Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
இறுதி மூச்சுள்ளவரை..
இறுதி மூச்சுள்ளவரை...

நீ தொலைவாய் போய்விட்டாய்
கடைசியாய் நீ வாங்கித்தந்த
மஞ்சள் சீலையுடுத்தி
கொய்யகம் சொருகி
உன் நினைவுகளிலிருந்து
விலகமாட்டாமல்-இன்னமும்
உன் வெற்றுக்காகிதத்துக்காய்
காத்திருக்கிறேன்..

ஆசைக்கொன்று
ஆஸ்திக்கொன்று - என்று
ஆசை ஆசையாய் பெற்றெடுத்த
உன்னை இழக்க என் மனம்
கொஞ்சமும் மனப்படவில்லை
என்றோ ஒருநாள் இந்த வீட்டுக்கு
நீ வருவாய் என
உனக்காக காத்திருப்பாள்.. இந்தத் தாய்

காசிப்பிள்ளை
இறுதி மூச்சுள்ளவரை...

ஒரு முடிவற்ற
பயணமாய்
உன் உரிமைக்கான
போராட்டங்கள்

உனக்கான
முழு உரிமை
உன் மரபிலேயேயிருந்தும்

க.ஆனந்த்
இறுதி மூச்சுள்ளவரை...

எங்கள் வீட்டு முற்றங்கள்
இப்போதெல்லாம்
அவர்களின் கழிவறைகள்

நிஜங்களைத்தொலைத்து
கண்ணுக்கெதிரே தெரியும்
தெருக்களெல்லாம்
கருகிய பிணத்துண்டங்கள்

"செல்கள்" கொண்டு நிரம்பிய
குப்பை மேடுகளில் ஆங்காங்கே
குழந்தைகளின் புத்தகப்பைகள்

வாழ்விற்கானன சாத்தியங்கள்
அழிந்துபோன நிலையில்
இனியும் என்ன வேலை
இந்த தேசத்தில்?
இறுதி மூச்சுள்ளவரை...

எதிக்கா
இறுதிமூச்சு உள்ளவரை…

பாடிய நாவும்
ஆடிய பாதங்களும்
எடுக்காது ஓய்வு
இறுதிமூச்சு உள்ளவரை…
சாவு வந்தாலும்
சாதனையாளர்களுக்கு,
சாவதில்லை அவர்கள்
நம் நினைவில்-
நம்
இறுதிமூச்சு உள்ளவரை…!

செண்பக ஜெகதீசன்
இறுதி மூச்சுள்ளவரை...

இறுதி மூச்சுவரை...
இறுதி மூச்சுவரை...
ஈழத்துக்காதுகள் அடிக்கடி கேட்ட வார்த்தைகள்

எல்லோர் மூச்சும்
இறுதியாய் நின்றுதான் போனது

பெருத்த சுயநலத்துடன்
உலகம் ஓடிக்கொண்டேயிருக்கிறது
என்னைப்போல்

-நிர்வாணி, கனடா
இறுதி மூச்சுள்ளவரை...

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா
குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமே-இந்த
உலகம் உணர உய்வோமே
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணரந்து வருவரே

அடங்கிப் போனோம் நாமன்றே-ஆளும்
ஆணவ ஆடச்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமே-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமே
ஒடுங்க மாட்டோம நாமென்றே-அவர்
உணர எதிர்த்து தினம்நின்றே
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை

புலவர் சா இராமாநுசம்
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும்.2016-04-04

சித்திரை நாலு சிதறின எம் மனங்கள்
ஊற்றடைத்து கொண்டது உங்கள்
மூச்சு ஊமை ஆகி போனது எங்கள் நாவு
வன்னி மண்ணே வரலாற்றில் என்றேனும்
வந்த பகை வென்றதுண்டோ??
உலகமும் சதி செய்தது உள்ளூர்
சிங்களமும் விஷம் வைத்தது..!

முப்படையிலும் தேரோட்டிய உங்கள்
நினைவுத் தடயங்களில் இன்று எங்கும்
எதிலும் சிங்களவன் செருப்பு தடயங்கள்
வியூகம் உடைக்க வந்த பகை அழித்து
விரட்ட தலைவன் குரல் எழுப்பி
வாவென்று அழைக்கு முன்னே
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்களே..!

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி
விடுதலையே மேலோங்கி
எம் தேசத்திற்காக அர்பணித்த
பிரிகேடியர்களே..!

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து
விடுதலையை சிரசில் வைத்து
அந்த ஒன்றையே சிந்தித்து
எங்கள் மனங்களெல்லாம்
கண்ணீர் தூவிச் சென்றவர்களே..!

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி
வெளியே குயிலெனப்பாடி, நதியென
ஓடித்திரிந்த உங்கள் நினைவுகளும்
தாயக மண்ணும் அதன் வரலாறும்
என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்..!

ஒரு கணம் நினைவுகள் ஒடுக்கியே
உங்கள் நினைவுகளை எம் நெஞ்சில்
சுமந்து இன்னாளில் வீர காவியமான
உங்கள் நினைவுகளோடு நாம் இங்கே
போர்க்கள விடி வெள்ளிகளே
உங்களுக்கு வீரம் நிறைந்த
தாயக கண்ணீர் பூக்களை
காணிக்கை ஆக்குகின்றோம் !!
வீர வணக்கங்கள் !!

கவிவரிகள்:-மார்ஷல் வன்னி
தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 2016-03-30

அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி
எங்கள் "கேணல் கோபித் அண்ணா !
இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில்
கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே
எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த
காடுகளுக்கு கூட இனம் புரியாத
ஒரு புத்துணர்ச்சி வரும் !
பாசம் எனும் கூட்டில் விழாமல்
தேசம் எனும் நேசம் கொண்டு
சாள்ஸ் அன்ரனி படையணியை
திறம்பட கோலோச்சிய பல
சாதனைகளின் சரித்திர நாயகனே !
உன்னுடைய நிதானமான
பேச்சும், மற்றவர்களிடையே
அன்பாக பம்பலாக
நீ பழகும் விதமும் இன்றும் என்
மனத்திரையில் அண்ணா !
இரட்டைவாய்க்கால் என
உச்சரிக்க முடியவில்லை எம்மால்
சிங்களத்தின் சீரழிந்த செயலால்
உன்னை இழந்து ஆண்டுகள் தான்
ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,
அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள் அழியாத கோலங்களாய்.....
அழகாய் பூத்திடும் எம் தமிழீழம்
அதில் மொட்டாக மலர்ந்திடும்
உன் திருமுகம்!
அன்றும் இன்றும் என்றும் உன்
தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !
ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !

நினைவுபகிர்வு
மார்ஷல் வன்னி..


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்