Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
ஓடி உதைத்து விளையாடு
ஓடி உதைத்து விளையாடு…

உலகம் உன்னை
உற்றுப்பார்க்கிறது நீ
உதைப்பது பந்தையானால்…,
உலகம் சிரித்து
வேடிக்கை பார்க்கிறது—
உதைப்பது மனிதனையானால்…
விளையாடு
ஓடி உதைத்து விளையாடு…!


–செண்பக ஜெகதீசன்
ஓடி உதைத்து விளையாடு...

குறும்புக்கார குழந்தையாகி
நடிப்பில் மன்னனாகி
சண்டை போடுகிறயாய் ஓர்
ஒற்றைப்பந்துக்காய்
விட்டுக்கொடாதே.... இன்னும்
ஓங்கி உதை
பந்தை...

ரசிகா
ஓடி உதைத்து விளையாடு...

கால் பந்தை முழுப் பந்தும்
ரசித்துக்கொண்டிருக்கையில்
ஓர் எண்ணம்:
உதை பட்டாலும் பரவாயில்லை!
ஓடுவது கோலை நோக்கி
இருந்தால் சரி !

அரவிந்த் சந்திரா
ஓடி உதைத்து விளையாடு...

நிராகரிப்பு
நம்பிக்கை துரோகம்
நயவஞ்சக கூட்டம்
பந்துகளாய் உன்னை
பந்தாட வரலாம்
உண்மை உயர்சிந்தனை
உறுதியான உள்ளம், உடல் . . .
ஊக்கம், விடாமுயர்ச்சியுடன்
உன்னை உரமேற்றி வைத்துக்கொள்
ஒடுங்கிப்போகாமல், ஓய்ந்துவிடாமல்
ஓடி உதைத்து விளையாடு

மார்கண்டேயன்
மதுரை, பாரதம்
http://markandaysureshkumar.blogspot.com
ஓடி உதைத்து விளையாடு..

இருபத்திரண்டு பேர் இணைந்து
ஒரு பந்தை ஓடியுதைத்து
இழுபறிப் பட்டு விளையாடுகிறார்.
ஓரேயொரு பந்து செல்வழியை
ஊரே உலகமே பார்க்கிறது.
செல்வந்தரும் சேரிக்காரரும்
விளையாடும் உதை பந்தாட்டம்.
உதை பந்தாட்டச் சூரன்
கொழுத்த பணக்காரனுமாகிறான்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-6-2010.
ஓடி உதைத்து விளையாடு!

உடைந்த கனவுகளை
ஓடி உதைத்து
விளையாடுகிறது வாழ்க்கை

ஓடி உதைத்து விளையாட
மரண வெளியிலே
எங்கே இருக்கிறது..நேரம்.

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.
ஓடி உதைத்து விளையாடு

எத்தனை முறை உதைத்தாலும்
இலக்கு ஒன்று தான்!
காலத்தின் கட்டுக்கோப்பில் ஓடும் மனம்...
தொடர்சியானப் போராட்டம்
எதிர்பாரா ஏமாற்றங்கள்,மகிழ்சிகள்
இதற்கு இடையில் அடிபடும் பந்து!

துர்கா தமிழ்நாடு
ஓடி உதைத்து விளையாடு…

ஓடிவிளையாடு நீ - ஓய்ந்திருக்காது விளையாடு
ஒருநாள் முடிந்திடும் மூச்சினை யெண்ணாது
துடிதுடிப்பாய் விளையாடு! துடிதுடிப்பாய் ஆடு!
தூங்கியபின் ஆட்டமில்லை – எண்ணாது ஆடு!

கனவுகள் நிஜமாகுமென நினைத் தாடுகிறாய்!
கண்டவரையெலாம் கரண்டையின்கீழ் எடுத்திட
ஊனமனங்கொண்டாடுகிறாய் - நீயாடு நீயாடு!
உலகமுந்தன் பாடைதூக்கிடும் நாளெண்ணாதாடு!

யானுயர்ந்தவ னெனநினைந்தே உதைக்கின்றாய்நீ
யாவுமறிந்தவன் நிலையெண்ணா துதைக்கின்றாய்!
வானும்வசமாகும் வின்மீனும் கீரிடம்தரிக்கு முனக்கு
வாழ்க்கை – பார் ஏதெனநீ யுணருங்காலே! உதைநீ!

சாதிகளி லுயர்ந்தவன் நீயென்று உதைக்கின்றாய்!
சாதியென்ன சாதி உந்தனுக்குள் எங்கேயோகம்?
நீதியை நிலத்தினி னழித்திட உதைக்கின்றாய்நீ
நிலையிலா வாழ்வின் முடிவேதென யறியாதுநீ!

ஒற்றைப் பந்தின் வாழ்வன்னது வாழ்க்கை – அது
ஓய்ந்திடும்வேகமறியாது உதைத்தாடுகிறாய்!
இற்றைப்பொழுதில் உந்தனாட்டம் கண்டுசிரித்திட
இருக்கின்ற சாரார் எண்ணி யாடுகிறாய் –நீயாடு!

இழுத்தடிப்பதில் தப்பேது உனைப்பந்தாடுவார்தனை!
இழுத்தடிப்பதில் தப்பேது உனையிகழ்வார்தனை!
வீழ்ந்துமடிந்தாலும் ஆகும் வீணரை வீழ்த்திடஆடின்
வம்புக்கும் வீம்புக்குமாடின் நீகண்டதெலாம் பூச்சியமே!


-கலைமகன் பைரூஸ்
இலங்கை
ஓடி உதைத்து விளையாடு…

பந்துதான் அடிப்பேனென
பிடிவாதிக்கிறான் பிள்ளை
ஒழுங்காய் படி,
இலையேல் உனைத்தான்
உதைப்பேன் என்கிறார் தந்தை
ஓடி உதைத்து விளையாடுமிவர்
சொற்பந்தினிடையே
மைதானமாய் திணறுகிறாள்
அன்னை.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி
ஓடி உதைத்து விளையாடு…

ஓடி உதைத்து விளையாடு-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மை
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே
முயற்சி ஒன்றே திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சி கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே

ஒவ்வொர் நாளும் விளையாடு-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழி போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண

புலவர் சா இராம‍நுசம்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்