Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மீண்டு(ம்) வருகிறோம்
மீண்டு(ம்) வருகிறோம்

முடியாத சமையல்
அடுப்பங்கரையில்
கரையாத சவர்க்காரம்
கிணற்றங்கட்டில்
உலராத உடைகள்
முற்றத்துக் கொடியில்
குத்தாத அரிசி
கல்லுரலில் உலக்கையுடன்
வீடு திரும்பாத பிள்ளை
பள்ளி வளாகத்தில்
எல்லாம் அவ்வப்படியே
கடைசியாய் விட்டுச்சென்ற
நினைவுகளுடன்
மீண்டு(ம்) வருகிறோம்
எமது சொந்த ஊருக்கு

எதிக்கா
மீண்டு(ம்) வருகிறோம்....

சோழர் கொடியுடன் வந்து
உங்களை கொல்லைக்குள் ஓடவைத்த
வீர மறவர்கள் நாங்கள்
புதைகுளியில் புதைந்தா கிடப்போம்....

நம் பாய்ச்சல் வேகத்தில்
உன் பாதியுயிர் கை பிடித்து
மீதியுயிர் விட்டுச்சென்ற
வேளைகள் நினைவில்லையா...

ஆலமரத்தின் ஆணிவேரை
அடுப்புக்கத்தி அறுத்திடுமா....

அனைத்துலகும் வியந்து நின்ற
எங்கள் வீரம் தான் சிதைந்திடுமா...

நாம் சிந்திய இரத்தத்தின்
அணுக்கள்கூட எறிகணையாய் வெடிக்கும்
அந்த வேளைக்காய்
நீ காத்திருக்கவேண்டியது
உனது காலத்தின் கட்டாயம்.....
காரணம் முடித்ததாய் சொல்லி
முள்ளிவாய்க்காலில் நீ
முளையைத்தான் கிள்ளினாய்.....

விழுதுவிட்டுப் பரந்து; தன்
ஆணிவேரால் பூமியையே பிழந்து
விருட்சமாய் நிமிர்ந்து நிற்கும்
நம் விடுதலை வேட்கையை அழிக்க
உன் சரித்திரத்துக்கு சக்தியில்லை...

நீ எம்மை அடிப்பதற்கு
உனக்கு ஐம்பது நாடு தேவையென்றால்
அவர்களை உன்னிடமிருந்து
உடைக்கும் காலம் தான்
எமக்கு இப்போது நடக்கிறது....
சற்றுப் பொறித்திரு
கடிக்கும் வெறி நாயை
கல்லால் அடித்து அதன்
உயிர் குடிக்கும் காலம்
வெகுவிரைவில் வரும்...

அதுவரை பொறித்திரு எதிரியே
மீண்டு(ம்) வருகிறோம்
நாம் நாமாகவே
மீண்டு(ம்) வருவோம்....

இளங்கவி
மீண்டு(ம்) வருகிறோம்.

ஆண்டுஆண்டாக நாம் எமது பாதையில்
தாண்டி வந்தது போராட்டமாகத் தான்.
பூண்டகோலம் மாறாது தீவைச் சிங்களமாக்க
வேண்டிய பாதையில் தான் அரச பயணமும்.
தண்டம் அடக்குமுறையென தாண்டியது போர்.
ஈண்டு வட்டம் தொட்ட இடத்திற்கே.

ஆடம்பர வாழ்வு சலுகைக்காக ஒரு கூட்டம்.
சுயதொழில் செய்துயர்ந்தோரை அலட்சியம்
செய்யுமொரு கூட்டம். தமிழீழம், போர்
இலட்சியமென்போரை இழிவு படுத்துமொரு
கூட்டமென, ஊரையடித்து உலையில் போடுகிறார்கள்.
முண்டியடித்துக் கொண்டாடுகிறாரின்று பாராளுமன்றக் கதிரைக்கு.

இன்னபல குளப்பங்கள், சுனாமிகள், அழிவுகள்,
இறப்புகள் போர் என்பன மறக்காத வடுக்களாக.
உரிமைகள், உறவுகள் மாற்ற முடியாதவைகள்.
காலமெனும் தொடர்கதையில் மீண்டு(ம்)
வருகிறோம் - எழுவதற்குத்தான்.

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
28-2-2010
வண்டிச்சக்கரம்
=ருத்ரா

கூண்டு வண்டிக்குள்
குடும்ப‌ம் திணித்து
புது இட‌ம் நோக்கி
ஊர்கின்றோம்.
உல‌க‌ப்பொருளாதார‌ம்
தாராள‌ம‌ய‌மாச்சு தென்றார்
யாருக்கு தாராள‌ம்
தெரிய‌வில்லை
புரிய‌வில்லை.
புத்த‌க‌ங்க‌ள் க‌ட்டு க‌ட்டாய்
அச்சிடுகின்றார்.
ஒரு புல்லுக்க‌ட்டு தேருமா
எங்களுக்கு அதில்?
க‌ண்ட‌துக்கெல்லாம்
க‌ணிப்பொறி தான்.
சாணி பொறுக்கும்
க‌ருவாச்சியின் கூடைக்குள்ளும்
க‌ண‌ க‌ண‌வென்று
ம‌ணிய‌டிக்கும்
"செல்" ஃபோன் தான்.
ம‌டி நிற‌ஞ்சு போச்சா
அவ‌ளுக்கு?
ஒரு வாய்ச்சோற்றுக்கு
இன்னும் அந்த‌
நாயோடு தான்
அவ‌ளுக்கு போட்டி.
மின்பொறி த‌ட்டி தான்
ஓட்டெல்லாம் போட்டோம்.
இல‌வ‌ச‌ங்க‌ள் த‌ந்தார்.
அத‌னால்
மீண்டும் ஓட்டு விழா
வ‌ருமென்று
வாச‌லில் த‌வ‌ம் கிட‌க்கிறோம்.
அது கிடைக்கும்
இது கிடைக்கும்
வாக்குக‌ளுக்கு ப‌ஞ்ச‌மில்லை.
இந்த‌ மாட்டு வாய்க்கு
புண்ணாக்கு கூட‌ கிடைக்க‌வில்லை.
புண்ணாய் போன‌து ம‌ன‌சு.
வ‌றுமைக்கு திட்ட‌ம் போடுறாரு.
வ‌ருட‌ம் அறுப‌துக்கு மேலாச்சு.
அசோக‌ ச‌க்க‌ர‌ம் சுற்ற‌ட்டும்
ஆடுவோம் ப‌ள்ளு பாடுவோம்.
இந்த‌ வ‌ண்டிச்ச‌க்க‌ர‌ம்
புரியாம‌
அசோக‌ரு ச‌க்க‌ர‌ம் புரிஞ்சிடுமா?
மீண்டு(ம்) வருகிறோம்

போனது போகட்டும்
ஆனது ஆகட்டும் ..

இனியேனும் எங்கள் பூமியில்..
பூக்களின் பாசையும்
புன்னகையின் ஓசையும்
கேட்க்கட்டும்..!

மீட்கமுடியாத இழப்புகளினூடே
மீதமிருப்பதை பொறுக்கி கொண்டு

குற்றுயிரும் குலையுயிருமாய்
மீண்டு(ம்) வருகிறோம்

போனது போகட்டும்
ஆனது ஆகட்டும்!

இனியேனும் எங்கள்
மிச்சப்பட்ட வாழ்க்கையை
வாழவிடுங்கள்..!

பாரதிமோகன்
மீண்டு(ம்) வருகிறோம்

கரையில் எழுதிய கவிதைவரிகளை
கடல் கரைத்துச் சென்றதுபோல்
இதயத்தில் இருந்த நம்பிக்கையை
யாராரோ கரைத்து சென்றுவிட்டார்கள்!
எங்கள் அவலம்
உங்கள் நெஞ்சைத் தொட்டிருக்கும்!
நீங்கள் உங்கள் நெஞ்சைத்தொட்டுச்
சொல்லுங்கள்-
நாங்கள் மீண்டு வருகிறோமா,
இல்லை-
மாண்டு வருகிறோமா?

அரவிந்த் சந்திரா
மீண்டு(ம்) வருகிறோம்

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பகசே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே
நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குக் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

புலவர் சா இராமாநுசம்
சென்னை-24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்