Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
முடிந்துபோன பாதை
முடிந்துபோன பாதை

இறுதி முகவரி மயானம்
இன்று தெளிந்தது உண்மை
மடிந்த பின் ஞானம்
உணர்ந்த உண்மைக்கோலம்
எரியும் அங்கம் கண்டு
விரியும் நுண்ணறிவு

விடையில்ல வினாக்களுகாக
கடந்த பாதைகள்
தொலைந்த பயணங்கள்
நினைவூட்டியது உள்ளம்

தேடலின் முடிவும்
ஓடலின் முடிவும்
இங்கே சங்கமம்
உண்மை நிலையை சுட்டிக்காட்டியது
இடுகாட்டு வாசலில் - என்
முடிந்து போன பாதை

பிரியசோதி, ஜெர்மனி
முடிந்துபோன பாதை...

காலத்தின் கிறுக்கல்கள்
வாழ்வின் தேடல்கள்
தவிர்க்கமுடியா அழிவுகள்
மறக்கமுடியா நினைவுகள்
பிரியமுடியா சொந்தங்கள்
பிரிக்கமுடியா சொத்துக்கள்
சிதைந்துபோன இதயங்கள்
தொலைந்துபோன காதல்கள்
எல்லாமே ஒன்றாய் சங்கமித்தது
முடிந்துபோன பாதையாய்...

ப்ரியா கனடா
முடிந்துபோன பாதை…

முடிந்துபோனது பாதையல்ல,
உன் பயணம்..
பயணத்தை முடித்துவைத்தது
உன்
மரணமா..சோம்பலா…?
மரணமென்றால் விட்டுத்தள்ளு,
சோம்பலென்றால் சுட்டுத்தள்ளு-
உன்னைத்தான…!


-செண்பக ஜெகதீசன்…
முடிந்துபோன பாதை

நீ
என்னருகில்
இல்லாத
ஒவ்வொரு பொழுதுகளும்
என் வாழ்வின்
முடிந்துபோன பாதைதான்.

கி.சார்லஸ், தமிழ்நாடு
முடிந்துபோன பாதை

ஒவ்வொரு மவுனாத்தின்
பின்னால் மறைந்திருக்கும்
உண்மையின் அதிர்வுகள்

கற்ப்பிணி பெண் வயிர்கிழிக்கும்
கலவரம் பூமியில்
காந்தியம்

அடர்ந்த சாலையோர காடுகளில்
உடைந்த வளையல் துண்டுகளிள்
உதிர்ந்த பூ சிதறல்களில்
புகையும் சிகரெட் மீதியில்
கண்ணகித்துவம்

ஒற்றை குளத்தில்
ஒற்றை கோவில் தன்னில்
ஒற்றை டீக்கடையில்
பிரிவினை பேசும்
சாதீயத்தின் முன்னே
பெரியாரிசம்

எல்லாம் முடிந்துபோன பாதை

தமிழீழநாதன்,தமிழ்நாடு
முடிந்து போன பாதை !

அதனால் என்ன?
நம்மால்
திரும்பி
நடக்கமுடியும, இல்லையா?

அரவிந்த் சந்திரா
முடிந்துபோன பாதை

எமக்கு...
வலிமையான கால் இருக்கிறது
வழி செய்யும் தோள் இருக்கிறது
மீண்டும் புதியது படைப்போம்
மீள அதிலே நடப்போம்...!

தினைக்குளம், கா.ரமேஷ்
முடிந்து போன பாதை

பாதை முடிந்து போனால்
பயணம் நின்று போகும்
வாழ்வு முதிர்ந்து போனால்
வாயில் ஒன்று திறக்கும்

முடிந்த பாதையின் முன்னால்
போகுமிடம் தெரியாமல்
முனகும் தன்மை கொண்டால்
முயற்சி மெல்ல விலகும்

பாதைகள் பலவுண்டு உந்தன்
பயணிக்கும் வாழ்வதனில்
முடிவுண்டா இல்லையா அதை
முடிவு செய்வது உன் கையிலா ?

பாதை ஒன்று தெரியும் அதிலே
பயணம் ஒன்று தொடங்கும்
நேர்வழி நடந்தால் நிச்சயம்
ஓர்வழி காண்பாய் முடிவில்

சக்தி சக்திதாசன்
முடிந்துபோன பாதை

முடிந்து போனது பாதையல்ல,
தேடல்
முடிந்து போனது வாழ்க்கையல்ல,
தேடல்,
முடிவிலே தொடக்கம் காண்
வாழையிடம் வாழ்க்கையை படி

கார்த்திகேயன்
முடிந்துபோன பாதை
இந்தப் பெறுபேறும் பொய்த்துப்போனதற்காய்
வருத்திக் கொள்ளாதே உன்னுணர்வுகளை
கல்வித்தரம் வேண்டுமென்றால்
உறுதிப்படுத்தப்படலாம் பெறுபேறுகளால்
ஆனாலும்
ஒருபோதும் தீர்மானித்து விடுவதில்லை
பெறுபேறு மட்டுமே
ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை.
வடிந்துபோகா வெள்ளமொன்றை
வரலாறு சொல்லவில்லை.
இந்தப்பாதை முடிந்தாலென்ன
திரும்பிப்பார்
இன்னமும் ஆயிரம் பாதைகள்
வாசல்கதவு திறந்து வைத்தே
வழிபார்த்துக் காத்திருக்கு மாலைகளோடு
உனக்கே உனக்காய்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
முடிந்து போன பாதை...!
------------------------------

முடிந்து போனது உனது பாதையானாலும்
தொடர்ந்து வருவது உன் சந்ததியல்லவா
சந்ததிக்கான பாதையைத் திறக்க
சத்தியம் செய்தே பாதையைத் தேடுக
பாதையின் முடிவில் தேடுதல் இருந்தால்
மீண்டும் நாங்கள் போடலாம் பாதையை
புறப்படுதல் என்பது உறுதியானால்
புதிய பாதையை புதிய பாணியில்..........

மா.பாஸ்கரன்
யேர்மனி
முடிந்து போன பாதை

ஒவ்வொரு வினாடிகளும்
முடிந்து போன பாதையாய்
மாறிக்கொண்டிருக்கும்
இடைவிடாத வாழ்க்கை பயணத்தில்
முன் உள்ள நேரங்களை
முயற்ச்சியின் வழி முன்னிறுத்தி
முடிந்ததற்கும்
முடியப்போறவைகளுக்கும்
முறியாத முடிச்சுகள் போட்டுவைப்போம்

மார்கண்டேயன்
மதுரை, பாரதம்
முடிந்து போன பாதையை

நாம் மேற்கொள்ளும் நட்பு பயணங்கள் சில
முற்று பெறுகிறது!
முடிந்து போன பாதையை அடைந்து விட்டதாலா?

தேவி
கொழும்பு
முடிந்து போனது பாதையெனில்-உன்
முயற்சி முறியா நிலமையெனில்
ஒடிந்து போகா உறுதிதான-என்றும்
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான்-உன
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும்-மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டம்

புலவர் சா இராமாநுசம் சென்னை
முடிந்துபோன பாதை

இது என்ன
முடிந்து போன
பாதையா?? அன்றி
மக்களின் அறியாமையால்
அதிகாரிகளின் அலட்சியத்தால்
முடித்து வைக்கப்பட்ட பாதையா?
இணை கோடுகளாய் நீர் அது
சென்றுகொண்டிருக்க.......
இடைவெளியை ஏற்படுத்தி
விட்டது - மக்களின்
உறவுகளுக்கு இடையில்!!!
மக்கள் மனது வைத்தால்
சீராகாதோ பாதையும்
தொடர்ந்திடதோ
உள்ளத்து உறவுகளும்???

- பி.தமிழ் முகில்
முடிந்து போன பாதை.....

ஒரு முடிவில் தான்
தொடக்கமும் உண்டு.
எங்களின் பயனம்
முடியவில்லை. மாறாக
முறிந்து போனது..
ஒட்டிக்கொள்ள மனம்
இருந்தும் முட்டிக்கொள்கிறோம்..
தட்டிக் கேட்டவரின்
மௌனப் பயணத்தின்
பின் விளவினால்
மரணப் படுக்கையில்
தேசிய ஒற்றுமை..
பாதைகள் விரியும்.
பயணங்கள் தொடரும்..

ரி.தயாநிதி..
எந்த பாதையும் முடிவல்ல
பயணம் தான் பாதையை முடிவு செய்யும்
உன் கல்வி பாதையை முடிவு செய்வது ஆசிரியன்
உன் ஆரோக்கிய பாதையை முடிவு செய்வது மனைவி
உன் முதுமை பாதையை முடிவு செய்வது உம் மக்கள்
உன் வாழ்க்கை பாதையை முடிவு செய்வது காலன்
உன் மகிழ்ச்சி பாதையை முடிவு செய்வது நீ தான்

-பெ.கோகுலபாலன்,இந்தியா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்