Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

தொலைந்து போன
ஒற்றைப்பாதணியாய்
பயணின்றி
வெறுமனே
கிடக்கிறது.,
உன் மீது
காதல் கொண்ட
என் மனசு.

கி.சார்லஸ், தமிழ்நாடு
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

வெடிக்கும் போர்க்களத்துக்கு
வீரனாய் நீ செல்ல முன்
உன் ஞாபகச் சின்னமாய்
விட்டுச்சென்றாய் ஒரு சோடிப் பாதணிகள்.....
காத்திருந்தேன் கண்ணா அதை
களம் முடித்து உன்
கால்கள் வருமென்று....

கொட்டப்பட்ட் குண்டுக்கும்
பொழிந்த செல் மழைக்கும்
பாய்ந்து வந்த பீரங்கிக்கும்
பாதுகாத்தேன் உன் அன்பை.....

ஓட்டத்தில் இழந்தேன்
என் ஒற்றைக் காலையும்
அதன் பின்னால்
உன் அன்பின் பாதியையும்.....
அகதிமுகாமிலும் இருந்து
தேடுகிறேன் உன்னை
ஏன்.. உன் அன்பின் பாதியையும் தான்...
ஆம்.. நான் தொலைத்த
உன் ஒற்றைப் பாதணியையும் தான்....!

இளங்கவி, லண்டன்
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மார்கண்டேயன், மதுரை, பாரதம்
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

யாரும் இல்லாத வளாகத்தில்
உன்னை இறுகப்பற்றி
நடக்கின்றபொழுதும் கூட
கண்கள் மட்டும்
எதையோ தேடுகின்றது
என்றோ தொலைத்துவிட்ட
ஒற்றைப் பாதணியை..

எதிக்கா
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி…

தொலைந்துபோன
ஒற்றைப் பாதணி…
ஒருவருக்கும் உதவாது..
இருக்கும் ஒன்றின் கதையும்
இதுதான்..
தொலைந்ததை எண்ணி
தொய்ந்து போகாமல்
தொலைந்தது சனியன் என்று
தூக்கி எறிந்துவிட்டு
தொடர்ந்திடு நடையை..
கிடைத்திடும் புதுச்செருப்பு-
ஜோடியாய்…!

–செண்பக ஜெகதீசன்…
தொலைந்து போன ஒற்றைப் பாதணி

வருடம் ஒன்றாகிப் போச்சு
தொலைத்து விட்டேன்..தொலைத்து
விட்டேன் உம் இடத்தில் ஒற்றை
பாதணியை போல் என் இதயமதை
ஒரு ஆண்டு என்ன ...ஓராயிரம்
ஆண்டு ஆனாலும் என்னில் வலு
உள்ளவரை உமக்காய் காத்திருப்பேன்.

எனை யார் அழைத்தாலும்
நீர் அழைப்பது போல் ஓர் பிரமை
எனை யார் பார்த்தாலும் நீர்
பார்ப்பது போல் ஓர் பிரமை
நான் எங்கு சென்றாலும் நீரும்
வர மாட்டீரா என்ற ஏக்கம் என்னுள்..
யார் குரல் கேட்டாலும் உம் குரலா என்று
ஏங்கத் தோன்றுது
என்றும் காத்திருப்பேன் உமக்காய்.

நான் உம்மைத் தவிர வேறு எதையும்
எதிர் பார்க்கவில்லை
ஒற்றைப் பாதணியை தொலைத்து விட்டு
தேடுபவள் போல் தேடிக்கோண்டே
இருக்கிறேன்
உயிர் உள்ளவரை உம் வரவுக்காய்.


யாயினி
தொலைந்து போன ஒற்றைப் பாதணி

சின்னக் குட்டித் தேவதை தூக்கத்தில்
என்னமாய்ச் சிரிக்கிறாள்!
கன்னித் தேவதை கனவில் வந்து
கன்னம் வருடிக் காலணியைக் கொடுத்தாளோ!

அண்ணாவோடு பந்து விளையாடுவதாய்
அண்ணாந்து கால்களை எம்பிக் குதித்துக்
கண்களை இறுக மூடிப் பந்தாக
விண்ணிற்கு எறிந்தாள் பாதணியை.

பூமரத்திலே அது மாட்டித் தொங்கியது.
சாமரம் வீசி ஆடியது அழகாக.
காலணி தொங்கியது விளங்காத மழலை
"அம்மா! பெரிய பூ பார்!" என்றாள்.

மற்றக் காலணி எங்கே என்று
ஒற்றைக் காலணியோடு குழந்தை அழுதழுது
சற்றுக் கண்ணயர்ச்தாள் கன்னம் வீங்க.
ஒற்றைக் காலணியோடு வந்து ஒற்றியெடுத்தேன்முத்தத்தாலவளை. தொலைந்து போன ஒற்றைப் பாதணி தானே அவளுக்கு!

வேதா. இலங்காதிலகம்.
தொலைந்துபோன ஒற்றைப்பாதணி

பஸ்ஸிலோ ரயிலிலோ
பிசுபிசுத்து வழியும் அவசரப் பயணங்களின்
ஏற்ற இறக்கங்களிலே
மடி நிறைந்த மலரின் நலனில் மட்டுமே
குவியமிடும் கவனங்களை விட்டும்
இடறித்தான் போய்விடுகிறது
சில பொழுதுகளில்
அதன் ஒற்றைப் பாதணி.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி..

கணிவோடு காதல் சொன்னேன்
கண்ணத்தில் முத்தமிட்டது
உன் ஒற்றைப் பாதணி

பிரியாசோதி, ஜெர்மனி
தொலைந்துபோன ஒற்றைப் பாதணி..

இது தொலைந்த ஒன்று இல்லை
என் செல்ல குட்டியின் காலில் இருந்து
தொலைக்கப் பட்டதாய் இருக்கும்

கிழிந்த ஒன்று வேண்டாம் என்று
எத்தனை முறைதான் சண்டையிடுவாள்
பாவம் அவள்
இந்தமுறை நான் கேட்கபோவதில்லை
புதிதாய் வாங்கி கொடுத்து
புன்னகை வாங்க போகிறேன்.....!

தினைக்குளம், கா.ரமேஷ்
இந்தியா
தொலைந்துபோன ஒற்றை பாதணி

தொலைந்துபோன ஒற்றை பாதணி-இங்கே
தொங்கிடும இதுவா மற்றொன்றா
கலைந்தது எந்தன் மொளனந்தான்-உடன்
கவிதை பிறந்தது அதனால்தான்
தலையைப் பிடித்தா இதற்காக-யாரும்
தவிப்பார் இல்லை அதற்காக
விலையில் உயர்ந்தது என்றாலும்-தூக்கி
வீசுவோம அதற்கு முனபாக

இலையில் பூவின் கொத்தோடு-இங்கே
இருக்கும் ஜோடியின ஒன்றோடு
கொலையில் திலகம் பக்சேவுக்கு-நாம்
கொடுப்போம் அன்புப் பரிசாக
வலையில் சிக்கிய மீனாக-ஏங்கி
வாழும் ஈழர் சார்பாக
நிலையில உமது வெற்றியென-இந்த
நிலைதான் உமக்கு இறுதியென

புலவர் சா இராமாநுசம்
சென்னை- 24எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்