Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..

எங்கு சென்றாலும் உங்கள்
நிழல்கள் என்னைத்
தொடர்ந்துகொண்டே வருகிறது
சில நிமிடங்களில் தைரியத்தையும்
பல நிமிடங்களில் பயத்தையும்
தருகிறது உங்கள் நிழல்கள்..

நான் காதலித்தால்
நன்றாகப் படித்துப் பட்டம் பெற்றால்
காணி வாங்கி வீடு கட்டினால் - இல்லை
விதியோடுதான் செத்து மடிந்தாலும்
நீங்கள் விட்டுவிடப்போவதில்லை
என்மேலான உங்கள் பின்தொடர்தலை...

மயூரி
ஸ்காபரோ, கனடா
என்னைச்சுற்றி உங்கள் சிந்தனைகள்…

பசுமையாய் இருந்த காலம்
பறந்து போச்சுது..
கிளைகளின் அழகிய இலைகளே
கீழே விழுந்து நீங்கள்
கருகிய சருகுகளாய்..
காரணம் -
காலத்தின் கோலமா
காலனாய் இனத்தையழிக்கும்
இதயம் இல்லாதவர்களா..
எதுவாயிருந்தாலும்
என்னைச்சுற்றி உங்கள் சிந்தனைகள்…!


–செண்பக ஜெகதீசன்
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

மார்கண்டேயன்,மதுரை, பாரதம்
http://markandaysureshkumar.blogspot.com
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்...

என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்:
பாசமாய்,அன்பாய்,
நட்பாய்,காதலாய்,
கருணையாய்-
எதுவாக இருந்தாலும்,
இதயத்திலிருந்து
பிறந்தால்
என்னுள் இருக்கும்
உஙகள்
சிந்தனைகள் !


அரவிந்த் சந்திரா-
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..

நான் எப்படி படித்துப் பட்டம் பெற்றேன்
நான் எப்படி முன்னேறினேன்
நான் எப்படி வாழ்க்கையை நடத்துகிறேன்
இதையறிய
எப்போதும்.......
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..

ஒய்யார்ஸி
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்...

சின்னது பெரிதாக
அன்ன பல சிந்தனைகள்
பின்னப்படுகிறது பிறரையிட்டு
ஒரு மகான், சிந்தனையாளன்,
ஓரு செயல் வீரன்,
ஒரு திறமையாளனால்
பெரும் சிந்தனை வட்டங்கள்
உருவாகிறது இயற்கை.

சின்னச் சிறகடித்து
வண்ணக் கவியெழுத
என்னாளும் பாடுபடும்
சின்னக் குருவி நான்.
என்னைச் சுற்றி உங்கள்
உன்னத சிந்தனைகளை வாழ்த்தாகப்
பின்னிக் கொள்ளுங்கள். நான்
சிறந்த கவிதாயினியாக.- நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-5-2010
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்

ஏதேதோ பிதற்றுதல்கள்
எத்தனையொ மௌன அஞ்சலிகள்
தொலைந்து சென்ற தருணங்கள்
யோசித்து யோசித்து நினைத்த பிறகும்
விழி வழியே ஏக்கமாய் உங்கள் சிந்தனைகள்!

துர்கா தமிழ்நாடு
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்

ஒரு கவிதையின்
பகிர்ந்தளிப்பைப் போலும்
அவர்களது கதையாடல்
செவிசாய்த்து
உன்னிப்பாய் கிரகிக்கும் பாவனை
தேர்ந்த சொல்லாடலின் சுவராஸ்யத்தை
உட் செலுத்தும் புத்துயிர்ப்பி
கடநது சென்ற பள்ளிக்க்கூடம்
பேருந்துப்பார்வையில் புள்ளீயான பின்பும்
கண்களில் விரிந்திருந்த்து
அதில் கழித்த காலம்
நிரம்பி வழிந்த சம்பாஷணையில்
நாவின் தீயொலியற்ற
விரல் மொழியால்
ஊமையனாய் நானும்
கதைப்பவர்களாய் அவர்களும்....
பேருந்து இரைச்சலோடு தனது இலக்கு நோக்கி...
என்னை செவிடாக்கியபடி

சு.மு.அகமது.
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்..

நகம் கடிக்கத் தடுத்தாய்...
எண்ணைத் தேய்கா
பரட்டைத் தலை வெறுத்தாய்...

சில நேரம் கசியும் பரிவு
நீண்ட நேரமாகியும் நீடிக்கும்
கோபம்.

நீ சொல்லி...
என் செவி மறுத்த வார்த்தைகள்.
நீ கேட்டு
பதில் கிடைக்கா அழுகை.

அடியே-
உன் அருகாமை அத்தனையும்
நிஜம்.

உணர்கிறது
மனசு.
சில மைல்கள் நகர்ந்த
கணப் பொழுது
என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்.

மதுக்கூர் சர் மதிநா
துபாய்.
என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்

எதற்கு வீணாம் தருவீர் நிந்தனைகள்
தன்னைத் தானே இவ்வுலகம் தினம்
தட்டா மாலையாய் சுற்றல் போல்
அன்னை வயிற்றில் அவதறித்து இந்த
அவனியில உதிதத இன்றுவைரை
சொன்னதை ஏதும் செய்தேனா நானும்
சற்றம் உலகென சுற்றிநாளும் வந்தேனா

வையம் தன்னில வாழ்வாங்கு வாழ
வகுத்த வள்ளுவன் குறள் ஓங்க
செய்யும செயலில் கொண்டேனா நான
செய்வது தவறென கண்டேனா
பொய்யும் புரட்டும உலகொங்கும
போகிற வழியில் நானெங்கும்
பையில் பணமே உள்ளவரை நடந்த
பாதையைச் சொன்னால் நிந்தனைகள்

பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
பிழையைச் சொன்னால் நிந்தித்தேன
அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
ஆற்றிய துண்டா அறியேனே
உரிதா ஏதும் இல்லையென நீர்
உணர்வீர் தெளிவீர் எனவே தான்
தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
எதற்கு வேண்டும உங்கள் சிந்தனைகள

புலவர் சா இராமாநுசம் சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்