Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
சூரியத் தேவனுக்கு...
சூரிய தேவனுக்கு...

சூரியனின் சுடுகரங்கள்
வாட்டினாலும் உடலை,
வலிமை பெற
சக்தியைக் கொடுப்பதால்,
சர்க்கரைப் பொங்கலிட்டு
சூரியதேவனுக்கு வழிபாடு-
பொங்கல்...!

செண்பக ஜெகதீசன்...
சூரியத் தேவனுக்கு.....

வணக்கத்திற்குரிய
சூரியனே
இது நாள் வரை
ஆங்கிலேயன்
உன்னை
வருடத்தின் முடிவாய் வைத்தான்

எம் தமிழனோ
உன்னை முதலாய் வைத்து படைத்தான்
தமிழ் வருடத்தை

எம் சூரியத்தேவனுக்கு....
வணக்கம்

ஒய்யார்ஸி
மன்னிக்க வேண்டும் சூரியதேவா.....

உன்னால் தான் உலகம் சூடானது என்கிறார்கள்....
எனக்கு தானே தெரியும்-

கல்லுக்கும் மண்ணுக்கும்
முன்னமே பிறந்த
காலம் வென்ற கலைத்தமிழன்
அதே கல்லிலும் மண்ணிலும்
அடிமைப்படும்
கொடுமை கண்டு கொதித்தது-
எனக்கு மட்டும் தானே தெரியும்....

கவலை வேண்டாம் கடவுளே.....
நாங்கள் அடிகள் வாங்குவது
அழிந்து போவதற்கு அல்ல....
ஆளுவதற்கு.....

அமைதிகொள் நீ.....

தாமரைபாலா, சேலம்
சூரிய தேவனே..

உனக்கு
வணக்கம் சொல்லி
தொடங்கும் நாட்களை
சுணக்கம் இல்லாமல்
சுறு சுறுப்பாய் ஆக்குகிறாய்..

உனக்கும் ஓய்வுகள்
இருப்பது போல் காட்டினாலும்
நிலையாய் நின்றே
உலகை ஆள்கிறாய்..!

சூரிய தேவனே

நெருங்க முடியாத
நிஜமாய்... நின்று
நெருப்பாய் ஒளிரும்
நீ...!

ஒவ்வொரு விடியலிலும்
புத்தொளியாய் வந்து
புத்துணர்வு தந்து
புது ஜென்மம் அளிக்கிறாய்...

சூரிய தேவனே

ஒளிரும் உன்
விழிப் பார்வைக்காய்
தவமிருக்கும் இந்த பூமி
இபோது தவிக்கிறது....

உன் வெப்பம் தாங்காமல்
பூமியின் மேனியில்
வறட்சியின் கோடுகள்
வறுமையின் சூடுகள்

சூரிய தேவனே

நிலங்கள் மட்டுமல்ல
வற்றிய குளங்களுக்குள்
எங்கள் நினைவுகளும்
சுடுகிறது ஞாபகங்களாய்..!

பாரதிமோகன்
சென்னை, தமிழ்நாடு
இந்தியா
சூரியதேவனே!.....

பாரிய பூமி வீரியம் பெற
பேரிருள் நீங்கப் பொன் கதிர்த்
தூரிகையோடு வரும் சூரியதேவனே!
நேரில் அதிக முன்னைக் காணோமே!
வெண்பனி நிறைந்து அதையள்ளி அழைந்து
இன்புறுகிறார் குழந்தைகள் மேற்கில் இங்கே!
துன்பம் தான் பனியால் நடைமுறைவாழ்வில்
அன்றாடம் அவைகள் சொல்லில் அடங்காது.

சூரியதேவனே! பனிக் காலத்திலுன் வருகையால்
உருகும் பனியில் வழுக்கி விழுந்திங்கு
அருமை உயிரை விட்டவரும் உளர்.
ஒருபாதியிலுனக்குப் பொங்கிய பால்சோறு!
பெரும் நன்றியாய் ஆரவார அர்ப்பணிப்பு!
மறுபாதியில் உன் தரிசனமற்ற துன்பம்.
பலம் பலவீனமிகு காரிய, வீரியதேவனுக்கு நன்றியே.

வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ்,டென்மார்க்.
சூரியத் தேவனுக்கு....

சூரியனே நீ கூட ஓவியன்...ஏன்
என்று கேட்கின்றாயா?
நாம் நடக்கையில்....இருக்கையில்
என்று நிழல் வடிவில் ஓவியம் வடிக்கிறாய்.

உனக்கு தூரிகை தேவை இல்லை
ஏன் நீ பூசும் வர்ணம் கூட பகல் ஆனால் சாம்பல்
இரவானால் கறுப்பு..உனக்குள்ளும் எத்தனை வர்ணங்கள்
உண்டு பார்த்தாயா?
அது கூட நீ பூசும் இயற்கை வர்ணம் தான்
நான் உன்னை நினைத்து பல நேரங்களில் வியப்பதுண்டு
காரணம் கேட்கிறாயா?உனக்குள் இருக்கும் ஆற்றல்களை
கண்டு தான் வியப்பேன்..யாயினி-கனடா.
சூரியத் தேவனுக்கு...

வெயில்..
உனக்கு நடுவில்
நானிருக்கும் போதும்
எனக்கு நடுவில்
நீயிருக்கும்போதும்

இளைய அப்துல்லாஹ்
லண்டன்
சூரியதேவனே!.....

உன் ஒளி காண
உலக உயிர்கள்
காத்திருக்கும்

உன்னால் மட்டுமா
உலகமே உஸ்னமானது

உன்னிடமும் எதிர்பார்க்கின்றனர்
மென்மையான ஒளியை.

இரா.சதீஷ்மோகன்
சூரிய தேவனுக்கு...

சூரிய தேவனுக்கென் வேண்டுகோளே-எமை
சுட்டிட எதிர்வரும் கோடைநாளே
வீரியம் குறைந்திட வாரும்ஐயா-எனில்
வெந்து மடிவோமே என்ன பொய்யா
ஏரியும் குளங்களும எங்கும்வற்ற-நீர்
இல்லாமல் புல்வெளி தீயும்பற்ற
வேரிலும் நீரின்றி செடிகொடிகள்-மாள
வேண்டாமே உம்முடை கெடுபிடிகள

கெட்டதே உலகெங்கும சுற்றுசூழல்-இந்த
கொடுமையில் உயிரினம் எவ்வண்வாழல்
விட்டுவிட்டே இங்கே பனியும பெய்ய-தரும
வேதனை நீங்கட என்னசெய்ய
சொட்டும மழையின்றி ஒருபக்கமே-வெள்ள
சோதனை தாங்காது மறுபக்கமே
திட்டமே உலகெங்கும் பேசுகின்றார்-ஆனால்
தீராது என்றென்றும் சுற்றுசூழல்மாசே

எதிர்கால சந்ததி நிலமைஎன்ன-அதை
எண்ணாமல் இன்றுள்ளோர் செய்வதன்ன
புதிதாக நாள்தோறும் இயற்கையன்னை-அழிய
போடுவார் அந்தோ திட்டம்தன்னை
மெதுவாக அழிவிங்கே தேடி வர-எனில்
மேலும் எதற்காக பாடல தர
எதுவாக இருந்தாலும காலம்சொல்லும்-இதன்
எதிர்வினை யாதன ஞலம்சொல்லும்

புலவர் ச இராமாநசம்
அரங்கராசபுரம் சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்