Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காந்தியம்
காந்தியம்

காந்திகணக்கில் வாழுதடா காந்தியமும்!
சாந்திமிக்க வாழ்வினுக்கே சாட்சியென்பார் உன்னை
சதிகாரன் துப்பாக்கி சுட்டதுவோ உண்மை
காந்திஜியே! கருணைக்கு உன்பேரைச் சொல்வார்
கணக்குக்கும் அதைவைத்தே ஏமாற்றிக் கொள்வார்
மாந்தர்களை உன்மண்ணில் கருவறுத்துக் கொல்வார்
மமதையிலே நீதியினை மண்டியிடச் செய்வார்
ஏந்திடவே கைத்தடியும் உன்னிடமே கேட்பேன்
என்றாலும் காந்தியமே உன்னையுந்தான் காப்பேன்.

இப்னு ஹம்துன்
காந்தியம்..

அகிம்சைவழி இன்று
ஆகாததாகிவிட்டது
அகிலத்தில்..
கத்தியெடுக்கும் வன்முறைக்
கலாச்சாரம் பெருகிவிட்டது
காசினியில்..
இவற்றால் எட்டப்படுவதில்லை
இலக்குகள் என்றும்…
இப்போது புரிகிறது
காந்திஜி கணக்கு-
காந்தியம்…!

செண்பக ஜெகதீசன்…
காந்தியம்

சோடாவுக்கா அத்தனை சக்தி?
கைத்தடிக்குள்ளா அத்தனை வீரியம்?
வெள்ளையர்களைக் கதிகலங்க விரட்டியது
தள்ளாத அந்தக் கிழவனா?
அரைநிர்வாணப் பக்கிரியா?
யார் நம்புவார் அதை?
சத்தியத்தைத் தவிர
வேறொன்றும் தெரியாத
அந்தச் சத்திய மூர்த்திக்கு
விருப்பம் எல்லாம்
விடுதலை மீதுதான்!
எல்லாக் குழந்தைகளையும்
பேணும் தாய்போல்
இந்திய தேசத்தின்
தந்தை ஆனார்.
பெற்ற குழந்தைகளே
மார்பில் சுட்டிட
ஐயோ பாவம்
இன்னும் நம்ப முடியவில்லை!
எல்லாவற்றையும்
ஏற்றுக் கொள்ளும்
அந்தக் கிழவனுக்குள்
எத்தனை வலிமை?
அது சத்தியத்தின் வலிமை!

அருணன்
காந்தியம்.

காந்தியம் அகிம்சைத் தீவிரவாதம்.
சாந்தி தருமென எண்ணி
ஏந்தினார் மோகன்தாஸ் கரம்சந் காந்தி.
நீந்தினார் கடும் சத்தியசோதனையில்.
மன ஒழுக்கம் பேணியவர்
தினம் தூரதூரம் நடந்தவர்.
பெரும் தனமிவர் உலகிற்கே.

காந்தியம் வெந்தவன பூமியை
நந்தவனமாக்கும் பாதையென
சிந்திப்பார் உலகில் பலர்.
காந்தியைத் துரோகியென்போரும்
சந்தி சிரிக்கும் செயல்களாலும்
நொந்து கூசும் வன்முறைகளாலும்
விந்தை மனிதர்களாய் உலகிலின்று
பந்தாக உருட்டுகிறார் மனிதத்தை.

வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ், டென்மார்க்.
காந்தீயம்!

மூன்று கடல்
முழுங்கிய தண்ணீர்!
முழு மலையின்
நீள அகலங்கள்!
எழுந்து நிற்கும்
எவரெஸ்ட்டின் உயரங்கள்!
இவையெல்லாம்
காந்தி என்ற
கம்பீரக்கிழவனின்
காலடிக்குக் கீழேதான்!
அவன்
புல் மட்டுமே தின்ற
சிங்கம்!
அஹிம்சையின் ஹிட்லர்!
அதனால்
பயந்து ஓடினான் பரங்கியன்!

தேசியக்கொடியின்
அசோகச் சக்கரத்திற்கு
அச்சாணி
அடித்துக்கொடுக்க
இதயமே கொடுத்தான்!
பற்றாதென்று
பாவிகள்
குண்டால் துளைத்து
உயிரையும் உருவிவிட்டார்கள்!

அன்பால்
ஆலயம் செய்தவனை
ஆயுதத்தால்
கழுவிவிட்டார்கள்!


பக்கத்தில் வைத்திருந்ததால்
பறிகொடுத்து விட்டோம்!
இனிமேலாவது
மகாத்மா என்று சொல்லியே
மனிதர்கள்
தூரத்திலேயே நிற்கட்டும்!

காந்தியம் என்பது
காற்றுப் போல!
என்றும் இருக்கும்!

நடராஜன் மாரியப்பன்
காந்தியம்.

நீ போர்த்திய கதராடையை
வெள்ளைக்காரர்களின் தோட்டா துளைக்கமுடியவில்லை
கொள்ளைக்காரர்களின் தோட்டா
துளைக்க மறக்கவில்லை..

நீ அறையாடையை
உடுத்திக்கொண்டதால்தான்
பாரத மாதாவால்
ஆறுமுழ சேலை உடுத்த முடிந்தது .

"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது"
என்று சொன்னாயே !
கிராமங்கள் வாழ்வதில்லை
என்ற உண்மை
உனக்குத் தெரியுமா?

சத்தியாகிரகம் செய்தவரே
நீ நடந்த
வேதாரண்யத்தில்
அமோகமாய் விற்பனையாகிறது
டாடா சால்ட்

உலகம் அறிந்த வழக்கறிஞரே!
நீ போனபிறகு
யாரும் எங்களுக்காக
வாதாடுவதில்லை..

நன்முறை சொன்னவரே
நீ!
வன்முறைக்கு பலியானதுதான்
வேதனை

நீ கல்லறையில் இருந்து
கண்ணீர்வடிப்பது
பூமிக்கு மட்டுமே தெரியும்
சாமிக்கு மட்டுமே தெரியும்
வேறு யாருக்குத் தெரியும்.

போ. மணிவண்ணன்
காந்தியம்

உப்புக் காய்ச்சிய உத்தமர்
உலகத்தின் அரும் பெருந்தலைவர்
தப்பென ஆயுதங்களைத் தடுத்தவர்
தரணிக்குச் சத்தியத்தை உரைத்தவர்
கப்பலில் ஏற்றப்பட்டு கடுங் கொடுமைக்காளாகி
கண்ணீரோடு தென்னாபிரிக்கா வாழ்இந்தியர்க்கு
தெப்பமாகிக் கரையேற்றத் தீராது போராடியவர்
தெரிந்துரைத்த நீதிக்காய்ப் பெற்றசிறையிலும்
செப்பினார் சத்தியசோதனையைச் சிந்தனையாய்
சீர்;பெறவே கதராடையணிந்து காட்சிதந்தார்
எப்போதும் அகிம்சையினை இதயத்திருத்தி
இமயமும் சிரந்தாழ்த்தும் ஈடில்லாப்பெருந்தகை
அப்போதளித்த ஆழமானக் காந்தியமதன்
அர்த்தம் மறந்ததாலோ அணுவாயுதஆராய்ச்சிகள்
ஒப்புதலில்லா இனமதப் போராட்டங்களொடு
ஒற்றுமையற்ற விளைவுகள் அழிக்கும்வினைகளாய்...

பத்மாஷனி மாணிக்கரட்னம்
ஜேர்மனி
காந்தியும் கை துப்பாக்கியும்

மஹாத்மாவே, உன்னை
எல்லோரும் மறந்து விட்டார்கள்
இப்போது நீ இருப்பது
என் இதயத்திலும்
அரசு விடுமுறை பட்டியலில் மட்டுமே

காந்தி ஜெயந்தி கொண்டாட
எல்லோருக்கும் பிடிக்கும்
வார நாளில் வந்தால்,
ஒரு நாள் விடுமுறை தானே

உனக்கு தெரியுமா?
நாம் நாட்டில் மற்றுமொரு
விடுதலை போராட்டம் நடகின்றது
அஹிம்சை என்ற அறப்போராட்டம் இல்லை
இது ஒரு ஆயுத போரட்டம்

சாதியின் பெயரால்
சகோதரனை சாவடிப்போம்
மதத்தின் பெயரால்
மதில்களை இடிப்போம்

சொன்னால் நம்பமாட்டாய்
இந்த போராட்டதில்
சத்தியாகிரஹமே
செத்துவிட்டது

உன் கைத்தடிக்கு இனி
வேலை இல்லை இங்கு
கை துப்பக்கி
இருந்தால் கொண்டுவா

பால்ராஜன் ராஜ்குமார்
தேசத்தலைவருக்கு சமர்ப்பணம்

இன்றைய இந்தியா

சட்ட மறுப்பு இயக்கம் நீ
சட்ட சபையில் குழப்பமே இனி
சுதேசி இயக்கம் கொண்டு வந்தவன் நீ
விதேசிகளுக்காகவே இந்தியா இனி
அரை ஆடை மனிதன் நீ
அரை குறை ஆடைகளோடு இனி
ஒத்துழையாமை இயக்கம் நீ
ஒற்றுமைக்காக போராடுவார்களா இனி
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நீ
வெள்ளையயனுக்காகவே இந்தியா இனி
வாங்கிய சுதந்திரம் இன்று
வாரிசுகள் கையில்
வாழ்வோமா இனி இந்தியாவில்?

பொ. ஜெயப்பிரகாசம்
காந்தியம்

மஹாத்மாவே எங்களை மன்னித்துவிடு உன்னைப்பற்றி மேடைதோறும் பேசுவதால் தான் நாங்கள் வளமாக இருக்கிறோம்.

பந்தர்.அலி ஆபிதீன்
காந்தியம்

பண்டிகைக் காலங்களில் மட்டுமே
நீயும் கதரும்
நினைவுக்கு வருகிறீர்கள்..
நீ மேல்சட்டையை
ஏழைகளின் நிலைகண்டு வருந்தி
துறந்தாய்,
இன்று...மேலாடைகள்,
விளம்பரத்துக்காகவும்
கவர்ச்சி அணிவகுப்புக்காகவுமே
களையப்படுகின்றன!
கொலையும், கொள்ளையும்
தலைவிரித்தாடுகின்றன!
'காந்தியம்' பேசிய உதடுகள்
இன்று
'கோட்சேயிஸம்" பேசுகின்றன!


கவிதாயினி சுமதி
சேலம், (தமிழ்நாடு)
காந்தியம்

தாத்தா ஆனாலும்
உலகைக் ஈர்த்த கவர்ச்சி
பொக்கைவாய் என்றாலும்
பூக்கள் தோற்கும் புன்னகை
அஹிம்சைதான் என்றாலும்
ஆண்டவர் மிரண்ட ஆயுதம்
உண்ணா நோன்பிருந்தாலும்
சுதந்திரப் பசி தீர்க்கும்
“தொண்டு” கிழமென்றாலும்
தலைவணங்கச் சொல்லும்
சுற்றிய ராட்டையோ
சாட்டையாய் தாக்கும்
கைகொண்ட வெறும்கோல்
கொடுங்கோலை வீழ்த்தும்
அதிசயம் ஆனால் உண்மை
அதன் பேர்
காந்தியம்!


-அரவிந்த் சந்திரா
காந்தியம்

காந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில
கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட
ஏந்திய ஆயுத்தை கைகள் மூட-இங்கே
இருக்கன்ற நிலைதானே கண்ணீ்ரோட
சாந்தியம் மட்டுமே நெஞ்சில்கொண்டே-அவர்
சாதித்த வெற்றிகளை மக்கள்கண்டே
காந்தியின் பெயரோடு மகான் என்றே-பட்டம்
மனமுவந்து வைதாராம் போற்றியன்றே

உப்புக்கும வழியின்றி அடிமை யாக-நம்
உரிமைக்குப் போராடி கொடுமைபோக
செப்பியவர் மொழி கேட்டே மக்கள -தாமே
சென்றனரே வெள்ளமென உண்மையாமே
ஒப்பிடவும் அவர்போல ஒருவர் உண்டா-இவ்
உலகத்தில் இன்றுவரை சொல்வீர் கண்டால்
தப்புதனைச் செய்தாலும் ஒத்துகொள்ளும்-அவர்
தனிப்பிறவி காந்தியென உலகம் சொல்லும்

பாடுபட்டு சுதந்திரத்தை பெற்றார் அவரே-பின்
பதவிதனை மறுத்தவரும் இவரே இவரே
கேடுகெட்டு போனதந்தோ நாடுமின்றே-பதவி
கேட்டுபேரம பேசுவதா நொந்தோம்நன்றே
கூடுவிட்டுக் கூடுபாயும் தன்மைபோல-கட்சி
கொள்கைதனை கைவிட்டு நாளுமாள
ஓடுகின்ற காடசிபல கண்டோ மிங்கே-இனி
உருப்படுமா இந்நாடு வழிதான் எங்கே

கத்தியின்றி இரத்தமின்றி பெற்றார் காந்தி-தம்
கைகளிலே அகிம்சையெனும் கொள்கைஏந்தி
புத்திகெட்டு நாமதனை அழித்தே விடுவேம்நல்
போக்கற்று நோக்கற்றால் நாமேகெடுவோம்
சுத்திவந்து தொடுவதில்லை யாரும் மூக்கை
சொல்வதென்ன இனியேனும் உமதுவாக்கை
சத்தமின்றி நல்லவர்கே அளிக்க வேண்டும்-நல்
சரத்திரமே உருவாகி களிக்க யாண்டும்

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சென்னை 24
காந்தியம்..

கொக்கு குருவியோடு
காந்தியையும் சுட்டோம்
சாதி மத பேதமென
காயம் பல பட்டோம்
காந்தி பிறந்த மண்ணில்
காந்தியத்தை விட்டோம்

கவிஞர்இரவிச்சந்திரன்
இந்தியா


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்