Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
ஆடிப்பிறப்பு
ஆடிப்பிறப்பு…

பாத்திரத்திலிருக்கும் பலகாரம்
பார்வைக்கு மட்டும்தானா..
பசிக்கு உணவில்லையா..!
பாவையே,
பக்கத்தில் நீ இருந்தும்
பருக முடியாதா-
அடுத்து வருகுது
ஆடிப்பிறப்பு…!


செண்பக ஜெகதீசன்…
ஆடிப்பிறப்பு

பல்லுக்கொழுக்கட்டை.
பணியாரம்.
சுண்டல்.
மாவிளக்கு.
நாவல்பழம்.
நல்லகூழ்.
எல்லாம் செய்து சேர்த்துவைத்துப் படைத்தவிட்டு
உண்ணப் போகிறோம்.

இம்முறை
கடவுளுக்கும்..
செல்லுக்கு கொடுத்த
எங்களுறவுகளுக்கும்..

வீணா,இலங்கை
ஆடிப்பிறப்பு

கல்யாணத்திற்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
வரன்களுக்கும்
கட்டாய விடுமுறை
தந்தது
ஆடி மாசம் !
அவர்கள்
காதிருத்தலுக்கு
பதில் சொல்லுமோ
அடுத்த மாசம் !


தங்க.ரமேஷ் பாலி
ஆடிப்பிறப்பு

விடுதலையைத் தேடி... ...
எத்தனையோ
ஆடிகளை கடந்து போயிற்று
என் வாழ்க்கை.

இன்னமும்
நானும் சேர்ந்துபாடிய பாட்டின்
மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை
நான் அனுபவித்ததேயில்லை.

நாளைகள் கடந்து
நிரம்ப நாட்களாயிற்று.
இப்போ என் தோழர்களுமில்லை.
ஆனந்தமுமில்லை.

கொழுக்கட்டையும்..கூழும்..
கனவாகிப் போன வாழ்க்கைகளில்
கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு.

இப்போதும்..
பற்கள் விழுந்து போன
என் தாய்..
என்னையும் நினைத்தபடி
தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால்
கொழுக்கட்டைக்கு பற்கள்
பதித்துக் கொண்டிருப்பாள்.

எமது கனவுகளைப் போலவே
குமிழிகளாய் வந்து வந்து
வெடித்து வெடித்துப் போகிற
கொதிக்கும் தண்ணீருக்குள்
கூழுக்காக மா உருண்டைகனை
உருட்டிப் போட்டுக் கொண்டிருப்பாள்.

”ஓராடி கலங்கினால் ஏழாடி கலங்கும்” என்று
பழமொழி சொல்லித் தந்த அப்பா
தன் பழமொழிகள் பொய்த்துப்போன
காலங்களின் நீட்சியை நினைத்து
வருந்திக் கொண்டிருப்பார்.

எனக்குத் தெரியும்.
இயலாமைகளோடும்
எல்லாம் செய்துமுடிக்கிற அம்மாவின்
தாய் மனசை
ருசிபார்க்க முடியாமல்
பிரிவின் வலி அழுத்துமென்பதை.

இப்போதும்..
வாசலில் காவலரண் இருக்கிற
பாடசாலைக்குள்ளிருந்து
சத்தமாய் வெளியே கேட்கிறது.
பிள்ளைகளின் ஒருமித்த குரல்.

”ஆடிப்பிறபப்புக்கு நாளை விடுதலை.
ஆனந்தம். ஆனந்தம் தோழர்களே!”

இன்னமும்...

ஆனந்தமுமில்லை.
தோழர்களுமில்லை.
விடுதலையுமில்லை.

கார்த்திகா, இலங்கை
ஆடிப்பிறப்பு

ஆடிகளின் பிறப்பில்
ஆங்காங்கே
அண்ட அசைவுகள்
அநீதிகளால் நிரம்பிய உலகம்
இன்னும் எத்தனை காலங்கள் தான்
நீடிக்குமோ?

சின்னவன், யாழ்ப்பாணம்
ஆடிப் பிறப்பு

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
பாட்டில் வடித்து
ஏட்டில் கிடக்க
பாழுங்கிணற்றின் பாசிச் சுவருக்குள்
கூண்டில் கிடப்பதேன் தோழர்களே

ஆடிக் கறக்கணும் ஆவன செய்யணும்
வேடிக்கை மனிதரை வேரொடு
சாய்க்கணும்
காலம் எமக்கொரு காலம் பிறக்குது
காவல் அரணையும் காற்றில்
கலைக்கணும்
பூத்திரி முகத்தில் பூச்சுடரேற்றி
பாசிப் பயறுடன் கூழங்
குடிக்கணும்
ஏற்றம் அழைக்குது ஈழம் தெரியுது
எழுந்து வாருங்கள் எம் தோழர்களே.

வல்வை சுஜேன்.
ஆடிப்பிறப்பு…
ஆடிப்பிறப் பென்றே அடடா கொழுக்கட்டை
தேடிப்படம் போட்டீர் பணியார நல்தட்டை
நாடிப் பதம்பார்த்து நற்கவிதை சுவைசேர்த்தே
பாடிமுடித் தனிப்பின பணியாரம் தருவீரா
மூடித்திறந் தவாய் மூடாது காத்திருக்க
ஓடிவந்திடுவேன் ஒருவார்த்தை சொல்லவிட
வாடிப் போவேனா வற்றிவிட என்நாவும்
வடித்தாலும் முடித்தாலும் வற்றாதென் பாவே


புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம சென்னை 24


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்