழ் மண்ணில் தாங்கினோம்...

கடவுளுக்கு கூட
தமிழில் அர்ச்சனை என
கரும்பலகை தாங்கினோம்...

தாங்கி தாங்கி பழகிவிட்டான் தமிழன்...
இனி எவன் அடித்தாலும் தாங்குவான்...


இரா தாமரைச் செல்வன் சேலம்
எதையும் தாங்கும்..!

அப்பாவின் ஒரு
பார்வை..
ஆசிரியரின் ஒரு
அதட்டல்...
அடுத்த வீட்டுக்காரரின்
மிரட்டல்..
ஓசையில்லாத இரவில்
சின்ன பூச்சியின்
ஒலி...
ஓங்கி விசும்
காற்று
ஒரு நொடியில்
வெடித்து சிதறும்
பலூன் சப்தம்..

இப்படியாய்
நீண்டு கொண்டே போன
என் அச்சத்தின் பட்டியல் மாறி

நட்பின் துரோகம்..
பெரிய தோல்வி..
உறவுகளின் இழப்பு..
தடம் மாறிப் போன காதல்..
என எதுவந்தாலும்

இயல்பாய்
இருக்க முடிகிறது
என்னால்..

எப்படிவந்தது
எனக்குள்
எதையும் தாங்கும்
இதயம்..!


பாரதிமோகன்
எதையும் தாங்குவோம்

மனைவியின் நச்சரிப்பு
மகளின் கொஞ்சுதல்
காதலியின் கெடுபிடி
மனேஜரின் கோபம்
நண்பனின் பாராமுகம்
றோட்டில் இன்னொரு சாரதியின்
முறைத்தல்
பனிக்குளிர்
மன வருத்தம்
ஏயார் போட்டில்(எக்ஸ்றே)
நிர்வாண படப்பிடிப்பு
எதையும் தாங்குகிறோம்
ஆண்கள்

இளைய அப்துல்லாஹ், லண்டன்
எதையும் தாங்குவோம்.

அழுதுகொண்டே அகலமீதில் கால்பதித்தோம்
அழுகையே ஆறாக நாளும் ஓடிவருது
பழுதிலாத வார்த்தை யேதேனு மில்லை
பாந்தள்கள் சூழ நாமக்கேதுவிடியல்!

அன்புடையா ரெல்லாம் அந்தோசென்றிட
அச்சமே உடலெங்கனும் பெருநதியாக
இன்பமேது என்று எண்ணிட - என்னுள்
இதமாய் வந்தது எதையும் தாங்கென்று!

எங்கனும் வலம்வந்திட்ட இடுக்கணைநான்
எட்டியுதைத்தேன் என்னுள்நீயேனென்று
பங்கமிலை யின்று பாதைவிரிந்தது
பாரே எனில் அன்போடின்று- அகமகிழ்வு!

நச்சரிப்பும் பாராமுகமும் கெஞ்சுதலும்
நாமடங்கி யொடுங்கி னாலன்றோ!
நிச்சயமாய் எமைத்தாங்கும் நிலம்போல
நாமு மெலாம்தாங்கி மேலெழுவோமே!

பச்சோந்திக ளெங்கனும் சுற்றிநின்று
பல்லிளித்து குளிர்காய நிற்பதுகாண்
நிச்சயமாய் அழி்ந்தொழிவர் -நாமெழுவோம்
நாம்தாங்குவோம் எதையும் -ஒளிவீசும்!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - இலங்கை.
எதையும் தாங்குவோம்

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட

புலவர் சாஇராமாநுசம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்