Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காதலோடு..
காதலோடு...

காதலோடு நான் உன்னருகே வந்தபோது
காலோடு கிடந்ததைக் கழற்றிக் காட்டினாய்

ஆனால்...கண்ணே
என் கா(த)ல் போனபின் வந்தாய் நீ....
காதலோடு...

இதோ பார்...
கழற்றிக் காட்டுகிறேன் என் கா(த)லோடு...

ஒய்யார்ஸி
காதலோடு...

இதயங்கள் இணைந்து
காதலோடு கனிந்துவரும்
கட்டில் சுகத்தில்
விட்டுவிடுதல் இல்லை,
விவாகரத்துகள் இல்லை..
அந்தப்புரத்தில் ஆரம்பிக்கும்
ஆனந்த வாழ்க்கை...!


செண்பக ஜெகதீசன்...
காதலோடு..

நினைவழிய
நாட்களை நான்
நினைத்தபடி காத்திருக்கேன்
காதலோடு ..

பூ பூக்கும் புன்னகையை
மனசுக்குள் ரசித்தபடி
ராசாத்தி உன்னை நான்
காதலோடு ..
நினைக்கின்றேன்

வயல் நெடுகிலும்
கவிபாடும்
வசந்த நாட்கள் பற்றி
வாயார இன்னும் நான்
காதலோடு பாடுகிறேன்.

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.
காதலோடு...

நோதலற்ற ஆசைக் கனவு மெய்ப்படும்
காதல், பூவனம், உல்லாசவனம்.
காதல் உயிர்கள் வாழ்விலே பெரும்தனம்
காதலர்கள் தினத்தில் மட்டுமல்ல – தினமும்.

கனக்கும் நானெனும் முனைப்பான தீ,
சினக்கும,; சீறும், காயமாக்கும்; காதலை.
உனக்கு நான், எனக்கு நீயென்ற
இணக்கம் இசைவான காதல் தீ.

காதலிப்பவர் காதலிக்கட்டும், காதலற்றவர் கருவறையில்
உதயமாகாமல் இருக்கட்டும்! உறைந்து போகட்டும்!
காதலர் தினமாக காலமெல்லாம் நிலவிடட்டும்!
காதல் மண்டபம் காதலோடிணைந்து கட்டுங்கள்!


வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.


காதலோடு..

இரயில்கள் வந்து போகும்
எண்ணத்தில் ஏதேதோ
தோன்றி மறையும்
நானும் நீயும்
இதழ்களில்
எதையோ
எழுதிக்கொண்டிருக்கின்றோம்
உலகம் எமைப் பார்த்துப்போனாலும் கூட

நிர்வாணி
காதலோடு...

கவலையில் திரிந்தாலும்
கண்ணீர் சிந்தினாலும்-நாலும்
இருப்பவனானாலும்
இல்லாதவனானாலும்...

நாடகளை கடப்பது
காதலோடுதான்!

கணப்பொழுது நேரமில்லாமல்
ஜனக்கூட்டத்தோடு ஒடித்திரிந்தாலும்..
ஓய்வே பணி என்று
ஓரத்தில் முடங்கி கிடந்தாலும்

எல்லோருக்குமான
வாழ்க்கையில்
ஒவ்வொரு நொடியும்
கரந்து கொண்டிருப்பதும்
காதலோடுதான்!


பாரதிமோகன்
காதலோடு..

பறக்கும் இதயங்களுக்காக
காத்திருக்கிறது
ஒரு அழகிய தூக்கம்..!

இளங்கோ
இந்தியா
எழுகின்ற காதல்

அழகான என்ற
வார்த்தைக்கு அப்பால்
ஒரு உதடு
ஒரு கொத்து தலைமுடி
கண்கள்
சிரித்த முகம்
கையில் இருக்கும் நுனி முடிகள்
பின்பக்கம்
முதுகு
கைகள்
எதனைப்பார்த்தாலும்
காதல் வரும்
எனக்கு

இளைய அப்துல்லாஹ், லண்டன்
காதலோடு...

பட்ட மரத்தில்
ஊரும் கடியான்கள்
அதனை விட்டுப் பிரிந்த உயிர்

எஸ்.நளீம்
காதலோடு

மரத்தில் படிந்த கொடிபோல்
சுந்தரியின் நினைவுகள்
என்னைப் பற்றிக் கொண்டன
அவள் கண்கள்
அயல்விழிக் கண்கள்
எங்கிருந்தோ என்னை
இமை அசைத்து அழைக்கிறாள்
கூரிய மூக்கால்
மோப்பமும் பிடிக்கிறாள்
பவள வாயால்
பாக்களாய் சொரிகிறாள்
தென்றல் காற்றின்
மெல்லிய வீச்சினால்
அழுகுக் கூந்தல்
அசைந்து கொள்கிறது
அவளின் பல் வரிசை
வெளிச்சம் போடுது
அன்பே வருவாயென
கெஞ்சி அழைக்கிறாள்
எதிலும் என் மனம்
இளகா நிலை கண்டு
இரண்டு கண் துளி
மெல்ல வடிக்கிறாள்
மௌனம் தொடர்கிறது
என் மனம் கரைகிறது
என்னவள் கண்ணீரால்
காதலோடு கண்ணீர்
பலத்தைக் கொடுக்கிறது
ஓடிச் செல்கிறேன்
ஒரு முத்தம் கொடுப்பதற்காய்

அகணி, கனடா
காதலோடு...

உலகத்தை
உருவாக்கிய
சக்தியை
இறைவன்
உன் விழிக்குள்தான்
ஒளித்து வைத்திருப்பானோ !

பிறகெப்படி
காதலொடு
பார்க்கும்
உன் ஒவ்வொரு
பார்வையிலும்
புதிது
புதியதாய்
பரிணாமம்
பெருகிரது
என் உருவம் !

தங்க. ரமேஷ் பாலி
காதலோடு...

உன் காதோடு சொல்கிறேன் நான் உன்னை நேசிப்பதை இருந்தாலும் என் காதல் செவிடன் காதில் ஊதிய சங்காய்.

பந்தர்.அலி ஆபிதீன்
காதலோடு

காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
கட்டிலங்கே கண்டவுடன பயந்துச் சென்றாய்
மாதரசி மணந்தேதான் தெடுவேனென்றே-நீ
மனதாற நம்புவதே என்றும்நன்றே
பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்

புலவர் சா இரமாநுசம்
சென்னை 24
காதலோடு...


காதலின் இசைவந்து காதோடு பேசும்
கண்ணில் கனவெல்லாம் ஊர்கோலம் போகும்
பெண்மை உனக்கென்றே உயிர் கொண்டு வாழும்
துணையாய் நீ சேர்ந்தால் அது சொர்க்கமாகும்
நிலவின் நாள் ஒன்றில் நீவந்து பேசு
மனதில் காதலெனும் குளிரள்ளி பூசு
அன்பே உனக்கென்றே வாழும் என்உசிரு.

வேலணையூர் -தாஸ்
காதலோடு...

புழுதி படிந்த என் புத்தகங்களை புரட்டி பார்க்கிறேன்
படித்த பாடங்களை ஞாபகமீட்ட அல்ல
என் காதல் ஞாபகங்களை ஞாபகமீட்ட

ஷரனீ
"கெஞ்சுகிறேன்"
------------------------

என் கவிதைக்காதலி
நித்தம் உயிரைக் கொய்கிறாள்!

என்
தேர்வு அறையிலும்
தெரியாமல் நுழைந்து
அமர்ந்து கொண்டாள்,
அடியேனின் விடைத்தாள்களில்!

பரீட்சை அறையில்
படித்ததை மறந்துவிட்டு
பாடாய்ப்படுகிறேன் நான்!

சமன்பாடுகளுக்கு பதிலாக இவளை
சமாதானம் செய்கிறேன் இன்று!

அன்புக்கவிதையே,
எந்தன் விடைத்தாளை
திருத்துபவர் ஒன்றும்
திருவள்ளுவர் அல்ல.

கணிதத்தேர்வில்
கவிதைகளை வரவேற்க!

மூன்று மணிநேரம்
என்னை விட்டுவிடு!

தேர்வை தீர்த்துவிட்டு,
தேவதையுன்னை
ஆண்டாண்டுகாலம்
அலங்கரிக்கிறேன்:

வார்த்தைகளென்னும்
வண்ணக்கோலங்களால்!

ஓவியன் ஷர்மா.
உனக்காக காத்திருப்பேன் ...
வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே
உயிரால் காதல் செய் உயிரே

-சுதாகரன்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்