Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
பாகிஷ்தான் படும் பாடு
பாகிஸ்தான் தேசமே !

சக்தி சக்திதாசன்

முகத்தை இழந்து கொண்டு நீ
முகவரி தேடுதலும் இப்புவியில்
முறையாமோ சொல்

எத்தனை உயிர்களை உன் மண்ணில்
எடுத்துக்கொண்டாய் அரசியலின் பெயரிலே
அத்தனை தாய்மாரின் கண்ணீரும்
இத்தரை மீதினில் வீண்தானோ ?

நாளைகள் சரித்திரத்தை எழுதும் போது
நலிந்து சிதைந்த உயிர்களின் இடத்தை
நிரப்ப எங்கே செல்வாய் சிந்திப்பாய் ...
வெற்றுடல்களால் சரித்திரத்தில் சாதனை
புரிவது சாத்தியமோ சொல் .....

வேண்டாம் இந்த உயிரழிப்பு
வேண்டும் நிரந்தரச் சமாதானம்
மீண்டும் உம்மண்ணில் பசுமை செழிக்க
பூண்டிடுவீர் சமாதான தோற்றத்தை
மக்களுக்கான ஆட்சியை - தனி
மனிதனுக்காக
மரணிக்கச் செய்த
தன்னல ஆக்டோபஸின்
தான் என்ற தான்தோன்றித்தனத்தோடும்!

உற்றறிந்து உளவு கொண்டு
உள்ளமைதிக்கு உதவாமல்
உயிர்க்கொல்லும் உதிரப்பேயாய்
உருமாறிப்போன உளவுத்துறையோடும்!

நகம் வளரும் நிதானத்தோடு
நாகரீகத்தின் படிநிலைகளை நோக்கி
நடைபழகிடுகையில்
நிமிடங்களின் துரிதத்தோடு
நேற்றுகளின் பின்னோக்கி
ஓடத்தூண்டும்
காழ்ப்பின் உச்சமான மிருகநிலையோடும்!

வெடிகுண்டுகளை
மலைப்பிளக்காமல்
மனிதவுடல் பிளக்க பயன்படுத்தும்
படைப்பின் உள்நோக்கம் புரியாத
பாமரத்தனத்தின் தப்பிதங்களோடும்!

நரபலி விரும்பும் நயவஞ்சகக் கூட்டம்
நொடிகள்தோறும் உருக்கொள்கிறது...
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுமென்ற
உண்மை கருக்கொள்கிறது!

கொண்ட கொள்கைக்காக
தன்னுயிர் தருதல் தியாகம்
கொள்கையே பிற உயிரெடுத்தல்
என்பது அசுர யாகம் !

எங்கள்
தேகத்தின் ஒருறுப்பாய் இருந்து
யாகத்தின் பொருளாகிப்போன
பாவப்பட்ட பாகிஸ்தானே...!

வேருக்கு நீர் வார்க்காமல்
கனிகள் மட்டும் உண்ண விரும்பும்
கயமைத்தனத்தின் வெளிப்பாடாய்
குரானின் நற்சொற்களை மறுத்து
நபிகளை மட்டும் நினைவிருத்திக் கொள்ளும்
நயவஞ்சகத்தின் முன்னேற்பாட்டு பூமியே...!

வருத்தத்தின் வாலிப வலிகளோடு
கேட்கிறேன்
இப்போதேனும்
மனிதநேய மலருக்கான
அன்பு விதைகளை - உனது
மனத்தினில் விதைப்பாயா?
ஒரு யுகப் புரட்சிக்கு
முகமாவாயா?

-- இளம்பூரணன்.அர


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்