Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காலச்சுவடுகள்
காலச்சுவடுகள்.

கோலமிடும் சாதனைகள்,
பாலமிடும் உறவுகள்,
மூலமான ஆய்வுகள்,
ஓலமாகும் வேதனைகள்,
ஏலமாகும் வியாபாரங்கள்,
நூலாகும் சிந்தனைகள்
மனித காலடித் தடங்கள்
ஞாலக் காலச்சுவடுகள்.

காலச்சாரச் சுவடுகள்
காலத்திற்கும் காத்திடல்
சீலமுடை அரசகடமை.
வாழ்க்கைச் சுவடுகளை
பலாத்காரமாய் அழித்து
தமிழன் வாழும்
காலச் சுவடுகளை அழிக்கும்
கோலங்கள் நாட்டில்.

வேதா. இலங்காதிலகம்.
காலச்சுவடுகள்

எண்ணிக்கையற்ற நினைவுத்தடங்களுடன்...
காற்றிலெங்கும் சுவாசத்தின்
சுவடுகள் உருமாற்றம் பெற
எங்கெங்கோ உலாவும்
ஆன்மா நிறைவேறா
மொழியாய் ஏக்கமிட!
சுற்றித்திரிந்த சுதந்திர காலங்கள்,
வெற்றிக் களிப்பில் மிதக்க
வைத்த கனவுகள்!
எத்தனை எத்தனையொ பிரார்த்தனைகள்
இப்படித்தான்,
வாழ்ந்து மடிந்த
ஒவ்வொரு கணமும்
காலச்சுவடாய் எம்மண்ணில் தடம்பதித்தன!


துர்கா, தமிழ்நாடு
காலச்சுவடுகள்

ஆதாரமின்றி சுழலும் சக்கரத்தில்
மேலும் கீழுமாய் உருளும் நாகரிகம்
மேடு பள்ளங்களை உருவாக்கி -
சீரமைப்பு நடப்பதாக அறிவித்து -
கொண்டேயிருக்கும் அதிகார ஆளுமைகள்

நிற வேறுபாடின்றி எரிக்கும் நெருப்பு
பிணவாடையில் கரையும் பேரன்பு
ரத்த ஆற்றில் மூழ்கும் மனிதநேயம்
கழிவுகளை உறிஞ்சி கொள்ளும் நிலம்
மேலும் வலியது வெல்லுமென சமாதானங்கள்

இப்படியாக பதிந்த சுவடுகளை காலம்
கடற்கரையில் சிறுமி கூழாங்கற்களை
சேகரிப்பது போல் சேகரிக்கும்
இரைச்சலின்றி.

வேல் கண்ணன், தமிழ் நாடு
காலச்சுவடுகள்..

நெஞ்சுக்குள் அம்மிக்குளவியால் இடித்து
இதயத்தையே மெதுமையாய் அரைத்துவிட்டிருந்தது
அண்மையில் படித்த
கரும்புலிகளின் கவிதைத்தொகுதி

காலகாலமாய் விழுந்த இடிகளையும்
சாரை சாரையாய் இழந்த உயிர்களையும்
நினைவுபடுத்தியது அந்தச் சிறிய புத்தகம்

புத்தகத்தை மூடிவிட்டு கண்களையும்
மூடிக்கொண்டேன்
குழப்பமான பாதைகள் பல என்பதால்
எப்பாதையில் தான்
என் பயணத்தைத் தொடர??

மயூரி, கனடா
காலச்சுவடுகள்

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

மார்கண்டேயன், மதுரை, பாரதம்.
http://markandaysureshkumar.blogspot.com
காலச்சுவடுகள்…

கற்பாறைகளில்
காணும் உருவங்கள்--
கற்பாறையாய் இறுகிய
இதயம் கொண்ட மனிதர்கள்
செய்த
இனப்படுகொலைச் சிதைவுகளின்
காலச்சுவடுகளோ…!

செண்பக ஜெகதீசன்…
காலச்சுவடுகள்…

நிதர்சனங்களை கேள்விக்குள்ளாக்கி
முன்னுள்ள வெளி முழுவதும்
அகப்படும் வண்ணங்களை அப்பிக்கொண்டு
காலம்
தன் முகத்தை அழித்தழித்து
புதிதாய் வரைந்தடியே உளது.

அவசரத்தில்
இருளையும் ஒளியையும்
கிழித்துச் செல்வதாக வரையப்படும் கோடுகளூடு பயணிக்கும்
நத்தையின் நகர்வொன்று
தூரத்தே தூர்ந்து புள்ளியாகித் தொலையும்.

பருவத்தை மறுதலித்துப் பெய்யும்
மேகத்தை எதிர்த்த வானம்
வறள...
சூனியப் பொழுதொன்றில்
குருத்துவனை புசிக்கும் சைவ கழுகுகளும்
பசு முலை உறிஞ்சும் பாம்புகளும் என
தத்தம் உயிர்தேற பிராயத்தனம் செய்வதாயுள.

தூரத்தெளியும் உயிர்த்தெழும்பும்
வண்ணத்திட்டுக்கள் இராச்சதங்களாகி
முன்னோக்கி விசையோடு பயணித்து
இமையடிப்பில்
அப்பால் கடந்து போகின்றன
எதிர்ப்புகள் அற்றனவாக.

பின்னும்...

காத்திருப்புகள் ஏதுமற்றனவாக
காலம்
தன் முகத்தை அழித்தும் உரித்தெறிந்தும்
வண்ணமப்பி வரைந்துகொண்டே போகிறது

சிக்கலான குறுக்குக்கோடுகளால்
போலிமுகங்களை விதவிதமாக.

சம்பூர் வதனரூபன், ஈழம்
காலச்சுவடுகள்

கல்லாகி,
மண்ணாகி,
கட்டடமாகி,
மீண்டும்
கல்மண்ணுமாகி,
உணர்வுபூசி
வாதமாகி,
வழக்குமாகி,
கடைசியில்
உள்ளங்களில்
விரிசலுமாகி,
தீர்க்கப்படாததொரு
தீர்ப்புமாகி
பயணிக்கிறது காலம்
அறுபதினும் ஆண்டுகளாய்
தன் சுவடுகளைத் திரும்பிப்
பார்த்தபடி.

இப்னு ஹம்துன்
காலச்ச சுவடுகள் கடந்திட நடந்திட-எழில்
காட்சிகள் இங்கே படமாய் கிடந்திட
கோலம் காட்டும் செம்மண் முகடுகள்-உற்றுப்
கூறின் பொன்போல் மின்னும் தகடுகள்
ஞாலம் இதுபோல் கொண்டது பலவே-ஆனால்
நாமதில் கண்டதோ மிகவும் சிலவே
சீலம் மிக்கதாம் செம்மண் பூமி-பயிர்
செழித்திட வளர்கும சிறந்த பூமி

இயற்கைக் காட்டும இணையில் காட்சி-கண்
இமைக்க மறக்கும தகையதன் மாட்சி
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே
செயற்கை என்றும் சிகப்பு விளக்கே-மேலும்
செய்வது அனைத்தும் தவறொன விளக்கும்


புலவர் சா இராமாநுசம சென்னை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்